தமிழகம் நாம் தமிழர் தமிழர் நாட்டின் தமிழர் அரசியல் நகர்வு மாநாடு, பிறகு தமிழர் களம் நமது வேர்கள் கூட்டங்களில் கலந்து நேற்று மலேசியாவில் தமிழ்ப்பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் தவித்துபபோனேன்.
விவேகானந்தா ஆசிரமத்தை அநாதை ஆக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழாவில் மரம் நடுவது கேள்விப பட்டு என் வண்டியை அப்படியே என் தமிழ் குரல் சங்க PT 3 தமிழ் வகுப்புக்கு போய் விட்டேன்.
ஏன் இந்த நீண்ட வியாக்கினம் என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது.
பிரதமர் துரையின் செடிக் கொண்டுவந்த 10 கோடி நிதியும் அதில் ஆரவாரமாக ஆர்வமாக் கலந்துக்கொண்ட “இண்டியன்களையும்” பத்திரிக்கையில் பார்த்தேன். அதில் INTAN எனும் மலேசிய அரசு ஆய்வு கழகம் Indian எத்னிக் இயக்குனர் முன்னாள் YSS CEO என்றும் சொல்லலாம் DR ஜெயசூரியாவும் கலநத்துககொண்டார் என்று அறிந்தேன்.
மலேசியா புதிய பொருளாதார கொள்கை NEP ஆரம்பித்து இதோடு 11 முறை அதாவது 55 ஆண்டுகள். 2020 வளர்ச்சி நாடாக இதுதான் கடைசி ஐநதாண்டு திட்டம். அன்றே நமக்கு 3.5 % சொத்துரிமை தேவை என்று பல நிபுணர்கள் சொன்னார்கள். அதற்கு 1000கும் மேற்பட்ட ஆய்வு ஆப்பு அரங்குகள் நடத்தினார்கள். சாமிவேலு தலைமையில் பொருளாதர அலை 1, 2 டும் நடந்தது.
இன்று எல்லாத்துக்கும் ஆணி அடித்துவிட்டு 11வது பொருளாதார பரிந்துரை என்று மீண்டும் மக்களிடம் சந்திப்பு நடத்தி உள்ளார் தென்னாடுகளுக்கு தொடர்பு பொறுப்புள்ள அசாமி.
நான் கேற்பதெல்லாம் 3. 5 %சொத்துரிமைய எட்டுவதற்கு நமக்கு தேவையான நிதி அல்லது சொத்து அல்லது பங்கு சந்தை monetary value என்பார்கள் RM எவ்வளவு?
என் ஆய்வுப்படி RM 12 பில்லியன் எட்டினால் மட்டுமே இந்த நாட்டின் வளர்ந்த சமுதாயத்தின் மடியில் உறங்கலாம் அல்லது மஜீத் இண்டியா சந்தடியா என்று கேள்வி கேற்க, நிதி வாங்க எந்த குள்ள நரியையும் காணோம். 10 கோடி வசூல் என்றதும் வங்காளி மலையாளி தெலுங்கர் எல்லாம் இன்டியனாயிட்டார்களே !
ஒரு வேளை INTAN அதிகாரிக்கு இந்த 12 பில்லியன் தேவை தெரியும். ஆனாலும் அது மழுப்பி உழப்பிதான் இந்த 10 கோடி பிச்சையும் வந்திருக்கும். காரணம் ஒரு இனத்தின் அரசு Intan Ethenic அதிகாரி என்றால் அது ஓம்பா பெருசுங்க ! அவர் கூட செடிக் கூட்டத்தில் பல ஆலோசனைகளை வழங்கினாராம். ஆனால் யாருக்கும் விளங்க வில்லை சுய சரிதம் குணா படப்பாடல் பல்லவிதானாம்!
பிரதமர் சலுகைபபடி 2015கு 10 கோடி என்றால் 2020ககுள் 50 கோடி வரும் என்று வைத்துக்கொண்டாலும் நமது சொத்துரிமை தேவை படி RM 12 பில்லியன் என்பது 1200 கோடியாகும்.
இப்போது புரிகிறதா ஐயா காத்தையா கொட்டிய கொட்டு. இதோ மீண்டும் சுவாசிப்போம் …….அந்த அவரின் 15/6 15 செய்தியின் ஈர காற்றை முடிந்தால் திமிறி எழுங்கள்……. !
“பிரதமர் நஜிப் ரசாக் 11 ஆவது மலேசிய திட்டத்தை மே 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டமான 2020 இல் மலேசிய ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியைப் பெறும் போது அதன் குடிமக்களாகிய இந்தியர்களும் மேம்பாடு கண்டவர்களாக வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 11 ஆவது மலேசிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவா?”
…..நமது சொத்து சொத்தையை பேசும் எந்த அறிவாளியும் நமக்கு ringgit மதிப்பீட்டை சொல்லவில்லை ஏன்? 3.5 % சகிதம் என்றால் எத்தனை பேருக்கு விளங்கும். தெரிந்தவர்கள் எழுதலாம்.
ஒரு நேரத்தில் 2011 என்று நினைக்கிறேன் முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சர் தேவமணி PNB பங்குக்கு 2.5 பில்லியனை இண்டியனிடம் குறிப்பா தமிழர்களிடம் sales பண்ணி 20மில்லியனை ஸ்ரீ கு முருகனுக்கு சன்மானம் பெற்றார்.
இங்கே நான் இந்தியன் என்ற பசப்பு வார்த்தையை இண்டியன் என்று மாற்றக்காரணம் இந்தி என்பது வட நாட்டவர்கள் மொழி அந்த இந்தியனில் இல்லாலம்ல் தமிழர்கள் தவறாக நமது அப்பாக்கள் வாங்கி வந்த வரம் என்பதால் அவனிடமிருந்து தமிழனாக அல்லது இண்டியனாக பிரிந்து என் ஆய்வுப்படி மலேசியா தமிழர்களின் 93% சகிதம் தமிழர்களின் சுமார் 1000 கோடியை 2020ககுள் (RM 10 பில்லியனை) எங்கு எப்படி பெறுவது என்று நமது பிரதமரை கேளுங்கள். அவர் பிரித்தாளும் இண்டியனின் Indian இன விரிசல் நம் தமிழர்களின் உயர்வை விதைக்கட்டும்.
கழகம் பிறந்தால் வலு பிறக்கும். வலியும் வழியும் நாம் கடந்து வந்த காட்டுபபாதைகள்தாம். இது தமிழன் டெலிமா அல்ல, தெளிவு !
மீண்டும் வருவேன் ..ஓய்வுக்கு நன்றி தமிழா !
-பொன்.ரங்கன்
தமிழன் மூளைக்கு ஒரு கொட்டு !
அவன் இண்டியன் indian என்று
சரியாகதான் வைத்தான். நாம்தான்
தமிழ் நவீன இளகிய இலக்கிய
இலக்கண உயர்வில் இந்தியன்
என்று இந்தி யை அவன் மொழி
உணர்வை இணைத்துககொண்டோம்
இப்போது தமிழனை உலகம் முழுதும்
நைய புடைக்கிறான். நீ தமிழனாக இரு
அல்லது இண்டியனாக செத்துபோ !
