-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.
தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.
தமிழர் சமய வரலாறு
சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி
, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.
தெய்வ இலக்கணம்
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.
சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.
சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.
தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்
இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115
இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:
“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.
இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)
சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன் 116
சி.சு. மணியின் உரை:
“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.
கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இலக்கணம்
இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.
தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.
ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.
ஒரு கடவுளே நால்வர் நெறி
சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
தஸ்யூக்கள்,வேசிமக்கள், அரக்கர்கள்,தீண்டத்தகாதவர்கள், (தமிழ் )நீசபாஷைக்காரர்கள் , சண்டாளர்கள்,சூத்திரன் இப்படியெல்லாம் வந்தேறிகள தமிழர்களைப் பார்த்து அவர்களின் நூல்களில் எழுதி மகிழ்ந்துள்ளனர். அந்த வழித்தோன்றலின் வாரிசு காயீ எனும் பேயீ கடைசியாகச் சொல்லுகிறது- அதுவும் தமிழர்கள் அதிகமாக வாசிக்கும் தமிழனின் செம்பருத்தியில் “சூத்திரன் என்பவன் கீழ்த்தரமான கொள்கையைக் கொண்டவன்,அன்றாடக் கூலிக்காரன்” என்று. இந்தியாவிலும் மலேசியாவிலும் பெரியப் பெரியக் கோவில்களைக் கட்டியவன் இந்தக் கூலிக்காரன்தான். எல்லாவிதமான கடின உழைப்பை வழங்குபவனும் இந்த அன்றாடக் கூலிக்காரன்தான். வயல்வெளியில் சுட்டெறிக்கும் சூரியனில் உழத்து உலகுக்கே சோறு போடுகிறானே உழவன் அவனும் அன்றாடக்கூலிக்காரன்தான். இந்தக் கூலிக்கார உழவனைப் பார்த்துத்தான், அவனுடைய அருமையை உணர்ந்துத்தான் ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று வள்ளுவன் அந்த அன்றாடக் கூலிக்கார உழவனின் உழைப்பை மதிக்க எழுதினார். மானமுள்ள தமிழர்கள் இங்கே கவனிக்க வேண்டும். ” மற்ற எல்லாம்” என்பதன் பொருள் என்ன ? அஃறிணையாக எண்ணி , “மற்ற எல்லாம்” என்று செப்பினார். மிருகங்கள்கூட சுயமாக தேடி சாப்பிடும். உழவன் எனும் அன்றாடங்காய்ச்சிகூட உழைத்துத்தான் உண்பான். ஆனால் மனிதர்களில் கூலிக்கார உழவனைத்தவிர மற்றதெல்லாம்(மன்னிக்கவும் வள்ளுவன் அப்டித்தான் ஒருமையில் செப்பியுள்ளான் ) அடுத்தவனை தொழுதுதான் அதாவது பிறனை வணங்கித்தான் இந்த உலகில் சாபிட்டாகவேண்டும், உயிர்வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்.
காயீ எனும் அரைகுறை ஒரு ஞானியைப்போல பேசுகிறது “ஜாதி இல்லை என்றால் உறவுகளும் பொய்.ஜாதிகள் பிரிக்கப்பட்டது உண்மையே. தகுதியே ஜாதி” இப்படிப்பட்ட பிற்போக்குவாதியை என்ன சொல்வது. கூலிக்காரன் உழைப்பில் வந்த சோற்றை வணங்கிச் சாப்பிடும் நீ உழைப்பவனைப் பாரத்து சொல்கிறாய் கீழ்த்தரமான கொள்கைக்காரர்கள் என்று. வாழ்க உம் ஜாதியம்! ஓங்கி வளர்க உம் பார்ப்பணியம்! இன்னும் நிறைய எழுதி எம் தமிழினத்தின் இருக்கும் மானத்தையும் தெருசிரிக்கப்பண்ணு! வாழ்க மகாத்மா காயீ! வளர்க காயீனுடையப் பார்ப்பணியத்தொண்டு!
சமுதாயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும் விடயங்கள் பல இருக்க , அவற்றை ஒடுக்க முனைவர் போன்றோர் குரல் கொடுக்க, சிந்தை புலர்ந்த மோகன் போன்றோர் அதற்கு துணை போகாவிட்டாலும் , இப்படி சிறுபிள்ளைத் தனமாக எழுதுவதைப் பார்க்கையில் மனம் வேகின்றது.
