சமூக வலைதளங்களில் வளர்ப்புப் புலி ஒரு பார்வையாளனை 20 நிமிடம் அடித்துக் கொன்றதே உலகமே பார்த்து வியந்து போகிறது. தகவல் புரட்சியின் வீரியத்தால் புலியிடம் சிக்கிய மனிதனைக் காப்பாற்ற மனம் இல்லாமல் ஒருவர் அதைப் படமெடுத்து வெளியிடுகிறார். புலி தாக்கியது கண்டு அவர் பதறவில்லை, நடுங்க வில்லை, நிதானமாக படமெடுக்கிறார்.
தகவல் புரட்சி உலகத்தில் தகவல்களை அதி விரைவாக மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரப்புவதில் ஏராளமான நன்மைகள் உண்டு. இதே மனிதன் இந்தப் படத்தை எடுத்ததற்கு பதிலாக இவரைக் காப்பாற்றப் பல துறை அதிகாரிகளுக்கும் உடனே தொடர்பு கொண்டிருக்கலாம்.
உயிரியல் பூங்காவில் இருந்த புலிக்கு இரை தேடிக் கொன்று தின்று பழக்கமில்லை. அது யாரோ அந்நிய உயிரி, தன்னைத் தாக்க வந்திருப்பதாக அஞ்சி அந்த மனிதரைத் தாக்கியிருக்கிறது. ஆனால் உயிருக்கு போராடும் ஒரு மனிதரை ரத்தம் சிந்தி, காயப்பட்டு, புலியின் வாயிலும் கூரிய நகத்திலும் உடலுறுப்புகள் கிழிபட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவியை பார்த்து உள்ளம் பதறாமல் நிதானமாக ஒருவர் படம் எடுத்தால் அவர் மனிதராக இருக்க இயலாது. மனித நேயம் செத்துப்போன ஒரு இயந்திரமாகத் தான் அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களால் மக்களுடைய மக்களின் ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மக்களின் துயரம் மக்களுக்கே புரியவில்லை. அண்டை அயலாருக்கு உதவும் குணம் இல்லை.
மக்கள் கேமராவிற்கு அடிமையாகி ஸ்டேட்டஸ் போடும் போதையில் மூழ்கிக் கிடக்கின்றனர். யானை பாகனைக் கொன்றாலும் படம்பிடிக்கின்றனர். புலி ஒரு மனிதனைக் கொன்றாலும் படம் பிடிக்கின்றனர். படம் எடுப்பதும் அதை வெளியிடுவதும் ஒரு போதை தரும் விஷயமாகிவிட்டது.
மனிதரை மனிதர் நேசிப்பதும், ஓடிப்போய் உதவுவதும் மறைந்துவிட்டது. யார் எப்படி கஷ்டப்பட்டாலும் எனக்கென்ன? எனக்கு வராதவரை எல்லாமே எனக்கு வேடிக்கை தான் என்ற மனோபாவம் அதிகரித்துவிட்டது.
புலிக்குத்திக் கல் என்று கிராமங்களில் மக்கள் வணங்கி வழிபடும் கற்கள் உண்டு. இவை புலியடித்து இறந்துபோன மனிதனுக்காக நட்டப்பட்ட நடுகற்கள். ஊருக்குள் புலி வந்தாலும் மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை புலி தாக்கினாலும் அந்தப் புலியை எதிர்த்து தாக்கிக் குத்திக் கொன்றவன் இறந்துவிட்டால் அவனை அவ்வூர் மக்கள் தெய்வமாக வழிபடுவார்கள். இன்றைக்கும் பல கிராமங்களில் மக்கள் வணங்கும் ஆண் தெய்வங்களில் புலி அடித்து இறந்த வீரர்கள் உண்டு.
ஊருக்காக வாழ்ந்தவர்களையும் உயிர் இழந்தவர்களையம் வணங்கி கௌரவிப்பது மனித மாண்பு. ஓர் உயிர் தவிக்கும் போது ஒரு உடல் துடிக்கும் போது ஒரு மனித மனம் அழுது கதறும்போது அவரை படம் எடுப்பதை ஆறறிவு பெற்ற மனிதன் செய்யலாமா? நல்லது, தீயது என்பதை பகுத்தறியும் ஆறாவது அறிவை மனிதனது தொழில்நுட்பம் தோற்கடித்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப புரட்சி வெற்றி பெற, மனிதநேயம் இங்கே தோற்றுவிட்டது.
கட்டுரை ஆசிரியர்:- யோகினி
நன்றி,
-தமிழ்மையம்-
புலியுடன் ”செல்பி” எடுக்க போன மடையனைதான் புலி தாக்கி இருக்கிறது ! அதையும் மனிதாபிமானம் இல்லாதவன் பொறுமையுடன் பதிவு செய்து இருக்கிறான் !
ஆளுக்கு ஒரு கதைய எழுதுங்க ,உண்மை தெரியாமல் எழுதுறேங்க ச்சி.
வேடிக்கை பார்த்தவர்கள் புலியை உசிப்பி கொண்டு இருந்தனர் ,சக மாணவர்கள் போட்ட சத்தத்தில் புலியோ அந்த மாணவனுக்கு ஆபத்து வந்து விடும் என்று அவனை பல்லால் கௌவி இழுத்து சென்றது ,புளியுடை பல்லு படாத இடத்தில பட்டு ,அதன் பல்லு தவர்தலாக கழுத்து நரம்பில் ஆழமாக பதிந்துவிட்டது அதனால் தான் அந்த மாணவனின் உயிர் பிரிந்தது .அந்த புலி அந்த மாணவனை கடித்து ஒன்னும் சாப்பிட வில்லை .அப்படியே விட்டு சென்றது .அவனி அப்படியே விட்ட சென்றது ,அதுக்கு என்ன அர்த்தம் ? புலி அவனை காப்பாற்றியது தவிர வேறு ஒன்னும் பண்ணவில்லை ,தவர்தலாக அந்த புலியின் பல்லு களத்தில் ஆழமாக இறங்கிதால் அவன் மாண்டான் .இதுதான் புலியின் எண்ணம் .முட்டாள் மனிதன் சொல்வது என்ன வென்றால் ,புலி அவனை கொன்று விட்டது என்று சர்வ சாதாரணமாக சொல்லி புலியின் மீது பலியை போடிரார்கள் ..முட்டாள் மனிதர்கள்
தமிழர் நந்தா சொன்னதும் சரிதான்
சீனாவோ பாகிஸ்தானோ போர் தொடுத்தால் இந்திய மண் அழியும்
மோகன் ரொம்ப சரியாய் சொன்னிங்க.சாதரமா ஒரு சின்ன மிருகம் கிடைச்சாலே அதை கொன்று முழுதும் சாப்பிடுவதுதான் புலியின் குணம்.ஆனால் அந்த மாணவனை புலி சாப்பிடவில்லையே.அந்த புலி அவனை மற்றவர்களிடம் இருந்து காபாற்றவேதான் அவனின் கழுத்தில் கவ்வி உள்ளது. அது தனது குட்டியை காப்பற்றதுக்கும் இதேதான் செய்யும்.அங்க சுத்தி இருந்தவன்கங்கா செஞ்ச தப்புனாலத்தான் அந்த மாணவன் உயிர் போனது.அதுக்கு புலி காரணம் இல்லை.அங்க இருந்த மனிதர்கள் காரணம்.
மோகன் சார், புலி கழுத்தில் கடித்து இழுத்து சென்றது உண்மை , அதன் பிறகு நீங்கள் பார்க்க வில்லையா. அதன் கால் விரல்களால் தலையை கீறி ஒரு கையை தனியாக பிடிங்கி கடித்து சாப்பிட்டு கொண்டிரந்ததை நீங்கி பார்க்க வில்லையா ? தலையில் பலத்த சேதம் , தலையில் ஓடு தெரிந்ததே ……
RAJA சார் ,புலி கழுத்தில் கடித்து இழுத்து சென்றது உண்மை,அதன் கால் விரல்களால் தலையை கீறி ஒரு கையை தனியாக பிடிங்கி கடித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது உண்மை .எல்லாமே உண்மை ,அந்த மாணவனின் ரத்த வாடையை ம்குர்ந்து நக்கி கொண்டு இருந்தது புலி .அதற்க்கு 5 அறிவு ,இந்த மாணவனுக்கு 6 அறிவு ,அது அவனை காப்பாற்ற நினைத்து ,அதுவுடைய எண்ணம் அதுதான் ,6 அறிவுக்கு எல்லாமே தெரியும் ,பாவம் புலி 5 அறிவுதான் ,என்னுடைய ஆதரவு அந்த புளிக்குடான் ,அந்த மாணவன் என் மகனாக இருந்தாலும் இறுதியில் என் ஆதரவு அந்த புளிக்குடான் போயி சேரும் ,இந்த காலத்தில் மனிதனை விட மிருகங்கள் எவ்வளவோ மேல் .நன்றி RAJA சார் ! அதற்காக புலியை பிடித்து ஜெயா பக்கத்தில் ஜெயிலில் போடா முடியுமா சார் ?
செம்ம காமடி போங்க,பாதுகாப்பற்ற மிருக கண்காட்சி கூடம் யென்று முடிவுக்கு வரலாமே,நாராயண நாராயண.
ஹி ஹி ஹி ! பூயோ? ஏழு அறிவு கொண்ட விளக்கெண்ணெய் டொங்கெரைல்
போடா வெண்ண
மோகன் &(மோகனா) ஒவ்வொரு கருத்து பதிவில் ஒன்று இரண்டு எழுத்து பிழைகள் இருப்பது சரியே !ஆனால் உம்முடைய பதிவில் மூட்டை கணக்கில் எழுத்துப் பிழைகள், ஒவ்வொரு செய்தி பதிவேற்றதிட்கும் உம்முடை கருத்து முதலில் வரவேண்டும் என்பதற்காக கண்டதையும் கிறுக்கி வைக்காதே? (இப்லிஸ் பெஹ)………ம்குர்ந்து நக்கி என்னது!! விளக்கெண்ணெய்!