இந்தியன் என்று தமிழில் எழுதாதே!
ஒவ்வொரு தமிழனும் Thamilan என்ற உணர்வால் ஒன்றுபட்டு செயல்படுவோம் தமிழனின் வாழ்வில் மாற்றத்தை காண்போம் . இன்றைய நிலை தொடர்ந்தால் நாம் காணாமல் போய் விடுவோம்
“நாம் தமிழர்” என்று சொல்லாதீர்கள். பல பேருக்கு அது பிடிக்கவில்லை!. சில பேருக்கு அதை கேட்கவே பொறுக்கவில்லை. இப்பொழுதெல்லாம் “நாம் தமிழர்” என்றால், கண்டு முட்டு, கேட்டு முட்டு என்று ஒதுங்கிச் செல்கின்றார்கள். நாம் தொடர் அடிமைகளாகவும் பிறர் நமக்கு முதலாளிகளாகவும் இருக்கவே விரும்புகின்றனர். அதற்கு தமிழன் என்போரும் ஆதரவு கொடுப்பதுதான் விந்தையுலும் விந்தை!. “இந்தி” + அன்; “தமிழ்” + அன். இவ்விரண்டு வார்த்தைகளுக்குக் கூடவா வித்தியாசம் தெரியவில்லை. ஏம்பா, தமிழ் படித்தோரிடம் கேட்கின்றேன், தமிழர் என்ன இந்திகார்களா?. இப்படி எங்களை மோசப்படுத்தி, நாசப்படுத்தி நடுத்தெருவில் இவ்வளவு நாளாக வைத்திருந்தது போதாதா?. நாம் தமிழர் என்ன படிக்காத முட்டாள்களா? இன்னும் எங்களை “இந்தி” + அன் என்று சொல்லிக் கொள்ள. தயவு செய்து இனி தமிழர்களை இந்தியன் என்று அழைக்காதீர்கள். எழுதாதீர்கள். நானும் இனிமேல் இந்தியன் என்று எழுதப் போவதில்லை. எவனாவது தமிழனைப் பார்த்து இந்தி- யன்ன்னு சொன்னா செருப்பு பிஞ்சிடும்.
தேனி, மிகவும் தீவிரமாகப் போகாதீர்கள். தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஓடி ஆடித் திரிய வேண்டியதில்லை. அந்த இனப்பற்றை எங்கு காட்ட வேண்டுமோ, எப்படிக் காட்ட வேண்டுமோ அங்குக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டதுதான் நமது குறை. ஒரு மலையாளி தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொண்டே தமிழனுக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே செயல்படுகிறானே அதனை நாம் நரித்தந்திரம் என்று விட்டு விடுகிறோம். அவனை ஏன் நாம் பின்பற்றக்கூடாது? ஒரு காலக்கட்டத்தில் துணை அமைச்சர் பத்மநாபன் பி,எஸ்,என். வங்கியில் இயக்குனராக இருந்தார். இப்போது அந்த வங்கியில் வேலை செய்பவர்கள் யார்? மலையாளிகள் தானே? அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று தான் சொல்லுகிறார்கள். ஒரு யாழ்ப்பாணத் தமிழன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் அவன் இந்தியத் தமிழனை வெறுத்து ஒதுக்குகிறானே? அதற்கு இனப்பற்று தானே காரணம்! அவர்கள் மீது நான் கோபம் கொள்ளவில்லை. ஆனால் தமிழனுக்கு மட்டும் ஏன் அந்தப்புத்தி வரமாட்டேன் என்கிறது? மீண்டும் சொல்லுகிறேன். தமிழன் என்னும் இனப்பற்றை நாம் கட்ட வேண்டும். வெளியே சொல்லிக்கொண்டு அலைய வேண்டியதில்லை!
கட்ட வேண்டிய கட்டடம் பிறர் கண்ணுக்கும் தெரிய வேண்டும். மனதிற்குள் கட்டிய கட்டடம் கானல் நீர் போன்றதாகும். பயனற்றுப் போகும். தமிழர் நல்லவர்கள். அந்த நல்ல எண்ணத்தில் ஏமாளித்தனமும் கலந்து இருப்பதால் அவர்களுக்கு பாலுக்கும் கல்லுக்கும் வேற்றுமை தெரிவதில்லை. பால் குடித்து பலமிக்கவர்களாக இருக்க வேண்டியவர்கள் கல் குடித்து பயந்தவர்களாக இருகின்றார்கள். அதனால்தான் தன்னைத் தானே தமிழர் என்று சொல்லிக் கொள்ளவும் பயப்படுகின்றனர் அவ்வாறு சொல்வதும் குற்றமுடையதாக கருதுகின்றனர். என்னே விந்தை!. .
தமிழன் என்ற பற்றை வெளியே பறைசாற்றாதலால்தான் இன்றும் தமிழர் தம்மை “தமிழ் + அன் என்று அறியாமல் தமிழை மறந்து “டமில”ராகா வாழுகின்றான். இப்பொழுது பறைசாற்றாமல் தமிழ் அழிந்த பிறகு பறைசாற்றினால் “டமிலர்” அந்நியனாக மாறிவிடுவர் அப்பொழுது நமக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது காரணம் நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ என்று வாழ்ந்தோம், இன்றுவரை நீ வேறு நான் வேறு என்று வாழப் போகின்றோம். நாளைவரை நாசாமாகப் போகின்றோம். நான் 5-ம் படிவம் படிக்கும் பொழுது எமது தமிழ் மொழி ஆசிரியர் நொந்துக் கொண்டு சொன்னார் ‘நான் ஏன் தமிழனாகப் பிறந்தேன்’. என்று. அன்று அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள எனக்கு போதுமான பக்குவம் இல்லை. அதே கேள்வி இன்று எம்மனதிலும் தோன்றுகின்றது. நான் ஏன் தமிழனாகப் பிறந்தேன்?. இன்னும் நிறைய எழுங்கள் எமது உள்ளக் குமுறலை எல்லாம் இங்கே கொட்டி அழுது தீர்த்து விட எமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
நாம் தமிழர் என்பதை எதிர்மறையாகப் (‘negative’) பார்க்கவேண்டாம். நாம் தமிழர் என்பதை உடன்பாடாகப் (‘positive’) பாருங்கள். நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டு பிறருக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. நாம் தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழருக்கு அருகில் நிற்போம். இவ்வாறு நிற்கையில் நமக்குள் ஓர் ஒற்றுமை ஏற்பட வழி பிறக்கும்.அதன்வழி இருப்போர் இல்லாதாருக்கு உதவி செய்ய முடியும். வழி தெரியாதவருக்கு வழி காட்ட முடியும். இந்நாட்டில் பல ஏழைத் தமிழர்கள் உதவிக்கு யாரை நாடிப் போவதென்றே தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாரனவர்களுக்கு உதவி செய்ய தமிழ் அறவாரியம் முன்வந்தது. நம் ஏழை மாணவர்களும், சமுதாயத்தால் ஓரங்கட்டப் பட்ட இளைஞர்களும் தமது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள அவ்வரவாரியம் இந்த இளைஞர்களுக்காக கல்லூரியைக் கட்டி அவர்களை மேம்படுத்த முயலுகின்றது. அதைப்போலவே நாம் தமிழரும் செயல்பட முடியும். முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. முடியும் முடியாது என்ற இரு நிலைகளுக்கும் நமது மனமே காரணம். இக்கூற்றுக்கு நேர்மாறாக செயல்படுவது இந்நாட்டில் நம்மை பிரதி நிதிப்பதாக சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள். நாம் தமிழர் ஒன்று படுவோம் என்ற எண்ணம் இருந்திருந்தால் ஏன் இன்று அவர்கள் இவ்வாறு அடித்துக் கொண்டு சாக வேண்டும். அவர்களுக்கு நாம் தமிழர் என்பதை விட “நான்” என்ற ஆணவச் செருக்கே முன் நிற்கின்றது. மூவேந்தர்களும் அரசியலில் இடம் தெரியாமல் போகப் போகின்றார்கள் என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
BN அரசியலில் ம இ கா ஓர் அட்டகாசம் நடக்கிறது .பாக்காதான் அரசியலில் ஒரு வெறியாட்டம் முக்குளி மூஞ்சப்பாரு ஆட்டம்
நடக்குது. இதில் தமிழர்களின் மலேசியா அரசியலில் “வேப்ப மர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுதுண்ணு விளையாட போகும் போது சொல்லி வெச்சாங்க…நம் வீரத்தை முளையிலே கில்லி புட்டங்கா ” என்ற பாடல் ” ஞாபகத்துக்கு வந்துருச்சு. நாம் என்னதான் இன பொருளாதார ..அரசியல் விழிப்பு , சமூக மேம்பாடு எழுதினாலும்
மறுபடுயும் தமிழன் தத்துவங்கள்தான் பேயாட்டமாக வருகிறது.