காயீ, நீர் சந்தித்த நண்பர் உலகியல் இன்பம் தேடுபவர். அவரை அணுகி நட்பு கொள்வதற்கு முன் , சைவ ஆகமங்களும் திருமுறைகளும் உரைத்ததைப் படித்து முத்தி இன்பம் எனும் பேரின்பத்தைப் பெறும் வழியை அறியும். அப்பொழுதுதான் நீர், உம் நண்பருக்கு அறிவுரையும் அறவுரையும் கூற இயலும். உம்மைப் போலவே அவரையும் மாற்ற இயலும்.
ஆஸ்தீகர்க்கு மட்டும்,இப்பிறவியில் தாழ்ந்து வகுப்பில் பிறந்து உயர்ந்த என்னத்தை வலர்த்து கொள்வதன் மூலம் மருபிறவியில் அடுத்த நிலையில் பிறக்கிறோம் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து தேவைக்கு மிஞ்சியதை தேவைபடுவோர்க்கு கொடுத்துவரின் வரும் பிரவியில் அதிகாரம் கொண்ட வம்சத்தில் பிறந்து பாதுகாப்பற்றவர்க்கு அடைக்கலம் கொடுத்தும் மறு பிறவியில் கற்றோர் வயிற்றில் உதித்து கல்வியை தானமாக கொடுத்து அறத்தை உணர்த்தி நெரிபடுத்தி சரியான பாதைக்கு வழிகாட்டி பிற உயிர்க்கு ஞானத்தை போதித்து பிறவாவரம் பெற்று மகா ஜோதியோடு இரண்டர கலப்போமாக.மலேசியாவில் பிறந்தவர்கள் ஓரலவுக்கு புண்ணியம் செய்தவர்கள்,மற்ற நாட்டில் பிறந்திருந்தால் பசி,பட்டினி,போர்,கொடுமை,இது போன்ற அவதியில் சிக்குன்டு வாழ நேர்ந்திருக்கும்.நாம் இங்கு நிம்மதியாக வாழ்கிறோம் நம் குடும்பத்தோடு.இறைதன்மை கொண்ட இந் நாட்டில் அவைகளை பாதுகாப்பதே உத்தமம் மாறாக அழிக்க நிலைப்பது முயல்வது அறிவுடையோர் செயலன்று.ஆறாம் அறிவு என்பது ஞானத்தை புகட்டுவதுவே.நான் யார் உணர்வது போன்றவை.தெய்வத்தின் மீது நம்பிக்கை வைப்பது.விடுத்து தெய்வ நிந்தனை செய்வதன்று,மீண்டும் கீழ் நோக்கி செல்லக்கூடாது.மலேசியா போன்று பாதுகாப்பான நாடுகலிளும் மணிதன் பிறக்கிறான் ஆப்ரிக்காவிலும்,பாலஸ்தீனத்திலும்,இலங்கையிலும் மணிதன் பிறக்கிறான் ஏன்.இப்பிறவியில் நாம் செய்த நன்மை தீமைக்கு குணத்திற்கேற்றாற்போல் பிறவி மாறுகிறது.வசந்தம் நிகழ்சியில் கேட்டவை,நற்காரியம் நோக்கி செல்வோறுக்கு மக்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கம்,பணம்,போன்ற பொருள் கொண்டு சேர்தனர் ஆனால் ஒருவர் கொஞ்ஜம் பேரீச்சம் பழத்தை கொடுத்தார் பெற்றவர் மகிழ்ந்து அப்பழத்தை செல்வந்தர் கொண்டுவந்த மணி,வைரம்,தங்கம் மீது தூவி செல்வந்தர் பெறும் பலனை நீயும் பெருவீர் சொல்லி ஆசிகூறியதாக சொன்னார்.தன்னால் முடிந்தவையை செய்,திருக்குறளில் குறள்:அகன் அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.பணம்,பொருள் இல்லாத பட்சத்தில் அன்பான வார்தையாவது சொல்வது(கொடுக்க என்னிடத்தில் ஒன்றும் இல்லை ஆனால் ஒன்னும் பயப்படாதே சீக்கிரம் குணமாகி திரும்புவான் அல்லது வெல்பேர்,கேபாஜிக்கான்,போன்ற அமைப்புக்கு அழைத்துசென்று உதவி பெற்றுத்தரலாம்)இனியவை கூறல்.ஆனால் உள்ளவர் வைத்துக்கொண்டு இல்லை சொல்லாதே பாவம் செய்யாதே(ஆண்டவன் உணக்கு வற்றா கிணறு கொடுத்திருக்கார் தேவைபடுவோர்க்கு கொடுக்கவே).வாழ்க நாராயண நாமம்.
