கடந்த ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டுமா? வேண்டாமா ? என்ற கருத்துப் போராட்டம் நமது சமுதாயத்தில் இருந்து வருகின்றது.
கருத்து தெரிவித்தால் தாம் கடுமையாக தாக்கப்படுவோம் என்ற பயந்த உணர்வும் பல அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க நான் உண்டு என் வேலை உண்டு என்ற வியாகின தத்துவமும் பலருக்கு உண்டு.
இந்த வேளையில் நான் பேசாமல் இருந்தாலும் பலரின் நகைப்புக்கு ஆளாவேன் என்பது திண்ணம்.
தமிழ்ப்பற்று அனைத்து தமிழர்களுக்கும் இருப்பது ஒரு நல்ல விசயம். தமிழ்ப்பற்றை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது ஒரு விசயம். உதாரணத்திற்கு தமிழ்ப்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதை சரியாக உணர்ந்திருக்கப் பட வேண்டிய ஒன்று.
தமிப்பள்ளிக்கு அனுப்பாமல் பல ஆயிரம் காரண காரியங்கள் சொல்வது ஒரு சாதாரண விசயமாகி விட்டது. இதை இப்பொழுது யாரும் பொருட்படுத்தவே இல்லை. அல்லது குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம்.
அடிப்படை உணர்வுக் கூட இல்லாமல் அதனால் நான் தமிழ்ப்பள்ளி அனுப்ப வில்லை. இதனால் நான் தமிழ்ப்பள்ளி அனுப்ப வில்லை என்று எல்லாம் கூறும் அரசியல்வாதிகள் யாவரும் நம்மை ஏமாற்றும் தலைவர்களாக பார்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு நாம் சிறிதும் கருணைக் காட்டக் கூடாது.
இந்தியர்களை நலனைக் காட்டும் மாண்புமிகு குலசேகரன் அவர்கள் கண்டிப்பாக தமது குழந்தையை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருப்பாரேயானால் நாம் நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும். மாண்புமிகு பினாங்கு துணை முதல்வர் தமது குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி இருப்பாரானால் கண்டிப்பாக முதற்கண் நாம் அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
அப்படி முரண்பாடு இருக்குமாயின் நாம் கண்டும் காணாமல் இருந்து விடலாமா? இந்த தமிழை வைத்தே அரசியல் நடத்துபவர் பலர். இந்த அரசியல் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தும் தலைவர்களை நாம் அடையாளம் கண்டு நம்மை நாமே தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.
சண்டை போடுவது; போராட்டம் செய்வது; நமது பண்பாடு அல்ல என்பதை உணர வேண்டும். நாசுக்காக சொல்லலாம். யதார்த்தமாக பேசலாம். வாதம் செய்ய வேண்டியதில்லை.
இப்பொழுது நமது குறியெல்லாம் தமிழ்ப்பள்ளிகள் மேன்பாடு அடைய வேண்டும் என்பதே. முதலில் அடிப்படை மிகவும் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். அடிப்படை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் காலத்தால் நாம் அடிக்கப்படுவோம். சபிக்கப்படுவோம்.
உதாரணத்திற்கு பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் நிலை மிகவும் அவலத்திற்கு உரியதாக உள்ளன. சில தமிழ்ப்பள்ளிகள் இதற்கு எதிர்மறையாக உள்ளன. பெர்மாத்தாங் திங்கி, மாக் மண்டின் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் மற்ற பள்ளிகள்???? வால்டோர் தமிழ்ப்பள்ளி, சங்காட் தமிழ்ப்பள்ளி???/ பல ஆண்டு காலமாக வசதிகள் இல்லாமல் இருக்கும் அவல நிலையை அனைவரும் உணர்வர்.பத்துக் காவான் தமிழ்ப்பள்ளியும் இதில் அடங்கும்.
அவ்வாறு இருக்க இப்பொழுது பல அரும் பெரும் தலைவர்கள் நமது சமுதாயத்திற்கு ஒரு தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டும் என்று முழங்குவது காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. நமக்கு தமிழ் இடை நிலைப் பள்ளி தேவை. மறுப்பதற்கு எதுவுமில்லை. நானும் தமிழ் எதிராளி அல்ல. தமிழுக்கும் எனக்கும் ஒரு பகையுமில்லை. ஆனால் இப்பொழுது தமிழ் இடை நிலைப் பள்ளி தேவையில்லை என்பதே எனது கருத்து.
