கடந்த ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டுமா? வேண்டாமா ? என்ற கருத்துப் போராட்டம் நமது சமுதாயத்தில் இருந்து வருகின்றது.
கருத்து தெரிவித்தால் தாம் கடுமையாக தாக்கப்படுவோம் என்ற பயந்த உணர்வும் பல அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க நான் உண்டு என் வேலை உண்டு என்ற வியாகின தத்துவமும் பலருக்கு உண்டு.
இந்த வேளையில் நான் பேசாமல் இருந்தாலும் பலரின் நகைப்புக்கு ஆளாவேன் என்பது திண்ணம்.
தமிழ்ப்பற்று அனைத்து தமிழர்களுக்கும் இருப்பது ஒரு நல்ல விசயம். தமிழ்ப்பற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது ஒரு விசயம். உதாரணத்திற்கு தமிழ்ப்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரியாக உணர்ந்திருக்கப் பட வேண்டிய ஒன்று.
தமிப்பள்ளிக்கு அனுப்பாமல் பல ஆயிரம் காரண காரியங்கள் சொல்வது ஒரு சாதாரண விசயமாகி விட்டது. இதை இப்பொழுது யாரும் பொருட்படுத்தவே இல்லை. அல்லது குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம்.
அடிப்படை உணர்வுக் கூட இல்லாமல் அதனால் நான் தமிழ்ப்பள்ளி அனுப்ப வில்லை. இதனால் நான் தமிழ்ப்பள்ளி அனுப்ப வில்லை என்று எல்லாம் கூறும் அரசியல்வாதிகள் யாவரும் நம்மை ஏமாற்றும் தலைவர்களாக பார்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு நாம் சிறிதும் கருணைக் காட்டக் கூடாது.
இந்தியர்களை நலனைக் காட்டும் மாண்புமிகு குலசேகரன் அவர்கள் கண்டிப்பாக தமது குழந்தையை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருப்பாரேயானால் நாம் நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும். மாண்புமிகு பினாங்கு துணை முதல்வர் தமது குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருப்பாரானால் கண்டிப்பாக முதற்கண் நாம் அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
அப்படி முரண்பாடு இருக்குமாயின் நாம் கண்டும் காணாமல் இருந்து விடலாமா? இந்த தமிழை வைத்தே அரசியல் நடத்துபவர் பலர். இந்த அரசியல் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தும் தலைவர்களை நாம் அடையாளம் கண்டு நம்மை நாமே தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.
சண்டை போடுவது; போராட்டம் செய்வது; நமது பண்பாடு அல்ல என்பதை உணர வேண்டும். நாசுக்காக சொல்லலாம். யதார்த்தமாக பேசலாம். வாதம் செய்ய வேண்டியதில்லை.
இப்பொழுது நமது குறியெல்லாம் தமிழ்ப்பள்ளிகள் மேன்பாடு அடைய வேண்டும் என்பதே. முதலில் அடிப்படை மிகவும் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். அடிப்படை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் காலத்தால் நாம் அடிக்கப்படுவோம். சபிக்கப்படுவோம்.
உதாரணத்திற்கு பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் நிலை மிகவும் அவலத்திற்கு உரியதாக உள்ளன. சில தமிழ்ப்பள்ளிகள் இதற்கு எதிர்மறையாக உள்ளன. பெர்மாத்தாங் திங்கி, மாக் மண்டின் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் மற்ற பள்ளிகள்???? வால்டோர் தமிழ்ப்பள்ளி, சங்காட் தமிழ்ப்பள்ளி???/ பல ஆண்டு காலமாக வசதிகள் இல்லாமல் இருக்கும் அவல நிலையை அனைவரும் உணர்வர்.பத்துக் காவான் தமிழ்ப்பள்ளியும் இதில் அடங்கும்.
அவ்வாறு இருக்க இப்பொழுது பல அரும் பெரும் தலைவர்கள் நமது சமுதாயத்திற்கு ஒரு தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டும் என்று முழங்குவது காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. நமக்கு தமிழ் இடை நிலைப் பள்ளி தேவை. மறுப்பதற்கு எதுவுமில்லை. நானும் தமிழ் எதிராளி அல்ல. தமிழுக்கும் எனக்கும் ஒரு பகையுமில்லை. ஆனால் இப்பொழுது தமிழ் இடை நிலைப் பள்ளி தேவையில்லை என்பதே எனது கருத்து.
முதலில் தமிழ்ப்பள்ளிகளை தரமான பள்ளிகளாக கொண்டு வருவோம். அனைவரும் இதற்கு குரல் கொடுப்போம். அனைவரும் ஒத்துழைப்பு தருவோம். 100% தமிழர்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றடைவதை உறுதிச் செய்வோம். பள்ளியின் வசதிகளைக் கூட்டுவோம். மேம்பாடு திட்டங்களை வெற்றியடையச் செய்வோம். பிறகு இடை நிலைப்பள்ளியைப் பற்றி சிந்திப்போம். பேசுவது,
திட்டங்களைச் தீட்டுவது பாதகம் இல்லை. இதை வைத்து அரசியல் ஆட்டம் ஆடுவது சிறந்த வழியாகாது. மேலும் இதை வைத்து பலருக்கு அழுத்தம் தருவது அறிவுப்பூர்வமான செயலாக எமக்கு தெரியவில்லை. ஆக்கபூர்வமாக சிந்திப்போம். தெளிவாக கடமை ஆற்றுவோம்.
அன்புடன்
கணேசன் ஆறுமுகம்
பத்துக் காவான் மலேசியர் இந்தியர் காங்க்கிரஸ்
தொகுதி தலைவர்
YB குலா அவர்களின் குழந்தை தமிழ் பள்ளியில் படிக்கிறது.
மலேசிய இந்தியர் காங்கிரசில் இருந்து இப்படி ஒரு அரசியல் ஆபத்து வில்லங்க விமர்சனம் பதவிக்கும் பகட்டுக்கும் எழுதப்பட்டாக குற்றம் சுமத்துகிறேன். காலங்கள் பல கடந்து தமிழ் மொழி உலக மொழி விழிப்ப நிலை கண்டுள்ள இவ்வேளை தங்களின் கூற்று குரங்குத தனமாக உள்ளது.
10 தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை ம இ கா தான் முன் எடுத்தது. அதன் கட்டுரை வீர வசனங்களை போய் படித்துப்பாரும். தமிழ் உணர்வு இல்லாதவர்களை பெரும் (டலை) தலைவர்களாக்கியது இந்த மாநாடுகள் தாம். தமிழ் ஆறாம் ஆண்டு முடித்தவர்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை. சாமிவேலை தவிர எல்லாமே குறைத்து தமிழ்த துறையில் டிகிரி /PHD முடித்தவர்கள். 6வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒருங்கிணப்பாளர் தகுதியில் மறைந்த YB அன்பழகனுடன் அல்லும் பகலும் வேலை செய்தவன். .எதற்கு ? இந்நாட்டில் தமிழ் மொழிக்கு ஆபத்து …காப்பாற்ற வேண்டும் என்ற தமிழன் கடமை.
தமிழ்த தொண்டர்கள் ஓடி உழைத்தோம்.
ஆனால் நடந்தது என்ன UM வில் இந்தியர் பிரிவும் சமஸ்கிரித மொழிஆட்டமும் , ஊடலும் உள்ளே புகுத்தப்பட்டு தமிழுக்கு ஆப்பு அடிக்க இந்தியனும் மலாயனும் வேலை செய்து இன்றும் அதே நிலை. கோ சாரங்கபாணி காலத்தில் தமிழ் பிரிவாக இருத்த UM பிறகு எதனால் இந்தியன் பிரிவாக் மாறியது ?
உங்களை போன்ற ம இ கா காரர்கள் தூங்கி அரசியல் பதவிக்கு கண்ணாம் பூச்சி ,மின் மினி பூச்சி காட்டி ஏமாந்து போனதால் வந்த விளைவு.தமிழ் மொழி உலக மொழி ஆனபோதும் இலக்கிய இலக்கண அடிப்படை கூறே (தமிழிலில் இருந்து திருடப்பட்ட)இல்லாத சமஸ்கிரித மொழி திணிப்பு UM வில் வரக்காரணம் இந்த நாட்டு இந்திககாரர்களோ வங்க்காலியோ அல்ல பங்களாடெஷியும் அல்ல இந்த அரசுதான்.
மொழி வழி இந்திய அரசுடன் வணிக உறவு கொள்ள தமிழைக கொன்றனர்.
இன்றும் இந்துக்கள் தீப ஒளி (தீபாவளியை) யன்று தமிழர் இந்துகள் விளம்பரங்கள் இல்லை.வங்காளியும் மலையாளியும் வருவான். இப்படி
தமிழ் குரங்குகள் பல மரத்தின் நுனி கிளையில் உட்கார்ந்து தமிழ் என்ற கிளைக்கு ஆப்பு அடித்த ம இ கா கதைதான் இன்று தமிழ் மொழி போராட்டம்.உங்களின் தமிழனற்ற உதிர்ந்த இலைகளை பொறுக்கவே நமக்கு கொந்தளிப்பு குழப்பங்கள்.தமிழ் மூத்த மொழி உலக தரம் மிக்க செம்மொழி மீது தனி மனித எதிர்மறை குளறுபடிகள் நிறுத்தப்பட
வேண்டும்.
மலேசியாவில் தமிழ் இடை நிலைப்பள்ளி அமைப்புக்கு ஏன் குட்டித தலைவர்களும் அரசியல் வெட்டித் தலைவர்களும் கிறுக்கு தனமாய் குறுக்கு விபச்சார விமர்சனம் செய்ய வருகின்றனர்.?
குலசேகரன் கேட்டதும் கொதித்து கொப்பளிக்கு உங்கள் உணர்வு ஏன் பழனிவேல், சுப்பிரமணி கேக்க வில்லை என்ற பொறுப்பு கிளை தலைகளுக்கு இல்லாமல் போனது?
10 உலகத தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்த ஆண்டுக்கு 3 மில்லியன் என்றாலும் 30 மில்ல்யனை செலவு செய்து தூங்கும் இந்த தமிழ் மொழி சந்தர்ப்ப கரையான்கள் ,அன்றே இடை நிலைப்பள்ளி வேண்டும் என்ற குறிப்பு என்னிடம் உள்ளது ஆனால் ஏன் செய்யவில்லை.?
அறிவியலில் தமிழ் என்ற கட்டுரையை தமிழக T இராசகோபாலன் ஆய்ந்துள்ளார். இந்த அறிவியல் தமிழ் தமிழ் ஆறாம் ஆண்டில் வந்துவிடுமா?நமக்கு அறிவும் அறிவிலும் தமிழில் வேண்டாம் என்கிறீர்களா?
“வஞ்சித் தமிழ்” என்ற ஒன்று உண்டு தெரியுமா?அது உங்களைப்போல் அரசியல் வஞ்சம் பேசுதன்று! அது “குற்றால குறவஞ்சித தமிழ்”என்று
தமிழின் அற்புதமான பொற்புறு நயங்களை சொல்லும் தமிழ்.
இப்போது புரிகிறதா அதன் தமிழின் செஞ்சொல் இனிமை …இதெல்லாம் புரியவேண்டும் என்பதற்கு த்தான் தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டும் என்கிறோம்.
தமிழா ! என்று நம்புகிறேன் ….தமிழ் மொழி செம்மையானது அதற்கு செம்மொழி என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே கம்பன் பேர் வைத்தான். அதை கருணாநிதி என்ற காப்பி அடிச்சான் திராவிடன் அரசியல் நோக்குடன் சொல்லி மாபெரும் விழா எடுத்த திராவிடன் அரசியல் தெரு விளையாட்டை யாரும் கேக்க வில்லை?