நான் பார்த்ததிலே kaiyee நீ ஒரு வடிகட்டிய மு…..ள் உனக்கு
இனி மேல் நான் பதில் போட்டால் நானும் மூட்டலாகி விடுவேன்!!!
யாம் முட்டாலாவே இருந்துட்டுபோரேன் நீர் கொஞ்சமாவது புத்தியோடு மணிதனாக வாழ முயற்சி செய்யும்,வாழ்க நாராயண நாமம்.
மங்கை ,உப்பை சோற்றில் யார் முதலில் போட்டு சாப்பிடார்
என்று கேட்பது ஒன்றும் பெரிய அறிவு பூர்ண மான கேள்வியல்ல ,இருப்பினும் இந்த மன நோயாளிக்கும் பதிலை
கூறுகிறேன் . ஆதி கற்கால மனிதன் முதலில் தாங்கள் வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சியை பச்சையாகவே
சாப்பிட்டான் , காடுகள் எரிந்து மிருகங்கள் இறந்தது அந்த வெந்த இறைச்சியை தின்று பார்த்தவுடன் சுவையாக இருந்தது , அதன் பின் வேட்டை யாடும் இறைச்சிகளை
சுட்டு சாப்பிட்டான் , ஒருமுறை வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சியை கடலில் கழுவி கொஞ்ச நேரம் வெயிலில் காய வைத்து பின் சுட்டு சாப்பிட்டான் அதன் சுவை அவனுக்கு பிடித்து விட்டது ,அதன் பின் கடலில் இருந்து உப்பை தயாரித்து எல்லா சமையலுக்கும் போட்டு சாப்பிட்டான் , சுருங்க சுருங்க சொன்னால் உப்பை உணவில் போட்டு சாப்பிட்டவன் ஆதி கற்கால மனிதன் .மூன்று தமிழ் பெண்கள் ஒருவனையே காதலிக்கிறாள் என்று எங்குல பெண்களை மட்டமாகா பேசும் மங்கை உனக்கு பதிலை சொல்லத்தான் வேண்டும் , உங்க பிராமணன் இனத்தில் 5 அண்ணன் மார்கள் ஒரே மனைவியை (பாஞ்சாலியை ) வைத்து இருப்பது உங்கள் இனத்திற்கு பெருமையாக இருக்கலாம் ,ஆண்களில் இராமனின் தந்தை தசரதனுக்கு 62,000 பெண்டாட்டி என்று ராமயணத்தில் கூறி பெருமைப்படலாம் ,ஆனால் நாங்கள் தமிழர்கள் தவறுகள் நடந்து விட்டால் பெருமையாக பீதிக்க மாட்டோம் அதை கதை வடிவமாக கொண்டு வந்து பாரடா எங்கள் பிராமணர்கள் லட்சணத்தை என்று கூறமாட்டோம் , மூன்று பேர் ஒருத்தனை காதலிக்கலாம் ஆனால் ஒருத்தி மூன்று பேரை காதலித்தால் என்ன ஆகும் , மங்கை உங்களுக்கு தெரியாதா கிழிந்து விடும் .,வந்தவரை எல்லாம் வாழவைத்த தமிழ் நாடு ஆரிய பிராமணர் களையும் வரவேற்றது அது தான் தமிழ் நாடு செய்த முதல் தவறு ,அன்று மட்டும் உங்களை வரவேற்காமல் இருந்து இருந்தால் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆட்சி புரிந்து கொண்டு இருப்பான் , என்ன செய்வது என் தாய் நாடே வந்தவர்களை எல்லாம் வரவேற்று நீ நாடு அற்ற வளாகி இருக்கிறாய் .
கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் கருத்து போய்க் கொண்டிருகின்றது. ஒன்று கருத்தையாவது மாற்றுங்கள் அல்லது கட்டுரையாவது மாற்றுங்கள்.
