வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன் பேசி , அது பலிக்காமல் போகவே. ரணில் தற்போது தானே களத்தில் இறங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. விக்கினேஸ்வரன் தனது கட்டுப்பாட்டிற்குள் வரமாட்டார் என்று தெரிந்ததும். கூட்டமைப்பில் உள்ள சில MP க்களை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஊடாக வடக்கில் பல வேலைத் திட்டங்களை தாமாகவே ரணில் அறிவித்து வருகிறார். இதனை விக்கினேஸ்வரன் , நேற்றைய தினம் மைத்திரியிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பில் உள்ள சில MPக்கள் , ரணிலிடம் பணத்தைப் பெற்று இவ்வாறு ஈனத்தனமான காரியங்களைச் செய்வதாக விக்கினேஸ்வரன் மைத்திரியிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க வின் விஜயகலா ஊடாகவும், வடமாகாணசபை தவிர்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகும். இதில் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் ஊடாகவும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சில வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது வடக்கு முதல்வரை சீற்றமடைய வைத்துள்ளது. நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோது, இது பற்றி புகார் கூறியிருக்கிறார். முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்களை கேட்ட மைத்திரி, தான் இந்த விடயங்களை இதுவரை அறிந்திருக்கவில்லையென்றும், பிரதமருடன் பேசுவதாகவும் கூறியுள்ளார். அத்துடன், பிரதமருடன் மோதல் போக்கை கைவிட்டு சுமுகமான உறவை பேணுமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் இதுபோன்ற சிக்கல்கள் தோன்றுமென்றும் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுதவிர, நேற்றைய சந்திப்பில் வடக்கில் முதலமைச்சர் நிதியம் ஒன்று அமைக்கப்படுவதற்கும் ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார். எனினும், இந்த நிதியம்த்தின் செயற்பாடுகளை மத்திய அரசு கண்காணிப்பதுடன், மத்திய அரசே கணக்காய்வு செய்யும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-http://www.athirvu.com