எனது இந்த வியாக்கியானம் பிரச்சனைக்கு பொருந்த வில்லை என்பதில்லை ! இப்படிதான் தமிழை வைத்து வாழும் திராவிட கூட்டம் ,தமிழை இடைபோட முடியாத அறிவிலி கூட்டம் ஏன் தமிழ் இடை நிலைப்பள்ளி என்கிறது?
உயர் தனிச்செம்மொழியாகிய தமிழ் உலகிலே இலக்கண வளம் மிகுந்தது ஒலியியல், ஒளியியல் எழுத்தொலி இவைகளை ஆய்ந்து
நமது வருங்கால தமிழ் மாணவர்களுக்கு SMK தமிழ் மொழி பாடம் நடத்துமா?
அரசியலா ?தமிழா ? என்று பார்க்காமல் தமிழுக்கு உழைக்க வரும் டலமிலனையும், தமிழனையும் அணைத்து தமிழ் கடலுள் ஆழப்பொதி தித்துள்ள ஆய்வியல் முத்துக்களை நம் புதிய மாணவ மணிகளுக்கு சொல்ல நமக்கு தமிழ் இடைநிலைப்பள்ளி அவசியம் வேண்டும். தமிழன் தமிழ் சான்றோர் கடமை. தாய் வழி தமிழனாக் தமிழ் வழி தமிழர்களை வளர்ப்போம். தமிழ் அது ஆன்மீகம் மிக்கது. விளையாடாதீர் தமிழா!
உலகத் தமிழர் பாதுக்காப்பு மலேசியா,
தமிழின் சிறப்பும்,வரலாறும் தெரியாமல் கட்டுரை படைத்து
விட்டார் பாவம்!
வால்டோர், இது தங்களின் தனிநபர் கருத்து. அதற்கு ம.இ.க. தொகுதித் தலைவர் என்று இட்டுக் கட்டி ம.இ.க.-வின் கருத்தாக வெளியிட உங்களுக்கு மாநில, தேசிய தலைவர்கள் அனுமதி கொடுத்தனரா? தங்களின் கருத்தும் ம.இ.க. மாநில மற்றும் தலைமையகத்தின் கருத்தும் இதுவேதானா?. இதை உர்ஜிதப் படுத்துங்கள். நாளை மறுமொழி இடுகின்றேன்.
மாநிலத்துக்கு ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைந்தால் யாருக்கேனும் கெடுதல் உண்டோ???? மொழி வளத்துக்கும் வளர்ச்சிக்கும் இந்த இடைநிலைப்பள்ளி வித்திடுமல்லவா!!!!
பொன் ரங்கன், உங்கள் கருத்து சிறப்பானது,ஆனால் இந்த மஇகா தலைவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது,அவரவர்களின் மானியம்,குத்தகைகள்,பட்டம்,பதவி இவையெல்லாம் இவர்களின் கண்ணையும் மறைத்து,காதையும் செவிடாக்குகிறது,மேலும் நீங்கள் விளக்கமளிக்கும் கருத்துக்களும் நன்மைகளும்,மொழி உணர்வுகளும் புரிந்துக்கொள்வதற்கான அறிவாற்றல் இந்த மாஇகாவினருக்கு கிடையாது.கழுதையை குதிரை என்று சாதிப்பார்கள்.
பிள்ளையாரப்பா , கணேசா இப்படி ஒரு கட்டுரை எழுதியதற்க்காக நீ வெட்கப்படு . பொன் ரங்கன் கருத்தை மீண்டும் மீண்டும் படி ……!!! ம .இ. கா . தொகுதிப்பெயரை கெடுக்காதே !
தமிழ்ப்பள்ளிகளை எல்லாரும் சேர்ந்து மேம்படுத்துவோம் என்றால், 57 ஆண்டுகள் நீங்கள் தேசிய முன்னணியை ஏன் தமிழ்ப்பள்ளிக்கு உதவ சொல்லவில்லை, இன்று பினாங்கில் மக்கள் கூட்டணி ஆட்சியில் இருப்பதால், ம இ கா கூஜாவான நீங்கள் இப்படி உலறி தள்ளுகிரீர்கள் போலும், நீங்கள் எல்லாம் எதற்குத்தான் பயன் பட போரீங்க கணேசன், ஒரு புள்ளையும் அசைக்க முடியாத நீங்கள் ஏன் அரசியல் நடத்துகின்ரீர்கள் ? அடுத்த 14 வது போது தேர்த்லில் நீங்ககள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த ம இ கா வே காணமல் போகப்போகிறது இது சத்தியம், ஆனால் அம்னோவும் அவர்களின் இனத்துக்காக தொடர்ந்து போராடி நிலைத்திருக்கும் என்பதுதான் நா:ளைய நிலமை.
நான் இந்தப் பகுதியில் அதிகமாக நீட்டி இழுக்காமல் நறுக்கென்று ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இன்று உள்ள வாய்ப்பும் போராட்டம் நடத்தும் சூழலும் வரும் காலங்களில் இல்லாமல் போகலாம். அதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இரண்டை மாத்திரம் சுருக்கமாகச் சொல்கிறேன். முதலாவது, நாடு சுதந்திரம் அடைந்தபோது துங்கு தலைமையில் மலாயாவில் தோட்டவேலை செய்த எல்லா இந்தியர்களுக்கும் பிரஜாஉரிமை வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டும் அதை பெற யார்யாருக்கு விருப்பமோ அவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்டுப் பிரஜாஉரிமை வழங்கியபோது , பாதிக்குப் பாதிபேர் வேண்டாம் என்று சொல்ல கைகளை உயர்த்தியவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டன.அதில் என் தாத்தா பாட்டி அம்மா அப்பாவும் கைகளை உயர்த்திப் பெற்றதாக என் தாய்தங்தையரே எனக்குச் சொன்னார்கள். அது ஒரு காலம். அந்த சந்தர்ப்பம் மே13 இனக்கலவரத்திற்குப்பின் என்ன ஆனது? எவ்வளவு சிரமத்தை நம் இனம் சந்தித்தது. சிவப்பு அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, அந்நியராக பெர்மிட்டில் வேலை செய்தனர் இந்த நாட்டில். இரண்டாவது என் காலத்து அனுபவம்.பெல்டா திட்டத்தில் இன பாகுபாடின்றி கோட்டா அடிப்படையில் இந்த நாட்டில் பத்தேகால் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. என் தந்தை பத்திரிகையில் செய்தியை வாசித்துவிட்டு விண்ணப்பம் செய்து நிலத்தையும் இலகுவாகப் பெற்றார் ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்து ஒனபதாம்ஆண்டு மார்ச் மாதத்தில். அதே ஆண்டு மே மாதம் பதின்மூன்றிற்குப் பின் சில ஆண்டுகளில் மஹாதிரின் ஆட்சியில் பெல்டா விண்ணப்ப பாரத்தை இந்தியர்கள் தொட்டுக்கூடப் பாரக்கமுடியாத சூழல் உருவானது. பெல்டா திட்டம் புதிதாகத் தொடங்கப்படாமல் போனது. ஹிண்டிராப் பிற்காலத்தில் இந்தியர்களுக்கு பெல்டாவில் இடம் கொடுக்கவேண்டும் என்று மூடுவிழா கண்ட ஒரு திட்டத்தில் வாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்தது. உண்மை நிலை என்ன வென்றால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பெல்டாவில் நிலத்தைப் பெற்றும் பாதியிலேயே அதை விட்டு விட்டு தோட்டங்களுக்கு ஓடி வந்துவிட்னர். இதை கண்கண்ட சாட்சியாக நானே இன்னும் இருக்கிறேன். ஆக ஒரு காலத்தில் உள்ள வாய்ப்பு மீண்டும் வருமா ? என்பது சாத்தியமில்லை. எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கொப்ப செயல்படுவது புத்திசாளித்தனம் என்பேன். எவ்வளவு பிரச்னைகள் இருப்பினும் அதனூடும்கூட கிடைக்கும் காலத்தில், சந்தர்ப்பத்தில் இடைநிலைப் பள்ளியைப் பெறுவோமாக! அது இப்போது வேண்டாம், பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்பது சிறப்பான முன்னெடுப்பல்ல; யோசனையும் அல்ல எனபேன்.
திரு கணேசன் ஆறுமுகம்,நீங்கள் மஇக கிளைத் தலைவராச இருந்தும் சுங்கை பாக்காப் பாடா மத்தி சீனர்கள் குடியிருப்புக்கு மத்தில் மற்றும் வால் டோர் தமிழ் பள்ளி தோட்ட குடியிருப்புக்கு இடையே போதிக்கப்படுகின்றன இரண்டு பள்ளிகளும் குடியிருப்புக்கு நடுவே செயல்படுகின்றன,55ஆண்டுகளாக மஇக பினாங்கு மாநிலத்தில் ஆட்சி மன்ற உருப்பினர்களாக திரு சுப்பையாவும்,டாக்டர் ராஜபதியும் பதவியை அலங்கரித்தார்களே ஏன் அந்த இருதமிழ் பள்ளிகளுக்கும் நிலமும்,தரமான கட்டமும் கட்ட முயற்ச்சிக்க வில்லை?வெள்ளைக்காரன் கட்டிக்கொடுத்த ஞாபகார்த்தமாக இன்றும் காட்சி தருதே,குலசேகரன்,பேராசிரியர் ராமசாமி பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படித்தார்களா?என்ற கேள்வி எழுப்பும் முன் உங்கள் தேசியத் தலைவரின் பிள்ளைகளைப் பற்றி கேள்வி எழுப்பிக்கொளுங்கள் தமிழே சரியாக பேசத்தெரியாத தலைவரை பெற்றுள்ளதை நினைத்து பூரித்துக்கொள்ளுங்கள் !தமிழ் இடைநிலைப்பள்ளி மிகவும் முக்கிய தேவை அதில் தரமான மும்மொழி ஆசிரியர்களும்,தரமான கல்வியும் கிடைப்பதன் மூலம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்!இடைநிலை பள்ளி விசயத்தில் உங்களது விமர்சனம் மஇகவின் கொள்கையா?
தோழர் பொன் ரெங்கனுக்கு எனது பாராட்டுக்கள் .ம இ கா தலைவர்களின் அறிவிளித்தனமே மலேசியா இந்தியர்களின் இன்றைய வில்ழ்ச்சிக்கு முக்கய காரணம்.1955 ஆம் ஆண்டுக்கு பிறகு பைய-பைய எல்லாத்துறைகளிலும் இந்த நாட்டில் நாம் துரோகிகளால் வில்த்தப்பட்டோம் .உரிமைக்காக குரல் கொடுக்கவோ அல்லது தட்டி தைரியமாக கேட்க திரணியற்றவர்கள் இந்த ம இ கா முட்டாள்கள்.
ஜெகவீரபாண்டியன் அவர்களை போன்ற ……..ட்டால்கள் தான் இந்த அப்பாவி தமிழினம் வில்ழ்ச்சிக்கு முக்கிய காரணம்.இவரை போன்றவர்கள் அன்று முத்த இன்று வரை ம இ கா வில் நிறைந்து உள்ளானர்.
