பொங்கல் பண்டிகை : ஏன்? எதற்கு?
“பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும்.
அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்.
இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.
எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.
போகி பண்டிகை
“போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள்.
இந்திரனுக்கு “போகி’ என்றொரு பெயர் உண்டு.
எனவே இந்நாள், “இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும்.
மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன்.
அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன்.
வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!
எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.
தற்போது , “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள்.
அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள்.
போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.
அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று “டயர்’களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது.
இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன.
ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்?
எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு.
அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது.
அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்.
இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள்.
சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் “பால்கனி’யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்;
தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள்.
இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள்.
நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
அது சரி, “மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே’ என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோஸ பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன.
“ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன.
“ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர்.
அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே!
இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர்.
அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை’ நடக்க வைப்பர்.
பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு “அங்க வஸ்திரம்’ போர்த்தி, மரியாதை செய்வார்கள்.
ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!
ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு.
தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது.
நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
“உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை’ என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர்.
நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை.
திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான “வள்ளுவ பூஜை’யாகும்.
இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது “கனு’ பொங்கல்.
அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
“காணும் பொங்கலும்’ இந்த நன்னாளே!
அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம்.
சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர்.
ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது.
இன்றைய “சீரியல்’ உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது.
இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!
ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், “சூரியனை’ கண்ட பனிபோல விலகட்டும்!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
-ப.உ.லெனின்
4.சரியான எழுத்தை தேர்தெடுத்து எழுதுக.
அவர் கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கு!
மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அவர்களின் கருத்துகளை அலது ஆய்வுகளை; தங்கள் கருத்தாக எழுதி மக்கள் கருத்து பகுதிக்கு அனுப்பலாமே!
Anonymous wrote on 25 April, 2015, 20:44
4.சரியான எழுத்தை தேர்தெடுத்து எழுதுக.
இப்படி எழுதுவதற்கு பதில் எப்படி சரியான எழுத்தை தேர்தெடுப்பது என்று தாங்கள் எழுதினால் செம்பருத்தி. கோம் வாசகர்களுக்கு நன்மை பயக்கும்.
அரம்பிசிடைங்கயா அரம்பிசிடைங்கயா …..
இந்த கட்டுரையாளர் , இந்து மதத்தில் ஊறிய புண்ணாக்கு. தமிழர் பண்டிகையில் இந்திரன் என்ற காமன் எப்படி வந்தான் ? செம்பருத்தி ஆசிரியர்களே ! எவன் கட்டுரை எழுதினாலும் பிரசுரம் செவீர்களா ? இதுதான் கருத்து சுதந்திரமா ?
இந்த கட்டுரையாளர் மத அடிப்படையில் எழுதுகிறார் என்று வாதிடுவோர் பொங்கலக்கு இன அடிப்படையிலான சான்றுகளுடன் கருத்து எழுதலாமே!!!??? உங்கள் வீட்டிலேயே போங்கள் வைக்க பூசாரி குருக்கள் சொல்லும் நேரத்திற்காக காத்திருக்கும் பெண்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு சமூகத்துக்கு அறிவுரை சொள்ளவந்துட்டாணுங்க!!!
மனிதர்கள் யாரும் விளக்கம் கேட்டால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் ! மீன் பேசும் மொழியெல்லாம் எனக்கு தெரியாது ! குறிப்பாக மயிரு மீன் மொழி !
பொங்கலக்கு இன அடிப்படையிலான சான்றுகளுடன் கருத்து எழுத வக்கில்லாத தமிழர் நந்தா போன்ற பெ. கோழிகளின் கொக்கரிப்பினை கேட்டா சிரிப்புதான் வருது!!!
உழவன் மடிகிறான் பொங்கல் தேவையா ? என்ற தலைப்புக்கு எனது கருத்துக்களை படிக்காமல் ,சந்திலும் பொந்திலும் பீ குட்டையில் வாழும் மயிரை மீனுக்கு நான் சொல்வது கண்டிப்பாக விளங்காது ! தமிழர் பண்டிகைக்கு இந்திரன் என்ற தேவ லோக காம வெறியன் எப்படி நுழைந்தான் என்பதுதான் என் கேள்வி ? இதுக்கு பதில் சொல்லிவிட்டு, என்னை என்ன வேண்டும் என்றாலும் திட்டு, பீ குட்டை மயிரை மீனு !
லெனின் ஒரு புரட்சியாளன். அவன் பேரை வைத்துகொண்டு எப்படி இப்படி ஒரு கட்டுரை எழுதுவது .
திருவள்ளுவரை மட்டும்தான் விடுவைதிருந்தாங்க . இப்ப அவர் பேரிலும் பூஜையா?
சூரியன் பகவான் யாருக்கு? முப்பதுகோடி தேவர்கள் எங்க வந்தாங்க
எந்த ஒரு மானமுள்ள தமிழனும் இந்த கூற்றை ஏற்க மாட்டான்.
நாங்க கிருஸ்தவ தமிழர்கள்.. நாங்க நல்ல நேரம் பார்ப்பது இல்லை. உழைப்பாளிகளுக்கு எல்லாமே நல்ல நேரம் தான். அந்த காலத்தில் நம் முன்னோர்கல் யாரும் நல்ல நேரம் பார்த்து பொங்கல. நாங்கள் வாழ்வது வள்ளுவர் காட்டும் நெறியில்,. பொங்கல ஆரிய நேரில் கொண்டு போகாதீங்க .
தை திங்கள் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு என்பதை சொல்ல மறந்துடீங்க .
எங்கள் வழி வள்ளுவர் வழி. ஆண்டு தை முதல் நாள்.
வாழ்க தமிழர்.
உலகச் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள்…
முக்கிய அறிவிப்பு
——————————-
இன்னும் சில மணித்துளிகளில் இந்தோனிசியா நாட்டில் பாலித்தீவுக்கு அருகில் ஈழத்தமிழரான மயூரன் சுகுமாறன் உள்ளீட்ட 9 சிறைவாசிகள் மரண தண்டனை என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட உள்ளார்கள்.மரண தண்டனை என்கிற மனித பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரான தண்டனை முறையை தமிழர்கள் உள்ளீட்ட பல இனங்கள் எதிர்த்து போராடி வரும் இவ்வேளையில் பகிரங்க கொலையாக நிறைவேற்றப்பட இருக்கிற ஒரு தமிழர் உள்ளீட்ட 9 மானுடர்களின் மரண தண்டனை மிகக் கொடுமையான ஒன்று. துப்பாக்கிகளால் சுட்டு கொல்லப்படப் போகும் மயூரன் உள்ளீட்டவர்களின் மரண தண்டனை மானுட வாழ்விற்கே முரணான அம்சம்.
குறிப்பாக மயூரன் தனது சிறை வாழ்க்கையில் ஒரு மாபெரும் ஓவியராகவும், அவரது ஓவியங்களை விற்று போதை மருந்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறு வாழ்விற்கு உதவும் மனித நேயராகவும் விளங்கினார் என்பதை அவரது சிறை ஆளுநர் மூலம் அறிகிறோம். மேலும் சிறை ஆளுநரே மயூரனுக்கு எதிரான மரண தண்டனையை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
தமிழ் இனத்தின் மகனான மயூரனுடன் மரண தண்டனையை சந்திக்க இருக்கும் அனைவருக்காகவும் நாம் இந்த நேரத்தில் உலகச்சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்போம்.
