-சேகரன் கோவிந்தன், தலைவர், டிஎபி ஈப்போ பாரட் கிளை, ஜூலை 24, 2014.
ஸ்ரீ முருகன் நிலைய முன்னாள் மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்திருப்பது சமூகத்தைப் பாதிக்கும் செய்திகள் மக்களால் வரவேற்கப்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணம்.
“சேவை” என்றால் என்ன?
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வியாபர நோக்கில் மாணவர்களுக்காக பிரத்தியோக வகுப்பு நடத்தி அதன் மூலம் பணம் பெருக்கிக் கொள்வது பற்றி குலா கேள்வி எழுப்பவில்லை. ஸ்ரீ முருகன் செய்யும் தொழிலை “சேவை” என்று கூறுவது தவறு. சேவை என்பது பணம் வசூலித்து பாடம் சொல்லிக் கொடுப்பதன்று. இதை எல்லா டியூசன் மையங்களும்தான் செய்கின்றன! பிரதிபலன் எதிர்பார்க்காமல், தன்னலம் இன்றி பிறர் நன்மை அடைதலே பிரதானம் என்ற நோக்கில் செய்வதுதான் சேவை!
50 ஆயிரம் இந்திய குழந்தைகளில் 20,000 ஏழை மாணவர்கள் பாலர் கல்விக்கான வாய்ப்பை இழந்துள்ளனர். அரசாங்கத்தால், மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ரிம270 இலட்சத்தில் ரிம 190 இலட்சத்தை ஐ-சினார் திட்டத்தின் வழியாகவும், ரிம 80 இலட்சத்தை ஐ-செமர்லாங் திட்டத்தின் வழியாகவும் தம்பிராஜா பெற்றுள்ளார் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
“நெற்றிக்கண் திறந்தாலும்…”
சமுதாயத்தில் நடக்கும் இது போன்ற பகல்கொள்ளைகளைத் தட்டிக் கேட்க ஆள் வேண்டாமா? அதை குலா செய்தால் ஸ்ரீ முருகன் மீது பழி சுமத்துக்கூடாது என்று கூறும் பட்டதாரி மாணவர்களான நீங்கள் தம்பிராஜாவின் குழுமத்தால் கடத்தப்பட்டிருக்கும் இந்த ரிம270 இலட்சம் எங்கு சென்றது? எதற்காக சென்றது? இது குறித்து வெளிப்படையான செய்திகள் ஏன் வரவில்லை என்பது போன்ற கேள்விகளை ஏன் தம்பிராஜாவை கேட்கக் கூடாது? அது இளைஞர்களாகிய உங்களின் சமுதாயக் கடன் அல்லவா?
“நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று சொன்ன நக்கீரன் பரம்பரையச் சேர்ந்த நீங்கள் தம்பிராஜாவை அவர் கொண்டு சென்ற சமுதாயப் பணம் குறித்து கேள்வி கேட்காமல் இருப்பதுதான் சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் இழுக்கு என்பதை நீங்கள் உணர வேண்டும்.
குலா ஏன் கேட்டார்?
குலா ஏன் இந்தக் கேள்வியை எழுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். சமீபத்தில் தமிழ் பத்திரிகைகளில்
பாலர் பள்ளிகள் நிர்மாணிக்க போதிய நிதி இல்லை என்று இரண்டாவது கல்வி அமைச்சர் பி.கமலநாதன் கூறியிருந்தார். அதற்குத்தான் குலசேகரன் தக்க ஆதரத்துடன் ரிம 53 கோடி தமிழ் மற்றும் சீன பாலர் கல்வி வளர்ச்சிக்கும் பாலர்பள்ளிகள் அமைப்பதற்கும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை நினைவுறுத்தினார். இந்த மொத்த தொகையில் ரிம270 இலட்சம் தம்பிராஜாவால் எடுக்கப்பட்டுள்ளது என்பதைதான் குலா வெளிக்கொணர்ந்தார். இது எவ்வகையில் தவறாகும்?
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி என்ற வகையில் குலா சமுதாயத்தில் நடக்கும் குறைபாடுகளை, அநியாங்களை தில்லுமுல்லுகளை பற்றி கேள்வி எழுப்புவது தப்பா? அது அவரின் கடமை இல்லையா?
20,000 ஏழை இந்திய குழந்தைகள் பாலர் கல்வி கற்கும் வாய்பை பெற முடியாமல் போய்விட்டது பற்றிய கேள்வி ஏன் உங்கள் சிந்தனையில் உதிக்கவில்லை? அம்மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுமேயானால் நாளை அவர்களுக்கும் உங்களைப் போல் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு ஏற்படும் அல்லவா? அதற்காக குலசேகரன் என்ற மக்கள் பிரதிநிதி குரல் கொடுப்பது தப்பாகுமா?
இது உங்கள் கடமை இல்லையா?
நாளைய தலைவர்களாகப் போகும் நீங்கள் இது போன்ற சமுதாய துரோகங்களை தட்டிக் கேட்க முன்வர வேண்டாமா?
குலா, தனது நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இந்திரா காந்தி போன்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்காமலும், மதமாற்றுப் பிரச்சனை, இனத் துவேஷம், மத நிந்தனை போன்றவற்றுக்கு குரல் கொடுக்க இந்த குலசேகரன் மட்டும்தான் இருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே.
கடவுளின் பெயரால் நடத்தப்படும் இயக்கங்கள் அனைத்தும் பெயரை மாற்ற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர இந்த அரசாங்கம் முயற்சித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பொழுதும் இந்த குலசேகரன்தான் குரல் கொடுக்க வருவார் என்பதும் திண்ணம்.
அரசாங்க நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்புவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தலையாய கடமைகளில் ஒன்று. அதற்கு நேரடியாக பதில் கூற வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு.
ஒரு வணிக கம்பனிக்கு RM 27 மில்லியன் கடனாக அல்ல …இலவசமாக் கொடுத்துள்ள நஜீப் அரசாங்கம் அல்லது பொறுப்பாளர்கள் குற்றவியல் சட்டம் நீதிமுன் நிறுத்த வேண்டும்.
ஒரு திட்டத்தை வகை படுத்திதான் அரசு மானியங்கள் அரசு சார் அல்லது அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு தர வேண்டும் என்பது வரம்பு. I SINAR மற்றும் I SEMARLANG என்று பேரளவில் பட்டயம் போட்டு அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர் என்பதுதான் உண்மை !
ஸ்ரீ முருகன் ஒரு கல்வி நிறுவனம் அதில் sinar /semerlang என்ற ப்ரொஜெக் இருக்கலாம இன்னும் செயல் படவில்லை என்பதால் அரசு இதை ஆடீட் செய்து விரட்டலாம்.
தம்பிராஜா அவர்கள் YB குலாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீதி ,கடமை,கண்ணியம், பொறுப்பு , எதிர்கேள்விகள் எல்லாம் கேற்பது அவரின் சமூக அந்தஸ்துக்கு அழகல்ல !
நமக்கு தெரிந்து தம்பிராஜா , தேவமணி, பிரகாஷ் ராவ் மூவரும் ஸ்ரீ நிலையம் நிறுவனத்தின் பங்கு என்கிறார்கள்….WITHOUT PREJUDICE என்று வேற வைக்கிறோம்.
இது ஒரு வேடிக்கையான் குற்றவியல் குளறுபடிதான்? ஆனால் ஒரு இனத்தின் நிதி பங்குகளை மிகத்திறமையாக கை வைத்துள்னர் என்பது உறுதி. ஆனால் இந்த விவகாரம் இதற்கு முடிந்த பல சமூக நிதி மோசடிகள் போல பத்திரிகையில் வந்ததும் திரைக்கு பின்னல் ஒரு “பின்னல்” ஒரு பிக்ஸ் சில பக்ஸ் என்று முடியாமல் சம்பித்து போகாமல் வெளிருமானால் இன்னும் பல பாலர் பள்ளிகள் இனம் சார்த்த மாணவர்கள் பயன் பெறலாம். மாற்றி மனசாட்சியுடன் முருகன் வேல் பிடித்தால் தமிழ் கடவுலுக்கு பாராட்டுகள்.
ராமசாமி, இதற்கு நல்ல பதில் வைத்திருப்பாரென்பது எமது யூகம். ஏதேனும் செய்தி உள்ளதா அன்பரே?? திரு பொன் ரங்கன், உங்களுக்கேதும் இதைப்பற்றி காதில் எட்டியதா??