1. கையை உயத்தினால் அடையாலகார்ட்டு 1948 இல் பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.இன்றைக்கு ஆளும் அம்னோ தேசிய முன்னணியால் வழங்கப்படவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.அன்றைய நிலையில் சிலர் மீண்டும் தங்களது தாய் நாட்டுக்கே போய்விடலாம் என்ற நற்பாசையில் இருந்தனர் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி இந்தியர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் பெரும் கேடு பிடியை கொடுத்து வந்தது.1979 ஆம் ஆண்டு வரையில் ம இ கா வின் குடிஉரிமை விவாகார குழு தலைவர் யார் தெரியுமா ? டத்தோ ஸ்ரீ சம்ய்வேல்லு தான் அதன் தலைவர்.இந்திய சமுதாயத்தின் இன்றைய குடியுரிமை பிரச்சனைக்கு அவர்தான் முளுக்காரம்.அவர் தேசிய தலைவராக பொறுப்பு எற்ற பிறகு இந்த குடியுரிமை விவகார குழுவையே கலைத்து விட்டார்.அன்று முதல் தேக்க மடைத்த இந்த விவகாரம் இப்போது புதகரமாக உரு வெடுத்து உள்ளது.இந்த அடையாள கார்ட்டு பிரச்சனையை களைவதில் ம இ கா தொல்வியடைத்து விட்டாது என்பது தான் உண்மை.ம இ கா தலைவர்கள் அம்னோ தலைவர்களுக்கு தலை யாட்டி பொம்மையாகவும், எஸ் மேன்னாகவும் இருந்ததானால் வந்தது தான் இந்த அடையாள காட்டு பிரச்சனை.
இதை விட கொடியது எது தெரியுமா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள தொனியில் நாட்டுக்குள் புகுந்த இந்தோனேசியா கள்ள குடியேறிகளுக்கு ஆளும் அம்னோ குடியுரிமை வழங்கி வருவது தான் மிகப் பெரிய கொடுமை.கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டின் மேம்பாட்டுக்காக தன்னையே அற்பநிதுகொண்ட நமது தமிழினத்துக்கு குடியுரிமை வழங்காமல், இந்தோனேசியா கள்ள குடியேறிகளுக்கு, பிளிபினவிளிருந்து கள்ளத்தனமாக சபாவில் புகுந்த மோரோ இஸ்லாமியர்களுக்கு, தென் தாய்லாந்திலிருந்து குடியேறிய சியம் இஸ்லாமியர்களுக்கு, பங்கலடேசிகளுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு என்று மதத் வெறி பிடித்த அம்நோவினர் இஸ்லாமியர்களுக்கு இன்னும் தொடர்ந்து குடியுரிமை கொடுத்து வருகின்றனர்.
இதை தட்டி கேட்க வக்கிலாத இந்த ம இ கா தலைவர்களால் என்ன செய்ய முடியும்.2007 ஆம் ஆண்டு இந்த நாட்டில் முதல் முறையாக நவம்பர் 25 ஆம் தேதி இந்திய சமுதாயமே தெருவுக்கு வந்து தனது அதிருப்தியை பதிவு செய்தது.அப்பொழுது கூட இந்த ம இ கா மாற மண்டைகளுக்கு உறைக்கவே இல்லை.போலிஸ் காரர்களை துண்டிவிட்டு அடிக்க சொன்னதும் இந்த ம இ கா காரர்கள் தான் என்ற குற்றச்சாட்டு இந்திய சமுதாயத்தில் இன்னும் நிலவு கிறது.
2008 மார்ச் 8 ஆம் தேதி தேர்தல் முடிவு முதன் முறையாக ஆளும் தேசிய முன்னணி 2/3 பெரும்பான்மையை இழந்தது.இதக்கு முக்கிய காரணம் இந்திய சமுதாயம் தான் என்பதை இந்த நாடே அறியும்.ஏன் டத்தோ ஸ்ரீ சாமிவேலு நன்கு அறிவர்.1974, 1978, 1982, 1986,1990 1995, 1999, 2004 என்று 8 பொதுத்தேர்தலில் சுங்கை சிப்போட்டில் வெற்றி பெற்ற டத்தோ ஸ்ரீ சாமிவேலுவே தொக்கடிகப்பட்டது 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தான் என்பதை இந்த நாடே அறியும்.சாமிவேலுவின் கொட்டத்தை அடக்கியதும் இந்த தேர்தல் முடிவு தான்.
இந்தியர்கள் முட்டாள்கள் அவர்கள் தேசிய முன்னணிக்கு தான் வாக்களிப்பார்கள் என்று எதிர்பாத்து இருந்த ம இ காவும் அம்னோவும் பலத்த அடிவாங்கியது.இந்த அடிக்கு பிறகு அம்னோ மாறியதோ என்று தெரிய வில்லை ஆனால் டத்தோ ஸ்ரீ நஜிப் அடஹன் பின்னர் இந்தியர்களை கண்டு நீலிக்கண்ணீர் வடிக்க தொடங்கினர்.1948 பிறகு 2010 ஆம் ஆண்டில் அதாவது 62 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடியுரிமை இந்தியர்களுக்கு கொடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திவருகிறார்.60 அல்லது70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அங்கும் இங்கும்மாக ஒன்று ஒன்று கொடுத்து இந்தியர்களின் வாக்கு வேட்டையாடி வருகிறார்.இப்பொழுது இந்த ம இ கா வினர் தங்கள் தான் குடியுரிமை பெற்று தருவாதாக நா குசாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.60 ஆண்டுகளாக கிழிக்க கூட முடியாத இந்த ம இ கா முட்டாள்கள் இப்போது வெற்று கூப்பாடு போடுகின்றனர்.அதிலும் தற்போது இந்த முட்டாள் பழனிவேலு வேறு தலைவனாகி விட்டான்.இந்த முட்டாளுக்கு தமிழே சகஜமாக உரை யாட தெரிய வில்லை. இந்த முட்டாளை தமிழினத்தின் தலைவன் என்று வேறு அழைக்கும் கேவலம் ம இ காவில் தான் நிகழ்கிறது.
2.RISDA , FELDA , FELCRA போன்ற நிலத்திட்டங்கள் 1956 ஆம் ஆண்டே தொடங்கப் பட்டது.அப்போது இதன் தலைவர் யார் தெயுமா ? இன்றைய பிரதமர் நஜிபின் தந்தையர் துன் அப்துல் ரசாக்.இந்த நிலகுடியெற்ற திட்டம் தாம் பெரும் அய்யோக்கியதனமனது.இந்த நாட்டில் 100 ஆண்டுல ரப்பர் மரம் சிவியது , செம்பனை பழம் வெட்டியது எந்த இனம் என்றல் பச்சிளம் குழந்தை கூட கை நீட்டும் அப்பாவி தமிழினத்தை பார்த்து.ஆனால் இந்த அய்யோக்கிய தனமான திட்டத்தை தீட்டி இந்திய சமுதாயத்தையே திட்ட மிட்டு ஒளித்து kaddi விட்டது ஆளும் அம்னோ.ஆம் இந்த நாட்டில் பல் மரம் சிவுதல்,செம்பனை பழம் வேடுதல் இரண்டிலும் கை தேர்ந்தவர் நாம், ஆனால் இந்த நிலகுடியெற்ற திட்டத்தில் 90% மலாய்க்காரர்களை புகுத்தி நாட்டையே கொள்ளை யடித்து விட்டனர் அம்நோவினர்.அதே வேலையில் 100 ஆண்டுகளாக நமது தொழில் திறமையாக விளன்ன்கிய ரப்பர் மரம் சிவுதல், செம்பனை வெட்டுதல் தொழில் திறமையும் நம்மிடமிருந்து அம்நோவினர் கொள்ளை அடித்துவிட்டார். இந்த ம இ கா முட்டாள் தலைவர்கள் என்ன நடக்கிறது என்று ஜெகவீரபண்டியனை போல் பேச மடந்தையாக இருந்து விட்டனர்.
தங்களிடமிருந்த தொழில் திறமையை பறிகொடுத்து விட்ட நமது இளைய தலைமுறையினர் தற்போது வேலை வாயப்பு இன்றி சட்ட விரோத தொழில் இடுபட்டு வருகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் என்பது மிக கொடூரமானது .இப்போது இந்திய இளைஞர்கள் வன்முறை கலாச்சாரத்தில் இடு படுகின்றனர் என்று அம்நோவினர் குறிப்பாக போலிஸ் துறையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.ஆனால் நன்கு சதித் திட்டம் தீட்டி இந்திய சமுதாயத்தையே படு குழியில் தள்ளியது அம்நோவினர்.இதை இன்னும் உணராத, ம இ கா அடிமைகள் இன்னும் அம்நோவினருக்கு வெண்சாமரம் விசிகொண்டிருபது கொடுமையிலும் கொடுமை.
அருமை உடன்பிறப்புக்களே உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி அலைகின்றேன் வாருங்கள் நமது இன்றைய நிலைக்கு யார் காரணம் என்பதை அப்பாவி தமிளினத்திக்கு எடுத்து கூறுவோம் வாரீர் என்று அலைகின்றேன்.ஒன்று படுவோம் , ம இ காவினருக்கும் ,அம்நோவிட்கும் நாள்ல பாடம் புகட்டுவோம் வாரீர்.மாறுவோம்.மாற்றுவோம் வாரீர்.
இந்த முட்டாள் தனமான கேள்வியை ம இ கா தான் கேட்க முடியும்.நமது தாய் மொழிக்கு பெரும் அங்கிகாரம் உயர்நிலைபாள்ளி அமைப்பதின் வலித்தான் முடியும் என்பது கூட தெரியாமல் இருக்கின்றனர்.தமிழ் மொழியில் உயர்நிலை பள்ளி ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டிப்பாக தேவை என்பதை ம இ கா மடந்தைகளுக்கு உரக்க சொல்லுங்கள்.
என்னை முட்டாள் என்று திட்டியதற்காகத் தென்னாலிக்கு நன்றி! நான் ஏன் முட்டாள் என்று தென்னாலி விளக்கமாக எழுதி இருந்தால் என்னுடைய தப்பை திருத்திக்கொளவேன். என்னை ம.இ.கா. காரராக ஏன் சித்தரிக்கிறீர்? நான் என்ன சொல்ல வந்துள்ளேன் என்பதை உன்மையிலேயே புரிந்துகொண்டீரா? என்பது எனக்கு விளங்கவில்லை. உம்முடைய குற்றச்சாட்டை தெளிவாக எழுதும். இல்லை என்றால் திருப்பித்திட்ட எனக்கு அதிக நேரம் ஆகாது. உங்களுக்குப் புரியும் என்று நம்பும் ஜெகவீரபாண்டியன்.
பினாங்கு மாநிலத்தை ஆண்டுக்கணக்கில் ஆண்டு கொண்டு வந்தீர்களே அப்போது என்ன தூங்கிக் கொண்டு இருந்தீர்களா? அந்தக் குறைந்த வசதிகள் கொண்ட பள்ளிகள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? இப்போது தான் தெரிகிறதா? ஒன்றை மட்டும் ஞபாகம் வைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லை என்பது உங்கள் கருத்து. அது ம.இ.கா. கருத்து அல்ல. உங்கள் கருத்தை உங்கள் உள்ளே வைத்துப் பூட்டிக் கொள்ளுங்கள். சமுதாயம் என்று வரும் போது சமுதாய நலனைத்தான் நினைக்க வேண்டும். உங்கள் நலன் தேவை அல்ல. ஏதோ செனட்டர் பதவியாவது கிடைக்காதா என்று ஏங்கும் ஒரு சுயநலவாதின் புலம்பல்!
கணேசன் அவர்களின் கருத்தை புறிந்துக் கொள்ளாமல்…தங்கள் கருத்துகளை அனுப்பியவர்களுக்கு…என்னுடைய அனுதாபங்கள்….