முதலில் தமிழ்ப்பள்ளிகளை தரமான பள்ளிகளாக கொண்டு வருவோம். அனைவரும் இதற்கு குரல் கொடுப்போம். அனைவரும் ஒத்துழைப்பு தருவோம். 100% தமிழர்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றடைவதை உறுதிச் செய்வோம். பள்ளியின் வசதிகளைக் கூட்டுவோம். மேம்பாடு திட்டங்களை வெற்றியடையச் செய்வோம். பிறகு இடை நிலைப்பள்ளியைப் பற்றி சிந்திப்போம். பேசுவது,
திட்டங்களைச் தீட்டுவது பாதகம் இல்லை. இதை வைத்து அரசியல் ஆட்டம் ஆடுவது சிறந்த வழியாகாது. மேலும் இதை வைத்து பலருக்கு அழுத்தம் தருவது அறிவுப்பூர்வமான செயலாக எமக்கு தெரியவில்லை. ஆக்கபூர்வமாக சிந்திப்போம். தெளிவாக கடமை ஆற்றுவோம்.
அன்புடன்
கணேசன் ஆறுமுகம்
பத்துக் காவான் மலேசியர் இந்தியர் காங்க்கிரஸ்
தொகுதி தலைவர்
தேனீ… நீங்கள் கள்ளமில்லா உள்ளத்தோடு தமிழ்ப்பள்ளியில் தெலுங்குமொழி கற்றுக்கொள்ள இடம் கொடுக்கலாம் என்று சொல்லுகிறீர்கள். தெலுங்கு மக்கள் அதிகம் வாழ்ந்த தோட்டங்களில் ஆலயங்களில் எவ்வளவோ மொழிப்பிரச்னகள் தலைதூக்கின. ஆலயத்தின் பெயரைத் தமிழில் எழுதுவதா? அல்லது தெலுங்கில் எழுதுவதா? என்றும், வழிபாட்டை எந்த மொழியில் நடத்துவது என்றும் பல சோதனைகள்; சண்டைகள்;வாக்கு வாதங்கள். இன்று நிறையபேர் தெலுங்கர்கள் தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களின் ஆதரவோடு தமிழ்ப் பள்ளிகளில் தெலுங்குமொழிப்பாடம் நடத்த வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. இதையெல்லாம் மனதில்கொண்டுதான் டிப்ளமெட்டிக்காக தெலுங்கு சங்கம் காய்களைச் சப்தமில்லாமல் மேலிட ஆதரவோடு நகர்த்துகின்றனர். தமிழர்கள் இன்னும் ஏமாளியாக இருக்கக்கூடாது எனும் முன் யோசனையாக சொல்கிறேன் தெலுங்கு மொழிக்குத் தமிழ்ப்பள்ளியில் இடம் கொடுக்கக் கூடவே கூடாது. தெலுங்கு அன்பர்கள் என்னைக் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் முடிந்தால் தனி இடம் பார்த்துக் கொள்வதே சிறப்பு. தமிழ்ப்பள்ளி வளாகங்களில் கூட தெலுங்குமொழியை அனுமதிக்கக்கூடாது. வேண்டுமானால் மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,பஞ்சாபிகள் என பிற சிறுபாண்மைகள் தனிப்பள்ளி காண்ட்டும். இன்று இடம் கொடுப்பீர்களேயானால் , வரும் 15 ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழ்ப்பள்ளி எனும் பெயரை மாற்ற கமுக்கமாக அரசிடம் விண்ணப்பம் செய்து பெயரை ” மலேசிய ஆரம்ப மாதிரி இந்தியப்பள்ளி” என்று மாற்ற எத்தனிப்பார்கள். கூடவே இந்திய அரசை உசுப்பிவிட்டு இந்தியையும் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேனீ… நாம் கண்கள் இரண்டையும் விற்று சித்திரம் வாங்க வேண்டாமே. இப்போதுகூட எனக்கு ஐயமாகவே உள்ளது. இந்த அம்னோகாரனைக் கையில்போட்டுக்கொண்டு தெலுங்கு சங்கம் எப்படியெல்லாம் தமிழ்ப்பள்ளியில் இடம்பிடிக்க சதிசெய்கிறதோ என்று.
