ஜா. சுஜாதா, செம்டெம்பர் 25, 2014.
இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியரை மேலும் ஒரு தவணைக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கும்படி 13 வது பொதுத் தேர்தலுக்குப் பின் இந்தியர்கள் அன்றைய மந்திரி புசார் காலிட்டுக்கும் பக்காத்தான் தலைவர் அன்வாருக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் அவர் இருந்த ஜந்து ஆண்டுகளில் இம்மாநில இந்தியர்களின் வளர்ச்சிக்காக நல்ல பல திட்டங்களைத் தீட்டிச் செயல் படுத்தியதில் நாட்டில் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கே முன் உதாரணமாகச் செயல் பட்டவர் டாக்டர் சேவியர். அவரின் சேவையால் இம்மாநில இந்தியர்களுக்குக் கிடைத்ததையும், இழந்ததையும் சமுதாயம் கவனிக்க வேண்டிய தருணம் இது.
ஆலய நிலம், தமிழ்ப்பள்ளிகளின் நிலம், விவசாயிகளின் நிலம், தோட்டப் பாட்டாளிகளின் நிலம், பள்ளிகளின் கட்டுமானம், இந்தியர்களின் நகராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, இந்திய கம்பத்துத் தலைவர்கள் உருவாக்கம், மகளிர் சிறுதொழில் ஊக்குவிப்பு, கல்வி வளர்ச்சி என்று பற்பலதுறைகளில் அவரின் சேவையை வழங்கினார்.
.இந்திய சமுதாயம் சீரிய வளர்ச்சியை அடைய அனுபவமும் ஆற்றலுமுள்ள அவரின் சேவை இந்தியர்களுக்குத் தேவை, அவர் தொடக்கிய மாணவர் தங்கும் விடுதி மற்றும் இந்தியக் கலாச்சார மையத்தைக் கட்டுமானத்தைப் பூர்த்தியாக்கிக் கொடுக்க அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற இந்தியர்களின் வற்புறுத்தல் செவிடன் காதில் ஊதியச் சங்காக அன்று அமைந்தது.
அத்துடன் பற்பல விவகாரங்களில் இந்தியர்களுக்கு குரல் கொடுப்பதிலும் அவர் முன்னோடியாகவே இருந்து வந்தார்.
டாக்டர் சேவியரின் போராட்டத்தால் இச்சமுதாயத்திற்குக் கிடைத்து வந்ததைத் தடுப்பதில் சில இந்திய நலன் விரும்பிகளுக்கு இருந்த ஆர்வத்தில் அவர்கள் சாதித்ததைச் சமுதாயத்திற்கு விளக்க வேண்டியதும் நமது கடமையாகும்
அவர் செய்துள்ள நல்ல காரியங்களில் சில:
- மாநிலத்தில் குறுகிய காலத்தில் 85 இந்து, சீக்கிய ஆலயங்களுக்கும், 15 தேவாலயங்களுக்கும் நிலம் வழங்க ஏற்பாடு செய்தவர்.
- ஆண்டுக்கு 20 இலட்சம் வெள்ளி வீதம், நான்கே ஆண்டுகளில் 467 ஆலயங்களுக்கு 93 லட்சம் வெள்ளியும், 141 தேவாலயங்களுக்கு 22 லட்சம் வெள்ளி. வழங்க ஏற்பாடு செய்தார்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக 2008 ம் ஆண்டுக்கு முன் பாரிசான் ஆட்சியில் 37 பேர்களாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கையை 57ஆக உயர்த்தியவர்.
- மாநில அரசில் இந்தியர்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் இந்தியர்களுக்கு கிராமத்தலைவர்கள் பொறுப்பை வழங்க ஏற்பாடு செய்தவர்.
- இந்தியர்களில் அதிகப்படியான பரம ஏழைகளுக்கு இலவச வீடுகளை வழங்கியவர்.