அனுப்பியவர்களில் எவராவது இடைநிலைப் பள்ளியில் பணிப்புறிந்திருக்கீரிர்களா???என் முதல் கேள்வி…..அதுமட்டுமல்லாமல்…தமிழர்களால் மற்ற மொழி பள்ளியில் படிக்க முடியாது என்று தொல்வியை ஒப்புக்கொல்கிறீர்களா???என் இரத்ததிலும் தமிழ் இருக்கிறது…நானும் தமிழன்…என்று நினைத்து எல்லாம் இன்னல்கலையும் தாண்டி வர வேண்டாமா???காரணம் சொல்பவர்கள் காரியம் சாதிப்பதில்லை….எந்த இடத்தில் படிக்கிறோம் என்று முக்கியம் இல்லை…எதை எப்படி படிக்கிறோம் என்றுதான் முக்கியம்…குறை சொல்வதை நிறுத்தி விட்டு உங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்று பாறுங்கள்….
பிரியாவின் பிரியமான அறிவுரையைப் பின்பற்றுவது விவேகமானது.நான் இடைநிலைப் பள்ளியில் பணியாற்றியுள்ளேன்.
இவனையெல்லாம் முட்டால் என்று சொல்வதற்கு பதில் ம…ர் என்று சொல்லியிறுந்தால் சரியாயிறுந்திறுக்கம்.லட்சுமி குடும்பத்தையே கையிறுக்கு என்பதற்காக ஆனவத்தால் அகம்பாவம் கொண்டு *பித்னா* சுமத்தியன் எழுதியவன் இவனும் இவனை சோ்ந்தவர்களும்,ஆகயால் இவர்களை ம…ர்க்கு ஒப்பிட வுரியவன்,நாராயண சித்தம்.
பிரியாமானவரே உங்களுக்கு இந்த வாத விவாதத்தில் பங்கு பெற வயது போதாது என்று உங்க வாசக வரிகளில் உணர்கிறேன்.தமிழ் மொழி குறிப்பா இடை நிலைப்பள்ளி பாட இலக்கிய இலக்கண சார வரலாறுகள் SPM அல்லது STPM அல்லது ன் பல்கலைகழக போகும் போது தான் படிக்க வாய்ப்பு உண்டு.இதற்கு நமக்கு பல கஷ்டங்கள் ?
ஒரு இனத்துக்கு இனப்பற்றும் மொழி பற்றும் இருந்தால் தான் அம்மொழி உயரும்.தமிழர்களிடம் இனப்பற்று இருக்கும் அளவுக்கு மொழி பற்று இல்லை காரணம் உங்களைப்போல் அரை வேக்காடுகள் வந்ததை தின்று வெந்ததை ஏப்பம் விட்டு விடுவதால் மொழி வளர்ச்சி அறிவியல் மொழி பண்டைத்தமிழ் மரபுகள் செத்துப்போய் உள்ளது.
ஏழாம் அறிவு படத்தை பாருங்கள் உலகில் தமிழ் இனம் ஒரு தனி மரபினம்.ETHANIC RACE விளங்குதா? அது ஒரு தனி தேசிய இனம் நமது உரிமை நமது மொழி அதை விட்டு விட்டு நீங்கள் என்ன கிழக்க போறீர்கள்.
எல்லா மொழிகள் போல தமிழுக்கும் நாடு தேசம் அரசு அரசியல் ஆகிய இக்காலத்திய இலக்கணங்களை தழுவியே மொழி வளப்பமும் ஆய்வும் அறிவும் கல்வி மேம்பாடும் அமையும்.
உலக அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் மொழிக்கு பல இலக்கண கூறுகள் உண்டு அதற்கு தனி வழக்காறும் தனி பண்பாடும் உண்டு இன்னும் சொல்லபோனால் தனி அழகும் உண்டு. அதிக தமிழ் புத்தகங்களை படியுங்கள் உங்களுக்கு விளங்காத போது தமிழ் மொழியின் அருமை
தெரியும்.தமிழ் இடை நிலைப்பள்ளி அமைவதில் உங்களுக்கும் கணேசனுக்கும் என்ன வயிற்று எரிச்சல் ? நீங்கள் தாய் வழி தந்தை வழி தமிழர் இல்லையா? டிமிலசியா அல்லது சின்டியாநேசியா ?
இங்கு எழுதியவர்கள் எல்லாம் தம்ழில் தான் எழுதி உள்ளனர் கணேசன் குன்றிய அறிவை விளங்கிதான் மறுப்பு சொல்கிறோம் அவருக்க் வக்களத்து வாங்க உங்களுக்கு தமிழ் அறிவு போதாது.வருத்தங்கள் ! திரு பொன்ரங்கன் விளக்கம் படியுங்கள் புரியும்.
அன்பான சகோதரி பிரியா 22 இடைநிலை பள்ளியில் பணிபுரிந்திருக்கிறீர்களா ?தமிழ் இடைநிலைபள்ளி நம் நாட்டில் எங்கம்மா இருக்கு பணிபுரிய !ஒருக்கால் மலாய் இடைநிலை பள்ளியை குறிப்பிடுகிறீர்களா?
காயீ… உனக்கும் தென்னாலிக்கும் ஒரு மயிரும் தெரியாது .உன்னைப் போன்றவர்கள் வாயை மூடிக்கொண்டிருப்பதே தமிழனுக்கும் இந்தப் பகுதிக்கும் நலம். இதை அய்யன் வள்ளுவர் அழகாக இரண்டு குறள்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவையாவன…
” கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்”.
“அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டிக் கொளல்” முதலாமது கருத்துரை என்ன என்று புரிந்துகொள்ளாமலேயே அரங்கேறத் துணிந்தது. இரண்டாவது , அங்கே ஒரு நாய் குறைத்தது அதனால் நானும் குறைத்தேன் என்று குறைக்கிறது. கருத்திற்குக் கருத்து என்று இருக்கவேண்டும் என்பதைக்கூட அறியாமல் சைக்கோவைப்போல் பிதற்றுவதற்கான களமல்ல இது. அதற்கு அடிப்படைத் தமிழறிவாவது வேண்டும். அதும் இல்லை எனும் உணர்வுகூட இல்லாமல் இங்கே கடை விரிக்க ஆசைப்படுவது “கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. என்பதற்கு ஒப்பாகுமே!
ஜெகவீரபண்டியனுக்கு எனது நல வாழ்த்துக்கள்.கையை உயத்தினால் அடையாலக்கர்ட்டு கொடுத்தது துங்கு அப்துல் ரஹ்மான் என்று நிங்கள் பதிவு செய்தது தவறு.நாட்டில் கமுணிஸ் பயங்கர வாதத்தை முறியடிக்க பிரிடிஷ்சரல் கொண்டுவரப்பட்டது தான் அடையாலகார்ட்டு.இதற்கு BRIGS திட்டம் என்று பெயர்.தேசிய முன்னணி ஒரு போதும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு adaiyaalakarddu வழங்கியது கிடையாது.
பெல்டா நிலத்திடத்தில் யாரோ ஒரு சிலருக்கு ( இந்தியருக்கு ) தான் வாய்ப்பு வழங்கப் பட்டது.நியாயமாக இந்த திட்டமே இந்தியர்களுக்கு தான் முதல் இடம் கொடுத்திருக்க வேண்டும், காரணம் இந்த திட்டத்திக்கு தேவையான அனைத்து தொழில் திறமையும் இந்தியர்களிடம் முழுமையாக இருந்தது.இந்த திட்டத்தில் ஆளும் தேசிய முன்னணி அரசு இந்தியர்களை கடுமையாக வஜ்ஜித்து விடாது என்பது தான் எனது குற்ற சாட்டு.தேசிய முன்னணி அரசு ஒரு போதும் இந்தியர்கள் பிரச்சனைகளை களைய திட்டங்கள் வரையவே இல்லை.மாறாக இந்தியர்களை தேசிய முன்னணிக்கு அடிமையாக்கியது ம இ கா தான் என்பது எனது வாதம்.இந்த அடிமை விலங்கிலிருந்து அப்பாவி தமிழினத்தை மிட்டு கொண்டுவருவது ஒவ்வொரு தமிழனும் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.இனி இங்கு பதிவு செய்யப்படும் புள்ளிவிவரம் அறிவுபுர்வமானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வால்டோர், இளஞ்செழியன் இதற்குமுன் கொடுத்த புள்ளிவிவரப்படி தமிழ் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக மேம்பாடு கண்டுள்ளது என்று குறிபிட்டிருந்தார். இது யாம் அறிந்த செய்தியுமாகும். தமிழ் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வெகுவாக உயர்ந்துள்ளது என்று தானைத்தலைவரின் குடும்ப தமிழ் நாளேடு கடந்த தேர்தலுக்கு முன் பக்கம், பக்கமாக தமிழ்ப் பள்ளிக்கூடங்களை படம் பிடித்து போட்டு அஹா, ஓஹோ என்று பாராட்டி, சீராட்டி எழுதினார்கள். இதுவெல்லாம் உண்மையானால் மலேசியாவில் இன்றைய தமிழ்ப் பள்ளிகள் கடந்தக்காலங்களைவிட தரம் உயர்ந்துள்ளது என்பதே நியாயமாகும். சில ஆதாரங்களை எடுத்துக்காட்டி பலரும் இதை மறுக்கலாம். ஆனால், பொதுவாக தமிழ்ப்பள்ளிகளின் தரமும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நிலையும் உயர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியானால், இடைநிலைத் தமிழ்ப்பள்ளி நிறுவ இதுவே தக்க தருணம். மலாயா பல்கலைகழகத்தில் இயங்கும் இந்திய கல்வித்துறையில் 2012-ம் ஆண்டு இணைந்த இந்திய மாணவர்கள் 11 பேர், 2013-ம் ஆண்டு இணைந்த மாணவர்கள் 7 பேர் மட்டுமே. இந்த ஆண்டோ பெரிய கேள்விக்குறியில் நிற்கின்றது. இத்தகைய கல்வி நிலையங்களில் நம் மாணவர்களை நிரப்ப, தமிழ் மொழியில் நன்கு தேர்ந்த மாணவர்கள் தேவை. அத்தேவையை இன்றைய மலாய் மொழி இடைநிலைப்பள்ளிகளால் பூர்த்தி செய்ய இயலவில்லை. இதை நிவர்த்திச் செய்ய தமிழ் இடைநிலைப் அவசியமே. இன்றே செய்க, நன்றே செய்க. இல்லையேல், கண் கெட்டப் பிறகு சூரிய வணக்கம் செய்வதைப் போன்றதாகி விடும். இவ்வாறு செய்வதில். ம.இ.க. காரர்கள் கெட்டிக்காரர்கள் என்று இந்நாட்டு இந்தியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கொஞ்சம் விவேகமாக சிந்தியுங்கள். தங்கள் சிந்தனையில் அறிவாளித்தனம் தெரியவில்லை மாறாக அரசியல் அந்தரங்கம் தெரிகின்றது. தொடரும்.