பினாங்குகாரரே, நான் எந்த பள்ளித் திட்டக் குழுவிலும் இல்லை. இங்கே முன் வைக்கும் கருத்து குலசேகரன் மற்றும் பேராசிரியர் இராமசாமி போன்றோர் வழி பினாங்கு அரசாங்கத்தை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே வைக்கப்பட்டது. வேண்டுமென்றால் இக்கருத்துக்களை யாமே LGE – க்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவோ அல்லது குலாவின் காதிலோ போட்டு வைக்க முடியும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுக்கும் நிலையில், கட்டுரையாளர்தான் அவர்தம் தலைவரிடம் சொல்லி மௌனம் கலையவேண்டி தூபம் போட்டு, தீபம் ஏற்றி இறக்கி சுப்பிரபாதம் பாடி தூக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும். THR ராகா உதயா அடிக்கடி சொல்லுவார். கற்பனை இன்றி காரியம் இல்லை என்று. எதையும் இயக்கும் முன் அதற்கு ஒரு உருவகம் வேண்டும். அதையே, யாம் இங்கே குறிப்பிட்டது.
இன்னாப்பா இது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாச்சு. ஆளுக்கொரு பக்கம் கேள்விகனை எழுப்பினால் நான் இந்த கணினியிலேயே உட்கார்ந்துக் கொண்டு இருக்க வேண்டும் போல இருக்கே?.
தமிழே தமிழனுக்கு உயிராம்.அந்தத் தமிழனே தமிழுக்குக் தூக்குக் கயிறாம். இப்படிக் கூறியவர் கவிஞர் கா.பெருமாள்
ஜெகவீரபாண்டியரே, நான் சொல்ல வந்ததை தாங்கள் தவறாக புரிந்துக் கொண்ட்டீர்கள். நான் சொல்ல வந்தது, தெலுங்கு வம்சாவளியினர் அவர்தம் பிள்ளைகளுக்கு தெலுங்கு மொழி போதிக்க வேண்டுமானால் அவர்கள் இயக்கங்களின் வழியிலோ அல்லது அவர்கள் ரவாங்கில் கட்டவிருக்கும் பண்பாட்டு மையத்திலோ வைத்து இயங்கலாம் என்ற நோக்கத்திலேதான் சொன்னேனேத் தவிர தமிழ் பள்ளியில் ஒரு பாடமாக படிக்க அல்ல. தமிழ் பள்ளியில் தெலுங்கு பாடம் நடத்தவோ அல்லது புதிய தெலுங்கு பள்ளிகளை அமைக்கவோ அராங்கம் தயாரில்லை என்பது எனக்குக் கிடைத்த மேலிடத்து தகவல். மேலும் தெலுங்கு வம்சாவளி மக்கள் இந்நாட்டில் ஓரிரு இடங்களில்தாம் கூட்டமாக இருக்கின்றனர். ஆதாலால், அரசாங்கத் தெலுங்குப் பள்ளி என்பதற்கு இக்காலக்கட்டத்தில் சாத்தியமில்லை. இதை விடுத்து, வசதி படைத்த தெலுங்கு வம்சாவளி மக்களின் பிள்ளைகளும் தெலுங்கு மொழியில் ஆர்வம் காட்டுவது இல்லை. அவர்களுக்கு ஆங்கிலமே போதும் என்று இருக்கின்றார்கள். நடுத்தர மக்களிடையேதான் இந்த மொழிப் பற்று. அவர்களும் சிறுபான்மையினரில், சிறுபான்மையினராக இருப்பதால் தத்தம் சுய முயற்ச்சியில் கற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் மொழியைக் காக்க முடியும் இல்லையேல், கோவிந்தா, கோவிந்தாதான்.
தனியார் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இடைநிலைத் தமிழ் பள்ளியின் தேவையை பூர்த்திச் செய்ய இயலாது பினாங்காரே. மாற்றிச் சிந்தியுங்கள்.
தேனீ அவர்களே, நான் என்ன சொல்ல நினைத்ததை திரு.ஜெகவீரபாண்டியன் அப்படியே சொல்லிவிட்டார். இனியாவது நம் தமிழர்கள் வெளுத்ததெல்லாம் பால்லென்று எண்ணி விடாமல் இந்த நாட்டில் நம் தமிழ் மொழியையும் தமிழ் பள்ளியையும் எவ்வாறு காக்க போகிறோம் என்ற சிந்தனையுடன் இருக்க வேண்டும்.ஒவ்வொரு தமிழனும் தங்கள் பிள்ளைகளை மற்ற மொழி பள்ளிக்கு அனுப்பாமல் நம் தமிழ் பள்ளிக்கு அனுப்பினாலே போதும்.
ஜெகவீரபாண்டியன் தங்களை நான் தொடர்புகொள்ள முடியுமா ?