என் பதிப்பில் நல்ல தமிழ் தீவிரவாதிகளை காண்கிறேன். ஆனால் பழைய பானையில் புதிய பிராணியை காணோம். நான் பிசா சமைத்தால்
நீங்கள் ரொட்டி சானை சுடுகிறீர்கள். நமது சமுதாயத்துக்கு இன்று அவசியமாக் தேவைப்படுகிற அரசியல் பொருளாதாரம் எழுதுங்கள். இலக்கியமும் இலக்கணமும் நம்மை முடிவில்லா தொடர்கதையாக்கி
காலங்கடந்த கவிதைகளாக்கி நம்மை நம் தமிழர்களை மோசமாக்கி
விட்டது. மீண்டும் சிந்திப்போம். தமிழர்களை மீட்போம் ! வணக்க்ம.
வாழ்க உறவுகளே !
தான் ஒரு தமிழன் என்று தன வட்டாரத்துக்குள்ளேயே வாழ்வதென்றால் தான் ஒரு தமிழன் என்று நெற்றியில் எழுதிக்கொள்ளுங்கள்..பார்த்ததும் பளிச்சென்று தெரிந்துவிடும். பிறகு தமிழனை அரவணைப்பதா அல்லது புறக்கணிப்பதா என்று பார்ப்போரிடம் விட்டுவிடுவோம். ஜாதி ரீதியிலோ மொழி ரீதியிலோ இந்தியனை கூருபோடவேண்டாமேன்பதே எமது கருத்து. இருப்பதோ 7% இதில் சதவிகிதம், இதில் தமிழன், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபி ..இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை…ஏனையா இந்த பிரிவினை வேறுபாடு ?? ஒரு மலையாளியோ தெலுங்கரோ அல்லது பஞ்சாபியோ தன்னை எப்படி ஐயா தாம் ஒரு தமிழன் என்று ஏற்றுக்கொள்வான்??? இந்தியனாகவே ஒன்றிணைவோம் ஒருவருக்கொருவர் கரம் கொடுத்து ஏழ்மை இந்தியர்களை உயர்த்த முயற்சி செய்வோம்!!! தேசியப்பதிவிலும் நமது முத்திரையும் “கேதூருனான் இந்தியா” என்றுதானே குத்தப்பட்டுள்ளது???
என் எஸ் கிருஷ்ணன் பாடியுள்ளார்… சொல்லுறதே சொல்லிப்புட்டேன் செய்யுறதே செஞ்சிடுங்க … நல்லதுனா கேட்டுக்கொங்கே … கெட்டதுன்னா விட்டுடுங்கே!!! இங்கு (யாம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்தை பதிக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவங்க அவங்க அடையாளத்தை தேடிக்கிட்டாங்க, நிலை நிறுத்திக்கிட்டாங்க. அவர்களை யார் தமிழர் என்று சொல்லிக் கொள்ளக் கேட்டது. வங்காளி என்ன தமிழனா?. தெலுங்கன் என்ன தமிழனா? மலையாளி என்ன தமிழனா?. அவங்க அவங்களை தான் இன்னார் என்று சொல்லிக் கொள்ளும் பொழுது நாம் தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் தப்பென்ன?. நீங்க தமிழராக இல்லாவிட்டால் உங்களை யார் நெத்தியில் எழுதி பட்டையாக ஒட்டிக் கொள்ளச் சொன்னது?. என்னுடைய நண்பர் ஒருவர் தெலுங்கு வம்சாவளி. அவர்கள் குடும்ப தேவைகளுக்கு இரண்டு முறை சென்றேன். ஒன்று திருமணம் மற்றொன்று புது மனைப் புகு விழா. இரண்டிலுமே ஒலித்தது தெலுங்கு பாடல்கள், தமிழ் பாடல்கள் அல்ல. ஆக அவர்கள் தங்களை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் தயங்கவில்லை. குறுகவில்லை. அப்படியானால் தமிழர்கள் தங்களை தமிழர் என்று காட்டிக் கொள்வதில் யாருக்கு எங்கே வலிக்கின்றது?. இந்த போலியான “இந்தியன்” என்ற அடைமொழி எங்களுக்கு?. உங்களுக்கு வேண்டியதோ உங்கள் தாய்மொழி அடையாளம். என்ன பெரிய ஒற்றுமை பாருங்கள் நம்மிடையே!. நாங்கள் நிஜத்தில் வாழ எத்தனிக்கின்றோம். எங்களை நிழலில் தள்ளாதீர்கள். ஏன் எங்கள் அடையாளத்தை மறுக்கின்றீர்கள்?. பொன் ரங்கரே தங்களின் மற்றக் கருத்துக்கு இரவில் கருத்து எழுதுகின்றேன்.
ஆஹா ஆஹா! என்ன கருத்து அண்ணன் சிற்றெரும்பு இந்த போடு போடறாரு! மேலே உள்ள கருத்துக்களை மேலோட்டமாக படித்த இப்படிதான் பதில் வரும்! என்ன செய்யறது எறும்பு மூளைக்கு எட்டினது அவ்வளவுதான்.எங்க நெத்தியிலே நாங்க எழுதாத காரணத்தால எவன் எவனோ கன்னாபின்னான்னு எழுதிட்டு போயிரானுங்க எறும்பு அண்ணா! தமிழன் நெத்தியிலே தமிழன்னு எழுதி கிட்ட உங்களுக்கு எங்க வலிக்குது? எல்லாத்தையும் வாழ வச்சதனாலே தமிழன் இன்னைக்கு சந்தி சிரிக்கிறான்…இதுக்கு மேலேயும் தமிழன் இந்தியன் கோடியை பிடிச்ச தமிழ் நாடு போலே platform தான் மிஞ்சும்..