பிரியா 22, தாங்கள் பொத்தாம் பொதுவாக இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் படிப்பு நிலையை அவர்களின் கட்டொழுங்கை வைத்துச் சொல்லி இருகின்றீர்கள். இது பல பள்ளிகளில் நடக்கும் உண்மை நிலை. காரணம் எம்வீட்டிலும் இரண்டு பட்டதாரிகள் இடைநிலைப்பள்ளிகளில் ஆரியராகப் பணிபுரிகின்றனர். அவர்கள் கொடுக்கும் தகவலின் படி மலாய் இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் நம் இன மாணவர்கள் (ஆணும் சரி பெண்ணும் சரி) தறிகெட்டு போய்கொண்டிருக்கின்றனர். தங்களின் ஆதங்கம் புரிகின்றது. இதற்க்கு தானைத்தலைவர் ஒரு நிகழ்வில் கூறிய காரணம் அங்கே நம் பிள்ளைகளை மலாய் ஆசிரியர்கள் கண்டுகொள்வது இல்லை என்பதே. தமிழ் பள்ளியில் இருந்து ஓரளவுக்கு கட்டுக் கோப்புடன் செல்லும் இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளியில் அவிழ்த்து விட்ட ஆடு மாடுகளைப் போல் சுற்றித் திரிகின்றனர். படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. இருப்பினும், எவ்வொரு பெற்றோர் தம் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கருத்துடன் தத்தம் பிள்ளிகளின் கல்வியில் சிரத்தைச் செலுத்துகின்றார்களோ அவர்தம் பிள்ளைகள் இன்று நன்றாகவே தேர்வில் வெற்றி அடைந்து வீறு நடை போடுகின்றனர். இடைநிலைத் தமிழ் வேண்டுவதின் நோக்கமும் நிலையும் வேறு. இங்கே தமிழின் தரம் உயர வேண்டும் என்பது. இவ்வாறு இடைநிலைத் தமிழ் பள்ளி இருக்கும் பட்சத்தில் பெற்றோரின், இந்திய ஆசிரியர்களின் கண் எப்பொழுதும் இம்மாணவர்கள் மேல் இருக்கும். கட்டொழுங்கு கண்காணிக்கப் பட்டு அவர்கள் கல்வியில் சிறப்படைய தொடர் முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படும். நிச்சயமாக நமது தானைத்தலைவர் இதற்கு ஒற்றுக் கொள்வார் என்றே நினைகின்றேன். ஊமைத்துரையை விட்டுத்தள்ளுங்கள். அவர் அரசியல்வாதி என்பதற்கு தகுதி அற்றவர். அவரை நம்பி ஆற்றில் இறங்க முடியாது. இடைநிலைத் தமிழ் பள்ளிக்கு இன்று நாம் வேண்டுகோள் விடுக்கவில்லை என்றால் நாமும் ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுவோம் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மொழிக்கு இடைநிலை பள்ளி யா ,காதுகளில் கேட்க சந்தோசமாக இருக்கிறது ,ஆமாம் நைனா ,இடைநில பள்ளியில் என்னத்தை படித்து கொடுக்க போகிறார்கள் ,இதிகாச நூல்கள்
இராமாயணம் ,மகாபாரதம் , அதைதானே ஆரம்ப பள்ளியில்
சொல்லிகொடுத்து நம் தன்னம்பிக்கையை இழந்து தெய்வ நம்பிக்கையை புகுத்தி நம்மை சாமியார்கள் பேச்சை கேட்டு மூட பழக்கத்தில் மூழ்க வைத்து அவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்களே ,முதலில் இருக்கும் ஆரம்ப தமிழ்ப்பள்ளிகளை இழக்காமல் பாதுகாப்போம் ,அதன் பின் கணிதம் ,விஞ்ஞானம் ,போன்ற படங்களை மட்டும் இடைநிலையில் கற்று கொடுக்க வேண்டும் ,மீண்டும் மீண்டும் இதிகாச கதைகளை படிக்க ஆரம்ப கல்வியே போதுமானது , நைனா .
கற்றது கையலவு கல்லாதது கடல்அலவு புரியாது புலம்பும்……… இறையை விமர்சிப்பவர் ………..நாராயண சமர்பனம்.
தென்னாலியிடமிருந்து இப்படிப்பட்ட பதிலைத்தான் எதிர்பார்தேன். இது மனிதனுக்கு அழகு.மௌனமாக தங்கள் பதிலுக்குக் காத்திருந்தபோது காயீ எனும் நரி ஊழையிட்டதால் பொங்கிவிட்டேன். அடியேனை மன்னிப்பீராக! என் பெற்றோர் பெற்றது பிரஜாஉரிமை.அவர்கள் சொன்ன செய்தியை நான் இங்கே முன் வைத்தேன். அவர்கள் அதைப் பெற்றதாக் கூறிய காலம் துங்குவின் காலம். ஆனாலும் நீங்கள் சொல்லும்படியாகவும் இருக்கலாம். நான் அப்போது அறியா குழந்தை. ஆனால் பெல்டா திட்டத்தில் நடந்து என் கண்களால் கண்டவை. 1969 மார்ச் மாதம் என் தகப்பனாருக்கு நிலம் கிடைத்து நாங்கள் குடியேறிய வருடம். அப்போது நாங்கள் குடியேறிய திட்டத்தில் இந்தியர்கள் 125 குடும்பங்கள் இருந்தனர். சிறிது காலத்தில் வெறும் 21குடும்பங்களைத்தவிர மற்ற 104 குடும்பங்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அந்த இடங்களை நிரப்ப இந்தியர்களைத் தேடினர். என் தந்தை தன் தம்பியை அழைத்துவந்து இடத்தைக் காட்டியபோது இங்கு 69வெள்ளி சம்பளம் போதாது எனக்கு வேண்டாம் என்று பெங்குலுவிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது இருந்த மலாய் அதிகாரிகள் இப்போது இருப்பவர்களைப் போல் அல்லர். ஓரளவிற்கு மனிதாபிமானம் உள்ளவர்களாக இருந்தனர். மே13க்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. அதைக் குறிப்பிட்டுத்தான் நான் கருத்தை எழுதினேன். காலம் மாற மாற இனவெறி மதவெறி அதிகரிக்க மற்ற இனங்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதும் அதிகரிக்கும். நிலைமை போகப் போகக் கடுமையாகும். ஆகவே இதுவே ஏற்ற நெரம் இடைநிலைப்பள்ளி கோரிக்கைக்கு என்றேன். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. அப்படி இருக்க தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான கோரிக்கையைத் ஏன் தாமதப்படுத்தவேண்டும் என்றுதானே சொன்னேன். நான் என்ன தவறாக எழுதிவிட்டேன்? மற்றபடி இந்தியர்களுக்கென்று தனி திட்டம் கொண்டுவருவதைப் பற்றியோ, இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவதைப் பற்றியோ நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே. எனக்குள்ள ஆதங்கம் என்னவென்றால் நமக்குக் கிடைத்த கொஞ்சம் வாய்ப்புகளையும் நம் இனத்தவர்கள் தவறவிட்டனரே என்பதுதான். பதில் கருத்து எழுதியமைக்கு தென்னாலிக்கு என் நன்றி!
பெல்டா ,ரிஸ்டா, பெல்க்ரா போன்ற திட்டங்கள் மட்டும் அல்ல மாறாக 1965 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு நிலங்களை மலாய்க்காரர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க ஆரம்பித்தனர்.இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளனாவர்கள் அப்பாவி தமிழர்கள் தான். 10 ஏக்கர், 29 ஏக்கர் என்று நிலத்துடன் கிராமங்களில் குடியிருந்த மலாயக்கரர்களுக்கே மிண்டும் தொடர்ந்து நிலம் கொடுத்தது இந்த தேசிய முன்னணி அரசு..சொந்த வீடு இல்லாமலும், நிலம்மும் இல்லாமல் இருந்த தோட்டத் தமிளினத்திக்கு நிலம் கொடுப்பதில் நயவச்ச்சகத்துடன் நடந்துக்கொண்டது இந்த இன வெறி பிடித்த அரசு.அடிமையில் சுகம் காணும் ம இ கா தலைவர்கள் துன் வீ தி சம்பந்தன், தன் ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு போன்ற அடிமைகள் தொடர்ந்து சமுதாயத்தை தேசிய முன்னணியிடம் அடமானம் வைத்து தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர் என்பது தான் உண்மை.
ஆகவே ம இ காவோ அல்லது தேசிய முன்னணியோ இந்தியர்களுக்கு நல சேவை செய்ததே கிடையாது.மாறாக இந்தியர்களிடமிருந்து அவர்களின் 100 தொழில் திறமை, கல்வி ஆற்றால் , sotthu udamai அனைத்தையும் apakaritthavarkal umno vinar தான்.indiyarkalin இன்றைய நிலைக்கு தேசிய முன்னணி தான் mulu muthak kaaranam.
பெல்டா ,ரிஸ்டா, பெல்க்ரா போன்ற திட்டங்கள் மட்டும் அல்ல மாறாக 1965 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு நிலங்களை மலாய்க்காரர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க ஆரம்பித்தனர்.இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளனாவர்கள் அப்பாவி தமிழர்கள் தான். 10 ஏக்கர், 29 ஏக்கர் என்று நிலத்துடன் கிராமங்களில் குடியிருந்த மலாயக்கரர்களுக்கே மிண்டும் தொடர்ந்து நிலம் கொடுத்தது இந்த தேசிய முன்னணி அரசு..சொந்த வீடு இல்லாமலும், நிலம்மும் இல்லாமல் இருந்த தோட்டத் தமிளினத்திக்கு நிலம் கொடுப்பதில் நயவச்ச்சகத்துடன் நடந்துக்கொண்டது இந்த இன வெறி பிடித்த அரசு.அடிமையில் சுகம் காணும் ம இ கா தலைவர்கள் துன் வீ தி சம்பந்தன், தன் ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு போன்ற அடிமைகள் தொடர்ந்து சமுதாயத்தை தேசிய முன்னணியிடம் அடமானம் வைத்து தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர் என்பது தான் உண்மை.
இருக்கும் ஆரமபம் / தொடக்க தமிழ் பள்ளிகளிலேயே நமது மாணவர்களின் எண்ணிக்கை திண்டாடிகொண்டு இருக்கிறது …தமிழ் இடைநிலை பள்ளிகளை பற்றி யோசிப்பது இது நல்ல காலம் இல்லை ……..மேலும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை இந்த மலேசியா நாட்டில் குறைந்து கொண்டு வருகிறது….வேணுமனே தேவையில்லாமல் இது போன்ற சமாச்சாரங்கள் அரசியல்வாதிகளின் நாடகங்களை அரங்கேற்ற வழிவகுக்கும் என்பது திண்ணம் …..தமிழ் இடைநிலை பள்ளிகள் என்பது தமிழ் மற்றும் இந்தியர்களின் எண்ணிகையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டிய விஷயம்……ஒரு குடும்பத்தில் ஒன்று / இரண்டு குழந்தைகள் இல்லாமல்……ஐந்து / ஆறு என்று எண்ணிக்கை மறுபடியும் அதிகரிக்க வேண்டும்….சாத்தியமா….??..??…கண்டிப்பாக முடியும் ……அரசியல் , மதம் , சாதி , இனம் என்று பாராமல் …..அனைவரும் ஒன்றினைந்து …ஒரே நோக்கதோடு செயல் பட்டால் …தமிழ் பல்கலைகழகமும் உருவாக்க முடியும்….
12,000 இந்திய பிள்ளைகள் தற்சமயம் சீன ஆரம்பப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களின் 50% பிள்ளைகளை தமிழ் ஆரம்பப் பள்ளிகளுக்கு அழைத்து வந்தாலே தமிழ் பள்ளி மேம்படுமே. என் இதை யோசிக்க மறுக்கின்றீர்கள். அம்நோகாரன் கெட்டிக்காரன். தமிழ், மலையாளி, தெலுங்கு என்று இந்தியர்களைப் பிரிப்பதில் வெற்றிக் கொண்டான். அரசியல் சித்தாட்டத்தில் வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல என்பதனை உணர அம்னோவுக்க வெகு காலம் பிடிக்காது.
ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் தமிழ்ப்பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையை தத்தெடுத்து alagupadtthi உதவி செய்யுங்கள். தமிழ்ப்பள்ளி, தமிழ் இடைநிலைப்பள்ளி, தமிழ் palkalakkalam உதயமாகும்.
என்னதான் காட்டு
கத்து கத்தினாலும் மலேசியாவில் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவது திண்ணம்….இது வரலாற்று பூர்வமாக நிருபித்த உண்மை…..மலேசியாவில் தமிழ் இடைநிலை பள்ளி என்பது வெறும் அரசியல் சாயம் பூசம் பட்ட ஒரு matter ……அடுத்த பொது தேர்தலின் பொது இந்த சாயம் வெடித்து வெளுபடும்…..மேலும் …..இப்போ நாங்க எல்லாம் மாறிட்டோம் …..சீன மற்றும் தேசிய பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் …..நாங்க இப்போ international பள்ளிகளுக்கு தான் அனுப்புறோம் …….வேணும்னா எங்கள அங்க வந்து பாருங்க…..அப்படினு சில படித்த பணக்கார பன்னாடைகள் சாவல் விடுகிறார்கள் ….இந்த சவாலுக்கு தமிழ் இடைநிலை பள்ளி தக்க பதில் கூறுமா….?…??…???
முதலாவதாக கணேசன் இந்த கட்டுரையில் தன் கட்சி பெயரை போட்டிருக்க கூடாது. இங்கு கருத்து சொன்ன பலர் அவர் எந்த கட்சிக் காரர் என்பதை கொண்டே தங்கள் சாடல்களை முன்வைதுள்ளனர். இடையில் தொடர்பில்லாமல் ஐ,சி, ஃபெல்டா பிரச்சனை வேறு. நானும் தமிழ் இடை நிலை பள்ளி குறித்த அறிக்கைகளை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லாம் செம மொக்கையான அறிக்கைகள். ஒரு தமிழ் இடை நிலைப் பள்ளி தொடங்கும் திட்டம் உண்மையிலேயே அவர்களுக்கு இருக்குமானால் அந்த பள்ளியின் முகாந்திர தேவைகள் என்ன என்பதை மக்கள் மன்றத்தில் தெளிவாக பேச வேண்டும். அந்த பள்ளி யாரை (சமுதாயத்தில் எந்த நிலை தமிழர்களை) நோக்கமாக கொண்டு தொடங்கப்படுகிறது என்பதையும் தெளிவாக பேச வேண்டும். படித்த மேல்தட்டு குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்புவார்களா என்பதை உறுதி படுத்த வேண்டும். தமிழ் ஆரம்ப பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்ப தயங்கும் படித்தவர்கள் தமிழ் இடைநிலை பள்ளிக்கு அனுப்புவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆகவே இந்த தமிழ் இடை நிலைப்பள்ளி அடிதட்டு மக்களின் அவலப் பள்ளியாகத்தான் காட்சி அளிக்கும். இப்போது அதிகம் இந்திய மாணவர்கள் பயிலும் ஒரு சில இடை நிலைப் பள்ளிகளை விட பண்பாட்டு சீர்கேடுகளும் கட்டொழுங்கு பிரச்சனையும் நிறைந்த பள்ளியாக வாய்ப்பு அதிகம் உள்ளது. பினாங்கில் 10000 பேர் கையெழுத்து இட்டு ஆதரவு தெரிவித்ததாக நாளிதழில் செய்தி போட்டுக் கொண்டால் போதாது. அதில் கொஞ்சமாவது உண்மையும் இருக்க வேண்டும். பினாங்கில் இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிக்கு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 5000 தை தாண்டவில்லை. அவ்வளவுதான் தமிழ்ப்பள்ளிக்கான ஆதரவு. இதில் தமிழ இடை நிலை பள்ளிக்கு எங்கிருந்து 10000 பேர் ஆதரவு தெரிவித்தனர். என்னைப் பொருத்தவரை மலேசியாவில் தமிழ் இடைநிலை பள்ளி என்பது வீண் கற்பனை. அது தேவையும் இல்லை. தரமான தமிழ் ஆரம்பபள்ளி, இடைநிலைப்பள்ளியில் கட்டாய தாய் மொழிக் கல்வி, பல்கலைக்கழ்கத்தில் நிலையான உறுதியான தமிழ்க் கல்வி, இவையே நமது இன்றைய தேவை. தமிழ் இடை நிலைப்பள்ளிக்கு கோரிக்கை வைப்பதால் தங்களை மிகப் பெரிய தமிழ் தொண்டனாக காட்டிக் கொள்ள முயலும் நபர்கள் உண்மையில் ஆபத்தானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கை தேவை, காரணம் அவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக் சமுதாய நலனையே அடகு வைக்க முயலுபவர்கள், மேலும், அப்படியே ஒரு பள்ளி கட்டப்பட்டாலும் இப்போது வாய்கிழிய பேசும் யாரும் தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பப் போவது கிடையாது. ஹிண்ராஃவ் ஆரம்ப போராட்டத்தின் போது, பிரிட்டீஷ் அரசின் மீது வழக்கு தொடுப்போம் அதில் வென்றால் நமக்கு லச்சம் லச்சமாக பணம் கிடைக்கும் என்று கூறி பரபரப்பூட்டியது போன்றதே தமிழ் இடை நிலைப்பள்ளி குறித்த பேச்சும். மக்களை பரபரப்பாக்கி அரசியல் பேச முடியும் என்பதைத் தவிர வேறு பயன் இல்லை. அரசியல் வாதிகள் இப்படித்தான் கிடைத்ததையெல்லாம் கொழுத்தி குளிர் காய பார்ப்பார்கள். மக்கள்தான் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். நான் எந்த கட்சியிலும் இல்லாதவன். ஆகவே வழக்கம் போல வெளங்காத்தனமாக எதையாவது எழுதும் முன் கொஞ்சம் சிந்தியுங்கள்.
ஹிண்ட்ராப் போராட்டத்துக்கும், இடைநிலைத் தமிழ் பள்ளிக்கும் முடிச்சி போடுவது யானை வாலுக்கும் எலி வாலுக்கும் முடிச்சி போடுவதைப் போன்றது. தமிழ் இடைநிலைப் பள்ளி என்பது பினாங்குகாரருக்கு கற்பனையாக தோன்றலாம். மற்றவர்கள் இது நிஜமாக இருக்கணுமே என்று வேண்டுகின்றனர். எப்பொழுது, எப்படி மலாய் இடைநிலைப் பள்ளியில் தமிழ் கட்டாயப் பாடமாக்க முடியும்?. பினாங்குகாரரின் கையில் எதுவும் மந்திர கோல் உள்ளதா? அல்லது ம.இ.க. மந்திகளுக்குத்தான் மதி இருக்கின்றதா? இதை செய்ய. எங்கிருந்து ஐயா வரும் “பல்கலைக்கழ்கத்தில் நிலையான உறுதியான தமிழ்க் கல்வி”!. மலாய் இடைநிலைப்பள்ளியில் தமிழ் படிக்க போதிய வசதி இல்லாமலும், வசதி இருந்தால் தரமான தமிழ் ஆசிரியர்களும், மாணவர்களும் இல்லையானால் எங்கிருந்து வரும் உறுதியான தமிழ் கல்வி?. பினாங்குகாரரே அனைத்தையும் நீங்களே கற்பனை செய்துக் கொண்டு கருத்து எழுதினால், இது கற்பனை கருத்தாகத்தான் படிப்போருக்குத் தோன்றும்.
பினங்குகாரன், ஒரு மாநிலத்தில் உள்ள தேற்சிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு அந்தந்த மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதில்லை. ஒருவேளை பினாங்கில் வெற்றிகரமாக இந்த இடைநிலைப்பள்ளி அமைந்தால்,மற்ற மாநிலங்களை சார்ந்த மொழிப்பற்றுள்ள மாணவர்களை ஏற்றுக்கொள்ள,பினங்குகாரரான நீங்கள் மறுப்பிர்களா?
பினாங்குக்காரனுக்கு… உம்முடைய கருத்தை இப்பகுதியில் பதிவு செய்துள்ளீர்கள்.அது ஏற்புடையதோ அல்லது எதிர்மாறானதோ பதிவு செய்வது உங்கள் உரிமை.அதை நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் உரிமையை நாங்கள் மதிக்கத்தான் வேண்டும்.அதுதான் நாகரிகம் பண்பாடும்கூட. எனக்கு உங்கள் கருத்துகளில் சில ஏற்புடையதாகவே இருந்தன. நீங்கள் உங்களின் ஆழமான கருத்துகளை பதிவு செய்ததோடு விடாமல் மற்ற கருத்தாளர்களை மொக்கை, ஆபத்தானவர்கள், எதையும் விளங்காத்தனமாக எழுதுபவர்கள் என மற்றவர்கள் மீது அரசியல்சாயம் பூசி தங்களது மனச்சீற்றத்திற்கு வடிகால் தேடுகிறீர்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ மற்றவர் கருத்துகளையும் நீங்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? யாரும் இங்கே ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் திட்டிக்கொள்ளவில்லையே? தமிழுக்காக குரல் கொடுப்பவர்களைத் தீவிரவாதிகளைப் பார்ப்பதைப்போல் “ஆபத்தானவர்கள்” என்று ஒரு தமிழன் தமிழனைப்பார்த்து சொல்லவேமாட்டான். ஆனால் நீங்கள் சினத்தின் உச்சியில் நின்று என்ன எழுதுகிறோம் என்று உணராமலேயே எழுதுகிறீர்கள். ஒர் இடைநிலைத் தமிழ்ப்பள்ளிக்குக் குரல்கொடுப்பது அவ்வளவு பெரிய பாவமா? அவ்வளவு பெரிய கொடுமையா? அவ்வளவு பெரிய முட்டாள்தனமா? இந்த நாட்டில் அரசியல் நடத்தும் இனவெறி பிடித்த ஒரு தமிழ் துரோகியின் உதடுகள் உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள் உங்கள் உதடுகளை அசிங்கப்படுத்த நீர் எப்டி அனுமதித்தீர் பினாங்குக்கார்ரே..? உங்களின் நல்ல கருத்தனை என் மனத்தில் எடுத்துக்கொள்கிறேன். அல்லவற்றை மறந்துவிடுகிறேன். மறப்போம் மன்னிப்போம் என்பது பேரறிஞர் அண்ணாவின் அமுதமொழி. அவர் வழியில் செல்வோம்!
