-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.
தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.
தமிழர் சமய வரலாறு
சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி
, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.
தெய்வ இலக்கணம்
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.
சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.
சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.
தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்
இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115
இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:
“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.
இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)
சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன் 116
சி.சு. மணியின் உரை:
“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.
கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இலக்கணம்
இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.
தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.
ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.
ஒரு கடவுளே நால்வர் நெறி
சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
தமிழ் பித்தன் கமலஹாசன் பிராமணர் என்று குறிப்பு உங்களுக்கு எங்கே கிடைத்தது ? என் தமிழ் நாட்டு நண்பர்கள் அவரை தேவர் வம்சத்தை சேர்ந்தவர் என்று கூருகின்றனர் . அவரின் விக்கிபீடியா குறிப்பில் குடா அவரை பிராமின் என்று போடவில்லையே ? சரி தமிழர்கள் எந்த முறையில் திருமணத்தை பேசி முடிகின்றனர் என்று சொல்ல முடியுமா ?
Theni ஐயா, சமய மாற்றத்திற்கு “கையாளப்படும் பலவித தில்லாலங்கடி திருகுதாளங்கள்” குறித்து எனது பார்வை.. உங்கள் கூற்று உண்மை. ஆனால், அது ஏன் நடைபெறுகிறது.? சிந்திக்க வேண்டிய முக்கியமான ஒன்று. ஆனால் நாம் கண்டுகொள்வதில்லை. உண்மையில் வறுமையில் வாடும் நம்சமய மக்களிடம் ‘அவர்கள்’ காட்டும் பரிவு, பல வித உடன் உதவிகள் நமக்கு நல்ல படிப்பினை. அதன் உள்நோக்கத்தை மட்டும் அலசிக்கொண்டு இருப்பதால் பலன் இல்லை. நமது சமய இயக்கங்கள், கோவில்கள் அனைத்தும் எல்லாம் பெற்று, எதுவுமே சிறிதும் தேவை அற்ற இறைவனுக்குக் கொடுப்பதில் ஒரு சிறு பகுதியைக் கூட வறுமையில் வாடி வதையுண்டுள்ள எளிய மக்களுக்குக் கொடுப்பதில்லை. சிரமத்தில் உள்ளவர்களை நோக்கி அன்பு கரம் நீட்டும்போது (வறுமையில் வாடுபவர்களுக்கு நோக்கம் முக்கியம் அன்று) நீட்டுபவரின் நேசக்கையை இறுகப் பிடிப்பது இயற்கை. நாம் கண்டிப்பாக செய்ய வேண்டியதை, ஆனால் செய்யாத நல்லதை அவர்கள் செய்கின்றனர். (உள்நோக்கத்தை அலச வேண்டாம்.) இதுதான் தங்கள் வருத்தத்திற்கு உரிய பரிகாரம். இறைவனை நோக்கி அடிக்கடி நீட்டும் நம் கரங்களை ஏன் நாம் நம்மத வறியவர்களை நோக்கி நீட்டுவதில்லை என்பது குறித்தும் ஒரு கலந்துரையாடல் செய்து இருக்கலாம். இந்தக்குறை கண்டிப்பாக களையப்பட வேண்டும். மதத்தில் மனிதநேயம் மிளிர இது உதவும். மனிதநேயமற்ற சமயம் மனிதனுக்குத் தேவையற்றது. . எனது கருத்தை குறை காணுதலாகக் கொள்ளாமல், தயவு செய்து தாங்கள் மேற்சொன்ன குறை களைய சொல்லப்படும் ஒன்றாகக் கொள்ளவும் மற்றபடி பல நல்ல கருத்துகளை எழுதி உள்ளீர்கள். நன்றி.
மங்கை அவர்களே கமலஹாசன் பிராமணன் கிடையாது ,அவன் ஒரு ஆரியன் வம்சத்தில் இருந்து வந்தவன் ,,ஆனால் உண்மையை சொல்ல போனால் அவன் ஒரு வேறு மனிதன் தான்
விக்கிப்பீடியாவில் குறிப்பிடாவிட்டால் என்ன?கமஹாசன் புலால் உண்ணும் பிரமீன்தான்.அதற்கென்ன இப்போது?
‘நட்டக் கல்லை தெய்வம் என்றே
நாலு புஷ்பம் சாத்தியே
சுத்தி வந்து மோனமொணங்கும்
சொல்லும் மந்திரம் ஏதடா.
நட்டக்கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச் சுவை அறியுமோ? நாராயணா.
நடிகர் கமல்ஹாசன் ஒரு பிராமணன் சேர்ந்தவர் என்று அவருடைய அண்ணன் உலக தமிழ் மாநாட்டிற்கு மலேசியாவிற்கு வந்த போது 1982 என்னிடம் தான் ஒரு
பிராமணன் குளத்தை சேர்த்தவர் என்றும் , என் தந்தைக்கு
ஹசன் என்ற இந்திய தேசிய வாதியை ரொம்பவும் பிடிக்கும்
அதனால் தான் எனக்கு சாரூ ஹாசன் என்றும் என் தம்பிக்கு கமல் ஹாசன் என்றும் பெயர் வைத்தார் ,கமல்ஹாசான் பல முறை தான் ஒரு பிரமான குலைத்தில் பிறந்தாலும் நான் ஒரு தமிழன் என்று சொல்வதையே பெருமையாக கொள்கிறேன் என்று கூறியுள்ளார் , அவர் தேவர் மகன்
படம் எடுத்ததால் அவர் தேவர் குளத்தை சேர்ந்தவர் என்று மங்கை நினைத்து விட்டீர்களோ .கமல் ஹாசனையும் , நடிகர் சத்திய ராஜ் யும் எனக்கு காரணம் கடவுள் மறுப்பு கொள்கையும் ,ஜாதி மறுப்பு கொள்கை உடையவர்கள் .
உங்கள் இரண்டாம் கேள்விக்கு இதோ பதில்.
தமிழர்கள் ஆரம்ப காலத்தில் திருமணம் ,பெண் பிள்ளை பெற்றவர்கள் தங்கள் மகளை அழகான அல்லது வசதி
படைத்த மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டார்கள் ,ஒரு வீரனுக்கு தான் கட்டிகொடுப்பர்கள் ,அந்த காலத்தில் தமிழன் காடுகளில் வாழ்ந்த போது ஒரு ஆண்பிள்ளை ஒரு சிங்கத்தையோ அல்லது புலியையோ கொன்று அந்த மிருகத்தின் கொண்டு வந்து தான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணிடம் கொடுப்பான் அவளின் பெற்றோர் அந்த மிருகத்தின் பல்லை ஒரு கயிற்றால் கோத்து சங்கிலியாக போட்டு கலியாணம் செய்து மகளை மருமகன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் ,காலம் மாறியது பிராமண திருடன் வந்தான் , செய்யும் தொழிலை வைத்து ஜாதிகளை உருவாக்கினான் ,காடுகளும் அழிந்தது மிருகங்களும் குறைந்தது .பிராமணன் எல்லா சாங்கியங்களும் தாங்களே செய்யவேண்டும் என்று அரசர்களிடம் கேட்டுகொண்டான் ,தாலி கயிற்றில் இனி மிருகத்தின் பல் தேவையில்லை ஒவ்வொரு பெண்ணும் கணவனின் ஜாதியின் அடையாள சின்னமாக ஜாதி சின்னத்தை கொண்ட தாலியை கட்டுமாறு கட்டாய படுத்தினான் ,மங்கை நீங்கள் தாலியை செய்ய பத்தர் கடைக்கு போனால் அவர் முதலில் என்ன ஜாதி என்று கேட்பார் ,அந்த ஜாதிக்கு ஏற்ற தாலியை செய்து கொடுப்பார் , இந்து பெண்கள் தங்கள் கழுத்தில் ஜாதியின் சின்னத்தை தான் அணிந்து இருக்கிறர்கள் ,ஏன் மங்கை ஒரு பெண்ணான நீங்களும் ஜாதியின் அடையாளத்தை தான் அணித்து இருக்க போகிறீர்கள் அல்லது அணிந்து இருப்பீர்கள் ,அறிஞர் அண்ணாவின் இந்த தாலி யின் விளக்கத்தை கேட்டவுடன் என் மனைவியிடம் எடுத்து கூறி நமக்கு ஜாதியின் சின்னமான தாலி வேண்டாம் என்று கூறியதும் என் மனைவி ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக எங்கள் இருவரின் படத்தை லாகேட்டாக செய்து அணிந்து கொண்டார் .இது மட்டுமா மங்கை இந்த திருட்டு பிராமணன் திருமண தேதியையும் ,ஜோடி இவன் குறித்து கொடுத்தால்தான் அந்த தம்பதியர்கள் நீண்ட ஆயுளுடன் தம்பதிகளாக வாழ மாட்டார்களாம் ,மாங்கல்ய போருத்துமில்லை என்று சொல்லி எத்தனை யோ காதலர்களை பிரித்து வைத்தார்கள் , இவன் எல்லா திருமனகளுக்கும் பொருத்தம் பார்த்து கலியாணம் செய்து வைக்கிறான் 100க்கு 95 விகித பெண்கள் கணவனுக்கு பின் தானே இறக்கிறார்கள் ,காரணம் ஆணின் வயது 70 என்றால் பெண்ணின் வயது 80 கூடத்தானே இருக்கிறது .