இந்திய முன்னாள் பிரதமர் இராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு தூக்குக் கயிற்றின் நிழலில் இன்னமும்..முழுமையான அபாயம் நீங்கா நிலையில் வாழ்ந்து வரும் பேரறிவாளன் ,முருகன்,சாந்தன் ஆகியோர் போன்றே தமிழர் மயூரன் அவர்களும் உயிருடன் வாழ அனுமதிக்கப்பட்டால் உலகச் சமூகத்திற்கு பயன்படும் ஒரு பொன்னான வாழ்வை வாழ்வார் என்பது உறுதி…
காலங்காலமாக இனப்படுகொலைகளால், இன ஒதுக்கல்களால் பாதிக்கப்பட்டு துயருற்று நிர்கதியாய் நிற்கிற தமிழ்த்தேசிய இனம் தனது மற்றொரு மகனை மரண தண்டனை என்கிற கொலை மூலம் இழக்கப் போகிறது.
இந்த இறுதி வேளையில் இந்தோனிசியா அரசிற்கும், ஐ.நா மனித உரிமை அமைப்பிற்கும் தமிழர் மயூரன் உள்ளீட்ட 9 மனிதர்களின் மரண தண்டனையை உடனே தடுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மின்னஞ்சல்கள் மூலமாக தனது இறுதி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அறிவார்ந்த ,மனித நேயமிக்க உலகச் சமூகமும் நடக்க இருக்கிற இந்த மாபாதக கொலைகளை தடுத்து நிறுத்துமாறு நாம் தமிழர் கட்சி பணிவுடன் கோருகிறது..
மரண தண்டனை ஒழிப்போம். மனித நேயம் காப்போம்.
(இப்போது 29/4 2015 காலை மணி 5.15 கடைசி செய்திப்படி
மயூரான் சுகுமாரன் என்ற கைதியின் உயிர் குண்டுகளால்
வீரசாவாகவே முடிந்துள்ளதாம். உலக மயிரு அமைப்பின்
ஒருத்தன் பேச்சையும் அந்த பிச்சக்கார நாடு கேற்க வில்லையாம்)
இலங்கை தமிழன் மயூரன் ! அவனது ஈழ மண்ணுக்காக உயிர் இழந்திருந்தால் பெருமை பட்டு இருக்கலாம் , பாவிப்பயல் போதை பொருள்ளுக்காக உயிர் விட்டான் ! தமிழன் என்பதால் மட்டும் என் மனம் கனக்கவில்லை ! மானிடனின் உயிரை மனிதனே பறிப்பதா ?சட்டம், அரசாங்கம் என்ற பெயரில் அதுவும் ஒரு கொலையே !
நந்தா அவர்களே , உங்கள் பதில் கருத்துக்கு மயிரை மீன் பதில் சொல்லவே இல்லை போலும் ? இந்நேரம் ஏதாவது ஆரிய மலத்தை தின்று தூங்கி கொண்டிருக்கும் .அல்லது இந்த மயிரை மீனை பங்களாதேஷ்காரன் வறுத்து தின்று இருப்பான் .
அட மாரியாத்தா!. அம்மா மாரியாத்தா உங்களைக் கொண்டு போயி எங்கேயோ பதுக்கி வச்சிட்டாங்க போலிருக்கே. அப்ப மாரியம்மன் கோவில்களை எல்லாம் தமிழர் கட்டியது மண்ணாகிப் போகவா?. மாரியாத்தா மழையைக் கொடுக்கவில்லையா?. அப்ப நம்ம தமிழர்கள் மாரியாத்தாவ சும்மாதான் நம்பிக்கிட்டு இருந்தார்களா?. இதை முன்னமே எங்களுக்கு தெரிவிச்சிருந்தா மாரியம்மனுக்கு கோவில் கட்டியதற்குப் பதிலாக இந்திரனுக்கு கோவில் கட்டியிருப்போமே.
“வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன!”.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!”.
ஆரிய வேதத்தில் இந்திரன் என்ற சிறு தெய்வத்தை வேண்டி என்னென்ன அவிர்பாகம் கொடுத்தார்கள் என்று தெரியாதோ தம்பிக்கு. சும்மா, சும்மா ஆரிய வேதத்தை அறியாமல் நோண்டிகிட்டு இருக்காதிங்க. வெளியே எடுத்துப் போட்டால் வாந்தி எடுத்து விடுவீர்கள்.
இவ்வுலகில் தவறு செய்யாத மனிதர் யார்? மயூரனின் தவறு மன்னிக்கக்கூடியதே — மனது கனக்கிறது– எனினும் நியாயம் எங்கே என்று நான் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன். அதிலும் சிறு பெண் குழந்தைகளை பாலியல் வியாபாரத்திற்க்காக கடத்தி செயல் படும் ஈன கும்பல்களுக்கு நம்முடைய பதில் என்னவாக இருக்க வேண்டும்?
முப்பத்து முக்கோடி தேவர்களும் முத்தி பெற்ற ஆன்மாக்கள். பசுவில் இருப்பதோ ஓர் உயிர். அப்ப முப்பத்து முக்கோடி உயிர்கள் பசுவில் உறைவதாகச் சொன்ன பெரியோர்கள் யாரோ?. அவர்களைப் பார்த்து கட்டுரையாளரையும் பார்த்து ஒரே கேள்விதான் கேட்க வேண்டும். இந்திய மத தத்துவ நெறிகள் தெரியாமல் ஏன் அதனுள் மூக்கை நுளைக்கின்றீர்கள்?. ஏன் மக்களை பொய்யான கருத்துக்கள் வழி திசை திருப்புகின்றீர்கள்?. அந்த துறையில் போதிய ஞானம் இல்லையானால், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எழுதாமல் அதை விடுத்து எழுத பழகிக் கொள்ளுங்கள். இது தே.மு. கட்சியின் பத்திரிக்கை அல்ல. பறப்பது வெள்ளைக் காக்க என்று தலைவர் கூறினால், ஆமாம், ஆமாம் என்று தலையாட்ட!.
keras kepala கை ! உங்களோடு செம நகைச்சுவை ! விடுங்க, இதோடு மயிரை மீன் வேறு பெயரில்தான் வரணும் !
“பொங்கல் பண்டிகை ஏன் எதற்கு -ப.உ.லெனின் கேள்வி இதுவே.” அதற்க்கு இங்கே பயன் படுத்தி இருக்கும் வரிகளை பாருங்கள். (மயிரை மீன் – ஆரிய மலத்தை – பங்களாதேஷ்காரன் – வாந்தி – பாவிப்பயல் போதை – ஈன கும்பல்களுக்கு – குழந்தைகளை பாலியல் வியாபாரத்திற்க்காக – உயிர் குண்டுகளால் வீரசாவாகவே – துப்பாக்கிகளால் சுட்டு கொல்லப்படப் – சந்திலும் பொந்திலும் பீ குட்டையில் – லெனின் ஒரு புரட்சியாளன் – பெ. கோழிகளின் கொக்கரிப்பினை )…………………………………..நண்பர்களே நீங்கள் எல்லாம் தமிழை வளர்க்க பாடு படுவீர்கள், தமிழர்களின் கலாச்சாரத்தை வளர்க்க பாடு படுவீர்கள் என்று நான் நினைத்து கொண்டிருக்கிறான்…..ஆனால் இங்கே ….இப்படி தமிழ் அசிங்க படுகிறது ….. இது தேவையா ?
Dhilip 2 ,அங்கு தரமான கேள்விகள் உன் கண்ணுக்கு புலப்படவில்லையா ? கோளாறுகளை சுட்டிக்காட்டும் நீ, ஏன் மற்றவரின் கருத்துக்கள் உன் கண்ணுக்கு தென்படவில்லை ? ப உ லெனின் கட்டுரைக்கு உங்களின் கருத்தென்ன ? விவாதிப்போம் , தமிழர் பண்டிகை பொங்கலுக்கு முதல் நாள் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பது வழக்கம் ! மாரி என்றால் மழை , அம்மன் என்றால் தாய் ,காலையில் ஆதவன் உதையமாகும்போது நடக்கும் நிகழ்வு இது . நன்றியும் பிராத்தனையும் கொண்ட திருநாள் தமிழருக்கு , இந்த ஆரிய கடவுள் இந்திரன் எப்படி வந்தான் என்று நீங்களாவது சொன்னால் தமிழர்கள் நாங்கள் தெளிவு பெறுவோம் !
தமிழர் நந்தா! யோவ் நீ எந்த நாட்டில இருக்கே??? மலேசியாவில் எந்த தமிழன் வீட்டில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு மாரியம்மனுக்கு கோயிலில் போங்கள் வைக்கிறாங்க??? நல்லா புழுகு மூட்டையை அவுத்து விடுறே!!! புத்தகத்தில் படித்ததை எல்லாம் இங்கு வந்து சொல்லாதே!!! எதார்த்தத்தில் என்னா நடக்குதுனுபாரு!!! போகி பண்டிகைன்னு சொல்லிகிட்டு பழைய துணிகளை எரிக்கும் கூட்டம் நிறைய இருக்கு!!!
தமிழர் நந்தா அவர்களே, ப.உ.லெனின் கேள்வி என்ன என்றால் :”பொங்கல் பண்டிகை ஏன் எதற்கு ?” ஆனால் அந்த கேள்விக்கே சரியான விளக்கம் தரமுடியாமல் தேவைக்கு அப்பாற்பட்ட வார்த்தைகளை மட்டும் பயன் படுத்தி, இன்னும் ஒருவருடன் சண்டை மட்டும் பிடிக்க முயற்சி செய்யும் உங்களுடன் நான் வாதாட விரும்ப வில்லை. அது மல்லாக்க படுத்து கொண்டு ….
தமிழரின் பொங்கலுக்கு ” சரியான ஆரிய ” சாயம் புசியுள்ளார் லெனின் !!!
இப்படியே தமிழனின் ஆனதும் ஆரிய சாயம் பூசப்பட்டு இப்பொழுது அவை பிச்சக்கார நாடோடி வசம் போய்விட்டது ,இப்பொழுது போங்கலும்மா ?
பொங்கலுக்கும் ஆரிய கடவுள்ளுக்கும் அறவே சம்பந்தம் இல்லை
இனியும் தமிழர் உடைமைகளை கண்டவனெல்லாம் ஆட்கொள்ள நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டோம் !!!
திலிப் அவர்களே, லெனின் கட்டுரை மற்றும் அவருடைய ஆரிய சாயம் பூசப்பட்ட விளக்கம் அவரின் கேள்வியின் பதிலே. ! அந்த கட்டுரை தான் அந்த விளக்கம் / பதில் !!!!
நன்றாக படியுங்கள் …….
கண்மூடி தனமான ஆதாரமற்ற கட்டுரைகளை இங்கு பிரசுரிப்பது கண்டதனதிர்குரிஉஅது , அதை யாம் கண்டிக்கின்றோம் ..
தமிழனின் உடமைஎன்றால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற போக்கிற்கு முதலில் முற்றுபுள்ளி வைக்க வேண்டும் .
“Authority ” இல்லாத படைப்புகள் பிரசுரிக்கபடகூடாது !!!!
கண்டிக்கிறேன் !!
அவர் கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கு!
மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அவர்களின் கருத்துகளை அலது ஆய்வுகளை; தங்கள் கருத்தாக எழுதி மக்கள் கருத்து பகுதிக்கு அனுப்பலாமே! பொங்கலக்கு இன அடிப்படையிலான சான்றுகளுடன் கருத்து எழுத வக்கில்லாத தமிழர் நந்தா, tamil தமிழன், Theni , அம்மை, போன்ற பெ. கோழிகளின் கொக்கரிப்பினை கேட்டா சிரிப்புதான் வருது!!! அட போங்கையா! பல் இல்லாத கொ எடுத்த புலிகளே!!! கட்டுரையாளரை திட்டுறேங்களே ஒழிய தகுந்த ஆதாரங்களுடன் பொங்கலுக்கு இன அடிப்படையிலான சான்றுகளுடன் கருத்து எழுதி இன்னும் சித்திரை வருடப்பிறப்பே தமிழ் புத்தாண்டு என பின்பற்றி வாழும் பெரும்பான்மையான பாமர தமிழர்களை விழிப்படைய செய்யுங்கள்!!! போகி பண்டிகைன்னு சொல்லிகிட்டு பழைய துணிகளை எரிக்கும் கூட்டம் நிறைய இருக்கு!!! உங்கள் வீட்டிலேயே போங்கள் வைக்க பூசாரி குருக்கள் சொல்லும் நேரத்திற்காக காத்திருக்கும் பெண்கள் கூட்டத்தை திருத்துங்கள்!!! இப்படி தங்களிடம் நிறைய குறைகளை வைத்துக்கொண்டு கட்டுரையாளரை வைது யாது பயன்???
மாற்று கருது….எழுத வேடியாதுதானே புத்தம்,இசுலாம் மற்றும் கிருத்துவத்தை பற்றி, தைரியம் இருந்தால் ……அப்பொழுது தெரியும் எது பேச்சு சுதந்திரம் என்று…
நாங்கள் யாரும் சித்ரிரையை,போகியை பார்பன ந… சொல்லும் நேரத்தில் போங்கள் வைத்து கொண்டாடவில்லை , இவையெல்லாம் மயிரை போன்றவைகல் செய்து விட்டு ஏன் மற்றவர்கள் மீது பலி போடுகின்றன ?????
பெரும்பாலான தமிழர்கள் தமிழ் முறைப்படிதான் போங்கள் வைக்கின்றனர் மயிரை போன்ற சில அறிவிலிகள் தவிர. …..
வேற்று இனத்தையும் மதத்தையும் இங்கு இழுத்து சிண்டு முடித்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைக்கும் மூடர்களே!!! மாற்றுக் கருத்து உள்ளவர்கள் அவர்களின் கருத்துகளை அலது ஆய்வுகளை; தங்கள் கருத்தாக எழுதி மக்கள் கருத்து பகுதிக்கு அனுப்பலாமே! பொங்கலக்கு இன அடிப்படையிலான சான்றுகளுடன் கருத்து எழுத நான் கேட்டுக்கொண்டதற்கு முறையான கட்டுரையை எழுத வக்கில்லாத பல் இல்லாத கொ எடுத்த புலிகளே!!! அங்கு எழுதிட்டேன் இங்கு எழுதிட்டேன் என்று பசப்பும் ஜால வார்த்தைகள் வேண்டாம்!!! இந்த பகுதியில் பொங்கலுக்கான இன அடிப்படையிலான வரலாட்று சான்றுகளுடன் கட்டுரையை எழுதி அனுப்புங்கள் அல்லது அறிஞர்கள் யாராவது எழுதிய கட்டுரையை இணைத்து அனுப்புங்கள்!!! தமிழ் இனத்தில் தமிழுணர்வு பெற்றவர்கல் வெறும் 1% தமிழர்களே!!! 99% தமிழர்கள் அறியாமையில்தான் உள்ளனர், அவர்களை விழிப்படைய செய்ய உங்கள் கட்டுரையும் ஒரு சிறு தூண்டுகோலாக இருக்கட்டுமே!!! கலகம் பிறந்தால்தான் ஞாயம் கிடைக்கும் என்பார்கள் நமக்குள் நடக்கும் இந்த கருத்து மோதல் கழகத்தால் பொங்கலைப் பற்றிய தெளிவான விளக்கம் ஏனைய தமிழர்களுக்கு கிடைத்தால் எமக்கும் மகிழ்ச்சியே!!!
எவன் மூடன் / முட்டாள் என்று அவன் அவன் எழுதும் எழுத்து வைத்தே அறிந்து கொள்ளலாம் !!! சிண்டு முடிபததேல்லாம் எமது வேலை அல்ல. எப்பொழுதும் தமிழரையே அல்லது தமிழர் பண்பாட்டினையே சாடி எழுதும் “அறிவு கொழுந்துகளுக்கு ” ஒரு சவால்.எழுதிதான் பாரும் …தைரியியம் இருந்தால் …..
முதலில் லெனின் எழுதிய கட்டுரை எந்த சான்றுகளை வைத்து எழுதப்பட்டதென்று கூறவும் பிறகு யாம் தக்க சான்றுடன் எழுதுவோம் . முதலில் அதற்கு வக்கு இருக்கிறதா என்று பாப்போம் ..