தமிழ்ப்பித்தன்… தயவுசெய்து இவர்கள் இருவருக்கும் பதில் எழுதாதீர்கள். உங்கள் பொன்னான நேரத்தை நல்லவற்றைப் படிப்பதில் செலவிடுங்கள். எழுத்துப் பிழைகளுக்கும் கருத்துப் பிழைகளுக்கும் நீங்கள் பதில் எழுதவேண்டுமா என்ன?
நாம் ஏன் ஜாதி இருப்பதை நிரூபிக்கிறோம் என்றால்,இந்தியாவில் போல் மலேசியாவிலும் தனி தனி கூட்டம் ஜாதி அடிப்படையில் அமைத்தால் மலேசிய ஹிந்துக்கள் ஒன்றுபடமுடியும்.இல்லையென்றால் எந்த காலத்திலும் பிளவுபட்டேகிடப்போம்.நான் நீங்கள் நினைப்பது போன்று இனவெறியர் கிடையாது,அதனால் எமக்கென்ன லாபம்.எந்த காலத்திலும் ஜாதிகள் ஒன்றுபடாது.இந்த மலேசிய நாட்டில் வாழவேண்டுமாயின் இதுவே சரியான முறை.இந்தியாவில் திராவிடபூமியான தமிழ்மானிலமே இனங்கி இன்று வாழவில்லையா.வேண்டும் ஒற்றுமை.என்ன விலையானாலும் கொடுக்கலாம்.கூட்டமில்லாதவனை காலை சுற்றும் பூனைகூட மதிக்காது.முன்பு ஜாதிகட்சிகள் இருந்தது.வீரமாக வாழ்ந்தனர் இன்று கேட்பாறின்றி அடையாளமிழந்து வாழ்கின்றனர்.திருக்குறளை பயன்படுத்துங்கள்,சரியோ தவரோ மற்றவர்க்கு விட்டுக்கொடுக்காதீர் வும் சொந்தத்தை.வாழ்க நாராயண நாமம்.
அலும்னி ஜி.பி.எம்.எஸ்,தமிழ்,சீனா பள்ளிகள் ,புதிதாக நிர்மாணிக்க கூடாது மற்றும் வரும் காலங்களில் இந்த பள்ளிகளை அழிப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆலோசனை கூரியதாக செய்தி.இன பள்ளியில் படிப்பதனால் பொது இன நல்லிணக்கம்,ஒற்றுமை,நாட்டு பற்று,அரண்மனையை அவமதிப்பு போன்றவை மிக பரவலாக நடபதர்க்கு காரணம் என்று நம்புவதாக அந்த அமைப்பு சொல்கிறது.வாழ்க நாராயண நாமம்.
சிவனை வணங்குவோரெல்லாம் மேற்குத்திசைநோக்கித்தானே வணங்கவேண்டும்? சிவனும் கிழக்குநோக்கித்தானே இருக்கவேண்டும்! சிவனின் கோயில்களிலலுள்ள நந்தி லிங்கத்தைப் பார்த்தபடிதானே உள்ளது! அதன்மூலமாகத்தானே நமது வேண்டுதல்களை லிங்கத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்? லிங்கம் அமைக்கப்பட்ட சிவனின் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள குழாய்த்தடுப்புக்களால் பிரிக்கப்பட்டு; வணங்குவோரெல்லாம் வடக்கு அல்லது தெற்குநோக்கி நின்றுகொண்டு; தங்களது கழுத்தைத் திருப்பி முகத்தை மட்டும் லிங்கத்தை நோக்கி வணங்குவது ஏற்றுக்கொள்ளப் படுமா? முழுமையான வேண்டுதல்களை ஏற்றுப் பலன்பெற முடியுமா? முகம்மதியரெல்லாம் மேற்குநோக்கித் தங்களது முழு உடலையும் முகத்தையும் காட்டியல்லாவா தொழுகிறார்கள்! லிங்கத்தைத் தொழுவோர் ஏதாவது தவறு செய்கிறார்களா! ஆகமங்கள் என்ன சொல்கின்றன? அறிந்தோர் விளக்கினால் தெளிவுபெறலாம்! உருவம் இல்லையென்றாலும் மேற்குநோக்கித்தான் தொழுகையை நடத்தவேண்டுமா? சீக்கியர்களின் தலைவர் ஒருவர் க அபா வில் படுத்திருந்தபோது அவரது கால்கள் இறைவனை நோக்கி இருந்ததாகவும் அங்கிருந்த காவலர் அதனைச் சுட்டிக்காட்டியபோது இறைவன் இல்லாத திசை எது எனக் கேட்டாராமே! உண்மையா? ஒன்னுமே புரியல்லியே!! சிறப்பான பெருமால் கோயில்களில் இதுபோன்ற தடுப்புக்கள் இல்லையெனத்தெரிகிறதே! திருப்பதிப் பெரும் ஆள் திருமால் பெருமால் கோயிலில்கூட நேராகப் பெருமாலைப் பார்த்து வணங்கி வழிபட முடிகிறதே! சீக்கியரின் கோயில்களில் இதேமுறைதான் உள்ளதாகத் தெரிகிறது! மக்களே உங்களது கருதென்ன? சொல்லுங்கள்!
