பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் தீபாவளி, ஹரி ராயா, சீனர் பெரு நாள், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளை ஒட்டி, நடத்தப்படும் அனைத்து பொது உபசரிப்புகளும் இன-மத நல்லிணக்கத்தை மேம்படுத்த வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதோடு, மட்டுமல்லாது, ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரின் உணவு, உடை, கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை மேலும் ஆழமாக அறிந்து கொள்வதற்கும் இது போன்ற பொது உபசரிப்புகளும் துணை புரிகின்றன.
தீபாவளி முடிந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், ஆங்காங்கே இன்னமும் “தீபாவளிப் பொது உபசரிப்புகள்” நடந்து கொண்டிருக்கின்றன. சந்தோஷம். ஆனால், தீபாவளிப் பொது உபசரிப்புகளில் இடம் பெறும் கலைப் படைப்புகள் தீபாவளித் திருநாளுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், சமயம்-பண்பாடு இவற்றுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது.
இது போன்றதொரு தீபாவளிப் பொது உபசரிப்பு, கடந்த வாரம் ஒரு திறந்த வெளி இடத்தில் நடைபெற்றது, கலை நிகழ்ச்சி என்ற பெயரில், ஒரிரண்டு பாடல்களைத் தவிர, அனைத்தும் குத்துப் பாடல்களும் விரசமான நடனங்களுமே! அருவருக்கத் தக்க அந்த ஆட்டங்கள் வந்திருந்த மற்ற இனத்தவரையும், முக்கிய பிரமுகர்களையும் முகம் சுளிக்க வைத்தன. ஏற்பாட்டுக்குழுவின் பொறுப்பாளர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவரோ, “இந்தப் பெண்ணின் இடுப்புக்கு உங்களால் ஈடுகொடுக்க முடியுமா?” என்று மற்ற கலைஞர்களிடம் “பெருமையாக” சொல்லிக்கொண்டிருந்தது, அங்கு அருகில் அமர்ந்திருந்த பொது மக்கள் காதுகளில் தெளிவாகக் கேட்டது.
நிகழ்ச்சியின் நோக்கம் என்ன, நம் பிரமுகர் யார், எந்த நிகழ்ச்சிக்கு எந்த மாதிரியான கலைப் படைப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற சாதாரண பொது அறிவு கூட இல்லாதவர்கள் “தீபாவளிப் பொது உபசரிப்பு” என்ற பெயரில் மேடைகளில் ஆபாச நடனங்களை அரங்கேற்றி வருவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
தீபாவளிப் பொது உபசரிப்பை ஏற்று நடத்தும் பெரிய மனிதர்களே, தீபாவளி என்பது சமயம் சார்ந்த திருநாள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களில் பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு ஆபாச நடனங்கள் தான் வேண்டும் என்றால், அதை உங்கள் வசதிக்கேற்ப இரவு விடுதிகளில் நடத்திக் கொள்ளுங்கள்; அல்லது வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளுங்கள். இந்து மதம் சார்ந்த தீபத்திரு நாளுக்காக நடத்தப்படும் “தீபாவளிப்பொது நிகழ்ச்சிகளில்” கலை என்ற பெயரில் ஆபாச – பண்பற்ற நடனங்களை திணித்து, இந்து சமயத்தின் புனிதத்தை களங்கப்படுத்தி விடாதீர்கள். இது ஏற்பாட்டுக்குழுவினருக்கு மட்டுமல்ல; கலைஞர்களுக்கும் தான்.
– கிருஷ்ணா ராஜ்மோகன்
சிலாங்கூர்
திரு. கிருஷ்ணா ராஜ்மோகன் உங்களுக்கு நன்றி. சொல்ல வந்த கருத்தை அருமையாக பதிந்துள்ளீர்கள். மலேசிய இந்து சங்கமும் மற்ற இந்து அமைப்புகளும் கவனிக்க வேண்டிய பிரச்சினை இது. அவர்கள் என்ன செய்வார்களோ?
கிருஷ்ண ராஜ் மோகன் அவர்கள் நல்ல விசியத்தை சொன்னார்.ஆனால் யார் எங்கு நடந்த நிகழ்ச்சி என்று சொன்னால்தான் அடுத்த தவறுகள் திருத்தப்படலாம். தெளிவாக சொல்லுங்கள் இலையேல் சொல்லவேண்டாம். பெயர் சொல்லாவிட்டாலும் இடமாவது உறைக்கும் அன்றோ? சிந்திக்கலாம் ,நன்றி.
என்னத்த சொல்லி என்ன அவபோது mr. கிருஷ்ண ராஜ் மோகன், வேறு வேலை இருந்தால் பாருங்கள்.
தீபாவளியை எப்போது மதத்தோடும் சமய விழாவாகா கொண்டாடினார்கள் ? என்னை கேட்டால் தீபாவளி ஒரு குத்தடிக்கும் தெருநாளாக மாறி ரொம்ப நாள் ஆச்சு . அதிலே இப்போ குத்தாட்டமும் செர்த்திருச்சி.
தீபாவளி – செத்தவனுக்கு கொண்டாடும் திதி.
அம்மா கிருஷ்ணா …,நான் இந்தப்பகுதியில் பங்கு பெறுவதை நிறுத்தி
சிலகாலம் ஆகிவிட்டது .
நம் சமுதாயத்தில் நல்லவர் எல்லாம் கருத்து சொல்வது குறைந்து…
உங்கள் கருத்தை வானொலி ,தொலைக்காட்சியோடு தொடருங்கள் …
நன்மக்கள் மகிழ்வர் /உணருவர் .
உங்கள் நண்பன் .
கலை
கலாச்சாரம் காக்க படவேண்டும். அது இனத்தை உயத்தும்
தமிழருக்கும் டிவாளிக்கும் என்ன சம்பந்தம் சாம்யோவ் ?
தமிழரின் போக்கிசங்கலான இலக்கியங்களில் வரலாற்று நூல்களில் உண்டோ ?
வடநாட்டு இந்திய கொண்டாட்டங்களில் மது மாது ஆடல் பாடல் அனைத்தும் இருக்கும் .. அவர்களின் கலாசாரத்தோடு கொண்டாடி மகிழ்கிறார்கள் .. இதில் உங்களுக்கேன் வலிக்குது ?
தை திங்கள் தமிழர் புத்தாண்டை கலை கலாசாரத்தோடு சிறப்பாக கொண்டாட இப்பவே திட்டமிடுவோம் ..
உடன்பிறப்பு சொன்னது சரியே தமிழனுங்க சும்மா கொஞ்சம் கூட மூளைய பயன்ப்டுட்டாமால் வட நாட்டுக்காரன் பெருநாளை அதாவது தன் இனத்தவன் இறந்த நாளை தமிழனுங்க தெரியாமல் சிறப்பாக கொண்டாடி மகிளுகிராணுங்க தமிழன் உலகும் முழுவதும் கேவலமாக இருக்க இந்த பெருநாளும் கரணம் தற்போதைய இளசுகளை ஆணும் சரி பெண்ணும் சரி அவர்களுக்கு தீபாவளி கொண்டடுவதான் இஸ்டம் போல தண்ணி அடித்து காம விளையாட்டில் ஈடுபட்டு கொண்டடுவதுதான் தீபாவளியாம் நம்பாவிடில் கொலேஜ் உனிவேர்சிட்டி மற்றும் ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்களை கேளுங்கள் இதுதான் பதிலாய் வரும் தமிழனுங்க மிகவும் கேவலமான நிலையை நோக்கி போயி கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே
நம்ப பழனிவேலுவும் mic மகளிர் அண்மையில் ஒரு குத்தாட்டம் போட்டது உங்களுக்கு தெரியுமா கமேரோன் ஹை லேன்ட் மக்களை விசாரித்து பாருங்கள் விவரம் வெளிவரும்
நன்றி , கிருஷ்ணா …ஹிந்து சங்க மத்திய செயலவை உறுப்பினர் பெயரிலும் ஒருவர் உள்ளார் ….
ஒரு கன்னட பித்தனை பகுத்தறிவு பகலவன் என கொண்டாடி அவரின் இறந்த நாளை ( திவசம்) மலை போட்டு ; கூடி கும்பிடு போடும் பகுத்தறிவு கூட்டம் – ஹிந்து பெருநாளை வட நாட்டு பெருநாள் -தென்னாட்டு பெருநாள் என்று இந்தியர்களை பிரித்து தான் பேசுவார்கள் ..
தீபாவளிக்கு தண்ணி அடிச்சதுதான் கேள்வி பட்டிருக்கேன். அது என்ன தீபாவளிக்கு காம விளையாட்டு? அதுதான் கேப்பார் மேய்ப்பார் இல்லாமல் நடக்குதே!. அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?.
இறப்புகளை திருவிழாவாக கொண்டாடுவது தமிழர் மரபு அல்ல. அதில் தமிழர் சமயமாகிய சைவத்திற்கு உடன்பாடும் இல்லை.
அதிரசம் – அச்சுமுறுக்கு – அப்பம் போன்ற எல்லாம் நமது அலட்சியத்தால் இன்று மலாய் பலகாரம் ஆகிவிட்டது..நாம் அவர்களின் நாசி லெமாக் கர்மத்தை கட்டிக்கொண்டு அழுகிறோம்..இன்னும் தமிழர் பண்டிகை -வட நாட்டு பண்டிகை – தமிழ் மொழி – சமஸ்கிருத மொழி என பேதம் பார்த்து இன்னமும் நாம் மூட நம்பிக்கையில் இருந்தால் – நாளை இவையும் அவர்களுக்கு தாரை வார்கபடும்..”இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ”
?எப்படியோ நாம் நாசமாய் போவதற்கு நம்மிடையே பல மூடர்கள் கிளம்பிவிட்டார்கள் வாருங்கள் ..! ராமாயணம் ;பாரதம் ;சமஸ்கிருதம் ;பூஜைகள் ; சடங்குகள் ; சம்பிரதாயங்களை அதனையும் அவர்ககுக்கு விட்டு கொடுப்போம்..பிறகு எப்படி நமக்குள் சண்டை வரும் ????
இந்த மலேசியா திருநாட்டில் தமிழனை அழிக்கவும் அவமானப்படுத்தவும் தமிழனே போதும். இப்படிபட்டவர்கள் இருந்தென்ன?
ஏம்பா இந்து தர்மரே, அப்படி என்ன தமிழர் உங்களுக்கு துரோகம் செஞ்சிட்ட மாதிரி தமிழர் பண்டிகையிலும், தமிழ் மொழியிலும் நிற்பதைக் காட்டிலும் வட நாட்டவர் பண்டிகையிலும், சமஸ்கிருதத்திலும் தங்களுக்கு மகா பெரிய அக்கறை, அனுதாபம். தாங்கள் தமிழர் இல்லை என்பதை தங்களால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. அதனால்தான் இந்து என்ற அடைமொழிக்குள் இருந்து கொண்டு தமிழர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்?. தங்களின் நிலையை ஒப்புக் கொண்டால் அப்புறம் தங்களுக்கும் கலை போன்றோரிடம் இருந்து அடி இடி மாதிரி விழும் என்று பயப்படுகின்றீர். தமிழனாக இருந்தால், தமிழனாக வாழக் கற்றுக்கொள். தமிழர் கலைக் கலாச்சாரத்தை பேணிக் காத்திடு. தமிழ் மொழியை தாரை வார்த்து விட்டு பிற மொழிக்கு அர்ச்சனை செய்யாதே. அவ்வாறு செய்வது தமிழுக்கும், தமிழருக்கும் செய்யும் துரோகம். அதுவும் தமிழ் மொழியின் பின் மறைந்துக் கொண்டு செய்வது நம்பிக்கைத் துரோகம்.
இறந்தவரின்பால் அன்பு கொண்டு நினைத்து மரியாதை செலுத்துவது தமிழர் மரபு. அதனால் பெரியாருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துவது தவறு என்று வாதிடுவோர் தமிழர் மரபு அறியாதவராகத்தான் இருக்க முடியும். தேவுடா!. தேவுடா!.
‘நக்கல் சுனம்பு’ சொன்னது சரிதான். கிருஷ்ணா என்ற பெயரில் ஹிந்து சங்க மத்திய செயலவை-யில் ஒருவர் இருந்தார். பல உயர் நிலை கருத்தருங்களில் சங்கத்தை பிரதிநிதித ஒரே பெண்மணி இவர்.. துணிச்சலாக ஆய்வுகளை முன்வைப்பார். ஆனால் அவர் ஹிந்து சங்கத்தின் அனைத்து பொறுப்புகளிலி இருந்து விலகி 3 ஆண்டுகள் ஆகிவிடன. அவர்தான இவர் என்று தெரியவில்லை. நல்ல கருத்தை எழுதியுள்ளார்.
சிலை வழிபாடே கூறுகெட்ட மூடத்தனம் என் கிண்டலடித்த ஈவே ராமசாமி நாயக்கரின் கொள்கையே மதிக்காமல் அவருக்கே ஊரு ஊருக்கு சிலைகள் வைத்து அவரின் திவச நாளை நினைவு நாள் என மாற்றி- தெருவுக்கு தெரு அஞ்சடியில் நிற்கும் அவரின் சிலைகளுக்கு மலை மரியாதை – வீர வணக்கம் -வீர சபதம் என சீரழிந்து வரும் பகுத்தறிவு கூட்டம்….கேப்பவன் கேனயன் என்றால் எருது மச்சான் முறை தான் கொண்டாடும் ….
கடவுள் இல்லை இல்லை என்று பெரியார் வழி நடப்போம் என்று சொல்பவன்தான் முழுக்க முழுக்க கடவுளை நினைக்கிறான். திராவிட கழகத்தில் இருப்பவர்களில் எத்தனை பேர் அதன் கொள்கையை புரிந்து நடப்பதில்லை.
“திவசம்” என்றால் “திதி” என்பதனின் திரிபு. திதி என்றால் பஞ்சாங்கத்தில் குறிக்கப் படும் ஒரு “நாள்”. அதுதான் நினவு நாள். அந்த நினைவு நாள் இறந்தவரை மனத்தால் நினைந்து அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையை நினைத்து அவர்தம் குடும்ப இளையோர் நன்றாக வாழ நினைக்கும் நாள். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் இளையோருக்கு அவரவர் மூதாதையாரை நினைவு படுத்தும் நாள். இது அமாவசைக்கு, அமாவசை ஆத்மா வந்து எள்ளும், நீரும் வை என்று சொல்லும் நாள் அல்ல. உடலை விட்டு பிரிந்த உயிர் மாதா, மாதம் அமாவாசைக்கு வரும், வருடத்திற்கு மாஹாளய அமாவாசைக்கு ஒரு நாள் வரும் என்ற “நம்பிக்கை” அல்ல. இப்படி நம்பிக் கொண்டே இருந்தால் இந்து தர்மத்தில் சொல்லும் “வினைப் பயன்” அடி பட்டுப் போகும். உடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்பொழுது மறு பிறவி எடுக்கும் என்று உங்க அப்பனாலும் சொல்ல முடியாது. எங்க அப்பனாலும் சொல்ல முடியாது. இன்று பிரிந்து இரண்டு வாரத்திலேயே மீண்டும் பிறப்பெடுத்து வேறு ஒரு உருவம் பெற்றால் அந்த உயிர் எப்படி மாதா மாதம் அமாவாசைக்கு எள்ளும், நீரும் கேட்டு வரும்?.இதற்கு பதில் சொல்லத் தெரிந்தால் அப்புறம் பெரியாரை நினைப்பது எதானால் என்று நான் பதில் சொல்லுகின்றேன்.
தமிழ் அறிஞர் தேனீ, திவசதுக்கும் திதிக்கும் என்ன சம்பந்தம்?
ஐயா தேனீ..மீண்டும் -மீண்டும் அந்த கழிசடை பகுத்தறிவு மூளையே நம்புகின்றிரே?? உங்கள் சொந்த மூளையை நம்புங்கள் ஐயா>>
என் சந்தேகம் ரொம்ப சிம்பிள் ; >>”சிலை வணக்கம் மூளையற்றவன் செய்யும் செயல்…” என காரி துப்பிய உங்கள் ஈவே ராமசாமி நாயக்குருக்கே வீதிக்கு வீதி சிலைகள் ஏன் ?? கல்லில் கடவுள் இருப்பாரா ?அந்த மாலை கல்லுக்கா /கடவுளுக்கா ? என கிண்டலடித்த அவருக்கு எதற்கு தெருவுக்கு தெரு சிலைகள் ?? அந்த மாலை மட்டும் நாயக்கருக்கே டைரெக்காக சென்று சேர்கிறதோ ?? இது எந்த ஊர் நியாயம் னேன் ??