காய் நீ கேள்வியையே கேட்காமல் பதில் சொல் என்கிறாய் ,
நானா பூதிங்கை சப்பிகொண்டு இருக்கிறேன் ,அழுதுகொண்டு
இருக்கிறேன் ,ஒரு கீழ் தர பிரமாணன் நீ என்பதை நிருபித்து
விட்டாய் ,சேரிகளை சேரி மக்களை தாழ்வாக பேசும் உன்
குலத்தோர் சாங்கியம் செய்வதற்கும் ,கருமாதி ,கலியாணம்
செய்து வைபதர்க்கும் சேரிக்கு போவது ஏன் சேரிகளின் காசு
உங்கள் நாராயண் பிச்சை காரனுக்கு தேவை அல்லவா .உனக்கு கேள்வியை கேட்க தெரியாது உன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு தெரியும் அதை விட்டு எழுத சொல் .நைனா .
சைவ சமய பேரவையில்,தமிழில் அர்ச்சனை செய்ய ஒத்து போனார்களா ?
தமிழ் பித்தன் அவர்களே நீங்கள் எதை வைத்து ஜாதியை பார்கின்றிர்கள் விளக்க முடியுமா ? . என்னை பொறுத்தவரை தமிழர்கள் ஒரு இனம் என்றால் தெலுகுகர்கள் ஒரு இனம் மலையாளிகள் ஒரு இனம் சினர் மலாய் காரர்களை போலவே . தாலியையும் இனத்தின் அடையாளமே தவிர எங்களை பொறுத்தவரை ஜாதியின் அடையலாம் அல்ல . தமிழர்களில் எத்தனை வகை தாலி உண்டு என்று எனக்கு தெரியாது . நான் இன்றைய சுழலை வைத்து கேட்கிறேன் , உங்கள் திருமண முறையை பற்றி , ஒரு தமிழ் பெண்ணுக்கும் ஒரு பையனுக்கும் எந்த வகையில் சொந்தம் என்று எப்படி பார்பிர்கள் ? உதரணத்திற்கு பல்கலை கழகத்தில் படிக்கும் அல்லது வேலை இடத்தில காதலித்து விட்டால் எதை வைத்து பேசி முடிபிர்கள் ? நீங்கள் இவ்வளவு தெளிவாக பேசுவதால் உங்கள் குடும்பத்தில் கலப்பு மணம் இருக்காது என்று நம்புகிறேன் . அதனால் தான் இதை உங்களிடம் கேட்கிறேன். உங்களது கல்யாணம் சீர்திருத்த கல்யாணமா ? மன்னிக்கவும் எங்கள் குடும்பத்தில் கலப்பு மணம் இல்லாததால் எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் . தப்பாக இருந்தால் மனிக்கவும் .எனக்கு தெரிந்த வரை நான் சந்தித்த தமிழர்களில் அதிகமான கலப்பு மணம் நிறைய கண்டுள்ளேன். நீங்கள் கோவிலுக்கு போக மாட்டிர்கள ?? பதில் தரவும் . நன்றி
சைவ சமய பேரவையின் கொள்கைகளில் ஒன்று கடவுள் வழிபாடு திருமுறைகளை இறைத் துதியாகப் பாடி நீரும் மலரும் கொண்டு எம்பெருமானை அர்ச்சனை செய்வதே. இதுவே திருமுறைகளில் தமிழர்களுக்கு காட்டிய இறை வழிபாடு முறையாகும். ஆதலால், இதற்கு யாருடைய ஒப்புதலும் மலேசியா சைவ சமய பேரவைக்குத் தேவைப் படவில்லை. இறை வழிபாடு தமிழில் செவ்வனே நடந்தது.
க.ம.போ. தங்களின் கருத்தே எம் கருத்தும் கூட. ஆலயத்தில் அர்ச்சகர்கள் சொன்னதற்கும், சொல்லாததர்க்கும், நிர்வாகஸ்தர்கள் செய்யும் ஆடம்பர, அனாவசியாமான வழிபாட்டு முறைகளை குறைத்து சற்றே ஒவ்வொரு ஆலய வட்டாரத்திலும் அல்லல் படும் இந்தியர்களுக்கு உதவி செய்தால் பிற மதத்திற்கு இவர்கள் நயவஞ்சகமாக ஈர்க்கப்படுவதை நிறுத்தலாம். நான் “நயவஞ்சகமாக” என்றது, ஒரு பிச்சைக்கார பெண்ணுக்கு வேண்டிய உதவியை செய்து விட்டு அவரின் பெண்மையையே பிரிதி உபகாரமாக கேட்பது போலாகும் “உதவி” என்ற பெயரில் “மத மாற்றம்” செய்வது.
தாமான் ஶ்ரீ மூடாவில் இயங்கும் பாபா,அய்யப்பன் சென்டரில் ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிப்பு,இலவச டியூஷன்,தேவாரம் போன்றவை இலவசமாக நடைபெருகிறது.வருமையில் வாடுபவர்க்கும் வுதவிகள் செய்வதாக கேள்வி பட் நோட் ஸ்வர்.செக்ஷன் 16,ஷா ஆலாமில் இலவச உணவு அன்ராடம் மற்றும் வருமையில் வாடுபவர்க்கு ஆர்.எம்150,மாதத்திற்குக்கு செலவு சாமாண்கள் கொடுக்கின்றனர்.மாணவர்களுக்கு புஸ்தகங்கள்,மற்றும்2.மஜ்லிஸ் பன்டாராயாவில் பதியவும் குறைந்த வாடகை வீடு,சலுகை,மிஸ்கின் தெகார் டீ பன்டார்,ஜெ.கே.எம்,கொரியா கெபஜிகான் சூ ச்சீ,கௌன்ஸ்லரை அனுகவும்,மாதம் மாதம் படிக்கும் பிள்ளைக்கு முலு செலவும்,இப்படி நிறைய நிருவணங்கள் செய்கிறது ஏன் ஆலயத்தை குறி வைக்குறீர் டோனேஷன் கேட்டு கொடுக்கவில்லையா.முடிந்தால் நான் கூறிய நிர்வகத்துக்கு சென்று தேவை படுவோறுக்கு பெற்று தாருங்கள்.நானும் முடிந்தலவுக்கு பெற்றுதந்து வருகிறேன்.ஆலயத்திடமும் நயமாக பேசினால் வுதவுவார்கள்.பிள்ளை படிப்பிற்கு எவறும் உதவுவர்.வாழ்க நாராயண நாமம்.
வெங்கட ராமசாமி நாயக்கர் கன்னடம்( பெரியார்),தட்சனாமூர்த்தி சின்னமேளம் தெழுங்கர்(கருணானிதி),எம்.ஜி.ராமசந்திரன் மேனன் மலையாளி(எம்.ஜி.ஆர்),வை.கோபால்சாமி நாயுடு தெலுங்கர் (வை.கோ),விஜயராஜ் பிரபாகர் நாய்கர் தெலுங்கர் (விஜியகாந்த்),கோமளவள்ளி ஐயங்கார் கன்னட பாப்பனர்(முதல்வர் ஜெயலலிதா)ஆனா இவா யெல்லாம் தமிழரா.தமிழரை ஆண்டவா அன்று முதல் இன்று வறை.அப்போ தமிழை கற்றதனால் தமிழை பேசுவதால் தமிழர் ஆனர் போல்,அப்படியா.நாராயண நாராயண.
Theni ஐயா, நான் சொல்லும் கருத்தினை ஒத்தக் கருத்தை தாங்கள் கொண்டிருப்பது மட்டும் தங்களின் இந்த ஆதங்கத்திற்கு பரிகாரம் ஆகாது, தங்களைப் போன்ற proactive சைவ உணர்வாளர்கள் இதற்கு நல்ல பரிகாரம் தேட வேண்டும். நடைமுறையில் இதனை அமல் செய்ய வேண்டும். கடவுளுக்கு ஆகும் செலவைக் குறைத்து, அதனை அவரின் படைப்பான வறுமையில் வாடும் மக்களுக்குக் கொடுப்போம். அதற்கான நடைமுறை வழிமுறை குறித்து brainstorm செய்ய வேண்டும். பின்னர் அதற்கு செயல் உருவம் கொடுக்க வேண்டும். குறையை அறிவது நல்லது. ஆனால் பிரச்னைக்கு அதுமட்டும் தீர்வாகாது. அதி முக்கியம் அது களைய செயல் ஆக்கம். கோவில் பெருச்சாளிகளை கோவில் kompaund-டில் இருந்து ஓட்ட வேண்டும்.
