இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 65 இலங்கைத் தமிழ் அகதிகள் நாளை மீண்டும் நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அகதி முகாம்களில் பல வருடங்களாக வாழ்ந்தவர்களே இவ்வாறு நாளை நாடு திரும்பவுள்ளனர் என மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இரண்டு விமானங்களில் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இவர்கள் தமது சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவுள்ளார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilcnnlk.com
உங்கள் சொந்த மண்ணுக்கு சென்று அணைத்து உரிமைகளையும் பெற வேண்ட்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதா ?