நூலைப் படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி
காலையில் படி – கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
பாவேந்தர் பாரதிதாசனின் பொருள் பொதிந்த கவிதை வரிகள். இன்றைய நிலையில் எப்போதாவது கவிதை போட்டிகளில் மட்டுமே கேட்க முடிகிறது.
வாசிப்பு மட்டுமே நம்மைச் சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரமாண்டங்களையும் அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும் என வாசித்திருக்கிறேன்.
இன்றைய நிலையில் வாசிப்பதற்கு நேரமே இல்லை என வாய்க்கூசாமல் எல்லாராலும் சொல்ல முடிகிறது. நாம் நமது நண்பர்களுடன் வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும், ஊர் சுற்றித் திரிவதிலும் நமது நேரத்தை வீணடிப்பது குறித்து நமக்கு சிறிதும் கவலை இல்லை. ஆனால், நம்மை, நம் சிந்தனையை உயர்வடையச் செய்யும் புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்புகிறோம்.
சிலவேளைகளில் நமது பெற்றோர்களைப் பார்த்தால் உங்கள் பிள்ளைகள் வாசிக்கிறார்களா என்று கேட்பேன். ஆமாம். எப்போதும் பாடப்புத்தங்களை வைத்து படித்துக் கொண்டே இருக்கிறார்கள் – வீட்டுப் பாடங்கள் செய்கிறார்கள் என்பார்கள். பாடப்புத்தங்கள் படிப்பதும் வீட்டுப் பாடங்கள் செய்வதும் வாசிப்பாகாது என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் நமக்கு விழிபிதுங்கி விடும். வாசிப்பு என்பது கதைப்புத்தகங்கள், நூல்கள், பத்திகள் என இன்னபிறவற்றை வாசிப்பது. வீட்டுப் பாடங்கள் செய்வது வாசிப்பாகாது.
பிறகுப் பெற்றோர்களைப் பார்த்து நீங்கள் என்ன வாசிப்பீர்கள் என்று கேட்பேன். சிலர் முறைப்பார்கள். சிலர் நாளிதழ் வாசிப்பதாக சொல்வார்கள். இன்றைய முதல்பக்க செய்தி என்னவென்று கேட்டால் ஏதாவது சொல்லி மழுப்புவார்கள். இன்னும் சிலர் வேலைக்கே நேரம் சரியாய் இருக்கிறது பிறகு எங்கே வாசிப்பது என்பார்கள். ஆனால், வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மணிக்கணக்கில் சீரியல் பார்க்க மட்டும் நேரம் இருக்கும். பிள்ளைகள் படிப்பதில்லை வாசிப்பதில்லை என்ன பக்கம் பக்கமாக குற்றப்பத்திரிகை மட்டும் வாசிப்பார்கள்.
புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை அரிதாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் குழந்தைகளும் பெரும்பாலும் வாசிக்கும் பழக்கம் உடையவர்களா இருக்கிறார்கள். பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன.
புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை அரிதாகவே பார்க்க முடிகிறது. வாசிக்கும் பழக்கமுடைய பெற்றோர்களையுடைய பிள்ளைகள் வாசிப்பு பழக்கமுடையவர்களாக வளர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
எப்போதும் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு பக்கத்தைக்கூட புரட்டிப் பார்க்காத பெற்றோர்கள் வாசிப்பதில்லை என தங்கள் பிள்ளைகளைப் புரட்டி அடிப்பது எப்போதும் பயனளிக்கப் போவதில்லை.
இன்று வரை ஒவ்வொரு நாளும் ஒரு சில பக்கங்களையாவது வாசிக்காமல் நான் உறங்கப்போவதில்லை. இந்த பழக்கம் என் பெற்றோர்களிடமிருந்து எனக்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு வாசித்தார்கள். அதனால், நானும் வாசிக்கப் பழகினேன். இன்றுவரை தொடர்ந்து வாசிக்கிறேன்.
இப்படியாக என்வரை என்னோடு தொடர்ந்து வரும் வாசிப்பு பழக்கம் என்பது நான்கு வயதில் என் வீட்டில்தான் தொடங்கியது. வாசிப்பு சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் எதையுமே வாசிக்க விரும்பாத கணினி விளையாட்டுகளுக்கும் கைப்பேசிகளுக்கும் அடிமையாகிப் போன ஒரு சமுதாயத்தை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்க முடியும். இது ஒரு பகிர்தல் மட்டுமே. வாசிக்கும் சமூகமே ஆக்கரமான சிந்தனையுடைய சமூகமாக மாறும்…
இலக்கியா
எழுத்தாளர் இலக்கியாவின் சிந்தனையில் உதித்த இக்கட்டுரை பாராட்டுக்குரியது.இது அறிவு உலகம் அறிவைத் தேடி நமது வாழ்கையை நகர்த்தி வெற்றி பெறுவதே மிகச் சிறப்பு.வாசிக்கும் சமூகமாக மாறுவோம்.
கூடவே wikipedia படிக்கச் சொல்லவும் …இந்த பகுதி தமிழிலும் உள்ளது …மலாக்கா மன்னன் பரமேஸ்வரன் வரலாறு கூட உள்ளது ….தேவை பட்ட எந்த விடயங்கள் அனைத்தையும் படிக்கலாம்
சமீபத்தில் ஓர் பெண் ஆசிரியையை சந்தித்தேன், பல ஆண்டுகள் ஆரம்ப பள்ளி நடத்தி வருகிறார். PMR வகுப்பு வரை மாணவர்களை தயார் செய்து UPSR /PMR இவற்றோடு ” கல்விப்புலமை” என்ற சிறப்பு வகுப்பையும் நடத்துகிறார் இதை ஆங்கிலத்தில் career guide என்றும் வைத்துக்கொள்ளாலாம்.எனக்கு வியப்பாக இருந்தது மேலும் கேட்டேன் ” பல பாடங்களை நமது அரசு நடத்துகிறது SPM வரை அந்த மாணவர் தாம் எந்த துறையை விரும்புகிறோம் என்றே தெரியாமல் படிக்கிறது பிறகு அரசாங்கம் திணிக்கிறது” இது சரி இல்லைங்க என்றார்.ஆதலால் என் கல்விப்புலமை என்ற சிறப்பு வகுப்பில் மாணவர்கள் DNA எதுக்கு தகுதி பெறுகிறதோ அதை நோக்கி என் பாடங்கள் தனித்து அமைகிறது என்றார். அதிர்ந்து போனேன் !!!
சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாங்கில் அமைத்துள்ள அனைத்துலக பள்ளி ஒன்றில் என் மகள் ஆங்கில சிறப்பு வகிப்பில் சேர்த்து படிக்க வைத்த போது பள்ளி விழாவில் இந்த கருத்தை ஒரு ஆங்கில chancellor சொல்ல கேட்டேன். இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால் DNA செய்து பிள்ளைகளின் கலவி துறை சார்ந்த திசை நோக்கி படிக்க வைக்கும் காலத்தில் நமது பெண்மணி ஆசிரியர் ஒரு உள்ளார் ஆனால் இந்த சமூகம் மேற்கண்ட வரண்ட கல்வியில் இன்னும் கல்விப்புலமை இல்லாமல் தவிக்கிறது. இதில் இனிமேல் மாதிரி பரிட்சை முடிவுகளை வைத்து டிப்ளோமா டிக்ரீ நுழைவுகள் இல்லையாம் இது 2014 – 2025 கல்வி கொள்கையில் ஒரு அங்கமா கேட்டு சொல்லுங்கள்?
உண்மையில் சிறந்த புள்ளிகள் பாடங்களில் எடுப்பதற்கும் –திறமைக்கும் தொடர்பு இல்லை ..இன்று உலகின் பல நாடுகளில் முன்னணியில் நிற்பவர்கள் ..பலர் தங்கள் கல்வியை முழுதாக முடிக்காதவர்கள் உதாரணம் BILL GATES (microsoft ) ,,காரணம் இவர்கள் சிந்தனை எல்லாம் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது RICHARD BARNSON (virgin ஏர்லைன்ஸ் )
இன்று சரஸ்வதி பூஜை. பள்ளிகள் வீடுகள் கோயில்கள் எல்லாம் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பூசைக்கு தெய்வ சிலைக்கு முன் நூல்களை அடுக்கி வைத்து மந்திரம் ஓதி வழிபடுகிறார்கள். புத்தகங்கள் வழிபாட்டுக்குறியவை என்பது இரண்டாம் பட்சம்தான். முதலில் புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்னும் உண்மையை அறியாமல் புத்தகத்தை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு நின்றால் அறிவு வானத்திலிருந்து தானே வந்துவிடப்போகிறதா?. பள்ளி ஆசிரியர்கள் சரஸ்வதி பூசையின் போது வழிபாட்டு அம்சங்களை விட வாசிப்பு தொடர்பான போட்டிகளையும் கருத்தரங்குகளையும் பள்ளிகளில் நடத்தினால் பொருத்தமாக இருக்கும். அந்த வழக்கம் இல்லாததால்தான் நம் பிள்ளைகள்(ஆசிரியர்களும்தான்) புத்தகத்துக்கு மணி அடித்து கையெடுத்து கும்பிடு போட்டுவிட்டு தொலைகாட்சி பார்க்க அமர்ந்து விடுகிறார்கள்.
மன ஒருமைப்பாடுதான் வழிபாடு..கல்விக்கும் மன ஒருமைப்பாடே முக்கியம்.இது பல ஆய்வாளர்கள் கூற்று…இது மனதையும் சிந்தனையும் ஒருமைபடுத்தும் நோக்கமே “”சரஸ்வதி பூஜை “”போன்ற ஆன்மீக காரியங்கள்.இ.. நேர்மறை சிந்தனை தானே இது????.