ஒருவன் சமுதாயத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தை திருடுகிறான் என்றால் அவனுடைய குடும்பப் பின்னணி எப்படிபட்டது என்பது நமக்குப் புரிகிறது. அவனுடைய குடும்பம் வழி வழி திருடர்களாக இருக்க வேண்டும். மக்களின் சாபம் இவர்களின் குடும்பத்தைப் பாதிக்கும். ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போனாலும் விடாது!
தேவமணி , பிரகாஸ் ராவ், தம்பி ராஜா , ஈ போ நாச்சிமுத்து இன்னும் சிலர் ஸ்ரீ முருகன் பேரை சொல்லி
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உண்மையிலேயே ஒரு கல்வி நிலையமா அல்லது அது ஒரு வியாபார நிறுவனமா? அரசியல்வாதிகளை விட அநியாய பிச்சைக்காரர்கள், ஆரம்பப்பள்ளிகளில் பல சிரமங்கங்களுடன் கல்வி கற்றி தரும் ஆசிரியர்களின் அற்பணிப்பை அசிங்கப்படுத்தியவர்கள் இந்த ஸ்ரீமுருகன் நிலையத்தவர்கள். வார இறுதியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சுமார் 100 ஒரே இடத்தில் வைத்து ஓர் ஆநிரியர் பாடம் நடத்துவார், 50 – 60 ரிங்கிட் ஒவ்வொரு மாணவரிமும் வசூலிக்கப்படும், ஆசிரியர் சம்பளம் போக மீதி பணம் எங்கு போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இப்படி வார இறுதியில் இங்கு படித்து அந்த மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்று விட்டால், தாங்கள் தான் இந்த சிறந்த தேர்ச்சிக்கு காரணம் என்று பத்திரிக்கைகளில் அறிக்கை மேல் அறிக்கை விடுவார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போல. ஆறு ஆண்டுகள் இந்த மாணவர்களுக்காக அரும் பாடு பட்ட ஆசிரியர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். கல்வி யாத்திரை என்று ஒன்றை ஏற்பாடு பண்ணி அதிலும் ஒரு சுறண்டல் வேலை, இப்படி ஏழை இந்திய மாணவர்கள் ஏமாற்று வரும் இந்த ஸ்ரீ முருகன் நிலையத்தார் இப்பொழுது 270 லட்சம் பணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள், என் இனத்தை ஏமாற்றி தன் வயிற்றை வளர்க்கும் அயோக்கிய அஞ்சடிகள் என்றுதான் திருந்துவார்கள். உங்கள் திருட்டுத் தனத்தை பகிரங்கப்படுத்தினால் ஆத்திரம் மட்டும் வருகிறது ஏன்.? தட்டிக் கேட்க யாருமில்லை என்னும் அகம்பாவமா, கேட்பது எங்கள் கடமை, காரணம் நீ வாங்கியிருப்பது அரசாங்கப் பணம், பதில் சொல்ல வேண்டும். சொல்லுவீர்கள் என் நம்புகிறோம்.
இன்னும் தொடரும் ……………
எல்லாம் திருட்டு பயன்கள் . சாமி பெயரில் பேரை வைத்து திருடிவிட்டான்கள் . தம்மிராஜா , தேவமணி , பிரகாஸ் ராவ் , ஈபோ நாச்சிமுத்து இன்னும் சில பேர் . தேர்தல் வரும் போது தம்பிராஜா பிரதமரை பார்த்து இவங்களுக்கு சீட் கேட்பாரு . பத்து மலையில் கூட்டதை கூட்டி வரவனிடம் காட்டி பணம் பண்ணிடுவாங்கள் .