பாரு இப்பவும் வீண் விதண்டாவாதம்தான்!!! அவனை எழுத சொல்லு இவனை எழுத சொல்லு என்று!!! அவன் எழுதினதுக்கு ஆதாரம் இருக்கா இவன் எழுதினதுக்கு ஆதாரம் இருக்கா!!! நீ சொல்லுரெ வாதத்துக்கு என்ன ஆதாரம் என்று சொல்ல மாட்டாய்!!! அதுக்கு துப்பும் கிடையாது!!! எப்பவும் இந்த தமிழ்வுனர்வாளர் கூட்டம் இப்படித்தான் மற்றவர்கலின் மீது குறைகான்பது வுனர்ச்சியை தூண்டிவிடுவது இப்படியே காலத்தை ஓட்டுங்கள் ஐயா!!! தமிழர்களுக்கு ஒரு முறையான வழியை காட்ட யாரும் வக்கற்று உள்ளனர்!!! நாத்திகவாதம் பேசும் ஒரு தமிழ்வுனர்வாளர் கூட்டம், சைவசமையத்தை மட்டும் பின்பற்றும் ஒரு தமிழ்வுனர்வாளர் கூட்டம், திருக்குறளை மட்டும் பின்பற்றும் ஒரு தமிழ்வுனர்வாளர் கூட்டம், பண்பாட்டு கூறுகளை மட்டும் பின்பற்றும் ஒரு தமிழ்வுனர்வாளர் கூட்டம், குலதெய்வம் சிறு தெய்வத்தையும் எட்ருக்கொள்ளும் மட்டும் பின்பற்றும் ஒரு தமிழ்வுனர்வாளர் கூட்டம் இதில் எதையா உங்கள் நிலையான முடிபான கொள்கை நிலை??? இப்படி நிலையான ஒருமையான முடிவான வுருதியான கொள்கை இல்லாத கூட்டம் நீங்கள்!!!! உங்களை நம்பி எப்படி தமிழர்கள் வருவார்கள்????? ஒரு கட்டுரைக்கே முறையாக பதில் அளிக்க துப்பு இல்லை!!!! இப்பவும் அதையும் இதையும் சொல்லி பொங்கலுக்கு இன ரீதியான பண்பாட்டு ரீதியான விளக்கங்களுடன் எழுத மாட்டிர்கள்!!! நீங்கள் எல்லாம் எப்படி இந்த இனத்திற்கு வழிகாட்டியாக முன்னுதாரணமாக இருக்கப்போகிரிர்கள்???? தமிழ் இனத்தில் தமிழுணர்வு பெற்றவர்கல் வெறும் 1% தமிழர்களே!!! 99% தமிழர்கள் அறியாமையில்தான் உள்ளனர், அவர்களை விழிப்படைய செய்ய உங்கள் கட்டுரையும் ஒரு சிறு தூண்டுகோலாக இருக்கட்டுமே!!! கலகம் பிறந்தால்தான் ஞாயம் கிடைக்கும் என்பார்கள் நமக்குள் நடக்கும் இந்த கருத்து மோதல் கழகத்தால் பொங்கலைப் பற்றிய தெளிவான விளக்கம் ஏனைய தமிழர்களுக்கு கிடைத்தால் எமக்கும் மகிழ்ச்சியே!!!
இதுதான் தலைப்பு :”பொங்கல் பண்டிகை ஏன் எதற்கு -ப.உ.லெனின்” ஆனால் இங்கே தேவையில்லாமால் மார்தட்டுகிறார்கல் பலர். அதில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தமிழ் தமிழன் அவர்களே! அப்படி கோபமாக, தமிழர்களுக்கு ஆதராவாக, உருக்கமாக, வீரமாக பேசிவிட்டால் அவர்தான் சரி என்றும், தேவை இல்லாத , அருவருக்க சொற்களை பயன் படுத்தி விட்டல் தமிழர்கள் தலை நிமிர்வார்கள் என்பன போக்குகளை விட்டு விடுங்கள். தயவு செய்து !
தமிழர் பண்டிகைக்கு இந்திரன் என்ற தேவ லோக காம வெறியன் எப்படி நுழைந்தான் என்பதுதான் என் கேள்வி, அதுக்கு பதில் சொல்ல வக்கு இல்லாத மையிரை மீனும் , Dhilip 2 நழுவி விடுகிறார்கள் ! பொங்கல் முதல் நாள் மாரியம்மன் கோவில் வாசலில் பொங்கல் வைப்பது கூட ஏற்றுக்கொள்ள முடியாத மயிராய் மீனே நீ உண்மையில் தமிழன்தானா ? உண்மையில் உன் தாய் தமிழச்சி என்றால் இப்படி ஒரு கருத்தை சொல்வாயா ? புண்ணாக்கு பயலே தமிழனின் சரித்திரம் படித்து விட்டு வா என்னிடம் ! பொங்கல் என்பது ஹிந்துக்களின் பண்டிகைபோல் கொண்டாடுவது தமிழ் இனத்துக்கு இழுக்கு , இப்போது அதுவும் மருவி ”திராவிட பொங்கல்” என்று கூட தம்பட்டம் அடிக்கிறான் திருட்டு திராவிடன் ! தமிழன் அல்லாதவன் தான் தமிழை கற்றுக்கொண்டு , தமிழ் இனத்தை , தமிழ் மொழியை , தமிழர் பண்பாடு , தமிழர் கலாசாரத்தை அழிக்க முற்படுகிறான் !
மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன்.
அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன்.
வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும் ! ஏண்டா இந்த இரண்டு கோட்டான்களும் எனது தமிழர் திருநாள் பொங்கலுக்கு தொடர்பு ஏற்பட்டது ?
இந்த கட்டுரையில் இருந்த சில கருத்துப் பிழைகளைச் சுட்டி கருத்து எழுதினோம். அதை ஏற்றோ அல்லது மறுத்தோ கருத்து எழுதாமல் முடிந்தால் “பொங்கலுக்கு” “இன அடிப்படையிலானா” சான்றுகளுடன் நிறுவி தமிழர்களை திருத்துங்கள் என்று கூறியது எம்மை சிந்திக்க வைத்தது. மேலும், “தமிழர்களுக்கு ஒரு முறையான வழியை காட்ட யாரும் வக்கற்று உள்ளனர்!” என்ற ஆதங்கத்தையும் முன் வைத்தால், பொங்கலைப் பற்றிய எம் கருத்தின்னை இங்கே பதிவு செய்ய முன் வந்தோம். தொடரும்.
http://senkettru.com/2015/05/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85/
“தமிழ் தேசிய வாதிகள் ஒரு சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள் என் படத்த எப்படி ஓட்டிக்கனும்னு எனக்கு தெரியும்” என்று இனம் படத்திற்கு எதிரான போராட்டங்களின் போது கூறிய லிங்குசாமியின் இயக்கத்திலும், தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றை, அதன் உண்மையை திரித்து மல்லி (டெடரிஸ்ட்), இனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய, சந்தோசு சிவனும் இணைந்து உருவாக்கியிருக்கும் ” “உத்தம வில்லன்” திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கலைத் திறன், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் தொடர்ச்சியாக 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தொடர்ச்சியான படங்களை எடுத்து வரும் சந்தோசு சிவனின் படங்களையும், அவருக்கு உதவியாக இனம் படத்தினை தமிழகத்தில் விநியோகித்த லிங்குசாமியின் படங்களையும் தமிழர்கள் நாம் புறக்கணிக்க வேண்டும்.
கற்பனை என்ற போர்வையில் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை மறைக்க இனப்படுகொலையை சந்தித்தவர்கள் மீதான அவதூறுகளை இனபப்டுகொலையாளர்களோடு இணைந்து தமிழகத்திலே தொடர்ச்சியாக பரப்பி வரும் இவர்களின் படங்களும் இவர்களை போன்றே நேர்மையற்றைவையே! இவர்களிடம் அறத்தினையும், நியாயத்தினையும் எதிர்ப்பார்ப்பது தவறு. இத்தகையகவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவது நம் கடமை.