- இந்திய ஏழைகளுக்குக் கண், மற்றும் உடல் சிறு அறுவைச் சிகிச்சை மற்றும் இனிப்பு நீர் கூழ்மப்பிரிப்பு உதவி நிதியை ஏற்பாடு செய்தவர்
- நீண்ட நாட்களாகப் பாரிசான் அரசிடமிருந்து தமிழ்ப்பள்ளிக்கு வராத அங்கீகாரத்தை வாங்கித் தந்தார். தனது ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் 2009ம் ஆண்டு புதிய தமிழ்ப்பள்ளி நிறுவ 2.7 ஏக்கர் நிலத்தை வழங்கி, மாநில அரசுடன் பல சமுதாய இயக்கம் மற்றும் ஆலயங்களை ஒன்று சேர்த்துப் பள்ளியை நிறுவ மத்திய அரசை நிர்ப்பந்தித்ததுடன், கடந்த 27-06-2011ல் நாடாளுமன்றத்தில் இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாட்டிலும் அப்பள்ளிக்கான அனுமதி மீதான விவாதத்தை முக்கிய அம்சமாக்கினார்.. தேர்தல் காலத்தில் இப்பிரச்சனை விசுவரூபம் எடுப்பதைத் தடுக்கவும், அதனால் பக்காத்தான் அரசியல் லாபம் அடைவதைத் தடுக்கப் பிரதமர் கையாண்ட யுக்தியே பூச்சோங் கின்ரார தமிழ்ப்பள்ளியில் புதிய ஆறு தமிழ்ப்பள்ளிக்கான அறிவிப்பும், அனுமதியும் வழங்கியது.
- அவர் ஆட்சிக்குழு பதவிக் காலத்தில் சிலாங்கூரில் 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம், 97தமிழ்ப்பள்ளிகளுக்கும் 2 கோடி வெள்ளி ஒதுக்கீட்டுக்கும் வழி வகுத்தவர்.
- தமிழ்ப்பள்ளிகளை நவீன படுத்த, அறிவியல் கூடம், கைவினை தொழிற்பயிற்சி கூடம், 40 தமிழ்ப்பள்ளிகளில் கணினிமையங்கள், பாலர் பள்ளிகளும் உருவாக்கினார்.
- இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு நிதி வழங்கிக் கல்வி பணியை ஊக்குவித்ததிலும் முன்னோடியாக விளங்கினார். மக்களுக்குக் கல்வி சேவையாற்றத் தமிழ் அறவாரியம், சைல்டு, ஈ.டபல்யூ.ஆர்.எப் போன்ற இந்திய அமைப்புகளுக்கும் நிதி வழங்கிக் கல்வி பணியை ஊக்குவித்தார். அதன் பயன் ஸ்ரீ முருகன் கல்வி மையம் போன்ற இந்திய இயக்கங்களுக்குப் பிரதமர் நஜிப்பின் மத்திய அரசும் நிதி வழங்கி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.
- மிட்லெண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை முழுக்க இந்தியக் குத்தகையாளர்களைக் கொண்டு, குறிப்பிட்ட காலத்தில், தரமான கட்டடத்தை. நியாயமான விலையில் கட்டி முடித்ததால் இன்று நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தை மத்திய அரசு இந்தியக் குத்தகையாளர்களுக்கே கொடுக்க வழி வகுத்தவர்.
- தமிழ்ப்பள்ளி மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளில் பொதுப்பணி இலாக்காவின் முழு ஆதிக்கத்திலிருந்து விடுவித்த பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் ஈடுபாட்டுக்கும் ஊக்கப்படுத்தியவர்.
- அதேபோன்று 9 தமிழ்ப் பள்ளிகளில் 15 பாலர் வகுப்புகளை 2009ம் ஆண்டிலேயே தொடங்கினார். அதனால், பாலர்பள்ளிகள் இன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு மத்திய அரசாங்கச் செலவில் கிடைத்து வருகின்றன.
- இந்தியர்கள் அதிகம் வாழும் கிள்ளான் செந்தோசா, சுங்கைவே டேசா மெந்தாரி போன்ற இடங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கும் பாலர் பள்ளி கல்வி கிட்ட மக்கள் பாலர்ப் பள்ளிகளை அமைத்தார்.
- மாநிலத்தின் உட்புறங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றவும், அங்குள்ள ஏழை மாணவர்கள் கல்வியைக் கைவிடாமலிருக்க பஸ் கட்டணம் வழங்குவதைத் தொடங்கியவர்.