மங்கை அவர்களே , பிராமணன் பிழைப்பு தேடி தமிழ்
நாட்டுக்கு வந்து அங்குள்ள தமிழர்களை அவர்கள் செய்யும்
தொழிலை வைத்து ஜாதியை உருவாக்கி சிலரை கீழ் ஜாதி
என்றும் அழுக்கு வேலை செய்பவர்களை தாழ்ந்த ஜாதி என்றும் உருவாக்கி ஒவ்வொரு சாதிக்கும் அந்த சாதியின்
அடையாள சின்னத்தை தாலி யில் பதிய வைத்தான் . மங்கை உங்களுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறன் திருமணம் ஆகி இருந்தால் உங்கள் தாலியையும் மற்ற
பெண்களின் தாலியையும் ஒப்பிட்டு பாருங்கள் அப்போது வித்தியாசம் தெரியும் . தென் நாட்டு காரர்களை திராவிடர் என்று அழைப்பார்கள் ,இதில் தமிழர் ,மலையாளி , தெலுங்கர் ,கன்னட காரர்கள் அடங்குவர் , தமிழர் இனத்தில் எப்படி தாலி பல வடிவங்களில் இருக்கிறதோ அது மற்ற இனங்களில் ஜாதியின் தாலி சின்னம் இருக்கிறது . தாலியை கட்டுவதற்கு
முன்பு மாலையை மாறிக்கொள்ளும் பழக்கம் இருந்தது ,இளங்கோ வடிகளின் கண்ணகி இலக்கியத்தில் மாதவி தன் மாலையை கோவலனுக்கு போட்டவுடன் மாதவி கோவலனின் இரண்டாம் மனைவியாகிறார் . சீர்திருத்த திருமனகளில் தாலியை கட்டுவது இல்லை மாலையை தான் மாற்றிக் கொள்கிறார்கள் ,அது நமது கலாச்சாரம் அதை தெரிந்துக்
கொள்ளாத ம.இ.கா கட்சியின் மாதர் பகுதி பெண்கள் ஆண் தலைவர்களுக்கு மாலை போட்டு வரவேற்கிறார்கள் ,அப்படி என்றால் ம.இ.கா மாதர் பகுதிக்கு எத்தனை கணவர்கள் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள் தெரியாமல் செய்கிறர்கள் ,ஆண் ம.இ.கா தலைவர்கள் பெண் தலைவிக்கு மாலையை கழுத்தில் போட மாட்டார்கள் ,அப்படி கழுத்தில்
மாலையை போட வந்தால் உடனே அந்த பெண் அந்த
மாலையை கையில் வாங்கி கொள்வாள் . மங்கை இப்போது புரிகிறதா மாலையின் மகிமையை ,தத்துவத்தை .
நான் 22வது வயதில் என் மனைவியை காதலித்து கோயிலில் திருமணத்தை செய்து கொண்டேன் ,நான் தமிழன் என் மனைவி தெலுங்கர் இனத்தை சேர்ந்தவர் , இரண்டு பெண் பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன ,இரண்டு பெண் பிள்ளைகளில் ஒரு மகளை தமிழனுக்கும் ,மற்றொரு பெண் பிள்ளையை தெலுங்கர் இனத்தை சேர்ந்த மாப்பிள்ளைக்கும் மணமுடித்து வைத்தேன். என் ஆண் மகன் ஒருவனுக்கு தெலுங்கர் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து கடைசி மகனுக்கு மலையாள இனத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தேன் ,எங்கள் குடும்பம் ஒரு திராவிட குடும்பமாக திகழ்ந்து வருகிறத்து .நான் என் திருமணத்தை கோயிலில் தான் செய்தேன், அதன் பின் ஒரு முருகன் கோயில் ஒர் ஆண்டு செயலளராக இருந்தேன்.1980 ஆண்டு என் கையில் தந்தை பெரியாரின் சீர்திருத்த புத்தகம் ஒன்று கிடைத்து அன்றிலிருந்து என்னை சீர்திருத்த வாதியாக வாழ்ந்து வருகிரேன்,மங்கை என்னைபற்றி முழுமையாக உங்களுக்கு கூறுவதின் நோக்கம் நான் செயலில் ஒன்று வார்த்தையில் ஒன்று என்று இல்லாமல் உண்மையானவனாக வாழ்ந்து வருவதை கூறிவிட்டேன் . நான் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்து விட்டேன் மீண்டும் அறியாமை மாயை என்ற உலகிற்கு செல்லமாட்டேன் ,வீட்டில் மறைத்த என் பெற்றோர்களின் படங்கள் இருக்கும் போது நான் கோயிலுக்கு சென்று அங்குள்ள படங்களையும் ,சிலைகளையும் வணங்க.வேண்டும் ,
தமிழ் பித்தரே தங்கள் குடும்பம் ஒரு ‘Muhibah’ குடும்பம் போல் உள்ளதே?.
க.ம.போ. பிரச்சனை எல்லோருக்கும் தெரியும். இதனைக் களைவதற்கு ஒரு தனி நபரால் இயலாது. இந்நாட்டில் உள்ள அறிவார்ந்த இளைய சமூகம் ஒன்று கூடி சமய சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. 5,000 நெல் நாற்று நட்ட வயலிலே 50,000 பதர் நெற்செடியும் முளைத்து விட்டது. களை எடுப்பது சுலபமான காரியமல்ல. இதன் முடிவே, கடந்த 2-ம் உலகளாவிய சைவ சமய மாநாட்டில் நால்வர் உணர்த்திய ஒரு கடவுள் (பரம்பொருள்) வழிபாடு என்ற கருத்து முன்னிலைப் படுத்தப் பட்டது. இதன் நோக்கம் நம் மக்கள் பல தெய்வ வழிபாட்டில் நின்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாதம் ஒரு திருவிழாகவும் இன்னும் பலப் பல பூஜைகளுக்கும் பக்தியின் அடிப்படையில் செய்து வரும் செலவை நிறுத்தி, சிக்கனமான வழிபாட்டு முறைகளை ஆலயங்கள் கடைப் பிடிக்க வேண்டும் என்பதே. மேலும் ஒரு தெய்வத்திற்கு ஒரு கோவில் என்ற நிலை மாறி நாமும் நமக்கென்று ஒரே கடவுளரை வழிபட ஓர் இடத்திற்கு ஒரு கோவிலைக் கட்டி அனைவரும் அங்கேயே சென்று வழிபட்டால், பலப் பல கோவில்கள் கட்டி செலவு செய்யும் பல கோடி வெள்ளி இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், முறையான சமயக் கல்வி பெறுவதற்கும் திசை மாற்றலாம். இதற்கு மலேசிய சைவ சமய பேரவை மற்ற தேசிய அளவிலான சங்கங்களின் எதிர்ப்பிலும் எதிர் நீச்சல் போட வேண்டியுள்ளது. நம்மவர்களும் புராணத்தை நம்பிக் கொண்டு பிழையான பக்தி நெறியில் நடப்பதை நிறுத்தி விட்டு அறிவுப் பூர்வமான சமயக் கல்வியை பெற்று அதன் வழி நின்றால் நிச்சயமாக தமிழர்கள் அறிவார்ந்த சமூகமாக மாறி தங்களை சமய அறிவிலும், பொருளாதாரத்திலும் உயர்த்திக் கொள்ள வழி பிறக்கும். நமது ஆலயங்களின் அறவழி நடவடிக்கையாக ஏழை எளியோருக்கு சமய அறிவை புகட்டும் அதே வேளையில், அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உயர வழிவகைகளை செய்து தரலாம். நான் ஓர் ஆலய நிருவாகத்தில் இருக்கும் பொழுது, UPSR, PMR, SPM தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கும் வழக்கத்தை வைத்திருந்தோம். நல்லவர்களுக்கு நம் ஆலயத்தில் இடமும் மரியாதையும் இல்லை என்பதனால் சற்றே விலகி இருந்தபொழுதுதான் முனைவர் ஆறு நாகப்பன் அவர்களிடம் சைவ சித்தாந்தம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. சைவ சித்தாந்தம் கற்று தெளிந்த பிறகுதான் தமிழர் சிறந்ததொரு சமய தத்துவத்தை பன்னெண்டுங்காலமாக கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்தது. தமிழ் பித்தன் கருதுவது போல் யாம் வாழத் தெரியாதவன் அல்ல. எமக்கென்று ஒரு சிறந்த தொழிலும், அதன் வழி எம்மையும் எம் குடும்பத்தினரையும் உயர்த்திக் கொள்ள வழி வகைகளை தெரிந்து வைத்துள்ளோம். வாழ்வாங்கு வாழுகின்றோம். கடவுளை நம்பினோர் மட்டிகள் என்று தமிழ் பித்தன் வாதிடுவது அவரின் அறியாமையை புலப்படுத்துகின்றது. இவ்வாறானவர்கள் சிறுபான்மையினர் என்பதனால் அவரைப் பொருட்படுத்தத் தேவை இல்லை. தமிழர் சிறந்து வாழ அவர்கள் அனைத்து துறையிலும், சமயம் உட்பட, அவார்ந்த நிலையில் வாழ வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பும் கூட. அந்த அளவிலே யாமும் மலேசிய சைவ சமய பேரவையுடன் சேர்ந்து பணியாற்றுகின்றோம்.
தமிழ் பித்தர் அண்ணா உங்கள் MUHIBAH குடும்பத்துக்கு என் வாழ்த்துக்கள் கூரும் அளவுக்கு எனக்கு வயது இல்லை ,
எங்கள் இனத்தில் மேல் ஜாதியோ கிழ் ஜாதியோ அனைவருக்கும் ஒரே மாதிரியான தாலிதான் . கடவுள் இல்லை என்று சொன்ன கமலஹாசன் போன்றோர் மதம் மாறியது என் கண் கூடாக பார்த்திருகின்றேன் அவர் இன்று இல்லாவிட்டாலும் நாளை மதம் மாற வாய்ப்பு உள்ளது . அது கடவுள் கையில் . எனக்கும் திருமணம் ஆகிவிட்டது பெற்றோர் பார்த்த வரன் . 2 குழந்தைகளும் உள்ளனர் . படித்துகொண்டு இருகின்றனர் . நாங்கள் எங்கள் வீட்டில் எங்கள் தாய் மொழியில் தான் பேசுவோம் , என் பிள்ளைகளுக்கு எங்கள் தாய்மொழியில் எழுத படிக்க தெரியும் . நான் தமிழ் பள்ளியில் படித்த போதும் சங்கீதம் பயின்றேன் . குச்சுபுடி தெரியும் . எனக்கு சமஸ்க்ருதம் சொல்லி கொடுத்த பிரம மந்திரத்தை உபதேசித்தது என் தாத்தா . அவர் மரணமடைதபின் en தந்தையார் தான் என் குழந்தைகளுக்கு உபதேசித்தார் . பெருமைக்காக சொல்லவில்லை எங்கள் குடும்பத்தை சேர்த்த ஆண்கள் இதுவரை மது புகைக்கு அடிமையனதும் இல்லை
எ ங்களது சாஸ்திரிய குடும்பம் . நாங்கள் இதுவரை எந்த தமிழ் விழாக்களையும் கொண்டாடியது இல்லை என்றாலும் வேடிக்கை பார்க்கவாவது பிள்ளைகளை அழைத்து செல்வேன் . அப்படி
செல்லும் போது அங்கு நடக்கும் நல்லது கேட்டதை என் குழந்தைகளுக்கு எடுத்து உரைப்பேன் . யாராக இருந்தாலும் மொழி உயிர் போன்றது , அதானலே என்னவோ எங்களுக்கு இன்னும் அடுத்த இனத்தில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மனம் இல்லை காரணம் எங்கள் தாய் மொழி போய்விடும் என்ற பயம் தான் .
நான் இதுவரை சொன்ன என் கருத்தை ஆசிரியர் பிரசுரிப்பார தெரியவில்லை . காரணம் எனக்கு தாய் மொழி தமிழ் இல்லை .
தேனீ அவர்களே ,உங்கள் கூற்றுப்படி சமய கல்வியால் மட்டுமே தமிழர்கள் அறிவார்ந்த சமூதாயமாக மாற
முடியும் என்றால் சைவ சமயம் இன்று நேற்று தோன்றியது
அல்ல ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மதம் ,ஏன்
அப்போது உள்ள தமிழர்கள் வாழ்வாங்கு வாழ வில்லை ,தேனீ அக்கா ,நான் உண்மையை எடுத்து கூறினால் நான் அறியாமையில் கூறுகிறேனா ,எதற்கும் சரியென்று சொல்லி தலை யை ஆட்டுவதிற்கு அறிவு தேவையில்லை ,அறிவுள்ளவன் தான் எதையும் காரணத்துடன் எதிர்த்து
வதடுவான் , உங்களால் முடிந்தால் அறிவுக்கு அறிவு
பதில் சொல்லுங்கள் அதை விடுத்து நான் அறியாமையில் எழுதுகிறேன் என்று கூறும் நீர் நான் எழுதிய கருத்துக்கு வரிக்கு வரி பதிலை சொலுங்க நைனா சொல்லுங்க .
தேனீ அண்ணா உங்கள் கருத்தை முழுமையாக ஆதரிகின்றேன் . தில்லு முள்ளு படத்தில் தேங்காய் சீனிவாசன் ஒன்னு சொல்வர் . தமிழன் தமிழன இருக்கனும் தெலுங்கன் தெலுங்கான இருக்கனும் அதே போல மலையாளி மலையாளி யாக இருக்கணும் . நாம் யாராக இருந்தாலும் நாமாக இருக்க வேண்டும் . அடுத்தவரை பார்த்து சூடு போட்டு கொள்ள குடாது .திறமையாக இருக்கனும் . அது தான் முக்கியமே .
தேனீ நான் தமிழ் மொழியில் தானே எங்கள் குடும்பம்
ஒரு திராவிட குடும்பம் என்று எழுதியும் தமிழ் படிக்க
தெரியாமல் “muhibah ” குடும்பம் என்று சொல்லுகிறீகள் முகிபா
என்று பல இனங்கள் ஒன்றாக வாழுவதை குறிப்பதாகும் ,
திராவிடன் என்பது தென் நாட்டை சேர்ந்தவர்கள் ,அவர்கள்
ஆரம்பத்தில் தமிழை மட்டும் பேசி வந்தார்கள் ,அந்த தமிழர்களிடம் ஊடுருவிய ஆரிய பிராமணன் தெலுங்கு மொழியை ,கன்னட மொழியை ,மலையாள மொழியை உருவாக்கி இனத்தையும் பிரித்தான் ,நான் அதில் மலையாளம் ,தெலுங்கு தமிழர் கிடையில் திருமணத்தை
செய்து வைத்து திராவிட இனத்தை அமுல்படுத்துகிறேன் .
இப்போது புரியுதா தேனீ அக்கா .
அதுவே பிள்ளைகளை ச்சேரியில் கட்டிகொடுத்திருந்தால் அல்லது சேரி பெண்ணை திருமணம் செஞ்சி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கவேண்டும்.எல்லாம் மேல் சாதியில் கட்டிக்கொடுத்துவிட்டு ஒரே ஒரு பெண்னை மட்டும் கொடுத்திருக்கார்,எந்த தமிழச்சியையும் எடுக்கவில்லை,முகிபா சொல்லக்கூடாது.மேல் ஜாதி என்பது ஒரே கூட்டில் கூடி வாழும் கூட்டம்.இவரே தமிழில் தன் வம்சம் வாழக்கூடாதுயென்று தூரவொதுங்கி செல்கிறார் ஆனால் தமிழ் தமிழ் பேசுது காமடியாகீது சிரிச்சுகீரேன்.முஹிபா என்றால் சீனர்,மலாய்,ஹிந்து,கிருஸ்து போன்று வரவேண்டும்.அது தான் நைனா போட்டாரோ,அப்போ நைனா சேரி மொழி,தெலுங்கர் சேரி மக்கள் சொல்றீரோ.யார் களுத்திலும் தாலிதொங்காதே பல் தான் தொங்குமே,படம் தான் தொங்கும்.யார் இவர் வீட்டில் சம்பந்தம் வைக்கனும்னா சிங்கம்,புலி கூட சண்டைபோடனுமே,அதுக்கு தான் சர்கஸ்ஸில் சிங்கம் புலி,எலி இருக்கே,ஜமாய்சர்லாம்.பல்லுக்கு எங்கே போவது ?,.என்னம்மா கண்னு படம் எப்படி,நாராயண நாராயண.
பித்தரே,மங்கை கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை.திருமணம் எப்படி நிச்சயிக்க படுகிறது.நீங்கள் திருமணம் முடித்தது,உம் மக்களுக்கு திருமணம் முடித்தது போன்றவை,அல்லது தமிழர் மணமக்கள் தேர்வு,பொருத்தம்,இதில் வீராப்பு வேண்டாம் ஒன்லி விவேகம்,கலாச்சாரம்.கேள்வி புரியவில்லை என்றால் கேளும்,கே,எனக்கு ஒரு சந்தேகம் ஆரு அரிவு என்பது என்ன என்ன சொல்லமுடியுமா?,வாழ்க நாராயண நாமம்.
யாரப்பா சமய கல்வியால் மட்டுமே தமிழர்கள் அறிவார்ந்த சமூதாயமாக மாற
முடியும்
என்று சொன்னது?. சமயம் வாழ்கையின் ஒரு பகுதியே. உலகியல் இன்பத்தை நாடும் அதே வேளையில் மெய்யறிவும் வேண்டும் என்று தான் சொன்னேன். இரண்டுமே அறிவுப் பூர்வமான வழியில் இருந்திருந்தால் நாம் இன்று எங்கோ சென்றிருப்போம்.
kaayee ஆறு அறிவு என்பது என்ன வென்று கேட்கும் ,உனக்கு
பதில் நான் சொல்லுவதை விட உன் ஒன்றாம் வகுப்பு மகள் /
மகனிடம் கேள் , மங்கைக்கு நான் எழுதிய விளக்கத்தில் விரிவான பதில் உண்டு புரியவில்லை என்றால் மீண்டும் படி
தெரிய வில்லை என்றால் தமிழ் பள்ளியில் படிக்கும் ஒன்றாம் மாணவியிடம் கேள் . புழு பூசிகளிருந்து ,மனிதன்
வரைக்கும் ஓர் அறிவிலிருந்து ஆறு அறிவுகள் உண்டு ,ஆறாம் அறிவு என்பது எதையும் சிந்தித்து ஏற்றுக்கொண்டு
செயல் படும் அறிவு ,சுருங்க சொன்னால் பகுத்தறிவு ,அதுதான் உங்களிடம் இல்லையே ,உனக்கு ஆறு அறிவு இல்லை ,காரணம் 5 மிருகத்தையும் ,4 அறிவு பாம்பையும்
கும்பிடும் 6 அறிவில் ஓர் அறிவு அவுட்டு ,அதில் 5 அறிவு
நிலைக்கும் என்றால் அதுவும் டவுட்டு .