மா இகா ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிநிதியாகும் என்று மார்தட்டும் மாஇகா தலைவர்கள் இது மட்டுமா ? தமிழ் பள்ளிக்காக ஒதுக்கப்பட்டதாக அறியப்படும்2 ஆயரம்நிலம் குறித்து பத்துகாஜா நாடாளமன்ற உருப்பினார் வீ , சிவகுமார் எழுப்பியுள்ள கேள்விக்கு மக்களால் தேர்ந்து பட்ட மக்கள் பிரதிநிதி – ஒருவர் கேள்வி கேட்பதில் என்ன தவறு ? மேலும் , இந்திய சமுதாயதிற்கு வழங்கப்பட்ட ம் .ஆர் 60 லட்சம் என்னா வானது? என்ற தலைப்பில் ஏழை இந்தியர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் உதவும் நோக்கில் மாநில ஒவ்வோர் ஆண்டும் 10லட்சம் வெள்ளி மானியம் வழங்கியது என்றும் அவர்களின் வெளிப்படையான குற்றச்சாட்டின் தொடர்பான விளக்கங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெளியப்படுதுவதுதானே முறை !அதை விடுத்தது ,எதிர் கட்சினரின் கேள்விக்கெல்லாம் பதில்ளளிக்க வேண்டியதில்லை என்று , ஏன் இந்த சப்பை கட்டு அவர்களும் மக்களுக்காக குரல் கொடுப்பார்களென்று நம்பிக்கையதன் தேர்ந்தேடுதுள்ளார்கள் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லையே !!!!!!!!!!!!!
மனதில் கை வைத்து சொல்லுங்கள்,நீங்கள் வோட் போட்டீர் என்று அவா எப்படி ஜெய்சார்ன்னு அவாலுக்கு தான் தெரியும்.எப்படி உமக்கு உதவுவான்,நீங்கள் ஞாயத்தை பி.ஆரில் கேளும் அல்லிகொடுப்பர்.சரியாபடலையா லஞ்ஜ ஒழிப்பில் புகார் செய்யும்.நாராயண நாராயண.
அவன் மட்டுமா சொறன்றான் ஈபோர் தமிழ்பள்ளியிலும் தான் சொறன்டுறான்.மோட்டிவேஷன் பேரில் ஏழை மாணவரிடம் சுரன்டல் நடக்குது.ஒரு தனியார் வண்டியில் டிக்கியில் நான்கு மாணவர்களை வைத்து மூடி கொண்டுபோகின்றனர்.ஒரு வேனில் 10-15,மாணவர்கள்,நான் வைத்திருக்கிறேன் ஆதாரம்,ஒரு காடி/வேன் ஒரு இரண்டு ட்ரீப் வருது.எப்பிங்காம் தமிழ்பள்ளி வேன் தடம்புரன்டது தெரியுமா.இன்று வரை சில மாணவ/மாணவிகள் மருத்துவமணையில்.இதை நிர்வாகத்துடன் பேசி புரயோஜனம் கிடையாது.பெற்றோர் மிக அலட்சியம்,பள்ளிக்கும் அக்கறை இல்லை.எந்த ஒரு வண்டிக்கும் ஸ்பாட் அனுமதி கிடையாது.நாராயண நாராயண.
அவர்கள் தவறு ஏதும் செய்யாமல் இருந்தால், இன்னேரம் இதற்கு பதில்தந்திருப்பார்கள். இனி அவர்கள் சரியான பதிலை தரவேண்டும் என்பதற்காக எதையோ சேகரித்துக் கொண்டிருக்கின்றனர் போல் தெரிகிறது.
இந்த தமலன் இருக்கானே, ஆரம்பத்துல ஆஹா…..ஊஹூ…..என தலையில தூக்கி வச்சி ஆடுவான். அப்புறம் குய்யோ முறையோ என அலறுவான். அதேபோலத்தான் இந்த சிறி முருகன் விவகாரமும்.
ஏழைக்கு ஒரு காசு வராது ஆனால் இந்த தம்பிரசுவுக்கு வாரி வாரி கொடுப்பஞ்ஞ்க தமிழன் அழிவது திண்ணம்
ஸ்ரீ முருகன் கல்விநிலையம் ஒரு வாணிக நிறுவனம்.தம்பி ராஜா கல்வியை எப்படி கடவுளின் பெயரில்,கல்வி விரதம்,யுத்தம் என்று தன்னையும் ஸ்ரீ முருகன் நிலையத்தை நன்றாக விளம்பரம் செய்து வந்துள்ளார்.தம்பிராஜா நன்றாகா தெரியும் இந்த மன்னாங்கட்டி சமுதாயம்,படித்தவர்கள்,பாமரன்,ஏழை ,பணக்காரன் எல்லாம் கடவுள் என்று சொன்னவடுன் கேள்வி கேட்கமாட்டார்கள்.அந்த கடுவுளின் பெயிரில் வியாபாரம் செய்தல் நன்றாக ஓடும் என்று தெரிந்தவன்.அரசாங்கம் ஒதுக்கிய பணத்தில் 280 லட்சம் எடுத்துகொண்டு இது வரை வாய்முடி மௌனமாக இருக்கிறான். ஏழை இந்திய குழந்தைகள் கல்வி பையுல்வதர்கக இருந்த பணத்தை அமிகிவிட்டன்.