- கிள்ளானில் சுமார் பதினாறு ஏக்கரில் நிலத்தில் இந்தியக் கலாச்சார மையம் என்ற போர்வையில் இந்தியர்களுக்குத் தனி வர்த்தக நகருக்கே அடித்தளமிட்டார். அதில் இந்தியர்களை சொத்து உரிமையாளர்களாகவும் வியாபாரிகளாகவும் உருவாக்கத் திட்டமிட்டார்.
- பட்டணங்களில் மட்டுமல்ல தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளும் பொது மண்டபம் போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவேண்டும் என்பதனை மத்திய அரசுக்கு உணர்த்தும் வண்ணம் கோலசிலாங்கூர் ஈஜோக் தோட்டத்தில் மண்டபத்துடன் தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்கும் வேலையைத் தொடங்கினார், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் புதிய ஆட்சிக்குழு உறுப்பினருக்கு அக்கறை இல்லாததால் கட்டுமானம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
- பின் தங்கிய நிலையிலுள்ள 500 தோட்டப்புற மாணவர்கள் தங்கிப் படிக்க எட்டு ஏக்கர் நிலத்தைத் தோட்ட மேம்பாட்டாளரிடமிருந்து பெற்று, 50 இலட்சம் வெள்ளியில் தங்கும் விடுதி நிர்மாணிப்புக்கு மாநில அரசின் அங்கீகாரத்தையும் வாங்கி விட்டார் ஆனால் அதுவும், அக்கறையின்றி ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது.
- கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஆட்சிக்குழுவில் இடம் பெறா விட்டாலும், அமைதியாக ஆனால் ஆக்ககரமான சேவைகளை மேற்கொள்வதில் டாக்டர் சேவியருக்கு நிகர் அவரேயாகும்.
- கடந்த ஓர் ஆண்டில் அவர் மேற்கொண்டுள்ள சேவைகள், மக்கள் சேவையில் அவருக்கு உள்ள ஈடுபாட்டின் சிறப்பையே வெளிப்படுத்துகிறது.
- ஏழை மகளிருக்கான உபரி வருமானத் திட்டமாக, அவர்களுக்குச் சமையல் முதல், தையல், மணி கோத்தல் போன்ற பல கைவினை தொழில் பயிற்சிகளைச் சளைக்காமல் வழங்கி வருவதுடன், அவர்கள் சிறு தொழில்களைத் தொடங்கக் கடன் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.
- அவர் தொகுதி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த்து, சமீபத்தில் அவரின் நேரடி பார்வையில் 19 ஏக்கர் நிலத்தில் பூர்த்தியான வெள்ள நீர்த்தேக்கமும், அதன் ஒட்டிய பகுதிகளை உடல் பயிற்ச்சி, மற்றும் பொழுது போக்கு பூங்காவாக்க அவர் மேற்கொண்டு வரும் பணிகள்.
- இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த வெள்ளப் பிரச்சனைக்கு இயற்கையையும். தாழ்ந்த நில அமைப்பையும் காரணங்களாக மட்டுமே கூறி வந்த முன்னைய சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அங்குள்ள மக்களின் வேதனைக் கண்டு வெகுண்டு எழுந்து பிரச்சனைக்குத் தீர்வு கண்டுள்ளார்.
ஒரு ஏக்கர் நிலத்தைக்கூடப் பொதுக்காரியங்களுக்கு விட்டுக்கொடுக்காத மேம்பாட்டாளர்களிடமிருந்து 19 ஏக்கர் நிலத்தைப் பெற்று அதனை மழை நீர் தேக்கமாகவும், பூங்காவாகவும் தனியார் துறையின் பொருளாதார உதவியுடன் மேற்கொள்வது அசாதாரண விசயமாகும்.
இத்திட்டத்தால், வெள்ள அபாயத்தை நீக்கி, இப்பகுதியில் ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதுடன், அங்கு வீடு போன்ற சொத்துகளின் மதிப்பை உயர்த்தவும் வழி வகுத்துள்ளார். அங்கு இந்தியர்கள் அதிகமான நடுத்தர விலை வீடுகளை வைத்துள்ளளர். அச்சொத்துகளும் சிறந்த விலை ஏற்றம் காணும்.
மக்களுக்கு டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் சேவை மேலும் தொடர அவரை மீண்டும் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்.