சிற்றெரும்புக்கு எப்போதுமே சின்ன புத்திதான். மலேசியா இண்டியர்களில் 93% தமிழர்கள் 2,5 % தெலுங்கர்கள் 1% மலையாளிகள். இதில் பொருளாதர சொத்துரிமை 0.5 % பகிர்வில் பார்த்தால். தமிழர்கள் 0.01% தெலுங்கர்கள் 0.03% மலையாளிகள் 0.05 ஆக உள்ளதாம். தமிழர்களின் உழைப்பாளி கூட்டமாக இருந்தாலும் , 1.7 மில்லியன் தமிழர்கள் பயநீட்டாளர்களாக இருந்தும் தமிழர்களால் பொருளாதார மேன்மையில் வென்று வர முடியவில்லை. காரணம் அந்த இரண்டு சிறுபான்மை இனமும் உழைக்க முன் வருவதில்லை. அவர்களுக்கு தெரியும் பொருளியல் தேவைகள் அதாவது சேவைத்துறையில் தங்கள்
முதலீட்டை ஆளுமையை வலுப்படுத்தி தமிழர்களை முந்தி நிற்கிறார்கள்.அது போக கல்வி ,அரசு மானியங்கள் ,பொருளாதரா , வங்கி, பங்கு சந்தைகளில் இண்டியன் கோட்டாவில்வில் தமிழர்களின் பங்குகளை இவர்களின் நிர்வாக ஆளுமையில் தமிழர்களின் தலையில் மொட்டை அடிப்பதில் இவர்கள் வில்லனாக உள்ளனர்.
ப்ரிக்பீல்ஸ் , லெபோ அம்பாங் , மஜீத் இந்தியா ,ஈப்போ ரோடு போக நாட்டில் தமிழர்கள் பாவிக்கும் எல்லா பொருள்களையும் அவர்கள் தயாரிப்பில் ,பிறகு விநியோக உரிமையில் ,விற்பனையில் அவர்கள்தான் இருப்பார்கள் … அலுவலக , தொழில்பேட்டைகளில் முன் வரவேற்ப்புக்கும் தொலைபேசியில் தமிழ் பேசவும் மட்டும் தமிழ் பெண்கள் இருப்பார்கள். இந்த வைரஸ் தான் மலேசியா திராவிட கலகத்திலும் தெலுங்கர்கள் ஆட்சி. தமிழன் என்ற முத்தையா வந்தார் சும்மாவா விட்டார்கள்?
சிற்றெரும்பும் தமிழ்தான் ஆனால் அவர் தொழில் அப்படி இன்று அவர் தமிழன் என்று மார் தட்டினால் அடுப்பில் எலியும் பூனையும் காவல் கொள்ளும். ஆனால் எத்தனை இதரவ்ர்கள் அவர் கதவை தட்டுகிறார்கள் என்றால் பூஜ்யம்.,தான் மிஞ்சும். இந்த கரை தட்டிய தமிழனைப போல பல தமிழர்கள் மெய்ப்பொருள் காணாது தோற்றுப போனதால்தான் இன்று இந்த நாட்டின் தமிழன் ஏமாளித்தன அவதி கயமையில் காலாவதியாகிறது. உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம் என்றான் MGR . தைபூச விழாவில் எத்தனை தமிழன் வியாபாரியாக உள்ளார்கள் என்று ஆய்வு
செய்யுங்கள். 1. 5 மில்லியன் தமிழர்கள் வரவில் 10 கோடிவரை வியாபாரம் நடக்குது, அடுத்த மாதம் சொத்து விற்பனை அதிகமாக உள்ளது ..பார்த்தல் எல்லாம் அவர்கள். என் இந்த விபரங்கள் பிரித்து
பார்க்கும் என்னமுடையது அல்ல .ஒரு படிப்பினைக்கு நமவர்ககளுக்கு
மூளை சவரம் செய்யத்தான். திறமையில் வாழ்வது வரவேற்போம்.
நாம் வறுமையில் வாழவேண்டிய அவசியம் இல்லையே!
என் ஆய்வில் அவர்களிடம் தமிழர்களை பற்றி பேசினால் அரசியல்வாதி முதல் அந்ஜெடிகள் வரை ஆத்திரம் அடைகின்றரார்கள். என் இன வளர்ச்சிக்கு பேசினால் எழுதினால் இவர்களுக்கு ஏன் பிதிங்கி கொண்டு வருகிறது. நான் எந்த காலத்திலும் ஜாதியம் பேசுவதில்லை. அது ஆரியன் அமர்க்களம். தமிழன் ஜாதியம் பேச வேண்டிய அவசியம் இல்லை காரணம் அவன்தான் மனித மூலம். உலகில் கரை கட்டிவன் (வந்தேறி) அல்ல தரை தட்டியவன் ..மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும் என்று வந்தாரை வாழவைத்து வாசற்படியில் நிற்கும் தமிழன் மீண்டும் வாழ நினைப்பது உரிமை சலுகை அல்ல. சிற்றெரும்பை போல கோல மாவை மேய்ந்து போக அல்ல. கோலம் போட்ட பரம்பரைக்கு மாவட்ட சொல்ல வேண்டாம். நாம் தமிழர் என்ற உன் மரபணுவை சீண்ட்ப்பார் அங்கே தமிழன் உப்பு
கரிக்கும். நெற்றியில் எழுத எங்களிடம் நெற்றிக்கண்ணே உண்டு உன்
கோழை கெஞ்சல் தேவையில்லை ! சங்கே முழங்கு தமிழா !
மலேசிய பங்குசந்தையில் தமிழர்களின் சொத்துடமை நகைப்புக்குரியது. தொழிலதிபர் சில பேரை நீக்கி விட்டால் நமது சொத்துடமை 0.0000001% – ன் இருக்கும். இதில் சந்தேகம் வேண்டாம். உண்மை இதுதான். ஆனால் இருந்தையும் இழக்க வைத்த தானைத் தலைவரோ, இன்னும் ம.இ.க. கூஜா தூக்கிகளோ, கணவரை வீட்டில் அமர வைத்து விட்டு வேட்டி கட்டிக் கொண்டு நடனமாடும் கனகாம்பிகையோ நம்மை ஒரு காலமும் காப்பாற்றப் போவதில்லை..டத்தோ இராஜேந்திரன் அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை ஒழுங்காகச் செய்யத் தவறினால் தமிழர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். மன்னிக்க மாட்டார்கள். தமிழ் அறவாரியம் கட்டும் கல்லூரிக்கு முதலிடம் கொடுங்கள். ஆண்டு கணக்கில் போக்குவரவு செலவுக்கு RM37,000/= கணக்கு எழுதி வைக்கும் இந்து மத கம்பெனியார், அப்புறம் அந்த இன சங்கம், இந்த சங்கம் மற்றும் வரவு செலவு கணக்கையே காட்டாத NGO என்றெல்லாம் அரசாங்க மாணியம் பந்தாடப் பட்டால் அப்புறம் நீங்கள் பந்தாடப் படுவீர்கள் என்பதை மனதில் நிறுத்தி வைத்து செயல்படுங்கள்.
