இன,மொழி அடிப்படையில் ஒருவர் அடையாளம் காணப்படுவது இயற்கை.உதாரணத்துக்கு, தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவரைத் தமிழர் என்கிறோம். அதுபோலவே,தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவரைத் தெலுங்கர் என்கிறோம். மேலும் ஒருபடி போனால், சீன,மலாய்,ஆங்கிலம் போன்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களை முறையே சீனர்,மலாய்க்காரர், ஆங்கிலேயர் என்கிறோம். நாட்டின் வழி பார்க்கும்போது தமிழராக இருப்பவர் இந்தியராகவும்,பிறகுமலேசியராக மாறுவதும்,கண்டங்கள் வழியாகப் பார்க்கும்போது அதே மனிதர் ஓர் ஆசியர் என்றும், உலக ரீதியாக பார்க்கும்போது உலகமனிதர் என்றும் பொதுவாகக் கூறுகிறோம்.
ஒவ்வொரு கட்டத்திலும் தாய் மொழி பிரதான நிலையை வகிப்பதைக் காணலாம். மதத்துக்கு முதலிடம் தருவது நாகரிக சிந்தனைக்கு ஒவ்வாத அணுகுமுறை எனின் அதில் நியாயம் இருக்கிறது. காரணம் மதத்தை வைத்து மனிதனை எடைபோட கூடாது, மாறாக மனித நேயத்தை மையமாக வைத்துதான் மனிதனை எடைபோடவேண்டும் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட அடிப்படை உண்மை. அதனால்தான் அரசியல் சட்டம் கூட வரையறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் இடம் கொடுத்த போதிலும் குடிமகனின் பொதுவான சமஉரிமையை மறுக்கவில்லை. சம உரிமை நிலவுகிறதா? என்ற கேள்வி எப்போதும் சர்ச்சைக்குறியதாகவே இருக்கும். அந்தச் சர்ச்சையை வளர்ப்பவர்கள் தங்களின் தன்னலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளேயன்றி சாதாரண மனிதர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக சாதாரண மலேசிய குடிமக்கள் அல்ல.
எங்கெல்லாம் சமத்துவத்துக்கு உதட்டளவு முக்கியத்துவம் கொடுத்து மனித நேயம் புறந்தள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் நியாயம், நீதி, நேர்மை, சட்ட ஒழுங்கு காண்பது அரிதே.
9.3.2014இல் எம்ஏஎஸ் நிறுவனத்தின் MH 370 விமானம் காணாமற்போனது. அதில் 239 பேர் பயணித்தார்கள் என்ற திடுக்கிடும் செய்தி நாட்டு எல்லை, அரசியல் எல்லை, இனமத பேத எல்லைகளை எல்லாம் மீறி வருத்துகிறது எனின் அது நம்முள் புதைந்து கிடக்கும் மனிதநேயத்தை, மனிதாபிமானத்தை வெளிக்கொணருகிறது. அந்த மனித உணர்வைத்தான் 9.3.2014இல் இனமதபேதங்களை ஒதுக்கிவைத்து அந்த காணமற்போன விமானத்தில் பயணித்தவர்களின் நலனுக்காக,பாதுகாப்புக்காகப் பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் அற்புதமான, மனித நாகரிகத்தை மதிக்கும் செயல் எனலாம். இந்தப் பல்லின பல சமயங்கள் கூடிய இடம் பொது இடம் – அங்கே சமய வாரியான வாதம் இடம்பெறவில்லை. எல்லாம் சமம் என்ற உணர்வு இருந்ததைக் காணமுடிகிறது. அந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி கலந்து கொண்டு எல்லா சமயத்தினரோடு இணைந்து பிரார்த்தித்தானது வழிபடுவதற்கு எல்லையும் இல்லை, கட்டடமும் தேவை இல்லை என்பதை உணர்த்துகிறது.எங்கும் பரவியிருக்கும் இறைவனுக்கு மூடுபட்ட கட்டடம் தேவையில்லையே!
வரையறுக்கப்பட்ட சமய உணர்வோடுதான் வாழமுடியும், சமய வேறுபாட்டை வளர்ப்பதால் மட்டும் தான் மேன்மை காணமுடியும் என்கின்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கிவிட்டது துன் அப்துல்லாவின் துணிவானச் செயல். துயரத்தில் மட்டும் தான் மலேசியர்கள் ஒன்று கூட முடியும் என்ற நோக்கத்தை கைவிட்டு எல்லா சூழலிலும் ஒன்றுகூட முடியும் என்பதை இந்தபொதுப் பிரார்த்தனை உறுதிப்படுத்துகிறது.
துயரத்தில் ஒன்று கூடும் சமயங்கள் துயரற்ற நிலையிலும் இந்த ஒருமைப்பாட்டைப் பேணி வளர்த்துக்கொண்டால் நல்லதல்லவா..? மனிதநேயம் வளரவேண்டும். மனித உணர்வு பலம்பெறவேண்டும். இவையே நம் அடிப்படைகுறிக்கோள்களாக இருக்கவேண்டும்.
பொது பிரச்சனை,தனிப்பட்ட பிரச்சனை.எல்லா காலங்கலிலும் எல்லோறும் ஒன்றுகூட இயலாது தலை.ஆஸ்திகன்,நாஸ்தீகன்.ஆஸ்தீகம் யாா் வம்புக்கும் போகமாட்டாா்,யாரையும் வீனே விமா்ச்சிக்க மாட்டாா்,அவன் உண்டு தன் வேலை உண்டு இருப்பர்.இந்த நாடு ஆண்மீக நாடு.ஆஸ்தீகன் நாஸ்தீகனோடு ஒருபோதும் சேர முடியாது.எப்போது இந்து பெருங்கடலில் கலக்கின்றனரோ அப்போது யோசிக்கலாம்.எந்த மதவாதியுடனும் கலந்து பேசலாம் வேண்டாம் நாஸ்தீகர்.திருக்குறல் வழிக்காட்டி சொல்ராங்க ஆனா முதல் குறல் இறை வணக்கம் சொல்வதை மதியாா்.விரண்டாவாதம்,பிரரை மதியாா்,பணிவு கிடையாது.தானே ராஜா தானே மந்திரி,கட்டுபாடற்ற சுதந்திரம்.நாராயண நாராயண.
தமிழ்பள்ளி என்று பிரித்து கூறுவது ஒரு இனவெறி தானே ஏன் இந்து மத பள்ளி என்று கூரலாமே.ஒன்று படுவோம் ஒன்று படுவோம் என்பது எதை குறக்கிறது.ஜாதியில்லை மதமில்லை என்று கூறுவா்ஆனால் இவா்கள் தான் மூல காரணமே.நீர் வாழ பிரா் பாடுபட முடியுமா,பிறறின் எதிா்காலம் என்னவாவது அவா்கள் யோசிக்க மாட்டாரா.வந்தவரைஎல்லாம் வாழவைத்து பிறகு தன் சந்ததியை முச்சந்தியில் விடவா.பாருங்கள் ஒரு காலத்தில் தமிழா்க்கு ,மளையாழிக்கு,தெழுங்கா்,சீக்கியர்க்கு இப்படி இனத்துக்கு ஒரு கட்சி உருவாக போகிறது,எல்லா மொழி பாடமும் பள்ளியில் போதிக்கபோகுது.சலுகைகல் பிரித்து கொடுக்கப்பட போகிறது.நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே.நாராயண சித்தம்.
துயரத்தில் ஒற்றுமை !!! மற்ற நேரங்களில் வேற்றுமையா ???
இந்த விளையாட்டுக்கு நான் வரலை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தங்களின் அடிப்படை குறிகோள்கள் வெற்றி பெற வேண்டும்.நல்லதையே நினைப்போம். அதை இன்றே செய்வோம்.239 பயணிகள் நலமே திரும்ப வேண்டி இறைவனை வணங்கிடுவோம்.
எல்லோரும் சேர்ந்து இறைவழிபாடு செய்ததை கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததது .ஒவ்வொரு ஊரிலும் மண்டபம் எழுப்பி அதன் சுவற்றில் பல மத வழிபாட்டு ஆலயங்களின் படத்தை மாட்டிவைத்து அம்மண்டபத்தில் எம்மதத்தவராயினும் அமைதியாக
வழிபடலாம் என்ற வழிமுறையை ஏற்படுத்த்னால் அது மத நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும்.
விமானம் கண்டுபிடித்த பிறகு முன்னாள் பிரதமரின் மேல் நடவடிக்கை எடுக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? மதம் என்று வந்த பிறகு மனம் சுருங்கி விடும்! துக்ளக் ஆட்சியில் எதுவும் நடக்கும்!