kayeet நீ மட்டும் மேல் ஜாதி என்று சொல்லும் நீர்
என்ன உங்க அம்மா ….லா பிறந்தாய் ,எல்லோரும்
பிறக்க வேண்டிய இட்டதில் பிறந்தார்கள் இதில் என்ன மேல் ஜாதி கீழ் ஜாதி ,தான் படைத்த பிள்ளையான சரஸ்வதியையே திருமணம் செய்துகொண்ட உங்க முன்னோர் மேல் ஜாதிஎன்றால் நான் அப்பேற்பட்ட அயோக்கிய ஜாதி தேவையில்ல ,சொந்த மகளையே திருமண செய்தவனிடம் போய் கேள் மிருகத்திற்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று,வர்ணசாஸ் திரத்தில் பிரம்மா வின் நெற்றியில் பிறந்தவன் பிரமாவின் நெற்றியில் பிறந்தவன் பிரமாணன் ,தோளில் பிறந்தவன் சத்திரியன் , வயிற்றில் பிறந்தவன் வைசியன் ,காலில் பிறந்தவன் சூத்திரன் , நான்கு இடத்தில் பிறந்தவர்களை மட்டும் கூறும் வர்ண சாஸ்திரம் kaayee நீங்கள் மேல் ஜாதிகரன் என்று தம்பட்டம் அடிக்கும் நீர் உண்மையை சொல்லும் நீர் அவன் …லிருந்து தானே பிறந்தாய் ,நீ ….க்கு போகவேண்டியவன் உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை .
இரண்டாம் உலக சைவ சமய மாநாட்டின் கருப்பொருளுக்கேற்ப அனைத்து பேச்சாளர்களும் “நால்வர் உணர்த்திய ஒரு கடவுள் கொள்கை” என்ற கருத்தினைச் சான்றுகளுடன் முன் வைத்தனர். ஏற்பாட்டாளர்களுக்கு சபாஷ். வெறுமனே கண்டதைப் பேசாமல், திருமுறையில் காணப்படும் ஓரிறைக் கொள்கையைப் பேராளர்கள் மனதில் பதிய வைத்தமைக்கு நன்றி. வாழ்க. அடுத்த மாநாட்டிற்குள் , காயீ போன்றோர் தெளிவு பெற வேண்டும் என எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.
இரண்டு ஜாதிவெறியர்களோடு தமிழ்ப்பித்தன் வாதித்துக்கொண்டிருக்கிறார். தமிழ்ப்பித்தன் நீங்கள் ஒரு துருவம் என்றால் அவர்கள் இருவரும் வேறு ஒரு துருவம். உங்களின் பரிமாணம் வேறு .அவர்களின் பரிமாணம் வேறு. உங்களால் அவர்களின் நிலையை புரிந்துகொள்ள இயலும். அவர்கள் உங்களின் பரிமாணத்தில் இல்லை என்பதால் அவர்களால் உங்களை அறிய முடியாது. “ஆரு அரிவு” என்பது என்ன? என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு நீங்களும் பதில் எழுதுகிறீர்கள்!? இது நியாயமா? தமிழ் தெரியாதவர்களிடமெல்லாம் வாதம் செய்கிறீர். ஆரியர் என ஓர் இனம் உண்டு. இன்று தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஒரு கலப்பினம். அதாவது ஆரியர்+ (ஓரி) திராவிடர்= பார்ப்பணர். ஆரியர் கதை என்னவென்றால் ஒரு பெண்ணை சகோதரரர்கள் பலரும் மணைவியாக்கிக்கொள்ளலாம். உதாரணம் (பாண்டவர் கதை) இதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாட்டிறைச்சியையும்,குதிரை இறைச்சியையும் சாப்பிட்ட இனம் இன்று சைவ உணவை உண்ணுவதில் பெருமை பேசுகிறது. சோம்பானம் குடித்து போதையில் கிடந்த இனம் இன்று திராவிடனைப் பார்த்து குடிகாரன் என்று ஒதுக்குகிறது. ஒரு பிறப்பிலேயே ஒழுக்கமிழந்தவர் தங்களை இரு பிறப்பாளர் என்று பெருமை பேசுகிறது. வேதா காலத்தில் வெள்ளைத் தோலாய் இருந்த இனம், முடி தங்க கம்பிகளாய் செம்பட்டை வண்ணத்தில் இருந்த இனம் இன்று கரிய முடியும் கலப்பு நிறமாய் தோலும் காட்சியளிப்பது ஏன்? ஒரு பெரும் இனக்கலப்பைப் பெற்று கொண்ட வந்தேறி இனம் தங்களை ஜாதிக் கலப்பற்றவர்கள் என்று பேசுவது என்ன நியாயம்? இதையெல்லாம் புரிந்துகொள்ளும் பரிமாணத்தில் இல்லாதவர்களிடம் தமிழ்ப்பித்தர் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது சாக்கடையில் பாய்ச்சும் நன்னீராகுமே என்பதை உணர்ந்து , எழுத்துப்பிழைகள் கருத்துப் பிழைகள் மிக எழுதுபவரிடமிருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள். அறிவுப்பிழைகள்… கருத்துப் பிழைகள்… ஒழுக்கப்பிழைகள்… கலாச்சாரமே இல்லாத நாடோடிகள்… கலாச்சாரம் குறித்து விளக்கம் தருகிறதாம். அதையும் தமிழ்ப்பித்தன் கேட்கவேண்டுமாம். என்ன கொடுமை அய்யா!!!?
மின்னஞ்சலில் ஜாதியை குறிப்பிடும் நீரா சொல்வது நாங்கள் ஜாதி வெறியரென்று,சூப்பர் ஜந்து சூப்பர்,நாராயண நாராயண.
நான் பார்த்தவரை தமிழுக்கு ஆதரவு தரும் தமிழ் அல்லாதரை விட சொந்த தாய்மொழி பற்று உள்ளவரை கேவலபடுத்தி பார்க்கும் தமிழ் அல்லாதரே அதிகம் . தமிழர்கள் எந்த முறை வைத்து திருமணம் செய்விர்கள் என்று கேட்டேன் . பாண்டவர்கள் ஒருத்தியை வைத்து கொண்டார்கள இல்லை 9 பேரை வைத்துக்கொண்டார்கள இல்லை கேள்வி மகாபாரதம் எதனால் வந்தது என்பதை மட்டும் பார்த்தால் போதும் நண்பரே . திருமணம் ஆனா புதிதிலே ஏத்தனை ஆண்கள் வைப்பாட்டிகள் வைத்துகொண்டு உள்ளனர் . நான் தெரியாமல் தான் கேட்கிறேன் அப்படி என்னய்யா உங்களுக்கு எங்கள் மிது பகை ? நாங்கள் எங்கள் பாதையில் போகிறோம் ,நீங்கள் அறிவு ஜீவிகள் என்றால் உங்கள் பாதையில் போங்களேன் . அதில் என்ன வந்தது . நவராத்திரிக்கு கொலு வைக்க சொல்லி எந்த பிராமணனும் உங்களை கட்டாய படுத்தவில்லை . விநாயகர் சதுர்த்தி அன்று கோவிலுக்கு போகவேண்டும் என்று உங்கலை கட்டாய படுத்தவில்லை , ஆனாலும் இன்னும் பல தமிழர்கள் எங்களை விட ஆசாரத்தையும் அனுஷ்டனதையும் கடைபிடிகின்றனர். thiru
தமிழன் அவர்களே எனக்கு தாய் மொழி தமிழ் இல்லை என்றால் நான் ஜாதி வெறி பிடித்தவள ? உங்களை போன்றோர் தான் அதிர்ஷ்ட கல் வேண்டி அங்கே தவம் (A *****S) இருகின்றிர்கள் . தமிழன் நிங்களே ஒப்புகொண்டிர்கள் தமிழர்களை தவிர வேறு யாரும் தங்களை திராவிடர் என்று ஒப்புகொள்ள மாட்டார்கள் என்று . நான் இது வரை ஆடி மாதத்தில் எந்த மாரியாம்மன் கோவிலிலும் கூலுக்கு நின்றதில்லை . முருகனுக்கு பால்குடம் எடுத்ததில்லை இருந்த போதும் உங்கள் கடவுளை நிந்திததில்லை . எந்த துறையானாலும் குருவிடம் படிப்பது தான் நிலைக்கும் . தான்தோன்றி தனமாக செய்தால் அதில் பலன் இருக்காது என்பது எங்கள் நம்பிக்கை .
சுமங்கலிக்கு அடையாளமே தாலி , அது தமிழர்களின் சமய சடங்கில் இல்லை என்றால் அது உங்கள் நம்பிக்கை . அக்னி சாட்சியாக மாகல்யம் அணிந்து 7 அடி வைத்து நடப்பது எங்கள் நம்பிக்கை .
எல்லாம் மேல் சாதிகாரர்களின் வாதம் தான் இருக்கிறது ,கீழ் சாதிகாரன் வாதம் எல்லாம் எங்கே ? மங்கை தன் தாய்மொழி என்ன
என்று சொல்லவில்லையே !
