தமிழகம் நாம் தமிழர் தமிழர் நாட்டின் தமிழர் அரசியல் நகர்வு மாநாடு, பிறகு தமிழர் களம் நமது வேர்கள் கூட்டங்களில் கலந்து நேற்று மலேசியாவில் தமிழ்ப்பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் தவித்துபபோனேன்.
விவேகானந்தா ஆசிரமத்தை அநாதை ஆக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழாவில் மரம் நடுவது கேள்விப பட்டு என் வண்டியை அப்படியே என் தமிழ் குரல் சங்க PT 3 தமிழ் வகுப்புக்கு போய் விட்டேன்.
ஏன் இந்த நீண்ட வியாக்கினம் என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது.
பிரதமர் துரையின் செடிக் கொண்டுவந்த 10 கோடி நிதியும் அதில் ஆரவாரமாக ஆர்வமாக் கலந்துக்கொண்ட “இண்டியன்களையும்” பத்திரிக்கையில் பார்த்தேன். அதில் INTAN எனும் மலேசிய அரசு ஆய்வு கழகம் Indian எத்னிக் இயக்குனர் முன்னாள் YSS CEO என்றும் சொல்லலாம் DR ஜெயசூரியாவும் கலநத்துககொண்டார் என்று அறிந்தேன்.
மலேசியா புதிய பொருளாதார கொள்கை NEP ஆரம்பித்து இதோடு 11 முறை அதாவது 55 ஆண்டுகள். 2020 வளர்ச்சி நாடாக இதுதான் கடைசி ஐநதாண்டு திட்டம். அன்றே நமக்கு 3.5 % சொத்துரிமை தேவை என்று பல நிபுணர்கள் சொன்னார்கள். அதற்கு 1000கும் மேற்பட்ட ஆய்வு ஆப்பு அரங்குகள் நடத்தினார்கள். சாமிவேலு தலைமையில் பொருளாதர அலை 1, 2 டும் நடந்தது.
இன்று எல்லாத்துக்கும் ஆணி அடித்துவிட்டு 11வது பொருளாதார பரிந்துரை என்று மீண்டும் மக்களிடம் சந்திப்பு நடத்தி உள்ளார் தென்னாடுகளுக்கு தொடர்பு பொறுப்புள்ள அசாமி.
நான் கேற்பதெல்லாம் 3. 5 %சொத்துரிமைய எட்டுவதற்கு நமக்கு தேவையான நிதி அல்லது சொத்து அல்லது பங்கு சந்தை monetary value என்பார்கள் RM எவ்வளவு?
என் ஆய்வுப்படி RM 12 பில்லியன் எட்டினால் மட்டுமே இந்த நாட்டின் வளர்ந்த சமுதாயத்தின் மடியில் உறங்கலாம் அல்லது மஜீத் இண்டியா சந்தடியா என்று கேள்வி கேற்க, நிதி வாங்க எந்த குள்ள நரியையும் காணோம். 10 கோடி வசூல் என்றதும் வங்காளி மலையாளி தெலுங்கர் எல்லாம் இன்டியனாயிட்டார்களே !
ஒரு வேளை INTAN அதிகாரிக்கு இந்த 12 பில்லியன் தேவை தெரியும். ஆனாலும் அது மழுப்பி உழப்பிதான் இந்த 10 கோடி பிச்சையும் வந்திருக்கும். காரணம் ஒரு இனத்தின் அரசு Intan Ethenic அதிகாரி என்றால் அது ஓம்பா பெருசுங்க ! அவர் கூட செடிக் கூட்டத்தில் பல ஆலோசனைகளை வழங்கினாராம். ஆனால் யாருக்கும் விளங்க வில்லை சுய சரிதம் குணா படப்பாடல் பல்லவிதானாம்!
பிரதமர் சலுகைபபடி 2015கு 10 கோடி என்றால் 2020ககுள் 50 கோடி வரும் என்று வைத்துக்கொண்டாலும் நமது சொத்துரிமை தேவை படி RM 12 பில்லியன் என்பது 1200 கோடியாகும்.
இப்போது புரிகிறதா ஐயா காத்தையா கொட்டிய கொட்டு. இதோ மீண்டும் சுவாசிப்போம் …….அந்த அவரின் 15/6 15 செய்தியின் ஈர காற்றை முடிந்தால் திமிறி எழுங்கள்……. !