உதாரணத்துக்கு ஒரு பாலர் பள்ளி நிருவவேண்டும்,ஐந்தாண்டு திட்டம்,பணம் முலுவதும் ஒரே காசோலையில் வராது,கட்டம் கட்டமாக கிடைக்கும்.முதல் காசோலை கிடைக்க 1-1/2,ஆண்டு ஆகும்,நில அலுவலகம் போய் க்ராண் கிடைக்க 2வருடம் ஆகும்.குறைந்த பட்ஷம் 31/2ஆண்டு கடந்து விட்டது,குத்தகை செபுட் ஹர்கா மற்றும்2 ஆரு மாதம் சோ 4 வருடம் முடிந்து விட்டது,நில பரிசோதனை,சாங்கியத்துக்கு வேடிக்கைக்கு பைலிங் மிஷின் வந்து இரங்கும் ஐந்து வருடம் ஓவர்.இரண்டு காசோலை பாக்கெட்டில் மாசோக் மீதி பணம் கருவூலத்திற்கு திரும்பிவிடும்.ஆதலால் இதை எப்படி கேட்பது,என்ன பதில் சொல்வர்.அரசாங்கத்தை கேட்டால் நிலம் கொடுத்தாச்சு,பணமும் கொடுத்தாச்சு இன்னாரிடம் ச்செப்டர் க்லோஸ்.அரசாங்க ரகசியம் வெளியில் விமர்சிக்க கூடாது,பிறகு அடுத்த ப்ரோஜக் கிடைக்காது வோய்.சூழ்நிலையை சமாலிக்க கொடுக்கபட்டது அந்த இரண்டு காசோலை.உன்மையில் நிலமும் கிடையாது அரசாங்த்திடம் பணமும் இல்லை.இதில் கட்சிக்கு மூன்றி் ஒரு பங்கு போகவேண்டும் உம்னோவுக்கு.நாராயண நாராயண.
இன்றைக்கு சுரேந்திரன் என்ற smc பொம்பள பொருக்கி சொல்றான் மீண்டும் கல்வி விரதம் சகோரதுவத்தை வளர்க்க காசு வசூலிக்க போரனுங்கலாம் அட மட தமிழனுப்க்களே வாரி வழங்கி தம்பிரஜாஹ் குடும்பத்தை கொடிஸ்வரனக்கி தமிழ் மடயணுங்க எல்லாம் நாடு தெருவிலே நின்று நாக்கு வலியுங்க
kayee! கரைத்து குடித்துவிட்டீர்கள். நீங்கள் சொல்வது தற்போது நம் மாநிலத்தில் நடக்கிறது. பத்தாங் பெர்சுந்தை அருகே ஹோப்புள் மற்றும் ஒபோர் தமிழ்ப் பள்ளிகளில் இந்த கூத்து நடக்கிறது.
உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்கிறவன்
தண்டிக் கப்படுவான். கடவுளின் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது.காலம் வரும்வரை பொருத்திருப்போம்.