” க” என்ற கடவுள் ரிக்வேதத்திலும் உள்ளாரே! “க அபா” என்றால் க என்ற தந்தை என்று பொருள்படுவதாகத் தெரிகிறது! அபா என்பது குழந்தைகள் தங்களது தந்தையை மிக்க அன்புடன் அழைக்கும் சொல் என்கிறார்கள்! “க” என்ற கடவுள் யாராக இருக்கும்? அவர் குடிகொண்டிருக்கும் மண்டலம் எதுவாக இருக்கும்? க மண்டலம் உலகிலலெ இருக்கிறது? உங்களில் யாருக்காவது தெரியுமா? இந்தியாவின் வரைப்பட அமைப்பைக் காணுங்கள்; க என்ற எழுத்தின் வடிவில்தானே உள்ளது?! க மண்டலம் இந்தியாதானோ? அகத்தியரிடம்தானே இந்தக்கமண்டல் இருந்ததாகச் சொல்லியிருக்கிறது!? அவரது கமண்டலத்திலிருந்துதானே கா விரியை தென்னகத்துக்குக் கொண்டுவந்தான் சோழன் எனவும் காண்கிறோமே! அதுவும் சரியாகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது!?! கமண்டலத்தின் கீழே ஒரு கிண்ணம் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதில் எதையும் வைக்கமுடியாது! மேலே இருக்கும் குடுவைபோன்ற அமைப்புக்குள்தான் நீரை வைக்கமுடியும்! கீழே உள்ள கிண்ணம் எப்போதும் நீரின்றித்தான் இருக்கும்; இருக்கவேண்டும் eஎன எண்ணியவர்களால்டானே இந்த மண்டலத்துக்குக் க மண்டலம் என்ற பெயர் இடப்பட்டிருக்கவேண்டும்!?! அதனை எதிர்த்துக் கீழே உள்ள கிண்ணத்துக்கும் நீர் செல்லவேண்டுமமென்று விரும்பி விடுவித்தவந்தானே சோழன்! அதற்கு அகத்தியமுனிவரும் ஒப்புக்கொண்டதால்தானே கா விரிநீர் தெற்கே கொண்டுவரப்பட்டது! இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் க மண்டலத்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் என்பதை! மீண்டும் வலியுறுத்திச் சொல்லுங்கள் இந்தச்செய்தியை!
வானம் பொய்யாது; வளம் பிளைப்பு அறியாது;
நீர்நில வேந்தன் கொற்றம் சிதையாது;
பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு; என்னும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ?
“கோசலத்திலிருந்து மகதத்துக்குவரும் நீர் அனைத்தும் ரோஹிணி ஆற்றின்வழியாக வருவதாகும். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டபோது கோசலத்தார்,நதியைத் தடுத்தனர். இதனால் மகதத்துடன் விரோதம் ஏற்பட்டது;சித்தார்த்,’சண்டை வேண்டாம்’ என சமாதானம் பேசினான்.”
“ஆறுகாடு எனப்பட்ட பகுதியை கரிகால்சோழன் கைப்பற்றிய போது இவர்கள் வெளியேற்றப்பட்டனர் . கைப்பற்றப்பட்ட பகுதியை,காடுதிருத்தி நாடாக்கி ஒழுங்கு படுத்திய கரிகால்சோழன்,நீர்வளம்பெருக்க,பொன்னி நதிக்கு கரையெடுத்தபோது,ஆந்திரநாட்டின் முகரிப்பகுதியை ஆண்ட முசுகுந்தன் எதிர்ப்புக் காட்டியுள்ளான்.”