“பிரதமர் நஜிப் ரசாக் 11 ஆவது மலேசிய திட்டத்தை மே 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டமான 2020 இல் மலேசிய ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியைப் பெறும் போது அதன் குடிமக்களாகிய இந்தியர்களும் மேம்பாடு கண்டவர்களாக வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 11 ஆவது மலேசிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவா?”
…..நமது சொத்து சொத்தையை பேசும் எந்த அறிவாளியும் நமக்கு ringgit மதிப்பீட்டை சொல்லவில்லை ஏன்? 3.5 % சகிதம் என்றால் எத்தனை பேருக்கு விளங்கும். தெரிந்தவர்கள் எழுதலாம்.
ஒரு நேரத்தில் 2011 என்று நினைக்கிறேன் முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சர் தேவமணி PNB பங்குக்கு 2.5 பில்லியனை இண்டியனிடம் குறிப்பா தமிழர்களிடம் sales பண்ணி 20மில்லியனை ஸ்ரீ கு முருகனுக்கு சன்மானம் பெற்றார்.
இங்கே நான் இந்தியன் என்ற பசப்பு வார்த்தையை இண்டியன் என்று மாற்றக்காரணம் இந்தி என்பது வட நாட்டவர்கள் மொழி அந்த இந்தியனில் இல்லாலம்ல் தமிழர்கள் தவறாக நமது அப்பாக்கள் வாங்கி வந்த வரம் என்பதால் அவனிடமிருந்து தமிழனாக அல்லது இண்டியனாக பிரிந்து என் ஆய்வுப்படி மலேசியா தமிழர்களின் 93% சகிதம் தமிழர்களின் சுமார் 1000 கோடியை 2020ககுள் (RM 10 பில்லியனை) எங்கு எப்படி பெறுவது என்று நமது பிரதமரை கேளுங்கள். அவர் பிரித்தாளும் இண்டியனின் Indian இன விரிசல் நம் தமிழர்களின் உயர்வை விதைக்கட்டும்.
கழகம் பிறந்தால் வலு பிறக்கும். வலியும் வழியும் நாம் கடந்து வந்த காட்டுபபாதைகள்தாம். இது தமிழன் டெலிமா அல்ல, தெளிவு !
மீண்டும் வருவேன் ..ஓய்வுக்கு நன்றி தமிழா !
-பொன்.ரங்கன்
இப்போதெல்லாம் கட்டுரை குற்றபதாதைகள் எழுத ஆர்வம்
குன்றி விட்டது whatsup ல நேரம் போகிறது ஒரே ரோதனை
தமிழும் தமிழ் இனமும் இப்போது தேவலாம். தம்பி காதர் இப்ராகிம்
30 ஆண்டுகளாக என்ன பாடம் பண்ணார் என்று அவரை கேட்டால் இன்றைய 30 வயது பையன்தான் அதிகம் பேடியாக உள்ளன் என்பார்.
இப்போது வல்லார் பக்கம் திரும்பி உள்ள டாக்டருக்குத்தான் வெளிச்சம்.
SEDIC இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு. இந்த விண்ணப்பங்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட விண்ணப்பதாரர்கள் எப்பொழுது நேர்முக பேட்டிக்கு அழைக்கப் படுவர் என்ற விபரங்களை டத்தோ இராஜேந்திரந்தான் வெளியிட வேண்டும். அவர் கீழ் திறமையான விவரம் அறிந்த இளைஞர் பணிப்படை வேலை செய்கின்றது என்று அறிகின்றோம். நல்லது செய்தால் இந்நாட்டு இண்டியன்களுக்கு நல்லது நடக்கும். நம்பிக்கை நாயகனிடம் ஒரு சிறிய வேண்டுகோள். இனியும் இண்டியன்களுக்கு ஒதுக்கப் படும் அரசாங்க மானியங்கள் நேரிடையாக மக்களுக்குச் சென்று சேர இவ்வாறான செயல்முறை நல்வழிப்படுத்தும். அரசியல் கட்சிகளின் வழி வேண்டாம். இது எம்முடைய முன் கருத்துக்கு முரணாக இருப்பினும் நல்லது நடக்க எம் நிலையை மாற்றிக் கொள்கின்றோம். SEDIC – க்கு ஒரே வேண்டுகோள். அடுத்த வருட மானியம் ஒதுக்கும் பொழுது ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த விண்ணப்ப பாரங்களை விண்ணப்பம் செய்யும் இயக்கங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அந்தந்த மாநில தலைநகர்களில் 2 நாளைக்கு வைத்துக் கொண்டால் இன்னும் நலம். புற்றாஜெயாவிர்க்குச் செல்லும் செலவு குறையும்.