இவற்றிற்கு நாம் செலுத்தும் பணமானது இவர்களுடைய இந்த அயோக்கியத்தனங்களுக்கு துணை போவதாகும், தமிழர்கள் அனைவரும் இந்த “உத்தம வில்லன்” திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்காமல் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்…
உழவரை முன் வைத்தவர் தமிழர் என்பது திருவள்ளுவர் வாக்கில் இருந்து நாம் அறியலாம்.
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை”. (கு. 1031)
உழவு அல்லாத பிறத் தொழில் அனைத்தும், ஏர்த்தொழிலின் பின் நிற்கின்றது. அதனால், உழவுத் தொழிலே சிறந்தது என்பது பொருள் இதுவே தமிழர் உழவருக்கும் அவர்தம் தொழிலுக்கும் தரும் முதல் மரியாதை.
இதற்கு எதிர்மறையாக நின்றது வைதீகப் பண்பாட்டை நிலைநிறுத்திய “இந்து தர்மம்” எனும் மனு சாத்திரம். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று மக்கள் குலத்தைப் பிரித்து உழவரை பின் வைத்தவர் வைதீக பண்பாட்டைப் பின்பற்றிய மக்கள். பின்வைத்தவர்களை நடைமுறையில் நீச்சராக வழி நடத்தியதும் வைதீகர்களே. மேற்கூறிய விளக்கத்தால் தமிழர் பண்பாடும், வைதீகப் பண்பாடும் வெவ்வேறானது என்பது வெள்ளிடைமலை.அதனால் தமிழர் விழாவாகக் கொண்டாடும் “தை பொங்கல்” திருவிழாவிற்கு அயலாரான ஆரிய வேத மரபினரின் இயற்கை தெய்வமாகிய இந்திரனை தமிழர் பண்பாட்டிற்குள் கொண்டு வருவது முரணாது என்ற தெளிவு தமிழர் அனைவருக்கும் இருக்க வேண்டும். இதனை விளக்கவே தமிழரின் மரபு வழிபாட்டில் மழையை வேண்டி வழிபடுவது “மாரி அம்மனையே” அன்றி இந்திரனை அல்ல என்று விளக்கினோம். தொடரும்.
தை பொங்கல் “தமிழர் விழாவா? இதுதான் மயிரை மீன் எழுதாமல் வினாவியது!. இக்கேள்வி வந்தது தமிழர்பால் இருந்த அன்பாலா அல்லது அருவருப்பாலா என்று தெரியவில்லை!. இதற்கு இரண்டு வகையில் பதில் சொல்ல வேண்டி உள்ளது.
(1) தமிழரின் முன்னோர்கள் தை பொங்கல் விழாவைக் கொண்டாடியதர்க்கானச் சான்றுகள் கொண்டு விளக்கலாம். தமிழ் ஆர்வலர்கள் பலர் சங்க இலக்கியங்களில் இருக்கும் ஓரிரு பத்தியைப் போட்டு இதுவே சான்று என்று கூறிச் சென்றாலும் அவற்றைப் ஆய்ந்துப் பார்க்கும் பொழுது ஆணித்தரமாகச் சொல்ல அங்கு ஏதும் இல்லை எனலாம். அதனால் சங்க இலக்கியங்களை விடுத்துப் பக்தி இலக்கியங்களை ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது 8-ம் திருவள்ளுவர் நூற்றாண்டில் (கி.பி. 7-ம் நூற்றாண்டு) வாழ்ந்து சைவத்தை வளர்த்த திருஞானசம்பந்தர் தமிழருக்கு சிறிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளார். இதுவும் அவன் செயலே. பூம்பாவை எனும் பெண் ஒருத்தி சிறு வயதிலேயே அரவம் தீண்டி இறந்துப் போய் அப்பெண்ணின் எலும்புகளைக் கொண்டே மீண்டும் அப்பெண்ணை மங்கையாக உயிர்பித்த வரலாற்றில், அக்கால தமிழரிடையே கொண்டாடப் பெற்ற விழாக்களின் குறிப்பு உள்ளது. திருமயிலாப்பூர் எனும் சிவதலத்தில் சிவ பெருமானை வேண்டிப் பாடிய 2-ம் திருமுறையில் 47 -வது பதிகத்தில் இக்குறிப்பு கீழ்காணுமாறு காணக் கிடக்கின்றது.
“மைபூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலிச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூபாவாய்.”. (2.47.5)
இப்பாடலின் விளக்கம் (thevaaram.org) கொடுத்தபடி:
“பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?”.
இதிலிருந்து அக்காலாக் கட்டத்தில் தை மாதத்தில் பொங்கல் படைத்து கொண்டாடும் விழா தமிழரிடையே இருந்து வந்துள்ளது என்பது திண்ணம். அம்மாதத்தில் வரும் பௌர்னமி திதியுடன் கூடிய பூச நட்சத்திரத்தில் சிவாலயங்களில் இவ்விழா நடந்து வந்துள்ளது என்பதும் தெளிவு.
இவ்விழா முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தும் இன்றையை தைபூசத்துடன் ஒப்பு நோக்காதீர்கள் காரணம் மேற்கூறிய பொங்கல் திருவிழாவானது அனைத்து உயிர்களுக்கும் உடலைக் கொடுத்து, அவ்வுயிர்கள் இன்ப துன்பங்களை நுகர்ந்து பக்குவப் பட வேண்டி உலங்கங்களையும் படைத்துக் காக்கும் பரம்பொருளாகிய சிவபெருமானுக்குரிய உரிய சைவ விழாவாக இருந்து வந்துள்ளது.
இதுவே பிற்காலத்தில் சைவம் குன்ற, சிவன் பார்வதியின் குமாரராக கருதப்படும் முருக வழிபாடு ஒங்க, முருகனுக்கு உரிய தைபூச விழாவாக மாறி பொங்கல் விழாவாக இல்லாமல் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் முருக வழிபாடு முறையாக மாறியுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
மேலும், தை மாத பௌர்ணமி திதியில் கொண்டாடிய இப்பொங்கல் விழாவானது கால ஓட்டத்தில் தை முதல் நாள் கொண்டாடும் “தை பொங்கல்” – லாக மாறி வந்துள்ளதையும் அறிய முடிகின்றது. இது ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தமிழரின் கருத்துக்கு ஒப்ப கால ஓட்டத்தால் வந்த மாற்றமாக இருக்கலாம்.
இதுவே, “தை பொங்கல்” தமிழரிடையே தொன்று தொட்டு இருந்து வந்த விழாவாக ஆணித்தரமாக உணர்த்த கிடைக்கப் பெற்ற வரலாற்று உண்மை. மற்றவர் பிற ஆதாரங்களை முன் வைக்கலாம். தொடரும்.
இதற்கு முன் வந்த கட்டுரைகளில் பொங்கலைப் பற்றி எழுந்த விவகாரத்தில், “பொங்கல் ” உழவர் பண்டிகை என்பதால் அது உலக வாழ் மக்கள் அனைவருக்கும் உரியது என்றும் தமிழருக்கு என்று தனிப்பட்ட திருவிழாவாக கருத இயலாது என்ற கருத்தும் முன் வைக்கப் பட்டது. இம்முரன்பாடான கருத்துக்கு விளக்கம் கீழ்காணுமாறு:
(2) தென் இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்க்கே வாழ்ந்த மக்கள் திராவிடர் என்று ஆரிய வேதங்களில் குறிக்கப் பெற்றது என்பதை நாம் அறிவோம். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் தென் இந்தியாவில் மொழி அடிப்படையாக மக்கள் வாழ்ந்தது இல்லை மாறாக ஒவ்வொரு அரசனின் குடிமகனாகவே தங்களை அயலாரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டனர் என்பது தென் இந்திய வரலாற்றை அறிந்தோர் அறிவர். அதனால் இன்று நம்மை தமிழர் என்றும் பிறரை தெலுங்கு வம்சாவளியினர் என்றும் மலையாள வம்சாவளியினர் என்றும் மொழியின் அடிப்படையில் கூறிக் கொண்டாலும். இன அடிப்படையில் வந்த மரபணு ஒன்றுதான். அதன் அடிப்படையில் அன்றையக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் ஆடியில் விதைத்து முன்பனிக் காலமாகிய மார்கழி பிற்பகுதியில் நெற்கதிர்களை அறுவடை செய்து விற்று வந்த செல்வத்தில் சிறப்புற வாழ வைத்தது தை மாதம்.
மார்கழித் தொடங்க மழைக் காலம் முடிவடைய முன்பனிக்காலம் தொடங்கும். இது தென் இந்தியாவிற்கு உரிய இயற்கையின் செய்கை. இதற்கு வேறான வானிலையில் வடக்கே வாழ்ந்தவர் ஆரியர். அவர்கள் நெற்பயிர் செய்யாது கோதுமை முதலிய இதர பயிர்களை செய்து உண்டு வாழ்ந்தவர். அதனால் அவர்களுடைய வழிபடு தெய்வமாகிய இந்திரன் நமக்கு மழையையும் வர வைக்க வேண்டாம், வெள்ளத்தையும் வர வைக்க வேண்டாம். நமக்கு உரிய நம்ப மாரி அம்மனே அனைத்தையும் செய்வார்.
இப்ப இந்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனை, தெலுங்கு மற்றும் மலையாள வம்சாவளி மக்ககளுக்கு தை பொங்கல் இல்லையா என்பது மயிரை மீனின் கேள்வியாக உள்ளது!. நாம் எல்லோரும் ஒரு காலத்தில் தமிழராகத்தான் வாழ்ந்தோம். இன்று மொழியின் அடிப்படையில் தங்களை அயலாராகக் காட்டிக் கொள்வோர் தாராளமாக தமிழர்களுடன் சேர்ந்து தை பொங்கலைக் கொண்டாடுங்கள். யார் வேண்டாம் என்றது. ஆனால், தைப் பொங்கலை தமிழர்களுடையது இல்லை என்ற போராட்டம் நடத்த வேண்டாம் காரணம் இவ்விழா தமிழர் பரம்பரையில் வந்தது என்று ‘காப்பி ரைட் (‘copy right’) செய்து பல நூற்றாண்டுகளாகி விட்டது. இப்போது மாற்றச் சொன்னால் செல்லாது!, செல்லாது!. தொடரும்
உழவர் திருநாள் என்பது பொதுச் சொல். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், மலேசியா, சிங்கப்பூர் இன்னும் இதர நாடுகளில் வசிக்கும் தமிழர் பொங்கல் திருநாளை தை திங்கள் முதல் நாள் கொண்டாடுகின்றனர். “தை பொங்கல்” சிறப்புச் சொல்.
ஆக, உழவர் திருநாள் என்பது உலகெங்கும் இருக்கும் உழவர் மக்கள் அவரவர் இயற்கை வானிலை வகுக்கும் நியதியின் காலத்தில் கொண்டாடுவது வழக்கம். அவ்வாறே சபா, சரவாக் பூர்வீக குடிமக்கள் கொண்டாடும் ‘Gawai’ அறுவடைத் திருநாள் அவர்களுக்கு உரிய நாளில் கொண்டாடுகின்றனர். இவர்கள் தமிழரைப் போல் தை முதல் நாளில் கொண்டாடுவதில்லை. அவ்வாறே பிற நாடுகளிலும் உழவர் மக்கள் உழவர் நாளை அல்லது அறுவடை நாளை அவரவர் நாட்டில் இயற்கை அமைக்கும் வானிலைக்கு ஏற்றவாறு கொண்டாடுகின்றனர்.
ஆதாலால், பொது நீக்கி சிறப்பைக் காண்பது தமிழரின் தை பொங்கல் என்பதை அறிந்து பிற இனத்தவர் கொண்டாடும் உழவர் திருநாளை தமிழர் தை பொங்கலோடு ஒன்றென்று கூறுவதை நிறுத்துங்கள். தமிழருக்கென்று சிறப்பாகக் கொண்டாடும் தை பொங்கல் தமிழருக்குரிய சிறப்புத் திருவிழாகும். தொடரும்.
“பொங்கலக்கு இன அடிப்படையிலான சான்றுகளுடன் கருத்து எழுத வக்கில்லாத தமிழர் நந்தா, tamil தமிழன், Theni , அம்மை, போன்ற பெ. கோழிகளின் கொக்கரிப்பினை கேட்டா சிரிப்புதான் ….”.
எம்மை பெட்டைக் கோழின்னு சொன்ன வாய்க்கு சக்கரைப் பொங்கல் செய்து ஊட்டணும். பெட்டைக் கோழிக்கு இருக்கும் மௌசு சேவலுக்கு இல்லை. வளர்ந்த சேவலின் கழுத்துக்கு கத்தி எந்த நேரத்திலும் வரலாம். பெட்டைக் கோழி முட்டைப் போடும் என்று பாசமாக வளர்ப்பார். அவ்வாறே, மயிரை மீனுக்கு பாசமாக இந்த செம்பருத்தியில் தொடர்ந்து கருத்து எழுதிக் கொண்டிருப்பேன்!.
பிறரை பெட்டைக் கோழின்னு சொன்னவரும் தம் கருத்தை எழுதத் தெரிந்திருந்தால் மக்கள் கருத்துப் பகுதிக்கு அனுப்பி வைத்துப் பிரசுரித்திருக்கலாமே. அங்கனமே இல்லாமல் நீர் எழுது, அவர் எழுதட்டும் என்று சொல்வது தன் கையாலாகாத தனத்தையே காட்டுகின்றது என்பதை நான் சொல்லியா பிறர் அறிய வேண்டும்?. உமது ஒரு சுட்டு விரல் பிறரை நோக்கி பாயும்பொழுது மற்ற மூன்று விரல்கள் உம்மையே நோக்கி சுட்டுகின்றது என்பதை அறிந்துதான் கருத்து எழுதுகின்றீரா?.
தமிழர் பகுத்தறிவை இழந்து பல காலம் ஆகி விட்டது என்பது மயிரை மீனின் கருத்தில் இருந்து தெரிகின்றது. சூரிய உதயத்தில் பொங்கல் வைப்பததுதான் வழக்கம் என்று எங்கள் தாயார் சொல்லிக் கொடுத்தபடி எம் குடும்பத்தில் வீட்டு வாசல் பகுதியில் சிறப்பாக பால் பொங்கல் செய்து சூரியனுக்கும், இச்சடமான கிரகம் தோற்றுவிக்க அறிவுள்ள ஆற்றல் சக்தியாக விளங்கி வரும் இறைவனுக்கும் சேர்த்தே படைப்பது சைவரின் பொங்கல் வழிபாட்டு முறை. பிறர் எப்படியாவது வருடத்திற்கு ஒரு முறை பொங்கட்டும். அது அவர்கள் கரும வினை என்று விலகுவோம். திருத்துவதும், திருந்தவதும் ஒருவர் பாடு அல்ல. இப்படி பேசும் அனைவரும் சேர்ந்தே திருந்த முதலில் நம்மை செம்மையாக்கிக் கொள்வோம். அடுத்து பிறரை செம்மை படுத்துவோம். வாழ்க தமிழர் தை பொங்கல். கட்டுரையாளரின் இந்த “முப்பத்து முக்கோடி தேவர்கள்” கருத்தை தவிர்த்து பிற கருத்துக்களுக்கு முன் நிபந்தனையின் அடிப்படையில் உடன்படுகின்றேன். மீண்டும் எம்மைப் போன்றோரை திட்டாமல் எழுதினால் நலம்.