மன்னிக்கவும் தேனீ அண்ணா உங்க விளக்கத்தில் சிறு திருத்தும் . இறந்தவர்களுக்கு இஷ்டம் போல திவசம் செய்ய குடாது என்பதைக்கு தான் திதி பார்த்து செய்ய சொன்னார்கள் . இறந்தவர்கள் யார் , அவர்களின் பாவ புனியம் அவர்கள் வம்சத்தை சேர்த்தவர்கள் செய்யும் திவசத்திலும் தர்பனதிலும் உள்ளது . வாரிசாக உள்ளவர்கள் இறந்தவர்களுக்கு அவர்கள் கடமையை உணர்த்துசெய்தால் இறந்த ஆத்மா 2 வாரத்திலோ இல்லை 2 இல்லை 2 வருடத்திலோ நமக்கு தெரியாது அனால் அவர்கள் மறுபிறப்பில் நல்லவர்களாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது . அது மட்டும் அல்ல உடலுக்குதான் அழிவே தவிர ஆத்மாவுக்கு கிடையாது . தனக்கு திதி பார்த்து தர்ப்பணம் செய்யும் பிள்ளைக்கு கண்டமே இருந்தாலும் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விடும் . செய்யும் காரியத்திலும் தடங்கல்கள் வராது நம்பிக்கை இல்லை என்றாலும் முயன்று பாருங்கள் வித்யாசத்தை உணர்விர்கள்
திருவிளையாடல் படத்தில் தருமி எனும் புலவருடன் இறைவனார் உரையாடியதாக வரும் வசனத்தில், நாகேஷ் ‘எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம், பதிலை நீரே சொல்லும் என்பார்”. அப்படி இருக்கு இந்துதருமரின் கேள்வி. எதிர் கேள்விக்கு பதில் தராமலேயே புதிய கேள்விக் கேட்பது தருமியை நினைவு படுத்தியது. என்னுளே சிரித்துக் கொண்டேன். அதற்குள் மங்கையின் கருத்தும் வந்துள்ளது. . ஓய்வு இருந்தால் இன்றிரவு பதில் கருத்து எழுதுவோம்.
சைவ சமயத்தில் திருவுருவ மேனி வழிபாட்டை மேற்கொள்வது இறைவனை அறிய வகையறியாது நிற்கும் சாமானியர்களும் சரியை, கிரியை எனும் படிநிலைகளில் நின்று இறைவனை உணர வேண்டி வகுக்கப்பட்டதாகும். இது ஆகம நெறிகளுக்கு உட்பட்டதாகும். அருவுருவமாகத் தோன்றும் இறைவனின் திருமேனியாகிய சிவலிங்கத்தையோ, கற்சிலையால் ஆன மற்றைத் தெய்வங்களின் திருமேனியையோ ஆகம முறைப்படி கருவறையில் நிறுவி (பிரதிஷ்ட்டை செய்ய) அதற்குரிய ஆராதனை செய்ய அங்கே இறைவனின் ஆற்றல் தோன்றும் என்பது மெய்ஞான நூல்களில் முடிபு. இவ்வாறு ஆகமத்தின் அடிப்படையில் நிறுவிய திருமேனிகளுக்கே நமது பற்றும், பக்தியும் இருக்க வேண்டும். அவ்வாறு நிறுவப்படாத எவ்வொரு திருமேனியும் அதற்குரிய மதிப்பைப் பெறா. அவை காட்சிப் பொருளே. அங்கே இறைவன் குடிகொள்வதில்லை. இதைத்தான், முறை இல்லாமல் ஒரு கூடாரத்தைப் போட்டு, நான்கு சுவர்கள் எழுப்பி சிமெந்து கலவையில் தன் மனதிற்கு ஏற்றவாரோ அல்லது கற்பனைக்கு ஏற்றவாரோ சிலைகளை வைத்துக் கொண்டு அதுதான் ஆலயம். அங்குதான் நான் நம்பும் தெய்வம் குடிகொண்டிருக்கின்றான் என்றால் அவ்வாறு மூட நம்பிக்கையில் இருப்பவனை என்ன செய்வது?. இவ்வாறான காட்சிப் பொருளை இறைவன் குடிகொள்ளும் இடம் என்று மூட நம்பிக்கையில் வாழ்ந்த தமிழர்களைத்தான் பெரியார் பகுத்தறிவால் “முட்டாள்” என்று கூறினார். அத்தகைய காட்சிப் பொருளான சிலைகளையே அவர் போட்டு உடைத்தார். ஏன், இறைவனை வெறுப்பதற்காகவா?. “இல்லை, போலிச் சாமியார்களை மாமியார் வீடுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக”. அவரும் நாத்திகம் பேசுவதற்கு முன் மெய்ஞான நூல்களைக் கற்றிருப்பார் என்பதே எமது முடிபு. ஆனால், ஆரிய வெறுப்பில் மெய் நெறியில் நிற்காமல் போனது அவரின் சுய விருப்பு வெறுப்புக்குடையது, இல்லையேல், மெய்நெறியில் இருக்கும் உண்மையும், பொய்மையும் பகுத்தறிவால் அவர் அறிந்திருக்க முடியாது. தொடரும்.
