சிவராத்திரி வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வகையிலான நாட்டில் சமாதானமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் இந்து பக்தர்கள் நூற்றாண்டுகளாக ஏனைய இன மக்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சிவராத்திரியை முன்னிட்டு இந்து பக்தகர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் பெருமிதம் அடைகின்றேன்.
சிவராத்திரி வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வகையிலான சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டு நிகழ்வுகளின் மூலம் அனைத்து இன மக்களிடையேயும் ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட வழிகோலட்டும்.
அனைவருக்கும் சுபீட்சமான எதிர்காலம் ஏற்பட பிரார்த்திப்பதாக ஜனாதிபதி சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னை சர்வதேசம் தூக்கில் போட்டாதான் சமாதானம் !
இவன ஒரு வழி பண்ணனும் ..பல்லாயிரம் உயிர்களை கொன்று தேசத்திற்கு சமாதனம் கொண்டு வந்தவர் இவர்தான்..கொஞ்சம் கூட கடவுள் பயமே இல்லை.பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தால் தான் சாவனாம் ..இவன் விதைத்ததை அறுக்க வேண்டிய காலம் ஒன்று வரும்.அன்று தெரியும் சமாதனம் என்றால் என்ன என்று…
இதற்கெல்லாம் காரணம் தமிழ் நாடும் இந்தியாவும் தான். சூடு சொரணை இல்லா துரோக தமிழ் நாட்டு தமிழர்கள். இந்திரா காந்தி ஈழ தமிழர்களுக்கு உதவி செய்தார் -MGR உதவி செய்தார் ஆனால் அதன் பிறகு ராஜீவின் இந்திய சமாதான படைகள் புரிந்த அட்டூழியத்தினால் ராஜீவ் உயிரிழக்க நேரிட்டது. அதன் பிறகு எல்லாமே தலை கீழ் . எனினும் தமிழர்கள் எவ்வளவோ செய்திருக்க முடியும் ஆனால் அவ்வளவு உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்ட போதும் ஒன்றும் செய்ய வில்லை– வடக்கதியனை நம்பினால் ஒன்றும் நடக்காது. எல்லாம் முதுகு எழும்பில்லா ஜென்மங்கள்.அத்துடன்
கடை நேரத்தில் இந்திய உதவியுடன் தான் நம் உடன் பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்டனர். ஜாதி குளம் கோத்திரம் உயர்வு தாழ்வு பேசியே நம்மை நாமே காட்டி கொடுத்து நம் மரியாதையை கெடுத்து கொண்டோம். எப்போது தான் நாம் திருந்துவோ மோ ?