யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கத் தயாராக இருக்கிறேன்!- கெலும் மக்ரே

callum_macrae_001இலங்கையில் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை நேர்மையானது, எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க கூடும்.

எமது வீடியோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டியது.

ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்க்கு எமக்கு புதிய ஆதராங்கள் கிடைத்தன.

ஒவ்வொரு நாளும் இலங்கை மீதான அழுத்தங்கள் இந்த விடயத்தில் அதிகரித்து வருகின்றன.

இலங்கையிடம் கேட்கப்படும் கேள்விகள் கடினமானவையாக, விடையளிக்க முடியாதவையாக மாறி வருகின்றன.

சர்வதேச விருதிற்கான நியமனம் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும் என கருதுகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் உட்கட்டுமான வசதிகளில் பாரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதன் பின்னாலுள்ள நோக்கங்கள் குறித்து கடும் கேள்விகளை கேட்கவேண்டும்.

புதிய வீதிகளும், புகையிரத பாதைகளும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ் மக்களை பொருளாதார ரீதீயாக பலவீனப்படுத்தும் நடவடிக்கைக்கே உதவப்போகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: