கடந்த புதன்கிழமை சிரம்பான் தேவாலயம் ஒன்றில் தாக்கப்பட்ட இரண்டு கன்னித்துறவிகளில் ஒருவர் இறந்து போனார்.
ஜூலியானா லிம், 69, இன்று பிற்பகல் மணி 3.25க்கு சிரம்பான் மருத்துவமனையில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
அவரின் வழக்குரைஞர் ஜோய் அப்புக்குட்டனும் அதை உறுதிப்படுத்தினார்.
“இன்பெண்ட் ஜீசஸ் (ஐஜே) ஸிஸ்டர்ஸ் விரைவில் ஓர் அறிக்கை வெளியிடும்”, என்றாரவர்.
லிம்மும் ஸிஸ்டர் மேரி ரோஸும் காலைநேரத் தொழுகைக்காக சென்றபோது விசிடேஷன் தேவாலயத்துக்கு வெளியில் தாக்கப்பட்டனர். கொள்ளையிடுவதுதான் இத்தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது.
அனுதாபங்கள் என்பதைத் தவிர சொல்ல வேறு ஒன்றுமில்லை. CCTV யில் அனைத்தும் பதிவாகியிருக்கிறது. ஆனால் தாக்கும் காட்சி மட்டும் இல்லையாம். சென்சார் பண்ணிவிட்டார்கள்!
தாக்கியது கண்டிப்பாக ISMA < UMNO ALLATHU நம்ம பெர்காசவை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது
அல்தந்துயாவிற்கு அடுத்து கன்னித் துறவியா !!! நாடு எதோ ஓர் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது போலும் !!! ஆட்சியாளர்கள் இவ்வுயிர் பலிக்கு என்ன சொல்லப் போகிறார்கள் ???
ஆமாம் நாங்கள் நம்பிட்டோம் ,கன்னித் துறவிகளிடம் எப்போதும் 100 / 1000 என ரொக்கம் வைத்திருப்பார்களா? யாரை முட்டாளாக்கும் முயற்சி இது?
எத்தனை வழிப்பறி சம்பவங்கள் , எத்தனை கொடூர உயிரிழப்பு , இன்னும் என்ன நடகபோகிறதோ ? BN க்கு இது முக்கியமல்ல ! தேர்தல் பிரசாரமே முக்கியம் . ஒரு கண்ணதாய் கொல்லப்பட்டு இருக்கிறார் அரசாங்கம் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை !! வரும் !! அவர்களின் குடும்ப உறுப்பினருக்கும் வரும் !!