மாட்ரிட், அக்.20– ஸ்பெயின் நாட்டில் ‘கடாலான்’ பகுதியை ஒருங்கிணைந்து தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி அப்பகுதி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.
அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றன. அதனால் ‘கடாலான்’ என்ற புதியநாடு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது சட்டவிரோதம் என ஸ்பெயின் அரசு அறிவித்து தடை செய்தது.
அதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பார்சிலோனா நகரில் மாபெரும் பேரணியை நடத்தினார்கள்.
அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினால் ஆன கடாலான் சுதந்திர கொடியை ஏந்தி வந்தனர்.
‘‘இதுதான் எங்களுக்கு உகந்த நேரம்’’ என்பன போன்ற பேனர்களை ஏந்தி வந்தனர். முன்னதாக 3 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். வர இருக்கும் புதிய அரசு கடாலான் பிரச்சினையை கையாளும் என அரசு அறிவித்து உள்ளது.
அதற்கு பிரிவினைவாத இயக்க தலைவர் ஆர்தர் மாஸ் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். சுதந்திரம் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் ஓட்டுப் பதிவு மூலம் கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
போச்சுடா… அவனவன் தனி நாடு கேட்க ஆரம்பிச்சுட்டான். மனிதனை மனிதனா மதிச்சு அவனவன் உரிமையையும் மதித்திருந்தால் நாடுகள் எல்லாம் உலகமா மாறி இருக்கும். எல்லைக் கோடுகள் வெறும் பண்பாட்டுக் கோடுகளாக இருந்திருக்கும். மனிதனை மனிதனாக மதிக்காத ஆதிக்க சக்திகளின் அடாவடித்தனத்தால் ஜாதிக்கொரு நாடும் பிளவுகளும் உருவாகி இந்த உலகம் படித்த முட்டாள்களின் கூடாரமாக மாறப்போகிறது. எங்கள் ஊரில் ஒரு வடிகட்டிய முட்டாள் மந்திரி தன்னுடைய கருத்து என்று சீன ,தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டும் என்று கருத்து சொல்கிறானாம். தனிப்பட்ட கருத்து சொல்கிறவன் அமைச்சர் என்று இருந்துகொண்டு நாற்ற வாந்தியை எடுக்கக்கூடாது. இது போன்ற சின்னத்தனங்களால்தான் உலகம் நாசமாகப் போகிறது. மனிதாபிமானம், மனித நேயம், மனிதம் என்றெல்லாம் போற்றப்படும் நற்குணங்களெல்லாம், மனிதத்தனங்களெல்லாம் அறியாத,அவற்றை மதிக்கத் தெரியாத மிருகங்கள் பதவியைத் துஷ்பிரயோகம் செய்வதால் வந்த வினைதான் பிரிவினை.
சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தால் வஞ்சிக்கப் படும்போது அங்கு பிரிவினை தோன்றுவது இயல்புதான்.ஈழத்தில் நடப்பதும் அதே கதைதான்.ஆனால்,மற்ற நாடுகளில் பெரும்பான்மை அரசாங்கம் மனிதாபிமானத்தோடும் அனைத்துலக சட்டத்துக்கு மதிப்பு கொடுத்தும் நடந்து கொள்கின்றன.ஆனால் இந்த சிங்களவன்தான் சிறுபான்மை இனத்துக்கு எதிராக காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்கின்றான்.குள்ளநரி இந்தியா வேறு அவனுக்கு பக்கப்பலமாக இருப்பதால் அவனின் தான்தோன்றித் தனத்துக்கு அளவே இல்லை.