தமிழர் நந்தா அவர்களே, தாங்கள் தான் இப்படி எழுதி உள்ளீர்கல்: “தமிழர் பண்டிகைக்கு இந்திரன் என்ற தேவ லோக காம வெறியன் எப்படி நுழைந்தான் என்பதுதான் என் கேள்வி, அதுக்கு பதில் சொல்ல வக்கு இல்லாத மையிரை மீனும் , Dhilip 2 நழுவி விடுகிறார்கள் !” ஐயா தமிழர் நந்தா அவர்களே, பொங்கல் என்பது உழவு வேலைக்கு முக்கிய துவம் கொடுத்து, உழவு சார்ந்த எல்லா உறவுகளுக்கும் மரியாதை செல்லுத்தும் ஒரு நன்னாள். அதையே திருநாளாக தமிழர்கள் கொண்டாடுகிறோம். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். உலகத்திலேயே, உழவு வேலையை, எல்லா மனித குல இனங்கள், தத்தம் இடத்திலேயே அவ்வபோது செய்தார்கள், செய்துவந்தார்கள். எல்லா மக்களும், அப்படி! இன்றும் UK வில், வருடம் ஒருமுறை விவசாயிகள் ஒன்று கூடி அவர்களுடைய காய்கறிகளில் மிக பெரியது எது என்று போட்டி நடத்துவர். இது அவர்களின் உழவு தொழில் உள்ள ஒரு வழக்கு. அதே போல் இந்தியாவில் உள்ள எல்லா மொழிசார்தவர்களும், விவசாய திருநாளை அவ்வபோது கொண்டாடுவது உண்டு. இது விவசாயத்தின் முக்கிய துவம் தெரிந்த காலம் முதல் நடக்கிறது. அப்படி, திராவிட இனத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். இப்படி தமிழர்களும் உழவு திருநாளை பொங்கலாக கொண்டாடுகிறோம். ஆகையால் உழவு வேழையை நாம் தான் (தமிழர்கள் தான்) கண்டு பிடித்த மாதிரி நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். எனவே தான் பல மார்க்கங்களை கொண்ட இந்தியாவில், ஒரே சாயல் கொண்ட கதைகள், அதிகம் தொடர்பு படுத்த பட்டு பேசபடுகிறது, பொங்கலை போல. மேலும் மாரி என்றால் மழை. இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழில் மாரியம்மன், கரு மாரியம்மன், முத்துமாரியம்மன், கோட்டைமாரியம்மன் என்று நிறைய உண்டு. இவை அனைத்தும் மழையை குறிக்க வில்லை ஐயா . நீங்களே புதிது புதிதாக உருவாக்காதீர்கள். நீங்கள் வீர தமிழர்தான் மறுக்க வில்லை. ஆனால் வீர முழக்கம் இடுவது மட்டுமே, தமிழர்கள் பண்பாடு ஆகிவிடாது. கட்டுரை எழுதியவரும், அல்லது நீங்களும் பார்க்க வில்லை யார் அந்த இந்திரன் என்று. பார்க்காத ஒருவனுக்கு தான் ஒரு கர்மாவில் எப்படி வந்தான் என்பது உங்கள் வாதம். நம்மிடம் இருக்கும் குறிப்புகளை வைத்துதான் நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். அப்படியே எழுத்தாளரும் வருகிறார். அவர் கருத்துக்கு நீங்கள் முரண்படுகிறீர்கள், உங்கள் கருத்துக்கு நான். அப்படியே இன்னும் பலர், முறையே என்னிடம் இருந்து. ஆனால் நீங்களோ வேறு ஒருமாதிரியாக இங்கே ஒருவரின் தாயை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள். இது அனாகிரிகமான செயல் அல்லவோ ? ஒரு நிலத்தில் தண்ணீர் இருக்கிறது. மேட்கே இருந்து வந்த ஒரு இந்தி காரன் சொல்றான் “பாணி” என்று. கிழக்கே இருந்து வந்த ஒருவன் சொல்கிறான் ‘தண்ணீர்” என்று. இப்படி இன்னும் ஒரு திசையில் இருந்து வந்தாவன் சொல்கிறான் “வாட்டர்” என்று. நாம் நமக்கு விளங்கிய வரையில் ஒன்றை பார்க்கிறோம். ஆனால் அதுவே எல்லாமாகவும் இருக்கிறது. இப்படிதான் இந்தியாவில் உள்ள எல்லா இதிகாசங்களும் பின்னி பிணைந்து இருக்கின்றன. சில நேரங்களில் முரண்பட்ட முடிவுகளுடன். எனவே, உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக எழுதலாம் ஆனால் ஒருவனின் தாயையோ, அவன் சார்ந்த இனதையையோ என் இழிவு படுதுக்ரீர்கள் ? நன்றாக நினைவில் கொள்ளுங்கள், இரு மனிதர்களுக்கு சண்டை வருவதற்கு காரணம் ஒரு கருத்தினால் அல்ல, மாறாக அதை வெளி படுத்தும் முறையில் தான் வருகிறது. CONFLICT COMES FROM THE WAY YOU TELL A MATTER , NOT FROM THE MATTER ITSELF !
மேலும் மாரி என்றால் மழை. இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழில் மாரியம்மன், கரு மாரியம்மன், முத்துமாரியம்மன், கோட்டைமாரியம்மன் என்று நிறைய உண்டு. இவை அனைத்தும் மழையை குறிக்க வில்லை ஐயா . நீங்களே புதிது புதிதாக உருவாக்காதீர்கள் .// அட Dhilip 2 புண்ணாக்கு ,மேகம் கருத்த காலகட்டத்தில் உவமைதான் கருமாரியம்மன், அந்த மழை முத்து முத்தாக பெய்வதால் முத்து மாரியம்மன் ,கோடை காலத்தில் பெய்வதால் கோடை மாரியம்மன் என்று பொருள் , நீ சொல்வதுபோல் கோட்டை மாரியம்மன் அல்ல ! உனக்கு விளங்கவில்லைஎன்றால் கேள் ! விளங்காத கம்பனாட்கள் நமக்கு பாடம் சொல்லி கொடுக்க வருதுங்க ! எதையாவது எடுத்து அடிக்கும் முன் ஓடிவிடு !
திராவிட இனத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். இப்படி தமிழர்களும் உழவு திருநாளை பொங்கலாக கொண்டாடுகிறோம். ஆகையால் உழவு வேழையை நாம் தான் (தமிழர்கள் தான்) கண்டு பிடித்த மாதிரி நீங்கள் நினைக்கிறீர்கள் போலும் .// அட வெண்ண, திராவிடன் என்று யார் சொல்லிக்கொள்கிறார்கள் என்று Dhilip 2 உனக்கு தெரியும்மா ? திராவிடன் என்ற அடைமொழி வந்து வெறும் 67 ஆண்டுகள் மட்டுமே அதுக்கும் முன்னாள் தமிழன் பொங்கல் கொண்டாட வில்லையா ? சரித்திரம் படித்துவிடு வா , இல்லையென்றால் தெரிந்தவரிடம் கேள், உனது பொய்யான சரித்திர திணிப்பு வேண்டாம் !
ஐயா தமிழர் நந்தா அவர்களே, அறவே நாகரிகம் தெரியாத உங்களுக்கு விளக்கம் சொல்ல வந்தது என்குற்றம் தான். பயபடாதிர்கள், நான் உங்கள் அளவுக்கு தரம் குறைந்து பேச மாட்டேன்…………………………………………………..
கோட்டைமாரியம்மன் என்னும் அம்மன் தமிழ் நாட்டில் http://temple.dinamalar.com/en/new_en.php?id=789 என்னும் முகவரியில் உள்ளது. பொய் சொல்லியாவது, அடுத்தவரை கேவலபடுத்தியாவது, கோட்டைமாரியம்மனை கோடை மாரியம்மன் என்று நீங்களே மாற்றி கொள்கிறீர்கள்…. சிரிப்புதான் வருகிறது….500 ஆண்டு பழமைவாய்ந்த கோட்டைமாரியம்மன், இனிமேல் தமிழ் அறிஞர் தமிழர் நந்தா அவர்களால் கோடை மாரியம்மனாக மாட்றம் கண்டார்.