டாக்டரு மனம்போன போக்கெல்லாம் போய் கொண்டிருக்கின்றார். தான் நிற்கும் நெறி ஒன்று. அதை விடுத்து பிற நெறிகளை நாடி போவதும், தமிழரை உண்மைச் சமய நெறிகளில் இருந்து மாற்று நெறிகளுக்கு இட்டுச் சென்று தனது ஏட்டுச் சுரைக்காயை விற்க முற்படுவது நன்றாக இல்லை. பிரச்சனை விசுரூபமாக எடுப்பதற்குள் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டால் நல்லது.
டாக்டர் பெரிய படிப்பு படிச்சவரு. மனம்போன போக்கெல்லாம் போகிறார் என்பது தவறு. ஒரு மெத்தப் படித்த மனிதர் நெறி தவறுகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மைச் சமய நெறி அவரின் காலைவாரி விட்டிருக்கலாம், தெரியவில்லை! அவர் இருக்கிற பெரிய பதவியில் ஒரு வேலை அவர் நெறி மாறி திருமணம் செய்து கொள்ள வாய்ப்புத் தேடி வந்திருக்கலாம். அதனை நமது சமூகம் ஏற்றுக்கொள்ளாது! இந்த நெறி மாறுதலுக்குப் பல காரணங்கள் உண்டு. அதனை நீங்கள் தெரிந்து கொண்டு நீங்கள் தான் மாறிக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் உரிமைகளில் கை வைப்பது நமது வேலை அல்லவே!
ஒருவரை மதிப்பிடுவது அவர் பெற்ற உலகியல் கல்வியிலும் அதனால் வந்த பட்டங்களும் மட்டும் அல்ல. தான் கொண்ட ஒரு நெறியில் இருந்து பிழறி பிற நெறியில் நிற்போரை மலாய்க்காரர்கள் ‘ajaran sesat’ என்பார்கள். இது பொது மக்களிடையே வெளிச்சம் போட்டுக் காண்பித்தால் அப்புறம் அவ்வளவுதான். சொல்லிப்புட்டேன். வாயைக் கிண்டாதீர்கள்.
சாமிவேலூவோட அல்லக்கை டெனிசன் ஜெயசூர்யா மாதிரி மதமாற்ற பாடுமடுகிராரோ என்னமோ யாருகண்டா !
அண்ணாச்சி! தமிழன் ஒருவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் அவனையும் மலாய்க்காரர்கள் அப்படித்தான் கூறுவார்களா? பிறரின் உரிமையில் கை வைக்கும் உங்களின் வாயைக் கிண்ட மாட்டேன்! பயப்படாதீர்கள்!
தன் நெறி அறியாதவன் / உணராதவன் தாயை அறிய மாட்டான்!! உம மதத்தின் நெறியை முழுமையாக அறிந்துக்கொள். பிற நெறி உம்மை பிடி/ கரம் கொள்ளாது / அண்டாது!!!! 100 மில்லியன் ஒதுக்கீடு முழுமையாக ஏழை பரம இந்தியர்களுக்கே சென்றடைய வேண்டும். ஆனால், வீண் போகக் கூடாது!!! பணத்தை பகுர்ந்தளிட்டு விட்டேன். ஆனால், முறையாக பயன் படுத்தவில்லை என்ற சாக்கு போக்குக்கும் இடம் அளிககாதீர்!!!
பிறரின் உரிமை எவரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். அந்த “பிறரின் உரிமை” என்று கூறிக் கொண்டு செய்யும் செய்கை எம் இனத்தை பாதிக்குமானால்? நாம் கை வைக்கத்தானே வரும். அதைத்தான் சொல்ல வந்தேன். ஒரு முஸ்லிம், இந்துக்கள் என்று தங்களை கூறிக் கொள்வோரிடம் நீங்கள் இந்த சித்தரைப் பின்பற்றுங்கள், அந்த குல தெய்வத்தை வணங்குங்கள், இந்த சிறு தெய்வத்தை வணங்குங்கள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கின்றது?. இங்குள்ள தமிழர்களை தமிழ் நாட்டு சித்தர் சமாதிகளுக்கு ஆண்டு தோறும் சுற்றலா கூட்டிச் சென்று சித்தர் வழிபாட்டில் நிற்க வைக்க என்ன தகுதி இருக்கின்றது?. குல தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடுகள் வேண்டவே வேண்டாம் என்றுதானே முஸ்லிம்கள் போற்றும் வழிதலத்தில் அனைத்தையும் போட்டு மூடினார்கள் ஒரு காலத்தில். இன்று ஒரு முஸ்லிமாக இருப்போருக்கு தமிழர்கள் அவ்வாறு சிறுதெய்வ வழிபாடுகளைப் போற்றுங்கள் என்று சொல்வதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது? இதையே ஒரு இண்டிய முஸ்லிம் பள்ளிவாசலில் அவரால் உபதேசம் செய்ய முடியுமா அல்லது சொற்பொழிவாற்ற முடியுமா?. அட ஒரு தேவாலயத்தில்தான் இவ்வாறு செய்ய முடியுமா. இன்னும் கிளறாதீர்கள். நாறிடும்.
தேனி, நீங்கள் ஒரு குழப்பமான மனிதர். வருந்துகிறேன். இங்குள்ள மதுரை வீரன் வழிபாட்டையே உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் நாட்டில் அவர்களின் வழிபாட்டை உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தச் சுற்றுலாக்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். ஒரு இந்து செய்யமுடியாததை ஒரு முஸ்லிம் செய்கிறார். சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது என்பது மலேசிய அரசாங்கத்தின் கொள்கை. ஆனால் தமிழ் நாட்டில் அது செழித்து வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாகூர் தர்கா என்பதே சிறு தெய்வ வழிபாடு தான். தேவாலயங்களில் சிறு தெய்வ வழிபாடுகள் இல்லை. இயேசு மட்டும் தான் தெய்வம் என்பதால் சிறுசு பெரிசு என்பதற்கெல்லாம் வழி இல்லை. கிளறினால் தானே உங்களின் சமய அறிவை எங்களால் பகிர்ந்து கொள்ள முடிகிறது, நண்பரே! சமயங்களைப் பற்றிப் பேசும் போது நாறுவதற்கு என்ன இருக்கிறது?
abraham தேராஹ் என்னையா உளறுகிறாய் ??
கிறிஸ்தவத்தில் ஜேசு ஒருவரா ?
ஜெகோவா மட்டும்தான் கடவுள் என்று ஒரு சபை உள்ளது தெரியுமா ?
இதுபோன்று ஆயரக்கணக்கா உள்ளது ..ரோமன் கத்தொலிகதிலிருந்து ஒவ்வொரு சபையாக உருவாக்கிகொண்டார்கள் .. கோயில் நிர்வாக சண்டைகள் பன்சாயதுக்கள் போல் கிறிஸ்தவ அமைபுகளுக்குள்ளும் உண்டு .. என்ன செய்தி தாளில் வராது … குடும்ப வசூலுக்காக ஆளுக்கொரு ஆலயம்போல் ஒவ்வொரு மதபோதகருக்கும் ஒவ்வொரு சர்ச் &ஆதரவற்றோர் இல்லம் அதுவும் ஒருவிதமான வசூல் ..லக்சறி வாழ்க்கை போதகருக்கும் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கும் எல்லாம் வசூல் வேட்டை .. அதாரம் வேனும்ம்னா முகவரி தருகிறேன் பொய் பாருமையா …
நண்பர் அநோன்யமஸ்! இதில் உளறுவதற்கு ஒன்றுமில்லை. ஏசுவே ஜெகோவா. இப்படிப் பல பெயர்கள் உண்டு. நீங்கள் இது பற்றி ஆவேசப்பட வேண்டாம். எந்தப் பெயரில் சொன்னாலும் அவர் ஏசு தான். ஒன்று நீங்கள் விவிலியத்தைப் படிக்க வேண்டும். அல்லது அந்த ஜெகோவா போதகரையே கேட்டுத் தெளிவு பெறலாம். ஆனால் நீங்கள் கீழே சொல்லியிருக்கிறீர்களே அது அனைத்தும் உண்மை தான். இவ்வளவு தெரிந்த நீங்கள் அந்தச் சபைகளைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? நேற்று வரை இந்துவாக இருந்தவன் ஏதோ காரணத்தினால் கிறிஸ்துவனாக மாறியிருக்கிறான். அங்கிருந்த கலாச்சாரத்தை இங்கு கொண்டு வந்து விட்டான். அதனால் இந்தக் கிறிஸ்துவ சபைகளில் பல பிரச்சனைகள் உண்டு என்பது உண்மை தான். ஆனாலும் அனைவரும் அப்படி அல்ல. உண்மை கிறிஸ்தவனாக மாறியவர்களால் பல நன்மைகள் உண்டு. நல்ல காரியங்களைச் செய்து கொண்டு வருகிறார்கள். பல அற்புதங்களைச் செய்கிறார்கள். தவறு செய்பவர்கள் தொடர்ந்து பெயர் போட முடியாது என்பது மட்டும் உண்மை.
மலேசியா தீ அணைப்பு துறையில் வேலை வாய்ப்பு .1000 வீரர்கள் தேர்வு ,இறுதிநாள் 31/12/2015(www.spa.gov.my அக பக்கதில் விண்ணப்பிக்கவும் .2020 முனேறிய சமுகமாக ,வாழ்வில் வெற்றிபெற இதுவும் ஒரு அறிய வாய்ப்பு .10% வேலை வாய்ப்பை பெற வேண்டும் .
சொல்ல வருவது என்னெவென்று புரிஞ்சிக்காம பிறரை குழப்பமானவர் என்பதில் அர்த்தமில்லை. ஒரு முஸ்லிம் அவர்தம் நெறியில் நிற்பது உண்மையானால், பிற சமய நெறிகளை மனதளவில் ஏற்காமல் அடுத்தவருக்கு அதை புகட்ட ஆரம்பித்தால் அதற்குப் பெயர் அபச்சாரம். அவ்வாறு அந்த டாக்டர் செய்வது தப்பு என்று சொல்கின்றேன். இதைத்தான் “ஒரு இந்து செய்யமுடியாததை ஒரு முஸ்லிம் செய்கிறார்” என்று சொன்னால் குழம்பிப் போய் இருப்பது யார்? தான் சார்ந்து இராத, தனக்கு நம்பிக்கை இல்லாத இந்து மதத்திற்குள் புகுந்து அதனை இந்து என்போருக்கு உபதேசிக்க இவர்க்கு என்ன யோக்கியதை இருக்கு? இக்கட்டுரைத் தலைப்பிற்கு இது சம்பந்தம் இல்லாத விஷயம் என்பதால் இதை இத்தோடு விடுகின்றேன்.
மலேசியா தமிழர் அவர்தம் உண்மை இறை நெறியை அறிந்து அவர்தம் பரம்பொருளாக விளங்கும் சிவபெருமானையே ஒரு கடவுளாக வழிபட வேண்டும் என்று சொன்னோம். அதற்கு இந்து தர்மத்திர்க்கே ஒரு மாமன்றத்தை வைத்திருப்போர் எப்படி எதிர் பிரசாரம் செய்கின்றனர் தெரியுமா?. ஒரு கடவுளை வணங்குபவர் அதி தீவீர மத வெறியர்களாகி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதும் பிறரையும் அழித்து வருகின்றார்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளிலும் உலகின் பிற பாகங்களிலும் நடக்கும் சம்பவங்களை மேற்கோள் காட்டி எதிர் வாதம் செய்து வருகின்றனர். இப்பொழுது தாவது புரிந்துக் கொள்ளுங்கள். தமிழரை அறிவுடையோராக வாழ விடாமல் தொடர்ந்து முழு அறியாமையில் வைத்திருப்பதே “இந்து மத மாமன்றங்களின்” சிறப்பானச் செயல். அதையும் எதிர்கொண்டு தமிழருக்கு உண்மை இறை நெறிகளை சைவத்தின் வழி உணர்த்துகின்றோம். காலம் செல்ல காரியம் வெல்லும். மதுரை வீரன் கோவிலும் நீலகண்டன் கோவிலாக மாறும். அதில் சைவ சமயிகளுக்கு நம்பிக்கை உண்டு.
sgr அவர்களின் தகவலுக்கு நன்றி. இவ்வறிக்கையை கண்ணுருவோர் தயவு செய்து நம் மக்களிடையே தகவலைப் பரப்பி வேலைக்கு விண்ணப்பம் செய்ய ஆவன செய்யுங்கள்.