ஸ்ரீ முருகன் நிலையம் இப்பொழுது காதல் நிலையமாக மாறி வருகிறது ,,25 மில்லியம் பாலர் பள்ளி நடத்துகிறோம் என்று சொல்லி பணத்தை சூறையாடி இருக்கிறார்கள் ,,
kinara யாரை அய்யா உங்களை உப்பை தின்ன சொன்னது
இப்பெல்லாம் உப்பை தின்னவன் தண்ணீரை குடிபதில்லை
மாறாக மாங்காயை கடித்து கொள்கிறான் ,தப்பு செய்கிறவர்
அனைவரும் தண்டிக்கப்படுவதில்லை பணத்தால் வெளியே
வந்து விடுகிறான் ,கடவுளின் பிடியில் இருந்து எவனும் தப்ப முடியாது என்று நீர் மட்டும் சொல்லிக்கொண்டு இரு ,சாமிவேலு ,மாதீர் இவர்களை எந்த கடவுள் தண்டித்தார் ,
ஸ்ரீ முருகன் நிலையம் முறையாக டியுசன் வைத்திருக்கவில்லை ,இருக்கும் ஓரிரு டியுசன் சென்டரில்
திறமையான மாணவர்களை மட்டும் அனுமதிக்க படுகிறார்கள் ,அப்படி இருக்க எப்படி ஒவ்வொரு ஆண்டும் 300 அல்லது 400 மாணவர்கள் ஸ்ரீ முருகன் பரிசளிப்பு விழாவில் பங்கு எடுத்ததாக பத்திரிகையில் காணுகிறோம் ,அது எல்லாம் தம்பி ராஜாவின் தந்திரம்,ஒவ்வொரு இடை நிலை பள்ளிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்படும் என்று எல்லா பள்ளிக்கும் சென்று தெரிவித்து விடுவார்கள் நல்ல மார்க் பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பரிசளிப்பு மண்டபத்திற்கு வருவார்கள் ,அங்கே மேடையில் இந்த மாணவர்கள் எல்லாம் ஸ்ரீ முருகன் சென்டரில் படித்த தால் தான் இந்த அளவுக்கு சிறந்த மாணவர்களாக வரமுடிந்தது என்று கூறுவார்கள் உடனே பத்திரிக்கை நிருபர்கள் அப்படியே
அவர்களின் பொய்யை நம்பி தங்கள் பத்திரிகையில் போடுவார்கள் ,அதற்காக பத்திரிக்கை நிருபர்களுக்கு
லஞ்சமும் கொடுப்பார்கள் , இது தான் ஸ்ரீ முருகனின்
கல்வி யாக யுத்தம் .lembu punya susu sapi dapat nama .
எல்லோரும் பேசுகிறோம். கருத்துகளை முன்வைக்கின்றோம். ஆனால் சம்பந்த பட்டவர் மட்டும் மௌனியாக இருக்கின்றனரே? அமைதி உண்மையின் பதிவோ?
சம்பந்தப்பட்டவர் வாய் திறந்தால் பழைய குப்பையை
கிளறுவது போல ஆகிவிடுமே ,என்ற பயம் மட்டும் இல்லை
இவனுங்க எல்லாம் கேள்வியை செம்பருத்தியில் கேட்டா நாம ஏன் பதிலை கொடுக்கவேண்டும் , இவனுங்க என்ன
நீதியின் ,தர்ம தாயின் பிரதிநியா என்று ஆணவமாக இருக்கலாம் ,கவலை படாதே சிவக்கனி ஸ்ரீ முருகன் சென்டரின் உண்மைகள் வெளிவர தொடங்கி விட்டது,அவர்கள் இப்போது மௌனியாக இருக்கலாம்
ஆனால் விரைவில் பொது மக்கள் பொங்கி எழுவர்
ஏமாற்று பேர் வழிகளை விரட்டி அடிப்பர் ..