தெருவுக்குத் தெரு பெரியாருக்கு சிலை வைத்தது காட்சிப் பொருளே. எப்படி இந்தியாவில் மற்றத் தலைவர்களுக்கு எல்லாம் சிலை வைத்தனரோ அவ்வாறே!. அவரை வழிபடுவது எதனால் என்று வினவினீர். “வழிபடுதல்” என்பதற்கு “காட்டிய வழியில் பின்பற்றி நடத்தல்” என்பதே பொருளாம். அதனைச் செய்வது பகுத்தறிவாளர்கள். இதற்கு ஏன் விதண்டாவாதம் செய்ய வேண்டும்?. ஏன் ஆரிய வேதம் தோன்றிய காலம் முதலே இவ்வுலகில் பகுத்தறிவாளர்கள் இருந்திருக்கின்றார்களே. அவர்களையே “உலகாயதர்” என்று கூறும் இந்திய மெய் இயல் நூல்கள். எப்படி மெய்யியல் ஒரு தத்துவத்துறையோ, அதைப் போலவே இதுவும் ஒரு தனித் தத்துவத்துறை. இதற்கு மேலும் சென்றால், ஆரிய வேதத்தை மறுத்த வேதாந்திகளும் உண்டு. அத்தகைய கருத்துக்கள் உபநிடதங்களாகவும் உள்ளது. அந்த இரகசியத்தை எல்லாம் பொதுவில் போட்டு உடைத்தேன் என்றால் ஜாகிர் உசேனுக்கு அல்வா கொடுத்த மாதிரி தித்திக்கும். இது தேவையா இந்து தருமரே?. காட்சிப் பொருளான சிலைக்குப் போடும் மாலை உயிரை எவ்வாறு சென்றடையும்?. “சுவாஹ” என்று சொன்னால் போய் விடும் என்று மீண்டும் சொல்லாதீர். தங்கள் கேள்வியே பகுத்தறிவிற்கு ஒவ்வாதது. ஆகவே, நான் என் சுய அறிவில் நிற்கின்றேன். வேண்டுமானால் ஒரு மருத்துவரை அனுப்பி CT Scan செய்து பார்ப்போமா?.
மங்கை எமக்கு சோதிடப் பயிற்சி உண்டு. எம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நானே சோதிடர். சோதிடம் என்பது தனித் துறை. அதனை வேதத்தின் ஓர் அங்கமாக வைத்ததின் விளைவு இன்று இந்து என்று சொல்லப் படுவோர்களை வெகுவாக ஆட்டிப் படைக்கின்றது. சடமான கோள்களின் நிலையைக் கொண்டு உயிர்களுக்கு ஏற்படும் ஊழ்வினைப் பயனை சொல்ல வந்த கல்வி அறிவை இன்று எம்மக்கள் நவகிரக மூர்த்திகளாக வழிபடுவதைப் பார்த்தால் இதை “மூட நம்பிக்கை” என்பேனா அல்ல “முட்டாள்களின்” நம்பிக்கை என்பேனா?. எத்துனை பெரியார்கள் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாது விவேக் சொன்ன வார்த்தைகள்தாம் எம் நினைவுக்கு வருகின்றது., மங்கை, தாங்கள் வேதாந்த தத்துவங்களையோ, சித்தாந்த தத்துவங்களையோ கற்காமல் வைதீக பண்பாட்டில் நம்பிக்கைக் கொண்டு கருத்து எழுதுகின்றீர்கள் என்பது வெள்ளிடை மலை. எவ்வொரு உயிரும் அதனதன் வினைபயனுக்கு ஏற்றவாறே அடுத்தடுத்த பிறவியில் இறைவன் உயிருக்கு சஞ்சித வினையாக ஊட்ட உரு கொள்ளும். சித்தாந்தம் இவ்வாறு இருக்க, பரம்பரையினருக்கு தர்ப்பணம் செய்தால் அவரின் உயிர் நற்கதி பெரும் என்பது, பிள்ளையின் பிறப்பால் தாய் தந்தையினரின் கதி உரு பெரும் என்று இன்றைய சோதிடர்கள் வாய் கூசாமல் பொய் சொல்கின்றனரே அதைப் போலத்தான். தொடரும்.