இந்தியராக இணைவோம் என்று கூறும்போது நன்றாகவே இருக்கிறது.இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலகத்தமிளர்களிடேயே இருந்துதான் வேதனை குரல்கள் வெளி வந்தன .மற்ற இந்திய மாநிலங்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரில்லை .இது ஒவ்வொரு தமிழனுக்கும் நல்ல பாடம் .சிந்திப்போம் செயல்படுவோம் .
தோழர் பொன்ரங்கன் அருமை ..
தமிழ்நாட்டிலும்சரி மலேசியாவிலும் தெலுங்கர்களின் வாடிக்கையாளர்களாகவே நாம் மிகவேகமாக மாற்றபடுகிறோம் .
முன்பெல்லாம் தமிழர்களால் முருகன் பெயரில் வணிகம் செய்யபட்டது . இப்பெல்லாம் சாய் கேஷ் &கறி /சாய் ரேடிங்/ சாதிபெயரிலேயே சாம்பிராணி !! நாய்டு சாம்பிராணி ! இனத்தை பெருக்க ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தை நடத்தி ராம ஆண்சநேய சாய் ஹிந்து போதனைகள் அதிகரித்துள்ளது ..
தமிழகத்தில் திராவிட போர்வையில் தமிழரல்லாதார் தமிழர்களின் சைவத்தை சிதைத்து காட்டுமிராண்டியாக்கி குடிகாறனாக்கி தமிழர்களின் வரலாற்றை /திறமையை போற்றும் பொக்கிசமான ஆலயங்களை தெலுங்கு பிராமணர்களை கொண்டு கைபற்றிகொண்டார்கள் ..நம்ப ஒருவிதமா ஓரம்கட்டபடுகிறோம் …
நம்பகிட்ட உள்ள குறைபாடு சகதமிழனோட நட்புபாராட்ட தயன்கிறோம் … திராவிடன் நடத்தும் கடையில் பொருள்வாங்க உள்நுழைந்தால் வணக்கம் வணக்கம் என்று வரவேற்கிறான் …
நம்பளும் தமிழன் என்று மகிழ்ச்சியோட பேரம்பெசாம போருட்களைவாங்கி கொள்கிறேம் …அவன் ஆலபார்த்தா சாய்ராம் சாய்ராம் என்கிறான் !! தமிழ் வியாபாரிகள் திராவிட ரவுடிகளால் மறைமுக நேரடியாக அச்சுறுதபடுகிரார்கள்…. போதைபொருள் சாராயம் இதெல்லாம் தமிழ் சமுதாயத்தை சிதைக்க திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள் … இது மலாய்காரர்கலாலோ சீனர்களாலோ அல்ல .. தமிழர்கள் லாபமோ நஷ்டமோ இத்துப்போன இந்தியன் பெயரை இனிமேலும் தொடர்வை நிறுத்தி தன்மானத்தோடு தமிழராய் வாழவேண்டும் .. இந்த மாஇக்காவும் அதன் டலிவர்கலாயையும் இனத்துக்கு ஒன்னும் கிடையாது .. ஒன்னு சபரிமலைக்கு சரணம் சாமி .இன்னொன்னு சாய் பாபாக்கு சாய் ராம் டாக்டர் … தெலுங்கு சங்கத்துக்கு கிடைக்கும் மானியம் தெலுங்கர்கள் வளர்ச்சிக்கு /சங்கம் கல்லூரிகளில் பேச்சுவார்த்தை நடத்தி பெறும் சீட்டுகளும் தெலுங்கு மாணவர்களுக்கே ..நம்பளுக்கு பல தலிவர் சங்கம் இருந்து என்னா புண்ணியம் ? ஒண்ணுமில்லை …
தமிழகத்தை இன உணர்வுள்ள தமிழர் ஆளவேண்டும் …..அதற்காக நம்பளால் முடிந்த வழியில் உதவவேண்டும் .. நாம் பார்க்கும் ஒவ்வொரு தமிழ்நாட்டு தமிழர்களிடமும் இன உணர்வை புகட்டுவோம் .. தமிழர்களை இன்றுவரை அடிமைபடுத்தி வைத்திருப்பது சினிமா ..தமிழர் கலை/ இலக்கியம் /திரைப்படத்துறை அனைத்தையும் வந்தேறிகள் கைப்பற்றிகொண்டார்கள் ..முன்னாள் முதலமைச்சர் தெலுங்கு சின்னமேளம் தட்சணாமூர்த்தி /மலையாள ராமச்சந்திர மேனன் /கன்னட பிராமண செயலலிதா /இப்போதைய தமிழக தமிழர்களின் எதிர்க்கட்சி தலைவர் தெலுங்கர் விஜயராகவலூ அனைவரும் சினிமா கொட்டகையிலிருந்து தமிழர்களை ஆளவந்த அன்னியர்கள் .. தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் உலக தமிழர்களையும் பாதிக்கும் …சினிமா என்ற போர்வையில் அந்நியர்களால் மொழி கலாசாரம் சிதைகிறது .. கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்த சரியான அதிகாரம் தமிழர் இடமில்லை …தமிழரை தமிழர் ஆழ அனைவரும் தோள்கொடுப்போம் ….
சிற்றெரும்புக்கு சின்ன புத்தியா அல்லது வாய் வீச்சு வீரனுக்கு மங்கிய அறிவா என்றுதான் தெரியவில்லை. வந்தேறிகளுக்கு வாழ வழிவகுத்த தமிழர் நாம் என்று சொல்வதில் பெருமைதான். ஆனால், தெரியாமல்தான் கேட்கிறேன், அப்படியென்ன வாரி வழங்கி விட்ட்டார்கள் பிற இந்தியர்களின் வளர்ச்சியைக் கண்டு குறை சொல்ல அல்லது பொறாமை கொள்ள?? நமது தமிழன் என்ன ஏமாளியா?? சிந்திக்கத் தெரியாதவனா?? கிடத்ததை எல்லாம் சுருட்டிய தமிழன், தமிழனையே முடக்கி வெகு ஜோராக வாழ்கிறான். அவனிடம் வாய் வீச்சைக் காட்டாமல், பிற இனத்தார் மீது குறை கூறுவது ஏனோ??தமிழன் கொட்ட வேண்டிய தருணத்தில் / இடத்தில் கொட்டாமல், ஏமாளியாக ஏனோதான்னாக இருந்துவிட்டு பிற சக இந்திய இனத்தாரை குறை சொல்வானேன்?? நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கேட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்…விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.. அங்கே, குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது. ஐயா, பேராசிரியர் இராஜேந்திரன் அவர்களே, ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை அடிமட்ட ஏழை மக்களுக்காகவே, குறிப்பாக தமிழனுக்காகவே செலவிடுங்கள். அதில் தவறேதும் இல்லை. அப்படியாவது நமது தமிழனின் பொருளாதார நிலை ஓரடி முன்னிலை பெறட்டும்!!! வாழ்வோம்!! வாழ்விப்போம்!!!
இப்பொழுது தமிழர்களும் தாங்கள் என்ன செய்கின்றோம், எங்கே போகின்றோம் என்று தெரியாமலே பிறாரால் குருட்டு குரு வழிபாட்டில் மிகத் தீவீரமாக இட்டுச் செல்லப் படுகின்றனர். இது தமிழரை மீண்டும் இன்னொரு வழியில் மடைமாற்றம் செய்யும் புதிய கலை. இப்பொழுது இவர்கள் கண்டுப் பிடித்த புதிய வணக்கம் கூறும் முறை “சாய் ராம்”. இது எப்ப தமிழரின் வணக்கத்தில் புகுந்தது என்று தெரியவில்லை. இதுதான் எதற்கு ஏன் சொல்லுகின்றோம் என்று தெரியாமலேயே தமிழன் தன் பண்பாட்டை மாற்றிக் கொள்ளும் அறிவிலித்தனம். இவ்வாறு மடைமாற்றம் செய்யப் படுபவர்களில் பெரும்பாலும் ‘டமிலர்” – கள். தமிழ் கல்லாதவர்கள். இவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் மூன்று நாமம் போட்டுக் கொள்வார்கள் அதுவே உயர்ந்தது என்றும் போற்றுவார்கள். எப்படி தமிழன் இப்படி?.
இப்பொழுது தமிழர்களும் தாங்கள் என்ன செய்கின்றோம், எங்கே போகின்றோம் என்று தெரியாமலே பிறாரால் குருட்டு குரு வழிபாட்டில் மிகத் தீவீரமாக இட்டுச் செல்லப் படுகின்றனர். இது தமிழரை மீண்டும் இன்னொரு வழியில் மடைமாற்றம் செய்யும் புதிய கலை. இப்பொழுது இவர்கள் கண்டுப் பிடித்த புதிய வணக்கம் கூறும் முறை “சாய் ராம்”. இது எப்ப தமிழரின் வணக்கத்தில் புகுந்தது என்று தெரியவில்லை. இதுதான் எதற்கு ஏன் சொல்லுகின்றோம் என்று தெரியாமலேயே தமிழன் தன் பண்பாட்டை மாற்றிக் கொள்ளும் அறிவிலித்தனம். இவ்வாறு மடைமாற்றம் செய்யப் படுபவர்களில் பெரும்பாலும் ‘டமிலர்” – கள். தமிழ் கல்லாதவர்கள். இவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் மூன்று நாமம் போட்டுக் கொள்வார்கள் அதுவே உயர்ந்தது என்றும் போற்றுவார்கள். எப்படி தமிழன் இப்படி?.
ஏம்பா ஆன்ம வர்கத்தில் வந்த குருமாருக்கு கோவில் கட்டி அவ்வாறான குருமார்களை கடவுளாக்குவது, திருமேனி வழிபாடு கண்ட சைவத்திலும் இல்லை, தீ வழிபாடு கொண்ட வைதீக மதத்திலும் இல்லை. அப்புறம் இந்த டாக்டரு எப்படி குருவுக்கு கோயில் கட்ட RM300,000/= அரசாங்க மானியத்தை ஒதுக்கி கொடுக்கின்றேன் என்று வாக்குறுதி கொடுத்தாரு?!. இப்ப தெரியுதா மக்களுக்கு சேர வேண்டிய உண்மையான அரசாங்க மானியங்கள் எப்படி திசை திருப்பப்பட்டு ஏழைகளிடம் இருந்து திருடப் படுகின்றது என்று. எங்கே திருடன், எங்கே திருடன் என்றால் அவன் இங்கேதான் இருக்கின்றான். இந்த டாக்டருக்கு சமயம் என்றால் என்ன என்பதாவது தெரியுமா இல்ல இதுவும் ஒரு மூட மடச் சாம்பிரானிதானா?.
ஏம்பா ஆன்ம வர்கத்தில் வந்த குருமாருக்கு கோவில் கட்டி அவ்வாறான குருமார்களை கடவுளாக்குவது, திருமேனி வழிபாடு கண்ட சைவத்திலும் இல்லை, தீ வழிபாடு கொண்ட வைதீக மதத்திலும் இல்லை. அப்புறம் இந்த டாக்டரு எப்படி குருவுக்கு கோயில் கட்ட RM300,000/= அரசாங்க மானியத்தை ஒதுக்கி கொடுக்கின்றேன் என்று வாக்குறுதி கொடுத்தாரு?!. இப்ப தெரியுதா மக்களுக்கு சேர வேண்டிய உண்மையான அரசாங்க மானியங்கள் எப்படி திசை திருப்பப்பட்டு ஏழைகளிடம் இருந்து திருடப் படுகின்றது என்று. எங்கே திருடன், எங்கே திருடன் என்றால் அவன் இங்கேதான் இருக்கின்றான். இந்த டாக்டருக்கு சமயம் என்றால் என்ன என்பதாவது தெரியுமா இல்ல இதுவும் ஒரு மூட மடச் சாம்பிரானிதானா?.
“விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.. அங்கே, குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்” நாங்கள் விழித்துக் கொள்ளதான் “நாம் தமிழன்” என்று சொல்லி தமிழரைத் தட்டி எழுப்புகின்றோம். ஆனா இது வேணா, அவர்கள் தூங்க “இந்தியன்” என்று தாலாட்டுப் பாடுங்கன்னா தமிழன் எப்ப எழுந்திருக்கின்றது?. இது உங்களுக்கே நியாமாகப் படுகின்றதா?. இது என்ன தமிழரை வாழவும் விடாமா சாகவும் விடாம விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டா?.
கூடவே இருந்து குளிர் காய்ந்து விட்டு இப்ப ஏன் சுடுதுன்னு கேள்வி கேக்கிரானன்னா, இவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பான்!. இதிலிருந்து நாம் தமிழர் என்ன கற்றுக் கொண்டோம்? கூட இருப்பவன் எல்லாம் கூட இருந்தே குழி பறிப்பான் என்பதை உணர்ந்து பிரித்து அறியக் கற்றுக் கொண்டோம். இப்ப நாங்க விழித்துக் கொண்டோம். இனி பிழைத்துக் கொள்வோம். இதுக்குதான் அந்த டாக்டருக்கு மேலே கொடுத்த முதல் அறை. அடுத்தடுத்து வரும் இந்த ம.இ.க. தலைவர்களுக்கு எல்லாம்.
தொடருங்கள் தேனீ!!! நல்லதே நடக்கட்டும். அட்டூழியங்களை தட்டிக் கேட்போம்!! மக்கள் நலம் பெற உதவிக்கரம் நீட்டுகிறேன் . வாழ்வோம்… வாழ்விப்போம்!!!
இந்தியன் என்ற பெயரில் தமிழர்கள் நிறைய இழந்துதான் உண்மை.