சேவியர் சேவை செலங்கூர் மக்களுக்கு தேவை !
ஆட்சிக்குழுவில் இல்லாவிட்டாலும், 19 ஏக்கர் நிலத்தில் வெள்ள நீர்தேக்கத்துடன் பூங்கா அமைத்துவரும் டாக்டர் சேவியர் உண்மையான மக்கள் தொண்டன்.அதிலும் அரசாங்க மானியமின்றி, தனியார் துறை ஒத்துழைப்புடன் செய்துள்ளது பெரிய சிறப்பு. அவர் தொகுதியில் தனித்துவாழும் தாய்மார்களுக்கும், ஏழைகளுக்கும் கைத்தொழில் பயிற்சியுடன், அரசாங்கத்திடம் கிடைக்காததை, அறவாரிய உதவியுடன் கைத்தொழில் நிதிக்கும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறாரம். எங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இருக்கார என்கிறது கேள்வியாக உள்ளது.!! இந்திய அரசியல் தலைவர்கள் வாய் வீச்சில் வல்லவர்கள். ஆனால், சேவியரோ சேவையில் திலகமாக இருக்கார். அன்வார் இப்ராஹிம் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் அவருக்கு மீண்டும் இடம் தருவாரா?
சேவியர் ஜெயகுமார் மாநில ஆட்சிக்குழு உறுபினராக வேண்டும்
பல திட்டங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் கணபதி ராவா அல்லாத ஜ.செ.க. இந்தியர்களை ஓரங்கட்டப் பார்க்கிறதா? என்னைக் கேட்டால் கணபதி ராவ் தவறு என்பேன். இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ அதனைச் செய்ய வேண்டியது அவரது கடமை. முடியவில்லை என்றால் மூட்டைக் கட்ட வேண்டியது தானே!
https://my.news.yahoo.com/mb-azmin-slashes-pas-exco-numbers-offers-them-022000859.html
சேவியர் ஜெயக்குமார் மீண்டும் ஆட்சிக்குலுவில் உறுப்பினராக்க வேண்டும் அவரின் சேவை மக்களுக்கு தேவை அவர் பதவில் இருந்த காலதில் அயாரத சேவையை மக்கள் அறிவார்கள் ,ஒரே தமிழராக இருந்து மக்களுக்காக ஒளி விளக்காக தொண்டாற்றிய தொண்டன் பதவியை பிடிதுக்கொண்டுமக்களுக்குக்க போராடாத ஒரு தலைவன் இச்சமுதயதிர்க்கு அருகதையற்றவன் !
கீத்தாபூன் சோக்கோங் சேவியர்,வாழ்க நாராயண நாமம.
அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் புலம்புகிறீர்கள். பாவம். என்னுடைய அனுதாபங்கள். உண்மையான சேவை செய்வோருக்கும் சொத்து சேர்க்காமல் மக்களுக்காக உழைப்பவர்களுக்கும் அங்கே இடமில்லை. பெரும்பாலும் அத்தனை அரசியல்வாதிகளும் பகல் கொள்ளையர்கள். அண்மையில், சுங்கை சிப்புட் டாக்டர் ஜெயக்குமார் தனது சொத்துக்கள் எவ்வளவு என்பதை வெளியாக்கினார். சுத்தமானவர்.மற்றவர்களுக்கு ஏன் அந்த தைரியமில்லை. ஏனென்றால், முக்கால்வாசிப் பேர் கொள்ளையர்கள், பகல் குடிக்காரர்கள்.
எந்த கட்சில் யோக்கியன் இருக்கிறன் ‘தேன்எடுப்பவன் புர்ங்க்கையை நக்கதான்செய்வான் ‘ இதில் ஒன்றும் அதிசயம் இல்லை , மக்களின் ரத்ததைமுழுமையாக உறுஞ்சிய குள்ளநரிகளும் உண்டு அரசியலில் இதுவெல்லாம் சகஜம் !
மதிப்புக்குரிய டாக்டர் சேவியர் தம்மால் இயன்றவற்றை தமது சக்திக்கும் அப்பாற்பட்டு பல நல்லனவற்றை சமுதாயத்துக்காகச் செய்தார் – செய்கிறார். ஆனால் அவருக்கு மாற்றாக வந்தவர் என்ன செய்தார் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது அவருக்கே தெரியாத சிதம்பர ரகசியம் மன்னிக்கவும் சுபாங் ஜெயா ரகசியம்..!