மங்கை, தாங்கள் கூறிய “உடலுக்குதான் அழிவே தவிர ஆத்மாவுக்கு கிடையாது” என்பது சித்தாந்தக் கருத்து. இது உள் பொருள் “ஒன்றல்ல”, ஒன்றுக்கும் மேற்பட்டது என்று பகரும் சித்தாந்தக் கருத்தேயாம்.வேதாந்தம் பொருள் “ஒன்றே”, அது “பிரமம்” என்றே பகரும். என்று உயிர் முத்தி பெறுகின்றதோ அப்பொழுது அது பிரமத்துடன் ஒன்றாக கலந்து விடும் காரணம் உயிர் பிரம்மத்தில் இருந்து தோன்றியது என்பது வேதாந்தம். சித்தாந்தம் பதி வேறு, உயிர் வேறு என்று பகரும். பதி எப்படி உள் பொருளோ அதைப் போன்று உயிரும், மாயையும் உள் பொருளே என்று சித்தாந்தம் பகரும். ஆகவே, வேறுபட்ட மெய் இயல் தத்துவங்களை அறியாமல் தாங்கள் குழம்பிக் கொள்ள வேண்டாம். மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
பரவாயில்லேயே தேனீக்கு ஜோதிடம் கை வசம் இருக்கே.
லிட்டில் இந்தியாவில் எங்கையாவது உக்காந்து கிளி ஜோசியம் பார்த்து பிழைத்து கொள்ளலாம்.
தேனீ அண்ணா நீங்கள் சொல்வது போல தான் நானும் பல பரிகாரங்களை செய்வதை நிறுத்தி விட்டேன் . அதிகமான அர்த்தம் அற்ற முட பரிகாரங்கள் அதில் ஓர்
இரண்டு பிள்ளைகள் நன்றாக படிக்க முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தது இது இடையில் வந்த ஒரு தோழி முலமாக 1 முறை பால்குடம் எடுத்தேன் . பின் திட்டு வாங்கிய பின் விட்டேன் . காரணம் நாங்கள் முருகனை வணங்கியது இல்லை . அதே போலவே நவக்கிரகதையும் சுற்றினேன் . அதுவும் மூட நம்பிக்கை புசாரிகள் பணம் பறிக்கும் வேலை என்று சொன்னார்கள் v. இப்போது நான் எங்கள் குல தேவதையும் என் இஷ்ட கடவுளை மட்டுமே வணங்கு கிறேன் . மற்ற பரிகாரங்கள் குடும்பமாக செய்வதால் தவிர்க்க விருப்பம் இல்லை .
மங்கை, தங்களின் சமய வாழ்க்கை அந்த அபிராமியைப் போல் அறிவுடையதாக விளங்க வாழ்த்துகின்றேன். மூட பரிகாரங்களைப் பற்றி தாங்கள் சொல்லியதால் எம் அருமை தமிழர்களின் சமய மூட நம்பிக்கைளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய் விட்டதைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். தொடரும்
சனி பெயர்ச்சி என்றவுடன் எப்படி எல்லாம் நம் மக்கள் பயந்து, பக்தியுடன் யாகம் வளர்த்து சாந்தி பரிகாரம் செய்வதைப் பார்த்தேன். எதற்கு இவர்கள் இதனைச் செய்கின்றார்கள்?. சனி எனும் சடப்பொருளான கிரகத்தால் தனக்கு வரும் துன்பங்கள் நீங்கி விட வேண்டும் என்று நம்பிச் செய்கின்றார்கள். இப்படி செய்வது இவர்கள் அனுபவிக்க வேண்டிய ஊழ்வினைப் பயன்கள் அற்றுப் போகும் அல்லது குறைந்து விடும் என்று சோதிடர்களும், அருச்சர்களும் கூறும் பரிகார பூசைகளால் வந்த ஓர் அற்ப நம்பிக்கை. கெடுபலன்கள் நீங்கிப் போக அல்லது குறைந்துப் போக பலனை வேண்டி செய்யப்படும் யாகமானது சோதிடன் கூறும் ஊழ்வினைப் பயனே அர்த்தமற்றதாக்கி விட்டது. நாம் வணங்கும் பரம்பொருளான சிவபெருமானின் “பேராற்றல்” எனும் தன்மையும் பொய்யாக்கி விட்டது. திருநாள்ளாறு எனும் தளத்தின் கருவறையில் குடி கொண்டிருக்கும் தர்பநீஸ்வரர் என்ற நாமம் கொண்ட சிவபெருமானுக்குப் பயந்து திருகோவிலுக்கு வெளியே சனி என்ற மூர்த்தி நின்றான் என்று உணர்த்துவதே நளன் தமயந்தி கதை. இன்று இந்த சனி மூர்த்தி சர்வல்லமை பொருந்திய அந்த கருவறை கதாநாயகனையும் வென்று விட்டது எப்படி?. சோதிடன், அருச்சகர், ஆலய நிருவாகம் என்று மூன்று தரப்பினரும் போட்ட கூட்டுக் களவாணித் திட்டமா அல்ல பரம்பொருளின் பேராற்றலை மறந்த தமிழர்களின் சமய சீர்கேடா? அல்ல சோதிடம், புராணம் ஒருங்கே சேர்ந்து நம் அறிவை ஆணவமலம் எனும் இருளில் அழுத்தி நின்றதாலா?. இவை அனைத்துமே அதற்கு காரணம் என்று சொன்னால் தவறாகாது. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய சைவ ஆதினங்களே தத்தம் வாயைப் பொத்திக் கொண்டு சிவனே என்று இருந்தால் சைவம் தழைத்தோங்குமா?. சிந்தியுங்கள் ஆதின கர்த்தர்களே. நமது சைவத்தின் பொற்காலத்தை மீட்டுக்க தங்களின் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து சைவத்தின் உண்மைத் தத்துவங்களை வானுயர அந்த சனி மூர்த்திக்கே உரைக்கும் வண்ணம் எடுத்துரையுங்கள். தமிழர்களின் சைவ சமயம் நேர்படும். இல்லையேல், தமிழரின் சமய சீர்கேடு அந்த சிவபெருமானுக்கே வெளிச்சம். எல்லாம் அவன் செயல் என்று இருந்து விடாமல் தங்கள் செயல் என்னவென்பதை உணர்த்துங்கள் ஆதின கர்த்தர்களே. எல்லாம் வல்ல எம்பெருமான் தங்களுக்கு வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமாறு எம்பெருமானிடம் உருகி வேண்டுகின்றேன்.
தேனீ அவர்களுக்கு என் பாராட்டுகள். இது தொடர் என் கட்டுரை வரும் பகர்வோம். தமிழளர்களையும் சைவ சமயத்தையும் உணர்த்துவோம். வாழத்துகளுன் நன்றி.
உண்மை தான் தேனீ அண்ணா 16 ம் தேதி சனி பெயர்ச்சி ஆரம்பம் ஆனது , தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அலைவரிசையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்தனர் , , கேரளா டிவி ஆந்திர டிவி லே அதை பற்றி ஒன்றுமே ஒலிபரபவில்லை இதை பற்றி கேட்ட பொது அவர்களுக்கே
தெரியவில்லை ஒருவேளை ஆந்திரா வுக்கும் கேரளாவுக்கும் இடம் மாறி போன
தமிழர்கள் தான் சனிஸ்வரனுக்கு எள்ளு விளக்கு
வைக்கின்றனர் போலும் . அப்படியானால் என்ன அர்த்தம் ? நாம் அனைவரும் நம்மை ஹிந்துக்கள் என்றாலும் வழிபாடு ஒன்றாக இல்லை. அதே போல தைபுசமும் . சனிஸ்வரன் தமிழர்களை நன்றாகவே பயம் பட வைதிருகின்றார் .
தைபுச அச்சம் தேவை இல்லை!
ஏனெனில் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை!
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க (1)
ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க (2)
இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிகஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க (3)
ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆகஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏக இலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க (4)
உ றுதியாய் முன்கை தன்னை உ மையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க (5)
ஊண்நிறை வயிற்றை மஞ்சை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உ ந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க (6)
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க (7)
ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க (8)
ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க (9)
ஒலியெழ உ ரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேல் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க (10)
ஓங்கிய சீற்றமே கொண்டு உ வணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க (11)
ஒளவியமுளர் ஊன் உ ண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க (12)
கடுவிடப் பாந்தன் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க (13)
ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உ கமிசை இவையால், எதற்fகுஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க (14)
சலத்தில் உ ய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உ ள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க (15)
ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க (16)
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க (17)
இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க (18)
தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உ டற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க (19)
நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உ று வலிப்போடு எழுபுடைப்பகந்த (ர)aதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க (20)
பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உ ருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் aIம் வேல் காக்க (21)
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உ ள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க (22)
யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க (23)
ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க (24)
லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நௌiய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர் காக்க (25)
வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க (26)
இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
வழங்கும் நல் ஊண் உ ண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க (27)
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தௌiநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க (28)
இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்கைத்தே, திகழ்பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க (29)
இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. (30)
ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று
தேனீ அவர்களே, நல்ல விளக்கம் தந்தீர்.உம்மை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உங்கள் தொலைப்பேசியின் எண்ணை எனக்கு தெரிவிக்க என்னைத் தொடர்புகொள்ளவும்.என் தொலைபேசியின் எண் வருமாறு: ( IDD60 )0134554050 வானம்பாடி.