அரசாங்கம் மலேசிய இண்டியன்களுக்கு ஒதுக்கிய RM10 கோடி வெள்ளி மானியத்தில், இன்று சீக்கியர்கள் அவர்தம் இனத்திற்கு பஞ்சாபி மொழி போதிக்க ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றோம் அதற்காக எங்களுக்கு அம்மானியத்தில் இருந்து நிதி ஒதுக்குங்கள் என்று கேட்கின்றார்கள். தமிழர்கள் சார்ந்த இயக்கங்கள் விரைவாக (10.7.2015 முன்னதாக) தமிழ் மொழி அறியாத தமிழ் சிறார்களுக்கும், முதியோர்களுக்கும் தமிழ் போதிக்க எங்களுக்கும் நிதி வேண்டும் என்று விண்ணப்பம் போடுங்கள். தமிழ் மொழி சார்ந்த இயக்ககள், தமிழ் எழுத்தார்கள் சங்கம் பட்டணத்திலும், புறநகர் பகுதிகளிலும் இதைச் செய்வதற்கு மானியம் வேண்டும் என்று சரியான முறையில் ‘Project Paper’ தயார் செய்து அனுப்பி விடுங்கள். சகல வசதியிலும் வாழும் சீக்கியர்களே அரசாங்க மானியத்தைப் பெற இவ்வாறான புதுப் புது வியூகங்களோடு வருகின்றார்கள் என்றால் நாம் தமிழர் கேனையர்களாக இருக்க வேண்டாம். நாமும் விழித்துக் கொண்டோம் என்பதை அவர்களுக்கும் உணர்த்துவோம். வரும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் குறட்டை விட்டு தூங்கி விட்டு அப்புறம் குய்யோ முரோ என்று கத்துவதில் பயனில்லை. மலேசிய இண்டியன்களில் 40% ஏழ்மை நிலையில் வாழும் மக்களில் அதிகமானோர் தமிழர்களே என்பதால் அம்மானியத்தை 4 பகுதியாக பிரித்துக் கொடு என்று எவனாவது வாய் திறந்தால் தூக்குங்கடா அறிவாளை.
பொறாமையினாலோ, ஆதங்கத்தினாலேயோ அல்லது வெட்டரிவாள் வேல்கம்பு வீச்சுனாலேயோ தமிழன் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. இதனால், சிறைக் கதவே பல்லிலித்துக் வரவேற்கும். பிறர் உரிமையின் கோரிக்கையில் தமிழனின் எதிர்ப்பு அர்த்தமற்றது. ஏழை தமிழர்களின் அதிக எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதிக ஒதுக்கீடு கேட்பதே சிறப்பு. பிறருக்கு சேர வேண்டியதை நாம் ஏன் அபகரிக்க வேண்டும்??? வாழவும் விடாமல் சாகவும் விடாமல், நண்டினம்போல், தமிழனுக்கு தமிழனே பொறாமை கொண்டு முட்டுக்கட்டையாய் இருப்பதை விட நமது உரிமையை முறையே பெற்று, ஒருவருக்கொருவர் உதவிக் கரம் கொடுத்து முன்னிலை படுத்துவோம். சிந்திப்போம் செயல்படுவோம்!!!
நீங்கள் சொல்வது வேடிக்கை..93% தமிழரை , 2% தெலுங்கர்கள் முந்தி உள்ளர்கள் என்பது ,,,அடுத்தவர் வளர்வதை பொறுக்க முடிய மனத என்ன சொல்வது.
கத்தியை தீட்டச் சொல்லல தமிழர் புத்தியைத் தீட்டச் சொன்னேன். அதனால்தான் “அறிவு” என்ற கூறிய வாளை எடுக்கச் சொன்னேன். நமக்குச் சேர வேண்டியதை பிறர் அபகரிப்பதற்கு முன் நாம் விழித்துக் கொள்ளலாமே? தட்டி எழுப்பும் தமிழனை தாலாட்டி தூங்க வைப்பதன் நோக்கமென்னவோ?. “அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை” என்று தமிழர் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கின்றேன். இதுவும் சொல்ல வேண்டாம் என்றால் அப்புறம் தமிழருக்கு அறிவுரை சொல்ல பிறருக்கு தகுதி என்ன இருக்கு?. தமிழருக்கு வாழ வழியைச் சொல்லுங்கப்பா என்றால் பள்ளத்தில் விழ வழியைக் காட்டினால் இது தகுமா? அடுக்குமா?. இதுக்குத்தான் தமிழன் முன்னமே சொல்லி வச்சான் “தான் ஆடவில்லை என்றாலும் தன் சதை ஆடும்”. இது தமிழராய் வாழ்வோருக்குப் புரியும்.
தனித்து வாழும் தாய்மார்கள் தந்தைமார்கள் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள அவர்கள் வீட்டிலியே காளான் பயிரிடும் திட்டத்தை அறிமுகப் படுத்த ஒரு தமிழர் இயக்கம் விண்ணப்பம் போடுங்கப்பா. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதற்கு முன் இவ்வாறு காளான் பயிர் செய்யும் ஒரு பெரிய அல்லது சிறிய நிறுவனத்துடன் தொழில் நுட்ப மாற்று உடன்படிக்கை செய்துக் கொள்ள வேண்டியது. அடுத்து அவர்களின் வழிகாட்டி மூலம் வீட்டு வளாகத்திலே காளான் பயிரிட தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தந்தைமார்களுக்கும் பயிற்சி கொடுக்கப் போகின்றோம். அதன் வழி அவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்யப் போகின்றோம் என்று மலேசிய தமிழ் தமிழ் இளைஞர் மணி மன்றம் போன்றோர் ஒரு பெரிய விண்ணப்பம் போடலாம் அல்லவா! செய்யுங்கள், செய்யுங்கள் பணம் பிறர் கைக்கு மாறுவதற்குள் செய்யுங்கள். இல்லையேல் அம்போ!. .
BESTINA gold scheme 66 கோடி காலி. மண்புழு வளர்ப்பு திட்டத்துல 3 கோடி கலி, நகைகள் அடமானம் விபத்துல, ஒரு பாங்க்கை (BANK) எமாற்றிய குட்ரதுல 1.5 கோடி காலி, ம இ கா வுல 66 ஆயிரம் மக்களின் பணம் காலி, அதுல காலி, இதுல காலி நு இந்தியர்களின் பணம் எல்லாம் காலி. இப்ப காளான் வளர்க்கிறதுல பணம் போட சொல்லுறார இந்த தேனீ ? “கத்தியை தீட்டச் சொல்லல தமிழர் புத்தியைத் தீட்டச் சொன்னேன். -தேனீ” புத்திய தீட்டனும்ன படிக்க சொல்லுங்க. பாத்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தினாலே போதும். எதையும் வளர்க்க வேண்டாம். நடனம், இசை, யோகா, ஓவியம் வரைதல், பாலர் பள்ளி நடத்துதல், திருக்குறள் மனனம் செய்யும் முறையை கற்பித்தல், வாய்பாடுகளை பாடல் மூலம் மனனம் செய்தல், தையல் கலை, இப்படி எத்தனையோ உள்ளது…..தேனீ யின் தத்துவம் எப்படி உள்ளது என்றால்: ஒரு பள்ளியில் ஒரு மாணவன் தேர்வில் கடைசியாக வருகிறான், அதனால் முதலில் வரும் அனைத்து மாணவர்களையும் அடித்து துரத்தி விட்டால், இப்பொழுது கடைசியில் வரும் மாணவன் தான் முதலில் வருவான் காரணம் அங்கே யாருமே இருக்க மாட்டார்கள்….குருடன் குருடனுக்கு வழிகாடியத்தை போன்று !