ஏன் சேவியருக்கு எஸ்கோ கிடைக்கவில்லை ? கிடைக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும் … இப்போது ஏமாற்றம்தான்.அந்த ஓவியத்தை மீது மீண்டும் தூரிகை செய்வோம்.
நியாயமான கோரிக்கைதான் ! ஒரு உண்மைமையை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். சம்பந்தம் இல்லாதவர்கள் இதற்கு விமர்சனம் எழுத வேண்டாம்.
13 வது தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி குழுவில் குறிப்பாக PKR இந்தியரை பிரதிநிதித்து ஒருவர் இருக்க வேண்டும் என்று அதற்காக ஒருவர் தலைமையில் குழு அமைத்து அன்வரிடம் பேரம் பேசினோம். PKR இல் ஒரே ஒருவர் அதாவது மாண்பு மிகு சேவியர் மட்டுமே சட்ட மன்றத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
நிச்சயமாக அவருக்கு கிடைக்கும் என்பதால் DAP வழியும் ஒரு இந்தியரை சேர்த்து விட வேண்டும் என்ற முயற்சியில் PKR இந்திய முக்கிய தலைவர்கள் இந்தியர்களுக்கு இரண்டு எக்ஸ்கோ வேண்டும் என்ற முடிவில் PKR தலைமையகத்தில் அன்வருடன் நடந்த கடைசி சந்திப்பில் முடிவாகி அவரும் சம்மதித்து சென்றார். பாகாதான் ஆட்சியில் இரண்டு இந்தியர்களுக்கு ஆட்சிக்குழுவில் இடம், ஒரு நல்ல மாற்றம் என்றுதான் மகிழ்ச்சில் இருந்தோம்.
ஆனால் நடந்தது வேறாக இருந்தது. அன்றுதான் “செமுவா அனக் சாயா” என்ற கோடரி நம்மை துண்டாக்கி கூறு போட்டது. நியாயப்படி PKR இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய எஸ்கோ இலவு காத்த கிளி கதையாய் போனது. நமது கோபம்மெல்லாம் PKR கட்சியில் உயர் மட்டத்தில் இருந்த, இருக்கும் இந்திய தலைவர்கள் இதற்கு போராட வில்லை. அதுபோலவே DAP அல்லது PAS இந்தியர் கிளப்பு தேசிய மற்றும் மாநில தலைவர்களும் போராடவில்லை.
எல்லாம் கட்சிக்குள் பதவிகள் போவையில் குளிர் காய்ந்தனர். இந்த போராட்டத்தில் இறங்கிய பலரின் இன்றைய பிறகு வந்த கட்சிதேர்தலில் பொறுப்பு நிலை கோசமாகிவிட்டது. PKR இல் இன ரீதி அரசியல் நடத்த கூடாது என்று இனத்துக்கு உதவாத மூன்று(இந்திய) நாடாளுமன்ற சட்டம் படித்த சட்டாம்பிள்ளைகள் சொல்வதை சரிதான் என்று நம்மை ஏய்க்கிறான்.
கட்சியின் பாமர மக்கள் போட்டு கொடுக்கும் மேடைகளில் அவனுக்கு வேண்டிய சுகமான சேதிக்கு மாரடித்து விட்டு சமுதாய நலன்களை அடுப்படியில் வைத்து சூடு காயும் இவர்களால் இன்று அஸ்மின் MB ஆகியும் சேவியர் என்ற நல்ல சமூக சிந்தனை மிகு அரசியல் தமிழனுக்கு மீதும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவே இப்படியானால் நுருல சொல்லும் கதையை கொஞ்சம் படியுங்கள்!”
“ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்குத் தேவை இல்லை!”
இது எப்படிப்பட்ட நல்ல அரசியல் விளையாட்டு ? என்று பாருங்கள். நூருல் கட்சியின் முதலாம் நிலை தேசிய உதவி தலைவர். இவருக்கு எஸ்கோ பற்றி பேச உரிமை இல்லையா? இன்று 50 % சகிதம் PKR இல் இந்தியர்கள் இருந்தும் ஒரு இந்திய உதவித தலைவர் கூட அந்த பொறுப்புக்கு வர முடியவில்லை இதற்கு எந்த இனம் காரணம்?
இதற்கு சேவியரிடம் நல்ல பதிலை கேர்க்கலாம்? அல்லது ஜா.சுஜாதா பதில் சொல்வார்? நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் வினை விதைத்தவன் இப்போது அவ்வுலகில் வினை அறுப்பதில்லை வீணை வாசித்து பெருமூச்சி விடுவதுதான் இவ்வுலக மிச்சம்.
இந்த நாட்டு இன அரசியல் போர்வையில் அரசியலில் கூஜா தூக்குவதும் ஒரு அளவோடுதான் இருக்க வேண்டும் இல்லையேல் அதே கூஜா ஜி பூம் பா போல புகையில் மாயமாகும். மற்றது மறுபடியும் வளரும். இதெல்லாம் அரசியலில் சகஜம்தானப்பா என்று பம்பரம் அடிப்பதால் சமுதாயம் சாவும். திருந்தினால் நியாயங்கள் நிற்று நிதானமாகத்தான் வரும். பார்ப்போம்!
பொன் ரங்கன் அவர்களே! முதுகு அரிக்கிறதே என்பதற்காக கொள்ளிக்கட்டையால் சொரியக் கூடாது. PKR கட்சியில் உள்ள ஒரு சில இந்தியத் தலைவர்களின் கதையும் அப்படித்தான். கணபதி ராவிற்கு ஆட்சிக்குழுவில் இடம் கிடைத்துள்ளது என்றால், DAP கட்சியின் இரும்புப்பிடி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வெறும் 10% இந்தியர்களை கொண்ட DAP யில் Exco கிடைக்கிறது. அதுவும் லேசில் கிடைத்ததல்ல. கட்சியின் ஒரு சில உயர்மட்ட இந்தியத் தலைவர்கள் கணபதிக்கு எதிராக செயல்பட்டனர். அதேவேளை 50% இந்தியர்களை பிரதிநிதிக்கும் PKR Exco வில் இந்திய பிரதிநிதி இல்லை என்பதை அறிந்தும் நீங்களெல்லாம் இன்னும் அங்கேயே இருக்கின்றீர்களே? யாரை நொந்துக் கொள்ள? ஓர் உதாரணம். சென்ற பொதுத்தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சிலாங்கூர் முன்னாள் Exco ரோன்னியின் பெயர் முன்மொழியபபட்டது. ஆனால் , கேமரன் மலை சிம்மாதிரியின் கெடுபிடியால், ஓர் இந்தியரே அங்கு வேண்டும் என அடம்பிடித்ததால், ஒரு இந்தியரான மனோகரன் போட்டியிட்டார். ஆக, சேவியர் இடத்தை மற்றொரு இந்தியருக்கு கொடுக்க உங்களால் இயலவில்லையா? அப்படி வேறு எவரும் இல்லையென்றால், சேவியருக்கே கொடுங்கள் என நீங்களெல்லாம் போராட்டம் நடத்த முடியாதா? எது எப்படியோ, நம் நாட்டில் இந்தியர் பிரதிநிதித்துவம் என்பது பழைய ஒற்றைக் காசு.
சேவியர் பேசம ஒரு முடி வெட்டுற கடைய தொரக சொல்லுங்க ஒரு கத்திய கைல வச்சிகிட்டு சரைக்க சொல்லுங்க அவனுங்க சண்டை இன்னுன்ம் முடியல தமிழன் என்ன பண்ண போறான் சொல்லுறது புரியுதா நடக்றத பண்ணுங்க
இருவர் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் இருப்பது நமக்கு ஏமாற்றம் தான். அதற்காக கணபதி ராவ் சும்மா கல்லாக இருக்க வேண்டிய அவசியமில்லையே! ஜெயக்குமாரால் விடுப்பட்டுப் போன பல வேலைகளை இவர் தொடரலாம் தானே. ஹின்ராப் தியாகி என்று சொல்லிக்கொண்டே காலம் தள்ளப் பார்க்கிறாரா?