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரியைப் படத்து
எழுதுகென்று கண்டிது மிகைக்கண் என்று
இங் கழிக்கவே அங் கழிந்ததும்
-குழவி இறப்பினும்….எனத்தொடங்கும் பாடலின் குறிப்பு: சேரமான்கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது,பற்றுக்கோட் பட்டு,குடவாயிட் கோட்டத்துச் சிறையில் கிடந்து ‘தண்ணீர் தா என்று பெறாது,பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு இவ்வளவு வருத்தப்பட்ட அந்த இரும்பொறை யாரோ?
“துவராபதிப்போந்து நிலங் கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்ளிட் டோரையும் அருவாளரையும் கொண் டு போந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித்.. ..”
………….நல்லிசை நிறுத்தல் வேண்டினும்,மற்று அதன்
தகுதிகேள் இனி மிகுதி யாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே,’…….
………அருபோர்ச் செழிய! இக லலு வல்லே!
நிலன்நெளி மருங்கின் நேர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே!
நரபலி – மனித உயிர்ப்பலி! யாரால் வந்தது? ….
தமிழருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டவையே நரபலிகள். நமது தாய்த்தெய்வங்களையும் குலதெய்வங்களையும் மறக்கடிக்க முயன்ற பிராமணர்களே; குறிப்பாகப் பார்கவபிராமணர்களே இத்தகைய நரபலிகளையும் நம்மீது சுமத்தினர்; குண்டம் மிதித்தலும் அத்தகையதே! அனைத்துமே பரசுராமனையும் அவனது தந்தையெனக் கருதப்படும் – யமதக்கினியையும் மையம்கொண்டவை! அலெக்சாந்தனே- அல்லஃநந்தவே யமதக்கினி; அவனது மகனாகக் கருதப்படும் பரசுராமனே துர்யோதன மாறீசன்! அவனது கையில் உள்ளதே கணிச்சிக்கூர்ம்படை – வஜ்ராயுதம்- எரியுமிழ்வஜ்ரம் எனப்பட்டது. அல்லஃ- நந்தாவால் சிறைப்பிடித்துச்செல்லப்பட்டோர் 70 000 பேர், கொலைசெய்யப்பட்ட புலவர்களும் அறிஞர்களும் பல நூற்றுக்கணக்கானோர் என கிரேக்கப்பயணிகளின் ஆவணங்களும் குறிப்புகளும் சொல்கின்றன. பரசுராமனால் கொலைசெய்யப்பட்டோருள், கெடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட தமிழ்ப்பெண்கள் ஏராளமானோராவர். இவர்களுள் சோழநாட்டு வேந்தன் உருவப்பல்தேர் சேத்சென்னி, அவரது மகனின் மனைவி அங்கலம்மா- இலக்குமி, அப்பெண்ணின் தோழிகள் எழுவர் – ஏழு கன்னிமார்கள், யமதக்கினியால் வாழைப்பழத்துக்கு ஆசைகாட்டிக் கெடுக்கப்பட்ட ரேணுகாம்பாள் – யமதக்கினியின் துணைவி, பரசுராமனால் புணர்ந்து கைவிடப்பட்ட நல்லியற்பாவை – அம்பாள் – கரிகால்சோழனின் தங்கையும் சேத்சென்னியின் மகளுமான செங்குட்டுவனை ஈன்ற நல்லியற்பாவை என்போரே தெய்வப்பெண்டிராகப் போற்றப்பட்டோர் – இன்றும் போற்றப்படுவோராவர். பட்டிதொட்டியெல்லாம் குடிகொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற மாறியம்மாள் யாரென்று எவருக்குமே தெரியாது! என்ன காரணம்? மாறியம்மாள் என நாம் வழிபடும் உருவின் கால்களுக்கு முன்னர் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் குருதிசொட்டும் தலை