ஜெகவீரபாண்டியன் அவர்களே, உங்கள் கருத்துகளை நான் மதிக்கிறேன். நிதானமாக சிந்திக்கும் உங்கள் பாணி போற்ற தக்கதுதான். ஆனால் உங்கள் கருத்துகளுக்கு முன் உள்ள கருத்துகளை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்கள். நான் ஹின்ராப் போராட்டத்தை தமிழ் இடை நிலை பள்ளி யோடு தொடர்பு படுத்துவதாக தேனி கூறுகிறார். நான் ‘கற்பனை வாத போராட்டத்தின் ‘ உதாரணமாகத்தான் ஹின்ராஃப் போராட்டத்தை சொன்னேன். அதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களை அபத்தம் என்று தானே சொல்ல முடியும். அதை விட நிஞ்சா மேலும் குழப்புகிறார். பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி தொடங்கினாலும் அதன் ஆசிரியர்களை, பள்ளி முதல்வரை நிர்ணயிக்க வேண்டியது கல்வி அமைச்சின் வேலை என்பது தேனிக்கு தெரியுமா?. நீங்கள் ‘தரமான’ தமிழ் ஆசிரியர்களை எங்கிருந்து கொண்டுவருவீருகள். யார் ஊதியம் கொடுப்பார்? அந்த பள்ளியில் எல்லா பாடங்களும் தமிழ் மொழியில் மட்டும் தான் போதிக்க படுமா? மற்ற மொழி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்களா? இந்த கேள்விகளுக்கு தேனிக்கு பதில் தெரியுமா? வேறு மநிலத்தில் இருந்து மாணவர்களை கொண்டு வருவாராம். அதாவது தங்கும் வசதி கொண்ட பள்ளியை மனதில் வைத்து அவர் கூறும் கருத்து எத்தனை சிக்கல்களைக் கொண்டது என்பது அவருக்கு தெரியுமா? இது போன்ற திட்டங்களை திட்டமிட அனுபவம் உள்ள அறிஞர்கள் முன் வந்து பேச வேண்டும். போகிற போக்கில் மக்களை உசுப்பேத்தி தூண்டி விட்டு குழப்ப பேச்சு பேசுபவர்கள் நிச்சயம் ஆபத்தானவர்கள்தான் ஜெகவீரபாண்டியன் அவர்களே. ஆளும் கட்சியிலும் எதிர்கட்சியிலும் இது போன்ற ‘ஆபத்தானவர்கள்’ உள்ளனர். அடிக்கடி மொழி இனம் என்று பேசி மக்களை கவர முனையும் இவர்கள் சமுதாயத்தை எந்நேரமும் பதட்ட நிலையில் வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள்தான். மீண்டும் உறுதியாக சொல்கிறேன். தமிழ் இடை நிலைப் பள்ளி என்னும் பேச்சு வெத்துப் பேச்சு. இல்லாத ஊருக்கு வழி தேடும் செயல். அதை பேசுவதன் மூலம் மக்கள் உணர்ச்சியை கூட்டி தங்களை தமிழ் தொண்டர்கள் என்று மட்டுமே இவர்களால் காட்டிக் கொள்ள முடியும். அப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் இவர்கள் இதை முன்னேடுக்க காரணம் அரசியல் உள்நோக்கம் அன்றி வேறில்லை. மேலும் தொடர்வேன்….
தமிழ் இடை/உயர் நிலை பள்ளி(கள்) இருந்தால் எதிக்காலத்தில் யாருக்கு நன்மை? பன்னிரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
நம் நாகரிகம் கொடிகட்டி பறந்ததை யாரும் மறுக்க முடியாது! இன்னொரு பன்னிரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் சத்திரம் படைக்க முடியாதா??? காடாக இருந்த இந்நாட்டை செழுமை படுத்தியதைவிட வேறு என்ன பெரிய இடையூறுகள் நாம் காண போகிறோம்? காரணம் சொல்லிகொண்டிருந்தால் எப்பொழுது நாம் மீண்டும் பொற்காலத்தை காணப்போகிறோம்?
பினாங்குகாரரே, இடைநிலைத் தமிழ் பள்ளியின் வேண்டுகோளை ஹின்றாப்ட் போராட்டத்துக்கு ஒப்பிடுவதோ அல்லது எடுத்துகாட்டாக வைப்பதோ முறையாகாது. சீனர்கள் 1969-ல் மெர்டேக்கா பல்கலைக்கழகம் கேட்டு, 2002- ல் ம.சீ.ச. மூலம் UTAR பல்கலைக்கழகம் அமைத்தனர். அழுகின்ற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். நாம் காலா காலமாக புறந்தள்ளப்பட்டு உள்ளோம். இந்நாட்டில் கேட்டால்தான் எதுவும் கிடைக்கும் என்ற நிலையை அறிந்து செயல்பட்டால் பயன் உண்டு. ஹின்றாப்ட் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால் இன்றும் இந்தியர்களுக்கு இந்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக கிடைத்த ஓரிரு சலுகைகள் கூட இல்லாமல் போயிருக்கும். அம்னோவும் செய்து இருக்காது. ம.இ.க.-வும் மட்டம் தட்டிப்போயிருக்கும். இந்தியர்களிடையே ஏற்பட்ட மறுமலர்ச்சியே நம்மவர்களை இன்று இடைநிலைப் தமிழ் பள்ளிக்கு அனுமதி கேட்க வைத்திருக்கின்றது. இது முன்னேற்றம். பின்னடைவு இல்லை. நான் முற்போக்கு வாதியாக இருக்க விரும்புகின்றேன். பினாங்குகாரர் நீங்கள் பிற்போக்கு வாதியாக (pessimistic) இருக்கவிரும்பினால் அது உங்கள் விருப்பும் இன்று எதிர்கட்சியாக இருக்கும் மக்கள் கூட்டணி அடுத்த தேர்தலில் நடுவண் அரசை அமைக்க நேரிட்டால் இன்று தமிழ் இடைநிலைப் பள்ளிக்கு நாமே எதிர் குரல் கொடுத்து, நாளை ஆட்சிக்கு வந்தபின் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு ஐயா சாமி கொஞ்சம் பிச்சை போடுங்க என்று கெஞ்சினால் காரி நம் முகத்தில் துப்பமாட்டார்களா?. அரசியல் என்பது நிரந்தரம் அற்றது. அதுவும் மலேசியால் அரசியல் சூழ்நிலை வெகு வேகமாக மாறிக் கொண்டிருகின்றது. நாளை என்ன என்பதே இன்றைக்குத் தெரியாத நிலை. காலம் அறிந்து காரியத்தை சாதிப்பவனே காலை முன்னெடுத்து வைக்க முடியும். போக வேண்டிய பேருருந்தில் ஏறாமல் கைவிட்டு, கையை பிசைந்துக் கொண்டு வெறுமனே நின்றுக் கொண்டிருப்பது அறிவாளித்தனம் அல்ல. காலம் உள்ளபோதே தூற்றிக் கொள்வோம். தங்களின் மற்றைய கேள்விக்கு இப்பொழுது பதில் அவசியம் இல்லை நினைக்கின்றேன். .
தேனி உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் என் மற்ற கேள்விகளுக்கு விடை சொல்ல மறுக்கலாம். ஆனால் தமிழ் இடை நிலைப் பள்ளி யைப் பற்றி பொது மக்களிடம் பேசும் முன் உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். காரணம் மக்களுக்கு தேவை அவர்களின் பிள்ளைகளின் கல்வி தொடர்பான தெளிவான விளக்கங்களே. நீங்கள் பேசும் ‘நம்பிக்கை’ நிறைந்த அரசியல் பேச்சுகள் அல்ல. தமிழ் இடைப் பள்ளியின் கட்டமைப்பை பற்றி தெளிவான முடிவுக்கு வராமல் எந்த தைரியத்தில் மக்களிடம் பிரச்சாரம் பன்னுகிறார்கள். கையெழுத்து வேட்டை எல்லாம் (!) நடக்கிறது. சீன பள்ளியில் பயிலும் 12000 மாணவர்களை எப்படி தமிழ் பள்ளிக்கு கொண்டுவர முடியும் என்று சிந்திக்க மறுக்கிறோம். தேசிய பள்ளியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயருவதை எப்படி தடுப்பது என்பதும் நமக்கு பொருட்டல்ல. ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாத தமிழ் இடை நிலை பள்ளி என்ற ஒன்றைப் பற்றி உணர்வு பூர்வமாக வாதாடி ‘உரிமையை’ நிலைநாட்டுவோம். நன்று. எது உண்மை எது பாசாங்கு என்பதை மக்கள் அறிவார்கள்.
தேனி அவர்களே, மசீச போராடி பல்கலைக்கழகம் பெற்றதாக கூறுகிறீர்களே. நாமும்தான் போராடி ஒரு பல்கலைக்கழகம் அமைத்தோம். இன்று அதன் நிலை என்ன? தயவு செய்து இது ம இ கா வின் தவறு என்றோ சாமிவேலுவின் மோசடி என்றோ கூறி தப்ப வேண்டாம். அன்று பல்கலைக்கழக்ம் பெற வேண்டும் என்னும் முழக்கமும் இப்படித்தான் எந்த ஆய்வும் இன்றி எதிர்கால தேவைகளை மனதில் கொள்ளாமல் ‘நமது உரிமை’ என்று மேல் மட்ட பேச்சு பேசி மக்களை ஏமாற்றினார்கள். ஒரு பல்கலைக்கழகம் எப்படி இயங்கும் அதன் வருமானம், கல்வி கட்டமைப்பு போன்ற எதைப்பற்றியும் ஆய்வுகள் நடத்தப்படாமல் கட்ட பஞ்சாயத்து பேசினார்கள். இன்றும் தமிழ் இடை நிலைப் பள்ளி குறித்தும் அதே உணர்ச்சி வேக வெளிப்பாடுதான் நடக்கிறது. நாளை பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் இல்லை என்று இன்னொரு போராட்டம் நடத்துவார்கள். சிந்தியுங்கள்
தேனி அவர்களே, உங்களை நீங்களே முற்போக்காளர் என்று கூறிக் கொள்வது நகைப்பை மூட்டுகிறது. பரவாயில்லை இருந்து விட்டு போங்கள். யாருக்கும் சிரமம் இல்லை. ஆனால் உங்களைப் போன்ற ‘முற்போக்காலர்கள்’ ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு திட்டத்தை எந்த ஆய்வும் அலசலும் இன்றி மிக பதட்டமாகவும் அடாவடி குரலுடனும் ஆரம்பித்து பிறகு சில வருடங்களிலேயே அந்த திட்டத்தின் ‘பிற்போக்கு தனங்கள்’ வெளிச்சத்திற்கு வந்ததும் சத்தமில்லாமல் தங்கள் முற்போக்கு தனத்தை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு நழுவி விடுகிறார்கள். இதுகாரும் நம் இந்திய அல்லது தமிழ் சமுதாயத்தை அடையாளப்படுத்தி ஆரம்பிக்கப் பட்ட பல பிரமாண்ட திட்டங்கள் அந்த குறிப்பிட்ட கால முற்போக்கு சிந்தனையாளர்களால்தான் தொடங்கப் பட்டு பின்னர் மூடுவிழா கண்டன அல்லது குற்றுயிரும் கொலை உயிருமாக வாழ்ந்து கொண்டு இருகின்றன. மலாய பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையின் இன்றைய நிலை ஒரு எடுத்துக் காட்டு. ஆனால் அதை சரி செய்து தமிழை வாழ வைக்க முற்போக்காலர்கள் யாரும் இப்போது முன்வரக் காணோம். எல்லாரும் தமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து சிந்திக்க போய்விட்டார்கள் போலும்.