மேலே உள்ள நியாயமான ஆதங்கங்களைப் படிக்கும்போது மன வேதனையாகவே இருக்கின்றது. ‘இந்தியன்’ இன்னும் ஏணிப்படியாகவே இருக்க வேண்டுமா? ஏன் இப்படி? ஒருவேளை…. பக்காத்தானில் இந்தியர்களைப் பிரதிநிதித்து எந்த கட்சியும் இல்லாதது காரணமாக இருக்கலாம். இது தான் ‘அதற்கு’ காரணம் என்றால் எதிர்காலத்தில் – பக்காத்தான் மத்தியில் ஆட்சியமைக்க நேரும்போது நாம் இன்னும் கேவலப்பட வேன்டியிருக்கும். அங்கே – அவர்களிடம் நாம் பிச்சை எடுக்க நமக்கு திருவோடு கூட இருக்காது. இப்போதே பக்காத்தானில் இருக்கும் இந்தியர்கள் ‘ஒன்று கூடி’ (இதுதான் நமக்கு ஆகாதே) இதற்குப் பரிகாரம் காணும் வண்ணம் அரசியல் கட்சி ஒன்றை உள்ளே நுழைக்க வேண்டும் அல்லது இந்திய அரசியல் கட்சி ஒன்றை உள்ளே உருவாக்க வேண்டும். இல்லாமல் ‘அவன்’ பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டால் நம் கதி அதோ கதிதான். இப்படித்தான் முன்பு சுதந்திரம் கையெழுத்தாகும்போது ‘இந்தியர்களை’ யாரும் பிரதிநிதித்து அவர்கள் சார்பாக ஏன் யாரும் கையெழுத்திடவில்லை? என்று கேட்டதற்கு ‘நமக்கு’ உள்ளதை யார் தராமல் மறுக்கப்போகிறார்கள்’ என்று ‘பெருமனதோடு’ சொன்ன கையாலாகத்தனத்தால் – பிரதிநிதித்து ஒரு கோணல்மாணல் கையெழுத்தைப் போடாத காரணத்தால் இன்று நம் எதிர்கால சந்ததியினரின் தலையெழுத்தே கோணலாகிப் போனதே…அந்த மாதிரி ஒரு நிலை வேண்டாம்…என் இனிய இந்திய மக்களே….. ‘சொல்லுறத சொல்லிப்புட்டேன், செய்யுறதை செஞ்சிடுங்க…நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க…எல்லாம் சரி…’பூனைக்கு யார் மணி” கட்டுவது…?
‘நக்கல்’, உங்கள் ‘கக்கல்’ நியாமானதே. 3-10-2014 காலை 9 மணிக்கு உதயகுமார் சிறைச்சாலையை விட்டு வெளியாகிறார். அவரது காதிலே இதனைப் போடுங்களேன்.
சேவியர், சுத்த பொழைக்கத் தெரியாத ஆள்ளையா நீங்க! கணபதிராவ் பாருங்க ஒன்னரை வருசமா ஒன்னும் செய்யல! எங்க ம.இ.கா, எஸ்கோ எல்லாம் எதுவும் கேட்க மாட்டாங்க, எங்க தேசிய தலைவர் பழனி வாயே திறக்கமாட்டார்.ஏன்? அப்படி இருந்தாத்தான் மீண்டும் -மீண்டும் பதவி கொடுபானுங்க! நீங்க என்னாய 5 வருஷத்துல 20 திட்டம் 40 திட்டம்னு போட்டா, இந்தியாகாரன் முன்னேறிடுவான்! அப்ப ரோடு கூட்ட ஆளு வேணும், அன்வாருக்கு பேக்கு தூக்க ஆளு வேணும், நாசி பொட்டலமும், அரிசி, சீனி எல்லாம் வாங்கிட்டு பி.கே.ஆர் தேர்தலில ஓட்டுப்போடா ஆளுவேணும், பொது தேர்தலில போஸ்டர் ஒட்ட, ஓட்டுப்போடா ஆளுவேணுப்பா, அத எல்லாம் கெடுக்கிற உங்களுக்கு பதவியே கொடுக்ககூடாது.