காயீ சொல்லுது நான் மின்னஞ்சலில் ஜாதியைக் குறிப்பிட்டேனாம்!!!? நான் எப்போ இதுக்கு மின்னஞ்சல் செய்தேன்? இன்னொன்று சொல்லுது அது தாய்மொழி தமிழ் என்று சொல்லவில்லை என்பதால் நான் அதை ஜாதிவெறி பிடித்தவள் என்று சொன்னேனாம். என்ன அறிவு? என்ன கண்டுபிடிப்பு? மகா பாரதம் எதனால் வந்தது என்பது எனக்குத் தேவை இல்லை. அதில் உள்ள ஆரிய கலாச்சாரம் என்ன என்பதுதான் எனது கேள்வி. நீர் உமது தாய்மொழியைச் சொல்லாவிட்டாலும் நீ சேரத் தமிழ் நாட்டவர் என்பதை அறிவேன். உம்முடைய ஊரில் உள்ள நம்பூதிரி வரலாறு உமக்குத் தெரியுமா? அந்த நம்பூதிரியைப் பற்றி எழுதினால் கலாச்சாரம் சிரியாய்ச் சிரிக்கும். கருப்புத் தமிழனின் சேர நாடு எப்படி கேரளமானது ? அவர்களின் தமிழ்மொழி எப்படி மலையாள மொழியானது? அங்குள்ள கருப்புத் தமிழன் எப்படி வெள்ளை மலையாளியானார்கள்? என்பதை எல்லாம் எழுத நேர்ந்தால் கலாச்சாரம் கைகொட்டிச் சிரிக்கும் தாயி! எங்களுக்கு பிராமணன் மீது கோபமில்லை. எங்கள் கோபமெல்லாம் அவர்களின் பிராமணியத்தின் மீதுதான். அவன் எங்களினத்தவனை வேசியின் பிள்ளைகள் என்று எழுதி வைத்து கேவலப்படுத்துவான் நங்கள் ஆமாம்! ஆமாம் ! என்று வெட்கமே இல்லாமல் உங்கள் கோவிலுக்கு வந்து பார்பணனின் அடிவருடியாக இருந்தால் உங்களைப் போன்றோருக்குச் சம்மதம். இல்லை என்றால் திராவிடன். பெரியார் எனும் நாத்திகனின் அசுரக்கூட்டம். அண்ணாதுரை எனும் போதைப்பித்தனின் அடிவருடிகள் எனும் வசைமொழி. உங்களின் பைத்தியத்தனமான வினாவிற்கு எங்களிடம் பதிலுண்டு. சொன்னால் உள்வாங்கிக்கொள்ளும் ஞானம் உங்களுக்கு முதலில் வேண்டும். அதற்கு ஒரு இனத்தின் சரித்திரம், இலக்கியம், மதபோதனையில் உள்ள , புராண இதிகாசங்களில் உள்ள எல்லா கோணங்கித்தனத்தையும் அறிந்து புரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடும்.
பிறறை மேல் சாதி என்று நீர் தான் வாழ்த்தி வணங்குகிறீர் அப்படியானால் நீர் கீழ்சாதியோ.மங்கை இவர்களுக்கே தெரியாது எதற்கு பேசுகிறோம் என்று.இவர்கள் பேசுவதை பார்கையில் அறமே கிடையாது,நீதி சாஸ்திரமே பொய்,நான் மணிதன் நீ மணிதன் அவ்வளவு தான்.தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,சகோதரி,சொந்தம் பந்தம்,சாதி சனம் சமுகம் எதுவும் கிடையாது.மிருக வாழ்கையை விரும்புகின்றனர்.இன்று சமுகம் கெட்டொழிவுக்கு இவர்களே அஸ்திவாரம்.பத்துமலையில் நடந்த ஒழுக்க மீரலுக்கு இவர் போன்றோரே காரணம்.தமிழ் சினிமா இவர்களின் பிரதிபிம்பம்.அப்பனை வாடா போடா,அம்மாவை பேர் சொல்லிகூப்பிடுவது,மணைவியின் பெற்றோரை இழிவாாக பேசுவது,படிப்பதில்லை,படித்தாலும் வேளைக்கு போவதில்லை,இந்த காட்சிகளே சமுகத்தை வழி நடத்துகிறது இவர்களை போல்.ஒரு காலத்தில் ஹிந்து கலை கலாச்சாரத்தில்,பன்பாட்டில் உயர்ந்து நின்றோம்,இன்று வெல்லையனை மிஞ்சிவிட்டனர்.பேஸ் புக்கில் பார்கலாம் இந்த அவலத்தை.ஆயுதமின்றி சட்டத்தை நீதியை நிலை நிருத்த முடியாது.இப்போது சீனர் வந்திருக்கார் பார்போம்.சில நேரம் இவர்களின் கூற்றில் ஞாயமும் மறைந்திருக்கிறது உண்மையே.பிறர் தவறு செய்வதால் நாமும் செய்தால் எப்படி.உம் அடையாலத்தை தொலைத்துவிடுகிறாயே,ப்ராமணரை அந்தணரை இழிவாக பேசுபவர் கடைசியில் அவர்கள் கையில் தானே பிரசாதம் வாங்குகின்றனர்.அவர்கள் பூசை நடத்தும் ஆலயத்தில் தான் பிரார்தனை செய்கின்றனர்.ஆகையால் இவர்கள் வீன் விரண்டாவாதம் செய்வது அப்பலம்.சுயத்தில் இவர்கள் உத்தமரே.கோழையானதால் மண்ணித்தோம் என்ற தலைப்பில் ஒரு கதை வரும்,தீட்சையும்,கூடையும்,பூனை கதை,அது இந்த மூடர்கே பொருந்தும்..தமிழர்க்கு சுய அறிவு கிடையாதோ,வெங்கட ராமசாமி நாயக்கர் புகுத்த வேண்டுமா அறிவு,சொல்கின்றனர் திருக்குறள் எங்கலுடையது யென்று ஆனால் பயன்படுத்தார்,காரணம் அதில் அறம் உண்டு.நாராயண நாராயண.
ஒரு முறை சக்தீஸ்வரி கோவிலுக்கு போயிறுந்தேன்,அங்கே இரு பெண்கள் தேவாரம் போதிப்பதை காண அருகே சென்றேன்,நிறைய மாணவர்கள் இல்லை நான்கைந்து பிள்ளை மாத்திரம்.அதில் ஒரு மாணவனை மிரட்டுகின்றனர்,பாவம் மிரல்கிறான்,கண்ணீர் மல மல வென்று ஒடுகிறது,நானும் காமிராவை திரப்பதற்குல் நாடகம் முடிந்துவிட்டது.யூ டியூப் வந்ததிலிருந்து அராஜகம் நசிக்கபட்டு வருவதை வுனர்ந்தேன்.சற்று அந்தப்பக்கம் போய் பார்கவும்.வகுப்பு பூஜை முடிந்து எல்லோறும் சென்ற பின் நடத்தபடுகிறது இந்த கொடுமை.இப்போது நிரைய கோமிட்மன் வெளியே,அந்த டேன்ஷனை பிறர் பிள்ளை மீது காட்டி,திட்டி,திருகி தீர்கின்றனர்.வெளியில் எப்படி கவணம் தேவையோ அதுபோல் பள்ளியில் அத்துமீரும் ஆசிரியர்/ஆசிரியை லிமிட்டையும் உணர்தியே சேர்கவேண்டும் பள்ளியில்.லிமிட்டை மீறினால் எப்படி நடந்துகொள்வது பற்றி பயிற்சி தேவை இந்நாலில்.வாழ்க நாராயண நாமம்.
வருணாசிரம கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வாழவிரும்புவர்கள் அது அவரவரின் தனி உரிமை. ஆனால் அதுதான் சரியென்று இங்கே வாதிடுபவர்களுக்கு மென்மையாக சொல்லவேண்டுமானால் ‘உம் குடுத்தனத்தை உம் வீட்டோடு வைத்துக் கொள்ளும்”. அதை வெளியே கொணர்ந்தால் செருப்படி வாங்கவும் தயாராக இருக்க வேண்டும்.
எவன் ஒருவன் நாலும் அறிந்த தமிழனாக இருக்கிறானோ அவனுக்கு அவனுடைய கொள்கைகள் ,கலாச்சாரம் மிதிக்கப்படும்போது உணர்வு வரவேண்டும். தேனீக்கு அது இருக்கிறது. அவருக்கு கோபமும் வருகிறது. இது நியாயமான கோபம். வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்த இனம் தமிழினம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகத்தைப் பார்த்து சகோதரத்துவ சங்கநாதம் எழுப்பியவன் தமிழன். அவனது கலாச்சார மாண்பு கெட்டழிய என்ன காரணம் என்பதை உணர்ந்து உண்மையைச் சொன்னால் அதில் உள்ள பொருளின் ஆழத்தைப் புரிந்து நடந்துகொள்ளும் ஞானமின்றி தெரு பஜாரிபோல் வசைபாடுபவர்கள் சொல்கிறார்கள் அறம்பாடிய வள்ளுவனைத் தந்த இனத்தோனுக்கு அறம் தெரியாதாம், அண்ணன் தங்கை தாய் தந்தை என்பதை அறியாதவர்களாம். நீர் கூறிய அத்தனை ஒழுக்கக் கேடுகளும் எங்கிருக்கறது தெரியுமா? அறிவிருந்தால் போய் உமது புராண இதிகாசங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு அப்புறமாக தமிழனின் கலாச்சாரத்தைப் பற்றி எழுது. கருத்திற்கு கருத்து என்று வாதிக்கத் திறமிருந்தால் எழுது. போரப்போக்கில் எதையாவது எழுதிவிட்டுப் போகலாம் என்றால் அதற்கானத் தளம் இதுவல்ல என்பதை மாத்திரம் சொல்லி வைக்கிறேன்.
மனிதர்கள் எல்லோருக்கும் ஆறிவு உண்டு என்று எனக்கு
ஒன்றாம் வகுப்பில் படித்து கொடுத்த என் ஆசிரியர் kaayee க்கும் மங்கைக்கும் 5 அறிவு என்பதை சொல்லிகொடுக்க மறந்து விட்டார் ,எவண்டா பிராமணன் இங்கே ,5 பேருக்கு ஒரு பெண்டாட்டி என்று மகாபாரத்தை எழுதி இது தான் எங்கள் புனித நூல் என்று பெருமையுடன் கூறும் நீர் மாட்டு
மாமிசம் சாப்பிடும் நீர் முதலில் ஒழுங்காக உங்கள் கலாச்சரத்தை பார்த்துகொள் ,தேனீ அக்கா வுக்கே கோபம்
வந்து விட்டது kaayee உங்களை செருப்பால் அடிப்பேன் என்று சூளுரைகிறார் ,நல்ல காலம் தன் தேனீ பற்களால் கடிப்பேன் என்று சொல்லவில்லை ,எங்களை தமிழர்களை தாழ்ந்த
ஜாதி என்று நீ சொன்னால் அது ஒன்று புதியது இல்லையே ,அறிவு கெட்ட பிராமணன் தன் சிவப்பான தங்கைகளை ,பெண்டாட்டிகளை ,எங்கள் கருப்பு அரசர்களுக்கு கூடி கொடுத்தவன் மேல் ஜாதி , கற்பு உடையளை கற்புக்கே அரசி என்று போற்றும் தமிழர்கள் தாழ்ந்த ஜாதி யா .அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலைகொடு .
தமிழரே,தமிழனுக்கு கலாச்சாரம் மிருகத்தை கொண்று அதன் பல்லை திருமண அடையாலமாக கொள்பவரா,அல்லது மாலை மாத்தி குடும்பம் நடத்துவதா.கலாச்சாரம் கத்துக்கொடுத்தவர் நாம்,எமக்கு கொடுத்தவர் ஆதி.ஆதிகாலமணிதனுக்கு ஏதையா உறவு முறை.நாம் ஏற்படுத்திகொண்டது உறவு முறை.வாழ்க நாராயண நாமம்.
தொடர்ச்சி,பெற்றவள் தாய், தாய் விற்றில் பிறந்தவா தங்கை,அக்காள்,அண்ணன்,தம்பி.தாயுடன் பிறந்தவா மாமன்,அத்தை, மச்சான்,முறை பெண்.தகப்பன்,உடன் பிறப்பு,சித்தப்பா,சின்னம்மா,பெரியப்பா,பெரியம்மா,அத்தை, மாமா மற்றும்”வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லறிது:வகுத்து முறைபடுத்திய வாழ்கை நெறியை ஒட்டி நடக்காவிட்டால் கோடி பொருள் குவித்தாலும்,அதன் பயனை அனுபவிப்பதென்பது அறிதேயாகும்” என்கிறது குறள்.மாற்று இனத்து பெண்னை மணக்கும் போது அவள் உமக்கு என்ன முறை என்பதை எப்படி அறிவாய் ஒருகால் சகோதரியாகவும் இருக்கலாம் என்பது என் வாதம்,மங்கையின் வாதமும் கூட.நாராயண நாராயண.
தொடர்ச்சி,இந்தியாவில் ஒரு தாழ்தப்பட்ட இனம் மாற்று இனத்தவர் பெண் கொடுக்காமைக்கு கிராமமே இஸ்லாத்திற்கு மாறியது,அங்கேயும் இன்ன ஜாதியை சேர்ந்த இஸ்லாம் என்று பிரித்துவிட்டது,கலப்பும் நடக்கவில்லை.மலேசியாவிலும் ஜாதி செர்ச் உள்ளது.இந்தியாவில் ஜாதி வேண்டும் போராடி பெற்றனர்,பிறகு ஒவ்வொறு துரைக்கும் தன் சாதி அமைச்சர் வேண்டி பெற்றனர்.அங்கீகரித்தவர் பதவியும் போனது.அங்கே சாதி வேரூன்றி விட்டது,ஒன்றும் செய்ய முடியாது.ப்ராமணரை விடுங்கள் தமிழரிடையே சாதி வேற்றுமை இல்லையா?,பெரிய இனம் மூன்று இருக்கு,கல்வி கற்று இருந்தால் ஜாதிகள் இல்லையே.அதிகாலை திருமணம் ஏன் நடக்குது தெரியுமா?, அதுவும் திங்கள்-வெள்ளி கிழமையில் மாத்திரம்.ஒன்லி உறவு,சொந்தம் பந்தம்,சாதி சனத்துக்கு அழைப்பு காரணம் இது (ஈகை) விழா.விருந்துக்கு (ஒப்புரவுக்கு) சமுகத்தை அழைப்பர்.இதையே அறம் என்று யாம் குறிப்பிட்டது.வாழ்க நாராயண நாமம்.
யாம் விலக்கியது பொய்யென்றால்,யாம் ஆண் அவள் பெண் என்று இதுவே உண்மை என்போரை மணிதன் என்பதா மிருகம் என்பதா?,ஆதலாலே கேட்டோம் ஆரு அறிவை பற்றி.ஜாதிகள் இல்லை என்றால் உறவுகளும் பொய்.ஜாதிகள் பிரிக்கப்பட்டது உண்மையே,தகுதியே ஜாதி.உங்கள் வீட்டு பெண்ணை நிரைய செலவு செய்து படிக்கவைக்குறீர் டாக்டர் பட்டம் வாங்கி தனியார் மருத்துவமனையில் தொழில் செய்கிறால்,ஒரு படிக்காத சொந்த வீடில்லாத,வேலை செய்யாத ஒருவனுக்கு உன் மகளை மணமுடித்து வைப்பாயா?,அல்லது ஒரு டாக்டரை தேடுவாயா,படித்த குடும்பத்தில் சம்மந்தம் செய்வாயா,.பித்தன் கூறுவது நாம் ஆண் நீர் பெண் கலாச்சாரம் தமிழரே.தாலி முதல் கழற்றியவராம்,அதுமட்டுமல்ல கேட்கிறார் அவர் வயது மரியாதை மீரி:நீயும் அதே பு…யில் தானே பிறந்தாய் யென்று.எம் முன்னோர் நாமும் எங்கள் வீடிடுப்பெண்ணை கூட்டிக் கொடுத்தோமாம்.இப்படி வளர்ந்ததே வீண் வாதம்.அதற்கு தான் யாம் “என்னம்மா கண்ணு படம் பாரும் யென்று”கூரியதுன்டு ஆனால் இவன் போல் கொச்சைபடுத்தவில்லை வரவும் வராது.பல நேரம் ஆசிரியர் என் கட்டுறையை பிரசுரிப்பதில்லை,ஆனால் அவன் எழுதுவதை கொச்சைபடுத்துவதை தயங்காது வெளியிடுவார்,தடை செய்தால் இரண்டையும் செய்யவேண்டும்.நமக்கும் தெரியும் நிர்வாகம் செய்வது சுலபமான காரியம் அல்லவென்று.ஆனால்….,நாராயண நாராயண.
நாகரீக சீரழிவு,ஹிந்துக்கள் நாகரீகம்,கலாச்சாரத்தில் எட்டாத உயரத்தில் இருந்தனர் ஒருகாலத்தில் இன்று சீரழிந்து வெள்ளையனை மிஞ்சி விட்டனர்.கடந்த வருடம் தைபூசத்தில் நடந்த சுதந்திர அத்துமீறல்.கட்டுபட்ட சுதந்திரமே அவசியம்.நம் செய்கை சமுதாயத்தை பாதிக்கும்.ஆடு பப்லே போய் ஆடு யார் கேட்பார்,வீட்டில் ஆடு,கோயாங் கோயாங் போட்டு ஆடு,கலாச்சார ஈகை நிகழ்வில் வேண்டாமே,ஒட்டுமொத்த ஹிந்து கலாச்சாரத்தை பாதிக்கும்,இவையே பித்தனின் போக்கு.கடவுள்,ஆலயம்,சமுகம்,சாதி,கலாச்சாரம் எதையும் நம்பாதவர் மணிதனா மிருகமா.எம் வாதத்தின் சுருக்கம்.வாழ்க நாராயண நாமம்.
அசாமி அக்கா என் தாய் மொழி என்ன என்பது இங்கே முக்கியம் இல்லை . இந்த பகுதிக்கு எழுத ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை இந்த தமிழர்கள் யாரையும் விட்டு வைத்தது இல்லை . SMC பிரகாஷ் ராவ் முதல் பிராமணர்கள் வரை கட்டுமேனிக்கு திட்டி திர்கின்றனர் . kaayee அண்ணா சில விசயங்களை நாம் வெளிபடையாக பேச முடியாது . தமிழன் அவர்களின் கருத்துக்கு நான் பதில் தர முடியும் அனால் அதை இங்கே பிரசுரிக்க மாட்டார்கள் , அதனால் தான் அமைதியாக இருக்கின்றேன்
சந்தியாவந்தனம் செய்யாதவர்களிடம் பேசி பலன் இல்லை . எனக்கு நம்பிக்கை உண்டு இவர்களை போல ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்தவர்கள் வெகு சிலரே . இவரை போன்ற தமிழர்கள் வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள் . பழைய புராணத்தை பேசியே காலம் களிப்பவரர்கள் .