கோடை காலத்தில் மழை பொழிவது ஓர் அபூர்வமான இயற்கையின் விதி ! அந்த மழையை கோடை மழை என்பார்கள் ! அதன் உவமைதான் கோடைமாரியம்மன் ! கோவில் வாசலில் கோட்டை மாரியம்மன் என்று எழுதி வைத்தால் உண்மையாகிவிடும்மா ? இயற்கை மழை தாயிக்கு எதுக்கு கோட்டை ? பின் வரும் காலத்தில் கட்டை ,குட்டை ,கொட்டை மாரியம்மன் என்று பெயர் வைப்பார்கள் , நீங்களும் நம்ப தயாராகிவிடுங்கள் !
வரலாற்று கட்டுரை படைக்கும் பொழுது ஆய்வுகள் செய்து இருக்க வேண்டும் அல்லது பல ஆய்வு நூட்களையாவது படித்திருக்க வேண்டும் . இவு அனைத்தும் இல்லாமல் வெறும் புராண கதைகளையோ அல்லது “திணிக்க பட்ட ‘ மூட நம்பிக்கையோடு எழுதுவது அறியாமை, அறிவிலித்தனம் மற்றும் முறையாக படித்தவர் செய்யும் செயல் அல்ல !
மேலும் மரியாதை கொடுத்து லெனின் வாதத்தை பொறுப்புடன் நிருபிக்க சொன்னால் கொளைதனமாக நி முதலில் நிருபி என்று சொல்லுவது கையாலாகாத செயல் என்பது வெளிச்சம் . யாம் நிருபிக்க சொன்ன காரணம் கட்டுரையின் உண்மை தன்மையை வெளி கொணரவே . முதலில் நி எழுத்து என்று கூறுவது இயலாமை ஆகும்.
இருப்பினும் தேனியின் விளக்கம் ஆரிய சமயத்தில் ஊறி வாழ்த்து கொண்டிருக்கும் மயிராய் மற்றும் திலிப் போன்றவைகளுக்காக அல்ல மாறாக ஆரிய சமயத்தால் காலம் காலமாக ஏமாற்ற பட்டுகொண்டிருக்கும் எமது சக தமிழருக்காகவே .இவர்களின் அறியாமை தான் திலிப் , மயிராய் போன்றவைகள் ஆரிய சமயத்தை பரப்ப உதவுகின்றன .
நண்பர் தமிழர் நந்தா சொன்னது சரிதான் .தமிழர் மேடையில் தமிழ் மொழியையோ , தமிழரையோ , அல்லது தமிழர் பண்பாட்டையோ அவமதிக்கும் சென்மங்கள் மரியாதையை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். இனியும் ” மயிலே மயிலே இறகு போடு ” என்று கேட்போம் என எதிபாட்க்க வேண்டாம். தமிழ் தாய் தந்தைக்கு பிறந்த எவரும் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் மற்றொருவன் இழிவாக பேசவிட்டு சும்மா இருக்க மாட்டோம் .
திலிப் அறிவுக்கு ஒரு சான்று. கோட்டை மாரியம்மன் என்றால் என்ன பொருள் ?அந்த பெயரே இரு சொல்லை கொண்டதுதான் ,பிரித்தால் கோட்டை + மாரியம்மன் என பொருள்படும், மேலும் http://temple.dinamalar.com/en/new_en.php?id=789 தெளிவாக கூறப்பட்டுள்ளது ” கோட்டைக்கும் அமைந்திருபதால் இது கோட்டை மாரியம்மன் என பெய பெயர் பெற்றது. இந்த சிறிய பொருளை கூட ஆய்வு செய்ய தெரியாமல் விவாதிப்பது எவ்வாறு வரலாற்றை பற்றி பேச தகுதி இருக்க முடியும் ? திலிப் கூறிய அணைத்து மாரியம்மன் பெயர்களுக்கும் அடிப்படை அல்லது மூலம் மாரியம்மன் தான்,அதை ஒட்டிய சூழலுக்கு ஏற்ப மற்ற பெயர்கள் வழங்கப்பட்டன .ஆக அனைத்தும் மழை வேண்டி வணங்கப்படும் மரியம்மண்ணை குறிக்கும். இதில் எங்கிருந்து பார்பனனின் இந்திரன் வந்தான் ? பதில் கூறும் பாப்போம் .
இனி தமிழ்மொழி ,தமிழர், தமிழர் பண்பாடு மற்றும் தமிழர் சமயத்தை விவாதிக்க விருப்பமுள்ளோர் தக்க சான்றுகுளுடன் வரவும் , விவாதிக்க யாம் தயார்.
வெறுமனே எழுதுவனுக்கேல்லாம் மரியாதையை அதிக பட்சமே !!!!
தனது படைப்பு விமர்சனதுக்குள்ளாகும் பொது, அதன் படைப்பாளன் தனது படைப்பை தற்காப்பது வழக்கம். ஆனால் கட்டுரையை எழுதிய லெனின் ஏன் இன்னும் வெளி வர வில்லை ?
இதுவே சான்று தாம் எழுதிய கறுத்து தவறு லெனின் உணர்ந்திருப்பது !!!
உலகத்திலுள்ள அணைத்து இனமும் உழவு தொழிலை செய்தாலும் எவனும் தமிழனை போல் உழவுக்கு உதவும் / உதவிய அனைத்திற்கும் நன்றி சொல்லவில்லை !
இபொழுது வேண்டுமானால் பல இனத்தவர் உழவு தொழிலுக்கு விழ எடுக்கலாம் அனால் தமிழன் பல படி மேற்போய் உழவுக்கு உதவும் கதிரவன் மற்றும் காளை மாட்டுக்கு நன்றி கூறினான். தமிழன் என்று மாட்டை அறுத்து உன்றான் அல்லது பால் கொடுக்கும் பசுவை அறுத்து உன்றான் ? மற்றவர்கள் இப்படியா ?
முட்டாள்களுக்கு மறுபடியும் கூறுகிறேன், திராவிடன் = தமிழன். இதில் தமிழர் அல்லாத எவரும் அடக்கம் அல்ல. ஆக பொங்கல் தமிழருக்கே உரியது ,யார் வேண்டுமானும் கொண்டாடலாம் ஆனால் கொண்டடுவோர்கேல்லாம் அது சொந்தம் அல்ல.
திலிப் “நம்மிடம் இருக்கும் குறிப்புகளை வைத்துதான் நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். அப்படியே எழுத்தாளரும் வருகிறார்.” உமது பதில் இது. இதைதான் யாம் நிருபிக்கபடி கேட்டோம் . என்ன குறிப்பு நிருபியும் ……எழுத்தாளன் பயந்தாங்கோலி இன்னும் வெளி வர வில்லை . உமிடம் என்ன குறிப்பு உண்டு ?
நான் விவாதிக்க தயார் ….
தமிழ் தமிழன் அவர்களே, நீங்கள் இப்படி எழுதி உள்ளீர்கள் “நண்பர் தமிழர் நந்தா சொன்னது சரிதான் .” தமிழர் நந்தா அவர்கள் ஒருவரின் தாயை பற்றி பேசுகிறார். அது அநாகரிக செயல் ! ஆனால் நீங்களோ அதை கண்டிக்காமல், நண்பர் தமிழர் நந்தா சொன்னது சரிதான் என்று அவருக்கு வக்காலத்து வாங்குக்ரீர்கள். மேலும், நான் தக்க சான்றுகளுடன் நிரூபிக்க முயன்றாலும், என்னையும் இப்படிதான் உங்கள் சகாக்கள் நடுதுவார்கள். நான் மரியாதை தெரிந்தவன். ஆகையால், மரியாதையாக வழக்காட முடியாத இடத்தில் நான் என் கூற்றுகலை வைப்பதில்லை. எனவே, தாங்கள் தங்கள் தகுதிக்கு எற்றார் போல் விவாதிப்பவரை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஆனால் அது நிச்சயமாக நானல்ல.