ஏமாற்றுவன் ஒரு நாள் சந்திக்கு வந்தே ஆகவேண்டும். ஸ்ரீ முருகன் என்று கடவுளின் பெயரில் கல்வி நிலையம் நடத்தும் டாக்டர் தம்பிராஜா, எஸ். கே. தேவமணி, பிரகாஷ்ராஜ், நாச்சிமுத்து ஆகியோர் பிணம் தின்னும் கழுகைப்போல, இவர்கள் பணம் தின்னும் கழுகுகள். இவர்களில் எஸ். கே. தேவமணி பலே கில்லாடி. அரசாங்கத்திடமிருந்து எப்படி பணம் கொள்ளை அடிக்கலாம் என்பதிற்கான “பேப்பர்” தயாரிப்பதில் மன்னாதி மன்னன். சிரித்துக் கொண்டே “காய்” நகர்த்துவதில் டத்தோஸ்ரீ உத்தாமா அண்ணன் எஸ். சாமிவேலு, எஸ். கே. தேவமணியிடம் பாடம் படிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட அதனை பெரும் ஆண்டவன் பெயரில் சமுதாயத்தை சூறையாடுவதில் வல்லவர்கள். கல்வி விரதம், கல்வி யாகம், கல்வி யுத்தம் என்பதெல்லாம் நம் கவனத்தை திசைதிருப்ப அவர்கள் மேற்கொள்ளும் சாகசங்கள். அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் “HANDOUTS” புதிதாக தயாரிக்கப் பட்டிருக்காது. பெரும்பாலும பழைய வினா தாளிலிருந்து எடுக்கப்பட்ட வினா “கட்டிங் அண்ட் ஓட்டிங்”தான் நண்பர் தமிழ்பித்தன் குறிப்பிட்டதுபோல, சிறந்த மாணவர்களை நேர்முக காணலின்மூலம் தேர்தெடுத்து சேர்த்துக் கொள்கிறார்களே தவிர, கல்வியில் பின்தங்கிய மாணவர்களை சேர்த்துக் கொள்வ தில்லை. பின்தங்கிய மாணவர்களை அல்லவா கல்வியில் முன்னேற்ற வேண்டும். பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டால் ஸ்ரீ முருகன் சவ்டால்கள் செய்யும் அசத்தலும், அலம்பலும் அப்பப்பா! 1 சினர், 1 சிமர்லாங் என்ற பெயரில் கடத்தப்பட்டுள்ள ரிங்கிட் மலேசியா 270 இலட்சம் எங்கே? இவ்வளவு பெரிய தொகையை ஒரு தனியார், அதுவும் பணம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன? ஆனால் ஒன்று, சமுதாய நலனுக்கு சேரவேண்டிய பணத்தை ஏப்பம் விடும் இந்த “சமுதாய அட்டைகள்” சாக்கடையில் விழும் என்பது திண்ணம். பாட்டன் பாரதி சொன்னதுபோல, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும், ஒரு நாள் தர்மம் வெல்லும்”. ஓம் நமச்சிவாய!
மஹா மஹா மஹா திருட்டு பயல்கள். இந்திய சமுதாயத்தை கூரு போடா வந்த எமன்கள். சீனர்கள் தங்கள் பிள்ளை
கல் வளர மாதந்தோறும் பணம் செலுத்தி அதில் குளிர்சாதனம் வகுப்பு அறையில் இருக்கு. படிக்கச் வைகிறார்கள். அரசாங்கத்திடம்
பணம்கேட்டு பள்ளி நீர்வகமோ அலது சமுக சேவை செய்யும் ஸ்ரீ முருகன் சென்டரின் சேவை போல பணம் கேட்பதில்லை. இங்கு
அப்படி இல்லை. பணம் பணம் பணம் தான் முக்கிய குறிக்கோள் அதுவும் தெய்வ பெயரை பயன் படுத்தி வேறு பணம் பணம் பணம்
வசூல். டேய் முட்டல் படித்த முதலைகளே போடும்மட சாமி. வயதான காலத்தில் ஏழைகளின் வயிற்றில் அடிது சாபத்தை
வாங்கி கொள்ளதிர்கள். ஒருவன் இருந்தான் இபோவும் இருகண் இன்நும் சாகவில்லை. ஆவனால் இந்திய சமுதாயம் பாதாளத்தில்
விழுந்து இப்பொழுது எதிர் கட்சி சமுதாய பாசம் பரிவு உள்ள நல்ல உளங்கள் கேள்வி கேட்பதனால் உங்களை போல திருடு பயலங்கள் பதறி இருப்பதை பார்க்க முடிகிறது. செம்பருத்தி வந்த பிறகு உண்மையாக நிதானம்மக யாருக்கும் யார் பக்கமும்
சாயாமல் சுத்தமாக செய்திகள் அதுவும் எங்கள போன்ற வாசர்களுக்கு மதிபலிது நங்கள் கூரும் கருதுக்களை அப்படியே
வெளியிடுகிறது. நன்றி செம்பருத்தி.
கமொனிசத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தன் ஸ்ரீ தம்பிராஜா , தொழிலாளிகளை எப்படி ஏமாற்றலாம் என்பதில் நன்கு கை தேர்ந்து விட்டார்.ஸ்ரீ முருகன் நிலையத்தை அரசியல் கூடமாக்கிவிட்டார். முதலில் அவரது சீடன் தேவமணி, இரண்டாவது பிரகாஸ் ராவ் .இவர்களும் தம்பிராஜாவுக்கு நிகரான கொள்ளையர்கள் தன என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.இந்த தம்பிராஜாவும் ஸ்ரீ முருகன் நிலையத்தாரும் மா பெரும் கொள்ளை கூட்டத்தார் என்பதை இந்த அப்பாவி தமிழினம் தெரிந்துக் கொண்டால் சரி.