தமிழன் உலகில் மூத்த குடி நீங்கள் தானே அப்படியானால் உப்பை யார் கண்டுபிடித்தார் என்று சொல்ல முடியுமா ?
நமக்கு என்ன பிரச்சனை வாழ்கையில் மங்கை,நாம் சிறப்பாகவே வாழ்கிறோம் படிப்பு,வசதி,தொழில்,இருப்பிடம் எவரிதிங்.ஹிந்து கூட்டமைப்பில் தமிழரும் சேர்கப்பட்டதால்,அவர்களும் அறம் தெரிந்து வாழ்வை ஒழுங்கு நெறி கண்டு எல்லோறும் போல் வாழவே நாமும் எதிர்பார்பது.கல்வி ஒன்றே வேற்றுமையை போக்கும் உயர்வை தரும் என்பதால்,அப்பேர்பட்ட ஒழுக்க சாஸ்திரத்தை ஏன் மனதில் மனனம் செய்யகூடாது.யாறை கேட்டாளும் தனக்கு திருக்குறள் தெரியும் சொல்கின்றனர் ஆனால் தனதாக்கிகொள்ளவில்லை.அப்படி திருக்குறள் வழிகாட்டி நூலாக கொண்டிருந்தால் தமிழர் சமுகம் எப்போதோ எப்போதும் பிறர் தம்மை வழிகாட்டியாக கொண்டிருப்பர்.அதிக சுயநலம் கொண்ட சமுகம் குருகிய அறிவை கொண்ட சமுகமே.ஒரு முறை ஒரு முஸ்லீம் புஸ்தக கடைக்கு சென்று சென்றிருந்தபோது ஓர் உறையாடலை கேற்க நேர்ந்தது அதாவது:அம்மா,ஆய்ஷா இந்த ஓய்வு தினத்தில் நாம் குடும்பத்தோடு மருத்துவமனைக்கு போய் நம் இறவினரை கானவுள்ளோம்,தயாராயிறுங்கள்.மகள்:அம்மா நான் வரவில்லை நீங்கள் போங்கள் எனக்கு படிக்கவேண்டி இருக்கு.அம்மா:இப்போது உமக்கு தெரியாது ஒரு நாள் மருத்துவமணையில் உடம்புக்கு முடியாது போகும் காலத்தில்,எவரும் அருகில் இல்லாதபோது தான் நீர் உணர்வீர் இப்போது நாம் சொல்வது புரியாது.மகள்:சரி அம்மா நானும் வருகிறேன்.இந்த உறையாடல் ஒரு புதிய பார்வை தந்தது (சுற்றம் பேனல்).மணிதன் பணம் இல்லாவிடில் செத்துவிடுவானா என்ன?,இதற்கு தான் அன்ரே வகுத்து வைத்து சென்றார் அந்தணர்,ஜஅறிவை,கலையை கருவாக கொண்டவன்,வீரத்தை கருவாக கொண்டவர் சத்திரியர்(ஆர்மி,போலீஸ்,தீயனைப்பு மற்றும்)பிள்ளை துடிப்பா இருக்கானா கொண்டுபோய் ஆர்மியில் சேர்த்துவிடு இல்லை ரௌடியா போவான்.பணத்தை கருவாக கொண்டவர் வைசியர் பணமே குறி,எதையும் பணமாக்கிவிடுவான்,அரசியலில் விட்டால் மக்களுக்கு சேரவேண்டியதை தன் வீட்டில் பூட்டிவிடுவர்.சூத்திரன்,கீழ் தரமாண கொள்கையை கொண்டவர்,அன்றாட கூலி காரண்.தொடரும்…..
தொடர்ச்சி,இவை எவரையும் கேவலபடுத்துவது நோக்கமன்று,இங்கே கல்வியின்றி வாழ்வதையே குறிக்கிறது,சிந்திக்காதவனை குறிக்கிறது,சோம்பேரியை குறிக்கிறது.பன்ச் இல்லை,ஆதலால் பிணமாக கிடக்குறான்.”திருடாதே பாப்பா திருடாதே,(வருமையை நினைத்து கலங்கிவிடாதே,திறமை இருக்கு மரந்துவிடாதே,)”,வாழ்வை மாற்ற தன்னிடம் ஏதோ இருப்பதை உணர்த்தும் பன்ச்,ஆசை பட்ட துறைக்கு மனு செய்து கிடைத்த வேலையை செய்து வருகிறான்.தகுதியே வாழ்வை நிச்சயிக்கிறது.கல்லூரியில் ஜாதி கிடையாது ஏனென்றால் அங்கே யாவறும் கற்றோர்ரே.தொடரும்….
தொடர்ச்சி…,இங்கே மலேசியாவை பொருத்தவரை எவறும் தாழ்ந்தோர் கிடையாது,படிப்பா என்ன உதவி வேண்டும் செய்கிறேன் சொல்கிறது செய்கிறது அரசு,பிள்ளையின் வகுப்பு காலம் ஐந்தாம் படிவம் வறை நீடிக்கபட்டு,தொழில் கல்வி பயிற்சி அவசியமாக்கபட்டுவிட்டது.படிப்பு முடிந்தவுடன் தொடர்ந்து டிப்லோமா இல்லையா வேலைக்கு செல்கிறான்,அனுபவ கல்வி கற்கிறான்,சொந்த தொழில் துவங்குகிறான்,வாழ்கிறான் பிறர்போல்.தொடரும்……
தொடர்ச்சி…..,தெய்வம்,ஆலயம்,குரு,தாய்,தந்தை,சகோதரர்,சகோதரி,சொந்த பந்தம்,சாதி சனத்தை மதிப்பவர் பிறர் இன கலப்பை விரும்பார்,நல்ல கல்வி,தகுதி,வசதி இவை இருந்தும் உம் இன பெண்ணுக்கு வாழ்கை கொடுக்காது பிறரை வாழவைக்க துடிக்கிறாய்,நீரே உம் இன பெண்ணை மணக்காவிடில் வேர் எவர் வந்து மணப்பர் என்னுகிறாய்.நீர் உம்மை நேசி,உம் இனத்தை நேசி உலகம் உம்மை நேசிக்கும்.கூட்டமாய் வாழ்வது தானே வாழ்கை.இதோ பார் மாமா,மச்சான்,அண்ணன்,தம்பி சொல்வர்,வரவேற்பர்.வேற்று இனத்தில் போனால்,கண்டவுடன் விலகி செல்வர்,கேவலப்படவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
இவர்கள் எழுதியதை பார்த்தால்,kayee , மற்றும் manggai இருவரும்
தமிழர்கள் இல்லை என்று தெரிகிறது. நீங்கள் இருவரும் மட
போதனைகள் சிறப்பாகவே பிரசாரம் செய்கிறீர். சாதி போதனையில்
தமிழனை கூறு போடுவது தெளிவாக தெரிகிறது.
ஐயா முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களே ,எனக்கு ஒரு சின்ன DAUD, நீர் வெறும் ஆறுமுகமா ………………. ? சும்மா பொழுது போகவில்ல ,அதான் ,,,,,,,,
யாம் பொதுவாக சொன்னால் உமக்கு ஏன் எரியுது,அப்படியானால் அவனா நீ,எங்காவது நீர் தாழ்ந்தவர் யாம் உயர்ந்தவர் சொல்லியதுன்டா,இந்தியாவை பற்றி வேண்டாம் மலேசியாவை பற்றியே எழுதினோம்.கீழ் தரமான குணத்தான் என்றால் ஏன் சிலறுக்கு பத்திக்கிட்டு எரியுது.இங்கே தாழ்ந்தவா இல்லை எம்கருத்து.இன்று ஒருவரை சந்தித்தேன் சொல்கிறார்,என் மாமனார் பேரில் வீடிருக்கு,அவருக்கு இன்சூரன்ஸ் எடுத்தேன் போயிறுவார்ன்னு அப்போ மோசமா இருந்தார்,இப்போ நல்லா தெம்பா ஆயிட்டார்,அவர் இருந்து என்ன பயன் போய்டா வீடு ப்ரியா ஆகிடும்,இன்சூரன்ஸ்லே பணம் வரும் கடனை அடச்சிறுவேன் என்று புலம்பிட்டு இருக்கார்.இவனை எதிலே சேர்பது,நாராயண நாராயண.
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போருக்கு பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் எதுக்கடி – குதம்பை சித்தர்
உயர் திரு அன்பர் நாகப்பன் அவர்களே தங்களை நாடறியும் தொடருங்கள் உங்கள் பணியை. சில அடாவடிதனம் இருக்கத்தான் செய்யும். எல்லாம் நன்மைக்கே
சமயத்தால் நாம் இணைவோம்.
அல் ஜுபைல்
பெற்றோலியம் சுத்தகரிப்பு நிலையம்
சவுதி அரேபியா