யாருடையதென்பதும் தெரியாது! தெரியாமல் மறக்கடிக்கப்படக் காரணம் இந்த்ப் பார்கவ பிராமணர்களே! கீழே வைக்கப்பட்டுள்ள குருதிசொட்டும் தலையே கரிகால்சோழனின் மனையான அங்கலம்மா – இலக்குமியுடையது! அங்கமில்லாமல் இருப்பதால் அங்கலம்மா எனப்பட்ட தெய்வம்! அமர்ந்தநிலையில் உள்ள அத்தெய்வத்தின் உடலுடன் மாற்றிச்சேர்க்கப்பட்ட தலையே தெய்வப்பெண்ணான அங்கலம்மாவின் அக்கா -யமதக்கினியால் ஏமாற்றப்பட்டு துணைவியாக்கப்பட்ட ரேணுகா! இவ்விருமே யமதக்கினியின் திட்டப்படி பரசுராமனால் கொலைசெய்யப்பட்டவர்கள். அங்கலம்மாவைக் கொலைசெய்ய முயன்றபோது தடுத்துத் தங்களது உயிரை இழந்த கன்னிப்பெண்கள் எழுவரே கான்னிமார்கள். மாறியம்மா தெய்வத்துக்கே பலிகொடுத்தால்தான் அமைதியடைவாள் நெருப்பில் நடந்தால்தான் அமைத்யடைவாள் அம்மைநோய் வரக்காரணமே அவ்விரு பெண்தெய்வங்கள்தான் என்றெல்லம் சொல்லி அவர்களை வழிபடுவதைத் தடுக்கமுயன்றனர். ஆனால் மக்களோ எதற்கும் தயார் என எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டனர். இவர்களின் வழிபாட்டை எப்படியாவது தடுக்கமுயன்று தோல்வியுற்ற பிராமணரே தந்திரமாக நரபலியை – குழந்தைப்பலியையும் மனிதப்பலியையும் புகுத்தித் தடுக்க முயன்றனர். அதற்கும் மக்கள் பின்வாங்கவில்லை; தங்களது முதற்குழந்தையை நரபலிகொடுக்கவும் முன்வந்தனர். பார்கவபிராமணரால் இப்பெண்தெய்வங்களை மக்கள் வழிபடுவதைத் தடுத்துநிறுத்த இயலவில்லை. காலம்காலமாக அதுவே பழகிப்போய்ப் பின்னரே ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது! அப்படியும் த்டுக்கமுடியாத நிலையில் பிற்கால வடுக திராவிடச்சோழரால் அவற்றின் இருப்பிடங்கள் கைப்பற்றப்பட்டுப் பெரிய பெரிய கோயில்களைக் கட்டுவித்து அப்பெண்தெய்வங்களின் உருக்களை ஏதாவதொரு மூலை முடுக்குகளுக்குத் தள்ளிவிட்டனர்! ரேணுகாவை – அந்தரதேச- ஆந்திரரின் குலதெய்வத்தை சேட்டை – ஜேஸ்டா, மூதேவி, மூத்தவள் என்றெல்லாம் இழிவுபடுத்தினர். இவர்களது பலபெயர்கள் ரிக்வேதம் மற்றும் புராணங்களிலும் இடம்பெற்றுள்ளன. மாற்றுக்கழுத்தியம்மா, கழுத்துமாறியம்மா என வடதமிழகத்தில் பலவாறு வழிபடப்படுகின்றனர். சின்னமாறி, பெரியமாறி எனவும் காணப்படுகின்றனர். உத்தரமேருவில் ள்ள மாறியம்மாவின் பெயர் மாற்றுக்கழுத்தியம்மா என்பதே! இதனை அறியாமல் தொல்லியற்றுறை ஆய்வாளர் நாகசாமி அவர்கள் ஏதோ ஒரு பெயரில்; அவரது உத்தரமேரூர் என்ற நூலில் குறிப்பிடுகிறார். கர்நாடக மாநிலத்தில் இத்தெய்வங்களை “தொட்டம்மா” சிக்கம்மா” எனக் கொண்டாடுகின்றனர். ஏழு கன்னிப்பெண்களை எல்லாக் கோயில்களிலும் காணலாம்! இவர்களையே சிலப்பதிகாரம் – “ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்” எனக் குறிப்பிடுகிறது! வரநாட்டிலும் பல ஊர்களில் ஏழுகன்னியரை நீர்களின் கரைகளில் வணங்கக்காணலாம்! இத்தகைய தெய்வ உருக்களின் மீது சிவப்பெச்சாயம் மட்டுமே சிவந்த ஆடையுடன் காணப்படும்; காரணம் பரசுராமனால் கொலைசெய்யப்பட்டுக் குருதிவழிவதைப் படிமங்களாகக் காட்டும் நோக்கமே. இதனை