ஏன்னா நாங்க சுத்த தமிழன்டா! வங்காளிய வாழ வைப்போம், தெலுங்கன தூக்கிபிடிப்போம், மலையாளிய மந்திரியாக்குவோம். மலாய்காரன், சீன்ன படுக்கப் போட்டு………….. மானமுள்ள தமிழ்இனம்.
தமிழனக்கு இந்த நாட்டுல நல்லா மரியாத கொடுகரானுங்க ,,,,,வர வர ரொம்ப பறிதாவமாக இருக்கு இந்தியர்களை நெனைச்சா////////////////////,,,,,,,,,,,மஇ கா (நாம்)இயக்கம் மிளகாய் நட்டு கதுகொடுகரங்க ,,,,,,,,,பக்கத்தான் சோளம் நட்டு கத்துகொடுபாங்கிலோ,,,,அதற்கு நம்ப சாமி எவலோவோ பரவாவில்லை,,,,,உரிமையை கேளுங்கனா தலைவர்கள் ,,,,,,,உசி மிளகாய்யும் (நாம் ),,,பக்கத்தான் பசிக்கு சோறும் கேட்ட்பாங்க போல் தெரிகிறது ,,,,,,,வீரபாண்டிய கட்டை பொம்மனை போல் யார் வருவார்,,,,,,,,,,,,தமிழா ,,,தமிழா நானும் உனைப்போல் கருப்பன்தான்
சேவியர் சேவை செலங்கூர் மக்களுக்கு தேவை !
பி.கே.ஆர் தன்னை ஒரு பல்லின கட்சி என்று சொல்லிக் கொள்கின்றது. அது உண்மையாக இருப்பின், 4 ஆட்சிக் குழுவில் ஏன் ஒருவர் கூட இந்தியர் இல்லை. தேர்தல் காலங்களில் மட்டும் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி விட்டால் போதுமா ?
சார், சேவை செய்ய விரும்புவர்கள், பதவி இல்லாமலும் செய்யலாம் ! வருமானம் இல்லையென்றால் கொள்கை மாறிடுமா ?
பொன் …சன் அவர்களே…ஒருகாலத்தில் ஜெயகுமார் தமிழன் அல்ல அவர் இதரவர் என்று சுரேஷ் அவர்களுடன் கும்மாளம் போட்டது என்ன அவர்க்கு exco தர வேண்டாம் என்று ஒப்பாரி வைத்தது என்ன …..TSK ஜெயகுமார் exco பதவில் இருந்தார் அதிகம் பேசுவர் என்று கழட்டி விட்ட கதை தெரியுமா …..exco பொறுப்பில் அமர்ந்த வுடன் உடனடியாக செயல் படுத்த முடியவில்லை அவருக்கு 2 வருஷம் பிடித்தது அரசாங்க அலுவல் செயல் முறைகளை படிக்க அதன் பின்புதான் அவரால் வேலைகளை செய்ய முடிந்தது …கேட்டு பாருங்கள் அவரிடம் ….இவரை exco பதவியில் தொடர்ந்து வைத்து இருந்தால் MB சிண்டு கழண்டு விடும் என்று TSK செய்த சதி நாச வேலை …இது தான்…உங்கள் முன்னால் MB …இது போல்…கணபதி அரசு கோப்பு களை படிக்க 2 வருஷம் தேவை,,,,,.
திலிப்- படிச்சி புரிஞ்சிக்கொள்ளும் சக்தி உண்டா? கட்டுரையாளர் எண் 13க்கு பின் என்ன கூறிவுள்ளார்- ஆட்சிக்குழுவில் இல்லா விட்டாலும், ஆக்ககரமான சேவைக்கு டாக்டர் சேவியருக்கு நிகர் அவரே என்று.
ஏழை மகளிருக்கான உபரி வருமான சமையல் முதல், தையல், மணி கோத்தல் போன்ற பல கைவினை தொழில் பயிற்சி, அவர்களுக்கு சிறு தொழில் கடன், 19 ஏக்கர் நீர்த்தேக்கம், உடல் பயிற்ச்சி, பொழுது போக்கு பூங்கா. 20 ஆண்டுகால வெள்ள அபாயத்திற்கு தீர்வு. அதுதானே மக்கள் சேவை?
அமாம் உ. ப .த கப்பல் இன்னும் புறப்பட வில்லை வைட்..பண்ணவும்