திருடணிமிருந்து பதில் கிடைக்குமா?
இதே போல் தன இந்த ம இ கா திருடன் பழனிவேலு 540 மில்லியன் ரிங்கிட்டை ஏப்பம் விட்டுதான்.இந்த திருட்டுல அம்னோவுக்கு எவ்வளவு பங்கோ தெரியலை.அம்னோவுக்கு கிடைகலனா பழனிவேலு இந்நேரம் உள்ளே பொய் இருப்பாருல ………….. என்ன நான் சொல்லறது சரிதானே?
சேவை இன்று தொழிலாகிவிட்டது.டியூஷன் எல்லா இடங்க்களிலும் தான் நடக்கிறது. மாணவர்களும் பணம் கட்டிதான் போகிறார்கள்.எல்லா நிறுவனங்களுமா இவ்வளவு மானியம் பெறுகிறார்கள் ?பத்துமலையில் ஒன்று கூடி பிரார்தனை நடத்த அவ்வளவு தொகையா? முருகப் பெருமானிடம் வேஷம் வேண்டாம் ..படித்த பண்ண்டிதர்கள் நிறைந்த குழு.கணக்கு காட்டுவதில் என்ன குழப்பம் ? நாசமாய் போவதற்கு வழி தேடுகிறீர்களோ ?
ம ,இ.கா காரனில் எல்லா தலைவர்களும் திருடன் என்று நான்
கூற மாட்டேன் ,நீங்கள் உண்மையில் நம் சமூதயதிற்கு சேவை
செய்ய வேண்டும் எண்ணம் இருந்தால் சமூதாயம் மென்மேலும் ஸ்ரீ முருகன் நிலையத்தால் சுரண்ட படாமில்
இருக்க நம் ஏழை பெற்றோர்களை காப்பற்றுங்கள் முடியாது
என்றால் நீங்களும் ஸ்ரீ முருகனுடன் சேர்ந்து கொள்ளையடியுங்கள் என் சமுதாயம் எப்படியோ போகட்டும் .
இன்று தினக்குரலில் பார்த்தீர்களா ஸ்ரீ முருகன் சென்டரின்
ஒரு பக்க செய்தியை, பத்திரிக்கைகள் தில்லு முள்ளு செய்பவர்களுக்கு தான் ஆதரவாக இருக்கின்றன ,ஏன் மற்ற
மொழி பத்திரிக்கையில் ஸ்ரீ முருகன் நிலைய செய்தியை காணும் ,பத்திரிகைகள் தான் நான் முந்தி நீ முந்தியின்னு
போட்டி போட்டுக் கொண்டு கொள்ளையடிப்பவன் செய்தியை போடுகிறார்கள் ,எவன் ஏமாந்தால் நமக்கு என்ன நமக்கு வேண்டியது பத்திரிக்கை ஓடவேண்டும் ,நாங்கள் ஆதி .குமணனின் படத்தை போட்டு பத்திரிக்கையை வெளியிட்டாலும் எங்களுக்கு பணம் வேண்டாமா ,குறை கூறுகிறவர்கள் 1.30காசு கொடுத்து எங்கள் பத்திரிகையை
ரோசம் கேட்ட தமிழன் வாங்குகிரான் ,கொடுப்பது கொஞ்சம் பேசுவது அதிகம் ,ஆனால் ஸ்ரீ முருகன் சென்டரின் செய்தியை போட்டால் எங்கள் பாக்கெட் நிறையுது தெரியுமா என்று நம்மிடம் ஆசிரியர் கேட்டு விடப் போகிறார் நாம வாயை மூடிகிட்டு இருக்க வேண்டும் நைனா .
மக்கள் ஓசையில் பிரகாஷ் ராவ் பணம் கொடுத்து இவனுங்களை பற்றி செய்தி போடா சொல்ற தொல்லை தாங்க முடியலுனு நம்ம பத்ரிக்கை நிருபர் mic கோபி கடையில் சொல்வதை என் காதால் கேட்டேன்