தேனீ… நீங்கள் அவ்வப்போது இதயம் ஆருதலடையும்படியான செய்திகளைத் தந்து என்னை மகிழ்விக்கிறீர்கள். நன்றி! தங்களின் சமயப்பற்றையும் தமிழ்ப்பற்றையும் கண்டு உண்மையிலேயே நான் பிரமிக்கிறேன். நல்ல தமிழனுக்கு நீங்கள் முன்னுதாரனமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
தேனீ அவர்களே தங்களது கருத்து மிகச்சரியே,தெலுங்கர்களுக்கு மொழிபற்று இருப்பதில் தப்பில்லை ஆனால் காலம் கடந்த முயற்ச்சி,ஒரு நுற்றாண்டுகளுக்கு மேல் நிலைபெற்று பலமான அடித்தாளம் அமைக்கப்பட்ட தமிழ்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போராடிக்கொண்டிருக்கிறோம்!
இதற்குதான் நம்மிடையே உறவுப்பாலமாக இருக்க செம்பருத்தி வழிவகுத்திருக்கின்றதே. இவ்விணையத்தின் ஆசிரியர் அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம் ஜே.வி.பி.-யாரே. நன்றி.
பேராசிரியர் இராஜேந்திரன் தான் செல்லும் பல இடங்களில் ஒரு வரலாற்று உண்மையை முன் வைப்பார். ஒரு முறை மொரீஷியசில் அங்குள்ள தமிழ் கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப் பட்ட நிகழ்வில் “மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சி” என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த வயதானவர்கள் தேம்பித் தேம்பித் அழ ஆரம்பித்து விட்டார்களாம். பக்கத்திலிருந்த தமிழ் கழகத்தின் தலைவரை பேச்சைத் தொடருங்கள் என்று தலையை அசைத்தாராம். தமதுரையை முடித்துக் கொண்டு உணவு உண்ணும் வேளையில் அப்பெரியவர்களிடம் நான் உரையாற்றும் பொழுது என் அழுதீர்கள், நாம் ஏதும் தவறாக சொல்லி விட்டேனா என்று கேட்டாராம். இல்லை ஐயா, நீங்கள் தாய் மொழியான தமிழை எவ்வாறு பற்பல சிரமங்களுக்கிடையே வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கின்ரீர்கள் என்பதை கேட்ட அதே வேளையில், நாங்களோ எங்கள் தாய்த் தமிழை கை நழுவ விட்டு விட்டோமே என்று எண்ணி அழுதோம் என்றார்களாம். அந்த சூழ்நிலை இம்மலை நாட்டில் வாழும் தமிழர்களுக்கு வந்து விடக் கூடாது என்பதே நம்முடைய வேண்டுகோள். அதற்கே இவ்வளவு பாடு.
ஒரு ம இ காரன் ஆடு அழுததாம் ஓநாய் ஒப்பாரி வைத்தது போல் உள்ளது இந்த அங்க அங்கலாய்ப்புகள்.எங்கோ ஆரம்பித்து குப்பைகள் குவிப்பில் ஈக்கள் போல இதோடு முடிதுக்கொண்டால் நல்லது. இன்று 56 கோடிக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் ம இ கா மண்டியிட்டு கிடக்கிறது.இப்படிதான் தமிழ் தமிழ் என்று சாமிவேலு முழங்கி பத்திரிக்கை விபச்சாரம் செய்து தமிழையும் தமிழனையும் அடுப்புக்கு அனுப்பினார்.அதைதைதன் இந்த கணேசனும் செய்கிறார் இது ஒரு பச்சை விளம்பர பலாத்காரம் …இதோடு விடுங்கள் இந்த விமர்சனத்தை.
ஆண்டாண்டு தோறும் அலுத்து(அழுது )புரண்டாலும் மண்டைகள் திருந்தாது.நாம் போம் அடுத்த இறப்புக்கு!
கலை… இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட செம்பருத்தி கருத்துப் பதிவாளர்களை நேரில் சந்தித்து மகிழவேண்டும் என்பதே என் விருப்பம். தாங்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் எப்படி தோடர்புகொள்ள விரும்புகிறீர்கள் என்றும் தெரியவில்லை. நான் சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் நகரில் இருக்கிறேன். தாங்களை எப்படி தொடர்புகொள்வது என்று தெரியப்படுத்தவும்.
நான் தலைநகரில் இருக்கிறேன் . தாங்களே சரியான வழியை கூறுங்கள் …
கலை, நீங்கள் என்னுடைய இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். மற்ற விபரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன். [email protected]
நன்றி ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கு ..
விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன் .