அறியாமல் பலிகொடுத்து வழிபடுவோரும் உள்ளனர். ஆயினும் அறியாமையால் தங்களது வரலாற்றை மறந்துவிட்ட மக்களும் தங்களது பரிகாரத்தெய்வமாக உறின் எல்லைகளில் அல்லது மயாணங்களுக்கருகில் யமதக்கினிக்கே பெரியாண்டவன் போன்ற மாற்றுப்பெயர்களில் இன்றும் ஆடு கோழி பன்றி எருமை எனக் கருப்புநிற உயிரினங்களைப் பலிகொடுத்து வணங்குகின்றனர்! இவை வழிபடு தெய்வங்களல்ல! பரிகாரத்தெய்வங்களே! வழிபடுதெய்வங்களை வீட்டிலும் சமுதாயக்கூடங்களிலுமே விரதமிருந்து வழிபடுவர்! இவற்றுக்குக் குருதிப்பலி கொடுப்பதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது! காரணம் கொலைகாரர்களால் கொலைசெய்யப்பட்டோரே தங்களது குலதெய்வங்கள் என்பது நமது பெண்ணினத்துக்கு மிகநன்றாகத் தெரியும்! ஆண்களே இது உங்களுக்குள் எத்தனைபேருக்குத் தெரியும்! தெரியாவிட்டால் இன்றுமுதலாவது உங்களது குலதெய்வம் எது எனவும்; அத்தெய்வத்தைக் கொலைசெய்தோர் யாவர் எனவும் தெரிந்து வழிபடவும் வணங்கவும் செய்யுங்கள். வழிபடு தெய்வமே குலதெய்வம்! வணங்கும் தெய்வங்களே நமது முன்னோருக்கு எதிராகச் செயல்பட்டோரே கொலைகாரர்கள்! அவர்களை அமைதிப்படுத்தவே குருதிப்பலிகொடுத்துச் சினம்தனிக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் ஊன் – தசைகளை வீட்டுக்கொண்டுசெல்லக்கூடாது; வீட்டுக்கு வெளியிலேயே சமைத்து விருந்தினருக்கும் கொடுத்து உண்பதே மரபாக உள்ளது! இந்நடைமுறைகளை இந்தியாவெங்கும் காணலாம்! அரபுநாடுகளிலும் இம்முறையே கடைப்பிடிக்கப்படுகிறது! இதனாலேயே முகம்மதியர்கள் இந்துக்களுக்கு; குறீப்பாகத் தமிழருக்கு பலியுணவைக் கொடுக்கும் மரபு தொடர்கிறது. அவர்களும் இத்தகைய பாதிப்புக்கு ஆளானோரே என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுகளுக்குள்தான் நமது வரலாறுகள் புதைந்துகிடக்கின்றன!
அகில உலகத்தாருக்கும் பொதுவான வழிகாட்டி நான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இறுதி வேதமான திருக்குர்ஆனில் ஏக இறைவன் கூறுகிறான்:
உங்களின் இந்த சமுதாயம் திண்ணமாக ஒரே சமுதாயமாகும். மேலும் நான்தான் உங்களின் அதிபதி. எனவே, எனக்கே அஞ்சுங்கள்!” (அல்குர்ஆன் 23:52)
எந்த சமுதாயத்திற்கும் என்னுடைய தூதர்கள் வராமல் இருந்ததில்லை!’ என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
பழம்பெருமை வாய்ந்த நம் இந்திய நாட்டிற்கும் ஏராளமான இறைத்தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கிறான். அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்கள் அல்லது மகரிஷிகள் என்று அழைக்கப்படும் அந்த தூதர்கள் அனைவரும் பாந்தவா மானவா சர்வே”
மனிதர்கள் அனைவரும் பந்துக்கள்’ என்றே கூறினார்கள்.
உன்னிடத்தில் நீ அன்பு கூர்வது போல், பிறரிடத்திலும் அன்பு கூர்வாயாக” (மார்க் 12:31) என்றே இயேசுகிறிஸ்துவும் போதித்தார்.
http://a1realism.blogspot.com/2006/10/blog-post.html