தங்கள் கருத்துக்கு நன்றி பினாங்காரே, இந்நாட்டில் சீன இடைநிலைப் பள்ளிகள் இரண்டு வெவ்வேறான கூறுகளில் நடத்தப்படுகின்றன. (1) தனியார் நிலங்களில் செயல்படும் சீன அரசாங்கப் இடைநிலைப் பள்ளிகள் “sekolah bantuan” -ஆக செயல்படுகின்றன. இங்கே போதனாமுறை, ஆசிரியர்கள், அவர்தம் சம்பளம் இன்னும் இதர தேவைகளை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு செயலாற்றுகின்றது. தலைமை ஆசிரியர் என்பவர் சீனராகவே இருக்கமுடியும். இதற்கு ஒவ்வொரு சீன பள்ளிகளின் இயக்குனர் வாரிய குழு அரசாங்கத்திடம் முன் வைக்கும் கோரிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப் படுகின்றது. (2) சுவா (SUWA) எனப்படும் சீன தனியார் பள்ளிகள். இவை அரசாங்கத்திடம் இருந்து பள்ளிக்கான உரிமம் மட்டும் பெற்று அனைத்தையும் தங்கள் சொந்த செலவில் நடத்துகின்றனர். இங்கே 2 வகையான பாட திட்டங்கள் உள்ளன. (i) மலேசியாவின் பொது தேர்வுகளுக்கான பாட திட்டம் (SRP, SPM & STPM) (ii) Unified Examination Certificate
எனப்படும் சீன பள்ளிகளுக்கிடையே கூட்டு முறையில் நடத்தப்படும் தேர்வு. இரண்டு வகையிலும் சீன மாணவர்கள் மேற்கல்வி தொடருவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இத்தனியார் பள்ளிகளில் போதனா மற்றும் தொடர்பு மொழி மாண்டரின் மொழியே, மலேசிய பொது தேர்வுகளுக்கான பாடங்களைத் தவிர்த்து. நமக்குத் தேவை இரண்டாவதாக இருக்கும் தனியார் பள்ளி அமைப்பு முறையே. ஏன் என்பதற்கு அடுத்து வரும் பதில். தொடரும்.
மலேசியாவின் பொதுத் தேர்வுகளின் தராதரத்திலும், பாடத்திட்டத்தின் தராதத்திலும் பின்னோக்கி சென்று கொண்டிருப்பது கண்கூடு. இது PISA தேர்வில் நம் மாணவர்களின் அடைவு நிலை தெளிவுபடுத்துகின்றது. SPM தேர்வில் ‘Additional Maths’ -ல் 12 புள்ளிகளே போதுமானது ஒரு “E” தகுதி நிலையில் தேர்வாவதற்கு!. இதனால் வசதிபடைத்த மற்றும் நடுத்தர மேல்தட்டு பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு மாற்று வழி போதனா முறையைத் தேடி அலைகின்றார்கள். ஒரு சிலர் சிங்கப்பூரில் படிக்க வைக்கின்றனர். இன்னும் வசதி படைத்தோர் அனைத்துலக பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் காரணம் அவர்கள் மலேசிய பொது பள்ளிகளின் பாடதிட்டத்திலும், தேர்வுகளிலும் நம்பிக்கை இழந்து விட்டனர். மற்றோர் வேறு வழியின்றி SPM வரை படிக்க வைக்கின்றனர், மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெரும் நிலையில் தங்களுடைய படிப்பை வெளிநாடுகளில் தொடர்கின்றனர். வசதி இல்லாதோர் நிலை என்ன?. இந்நிலையில் நாம் கேட்கும் தனியார் தமிழ் இடைநிலைப் பள்ளியின் வழி, மேற்கூறிய குறைகளுக்கு நிவர்த்திக் காணலாம். இங்கே படிக்கப் போகும் மாணவர்களுக்கு இந்நாட்டு தேர்வுகளுக்கு தயார் படுத்தும் அதே வேளையில் ‘Cambridge “O” Level” மற்றும் “A” Level பரீட்ச்சைக்கும் தயார் செய்து தேர்வில் அமர வைக்கலாம். இது MARA Junior College- ல் நடக்கின்றது அல்லவா?. ஏன் நாம் செய்ய இயலாது?. இந்த நிலை ஏற்பட்டால், தரமான பள்ளிப் படிப்பிற்கு நம் இந்திய மேல்நிலை பெற்றோர் நிச்சயமாக ஆதரவு நல்குவர். காரணம் இத்தகைய மாற்று வழியை அவர்கள் தேடிக் கொண்டிருகின்றனர். வழிதான் இந்நாட்டில் கிடைக்கவில்லை. இத்தகைய பள்ளி அமைந்தால், தமிழ் மொழி, இலக்கியம் பாடங்களிலும் மென்மேலும் புலமை பெரும் நம் மாணவர்கள் அதே வேளையில் தங்களை மேற்கல்விப் படிப்புக்கும் தயார் செய்து கொள்வர். நட்டம் நமக்கில்லையே. இதற்க்கு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் உதவியை நாடாலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருக்கிறது. வேண்டுமென்றால் மேலும் பல பல்கலைகழகங்கள் இருக்கின்றன. செயல்திட்டத்தை “அ” விலிருந்து “ன்” வரை கேட்காதீர்கள். அதற்க்கு இன்னும் காலம் கனியவில்லை.
AIMST பல்கலைகழகத்தின் நிலையைக் கேட்டு வற்புறுத்தாதீர்கள். அப்புறம் “கன்னா பின்னா” என்று எழுதி விடுவேன். கட்டுரையாளர் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தொங்கி போய் விடுவார்.
முற்போக்காளராக இருப்பதில் தவறு என்ன?. சுயநலவாதிகளையும் அவர்களின் வாய் ஜாலங்களையும் சொல்லி நீங்கள் மற்றவரைப் பிற்படுத்துவது முறையன்று. மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வில் பிரிவில் நடந்தது என்னவென்பதை நீங்கள் அறியவில்லைப் போலும். ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளாக இந்த இந்தியப் கல்விப் பிரிவில் பேராசியர்களிடம் 2 கட்சிகள். ஒன்றை மற்றொன்று வீழ்த்த நடந்த உள்குத்துகள் ஏராளம். இந்த சூழ்நிலையில் மாணவர்களும் பலிகடாவாகப் பட்டார்கள். மாணவர்களும் இந்த இரண்டு போராட்டக் கட்சி பேராசியர்களின் பிரிவில் ஏதாவது ஒரு குழுவில் இணைந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவர்கள் தேர்வில் கொல்லபடுவார்கள். என்ன செய்ய ஏதோ படித்தோம் பட்டத்தை வாங்கினோம் என்று போகின்றவர்கள், இங்கே நடக்கும் கூற்றை வெளியே சொல்லி அங்கே ஏன் படிக்க போகின்றீர்கள் என்று போட்டுக் கொடுத்ததில் படிப்படியாக மாணவர்கள் தொகை குறைந்தது. இதற்கிடையில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு முன்பு மலாயா பல்கலைகழகம் ஒரு ஆய்வியல் பல்கலைகழகமாக தரம் உயர்த்தப் பட்ட பொழுது. இந்திய ஆய்வியல் துறையில் இருந்த பேராசியர்கள் இதன் பின் விளைவை முன் கூட்டியே இந்திய அரசியல் கட்சிகளின் காதிலோ, இயக்கங்களின் காதிலோ போடவில்லை. பின்னர் நிலைமை மோசாமாகிட குய்யோ முரோ என்று அனைவரும் கூப்பாடு போட்ட பொழுதுதான், இதுதான் எங்களுக்கு முன்னமே தெரியுமே என்றனர் இந்த மதிப்புமிகு பேராசியர்கள். இவர்களின் கையாலாகாத தனத்தினால்தான் ஒரு சீக்கியரை இந்திய ஆய்வியல் துறைக்கு தலைவராக போட்டனர். குமரன் வருவதிற்கு முன்பு.
இதெல்லாம் எனக்கு பெரிதாக தெரிய வில்லை .ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் நம் நாட்டில் உள்ள தெலுங்கர்கள் நம் தமிழ் பள்ளியை கைபற்றவது நிச்சயம்.ஏன் என்றல் அண்மையில் நமது துணை பிரதமர் தெலுங்கு சங்கதிக்கு 10 லட்சம் மானியம் வழங்கி உள்ளார். எதற்கு தெரியுமா? ஆந்திரவில உள்ள தெலுங்கு ஆசிரியர்களை வரவளைத்து இங்கு உள்ள தமிழ் பள்ளியில் தெலுங்கு பாடத்தை போதிக்க உள்ளனர். இன்று வரை யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.
சும்மா தேவை இல்லாத கற்பனை எல்லாம் வேண்டாம் தமிழ் உயிரன். தெலுங்கு வம்சாவளி மக்கள் கேட்பது அவர்தம் பிள்ளைகள் தெலுங்கு மொழி கற்றுக் கொள்வதற்கு. அவர்களால் தமிழ் பள்ளிக்கு எந்த ஆபத்தும் வந்து விடாது. அவர்கள் வேலையை அவர்கள் பார்கட்டும். நம் வேலையை நாம் பார்ப்போம். தேவை இல்லாத பிரிவினை வார்த்தை, பிரிவினைனை மேலும் விபரீதமாக்கும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
தேனி அவர்களே உங்கள் கருத்துகள் வியப்பூட்டுகின்றன. சந்தேகமற இவை பிரமாண்ட கற்பனைகள்தான்.. ஆனாலும் ‘ கேப்பையில் தேனும் பாகும் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு மதி எங்கே போனது என்று யாரும் நம்மை கேட்டுவிட கூடாதல்லவா?. ஆகவே சில கேள்விகளை முன் வைக்கிறேன். 1. நீங்கள் தேசிய தமிழ் இடைநிலைப் பள்ளி திட்டக் குழுவில் இருக்கிறீர்களா? 2. நீங்கள் பேசும் தனியார் தமிழ் இடைநிலைப் பள்ளி திட்டமும் அவர்கள் சொல்லும் திட்டமும் ஒத்த தன்மை கொண்டனவா? நாட்டில் இலவச கல்வியை தொடரவே சாமனியன் போராடிக் கொண்டிருக்கும் போது தனியார் பள்ளியில் பணம் செலுத்தி கல்வி கற்க வேண்டும் என்பதுதான் உங்கள் போராட்டமா? நண்பரே, அவர்கள் சாமானியருக்கு ஒரு தமிழ் இடை நிலைப் பள்ளி வேண்டும் என்று கேட்கிறார்கள். நீங்கள் பணம் படைத்தவர்களுக்கு ஒரு தனியார் பள்ளி தமிழ்சூழலில் வேண்டும் என்று கூறுகிறீர்கள். முதலாவது இனம் மொழி சமுதாயம் கல்வி போன்ற தளங்களில் இருந்து சொல்லப்படும் கருத்து (அவை கோணலானவை என்றாலும்) ஆனால் நீங்கள் கூறும் கருத்து பணம் படைத்தவர்களுக்கான பொருளாதார அடிப்படையில் அமைந்த வியாபார சிந்தனை. முதலாளித்துவ மூளையில் இருந்து வந்த கருத்து. உங்கள் திட்டத்தை நிறைவேற்ற பெரிய போராட்டமெல்லாம் தேவையே இல்லை. தற்போது நாட்டில் இயங்கும் தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களே போதுமானவை. தேவையும் லாபமும் இருக்கும் பச்சத்தில் தனியர் கல்லூரிகள் உலகில் உள்ள (தமிழ் நாடு உட்பட) எந்த கல்வி கூடங்களுடனும் இணைந்து பாடதிட்டத்தை இங்கு அமல்படுத்த முடியும். எந்த மொழியிலும் உயர்கல்விகளை உருவாக்கி கொடுக்க முடியும். தேவை பண பலமும் கொஞ்சம் அரசியல் வெல்வாக்கும் மட்டுமே.நண்பரே நீங்கள் தமிழ் தேசிய பள்ளியை முன்னெடுக்கும் திட்ட குழுவின் முயற்சியை கொச்சை படுத்தி விடுவீர்களோ என்று அஞ்சுகிறேன். உங்கள் முற்போகின் போக்கு நன்கு தெரிகிறது.நன்றி