குற்றச்செயல் கண்காணிப்பு என்ஜிஓ-வான மைவாட்ச்-இன் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், போலீஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் பற்றிக் குற்றம் சொல்கிறாரே தவிர ஆதாரங்களைக் கொடுப்பதில்லை என்கிறார் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார்.
அவரைச் சந்திக்க அதிகாரிகளை அனுப்பி வைத்தபோது சஞ்சீவன் ஒத்துழைக்க மறுத்தார் என்றும் காலிட் கூறினார்.இதன் விளைவாக, குற்றச்சாட்டுக்குச் சான்றாக ஆதாரங்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு போலீஸ் அவருக்கு அறிவிக்கை அனுப்பி வைத்திருக்கிறது.
போலீசிடம் ஆதாரங்களைக் கொடுக்க விரும்பாவிட்டால் அவர் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் அவற்றை ஒப்படைக்கலாம் என காலிட் குறிப்பிட்டார்.
“அதையும் இதையும் சொல்கிறாரே தவிர, இதுவரை ஆதாரம் எதையும் காண்பிப்பதில்லை”, என்றாரவர்.
ஆதாரங்களைக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியுமே! அப்புறம் எப்படி ஆதாரங்களைக் காட்டுவது!
சத்தியசீலரிடம் ஆதாரங்களை கொடுத்தல் அவளவுதான் ?
மீனுக்கு பூனையா காவல்?
போலிஸ் மீது வீண் பழி சுமத்தியதாக சஞ்சீவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே??? ஆதாரம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்….
இன்னும் அவருக்கு யார் மீதும் நம்பிக்கை வரவில்லை என்றால் பத்திரிகை மூலமாக வெளியிடலாமே !