ரொம்ப வேடிக்கை உங்கள் தவறுக்கெல்லாம் தெலுங்கர்கள் தான் காரணமா…தமிழ் நாட்டில் விடுங்கள் மலேசிய – வில் உங்களை அவர்கள் என்ன செய்தார்கள் ,,,அவர்கள் தனியாக வாழ்கிறார்கள் .உங்களை எந்த விதத்தில் தடுத்தார்கள். அங்கு பெரும்பான்மை தமிழர்கள் நடக்கும் விதம் எப்படி என்பதை தமிழ் நாடு தமிழர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
குருடர்களிடம் பணத்தைக் கொடுத்து, கொடு என்றால் அவன் குருட்டுத் தனமாகத்தான் கொடுக்க முடியும். அதுதான் இன்றைய அரசியல் நிலை. அரசாங்கமே ஏழைகளுக்கு வேண்டியதை நேரிடையாகச் செய்யாமல் அல்லது செய்யமுடியாமல் ஒரு தனி நபர் மேல்பார்வையில் பணத்தைக் கொடுத்து பயனீட்டுக்கு பங்கீடு செய் என்றால் அவர் என்ன செய்வார் பாவம்?. தான் தனி மனிதனாக இருந்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து, டத்தோ இராஜேந்திரன் அரசாங்க சார்பற்ற இயக்கங்களையும், IKLS போன்ற நிறுவனங்களையும் நாடி, நாங்கள் 40% இருக்கும் ஏழை இண்டியன்களுக்கு உதவி செய்ய உங்கள் திட்டங்களை சமர்ப்பியுங்கள் அதற்கான பொருளாதார உதவியை அரசாங்க மானியமாக கொடுக்கின்றோம் என்று அறிவிக்கின்றார். இதில் தமிழனும் கொஞ்சம் அறிவாளியாகப் பிழைத்துக் கொள்ளட்டும் என்றுதான் அறிவுரை கூறினேன். காளான் நட்டுதான் மானியம் பெற வேண்டும் என்பது இல்லை. பச்சை மிளகாய் நடுங்கப்பா. ‘NAAM’ சொல்லும்போது பச்சை மிளகாய் இனிக்குது அதையே நான் சொன்னால் உறைக்குதோ?. வேற எந்த ஒரு பிளான் போட்டாவது தமிழர் அரசாங்க மானியத்தைப் பெறலாம் என்று சொல்கின்றேன். இதைத்தானே “விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்று சொன்னீர்கள். அதை செய்யச் சொல்லி தமிழரை தூண்டுவதும் தப்பாகுமா? என்னடா இது! நல்லதைச் செய்யச் சொன்னாலும் தப்பு!. செய்யாமல் இருந்தாலும் தமிழர் “குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்” என்று ஒப்பாரி!. அப்ப தமிழர் வாழவும் வேண்டாம் சாகவும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள் போலிருக்கு. அப்படித்தானே?. இப்ப ம.இ.க. எப்படி இருக்கோ அப்படியே தமிழர் வாழ்ந்தால் போதும்!. அடுத்த தலைமுறை வரைக்கும் தமிழர் நடுத்தெருவில் வாழ்ந்தால் பிறருக்கு நிம்மதி. நமக்கு?.
என்னுடைய தத்துவம் எப்படி இருக்குன்னா ‘எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம்”. என்றுதான் உள்ளதே தவிர எரிகின்ற வீட்டில் எல்லோரையும் துரத்தி விட்டு நீ போயி நெருப்பில் விழந்து சாவு என்றில்லை!. நம்பிக்கை நாயகன் இருக்கப் போவதோ இன்னும் சில மாதங்களே. அவர் போனதும் அடுத்து வரப் போகின்றவர் இண்டியன்களுக்கு இது போன்ற வரப்பிரசாதம் மீண்டும் வைக்கப் போவதில்லை. அள்ளி வாயில் போட்டுக் கொள்ள. அதனாலே முந்திக் கொள்வோர் பிழைத்துக் கொள்வார். தமிழரை முந்திக் கொள்ளச் சொல்கின்றேன். அது எப்படி தவறாகும்?.
மலேசிய இளைஞர் மனிமன்றமும், மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்திய “தமிழ் மொழி சமூதாயத்தை உயர்த்துமா? என்ற கேள்வியுடன் நடந்த பட்டி மன்றத்தை நேற்று அஸ்ட்ரோவில் காண நேர்ந்தது. அதில் வெட்டிப் பேசியவர்கள் “திராவிடர் யார்” என்பதற்கு ஒரு கருத்தை முன் வைத்ததாக முனைவர் இராஜேந்திரன் அவர்கள் கூறினார். யார் இந்நாட்டில் தமிழ் பேசி தமிழர் பண்பாட்டைப் பின் பற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்தாம் என்றார். இந்த ஒரு கருத்தே வெட்டிப் பேசிவர்களுக்கு வெற்றிப் பெற தக்க புள்ளிகளை கொடுத்திருக்கும் என்பது என் கருது. ஒட்டிப் பேசியவர்களும் சளைத்தவர்கள் அல்ல. இருப்பினும் தமிழ் அல்லாமல் ஆங்கிலத்தைக் கொண்டு உலகியல் கல்வி பெறலாம் ஆனால் “ஞானம்” தமிழ் இல்லாமல் பெற முடியாது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க ஒட்டிப் பேசியவர்கள் தவறி விட்டார்கள். இப்ப சொல்லுங்கள் Dilip 2 மற்றும் Anonymous நீங்கள் தமிழர்களா?. அப்படி இல்லை என்றால் இது உங்களுக்கு உரிய இடம் அல்லவே. அப்புறம் ஏன் எங்களை உரிபாதை செய்கின்றீர்கள்?.
நான் தெலுங்கர்களைக் குறை சொல்லவில்லை. தெலுங்கர் எம் உறவினர். மலையாளி எம் உறவினர். கன்னடர் எம் உறவினர். தமிழர்களின் தவற்றுக்கு எல்லாம் தமிழர்களே காரணம். அதனால்தான் தமிழா விழித்துக் கொள் என்று சொல்கின்றேன். இதுவும் குற்றமா? தொட்டாலும் குற்றம் எடுத்தாலும் குற்றம் என்றால் நாங்கள் எப்படி தூங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தட்டி எழுப்பவது?. அப்ப, தமிழா நீ தூங்கிக் கொண்டே இரு. இதுதான் உங்களுக்கு பிறர் எழுத விரும்பும் தலை விதி. மதியைக் கொண்டு இந்த விதியை வெல்லப் பார் தமிழா!.
தேனீயின் கூற்று 100 % உண்மை, இன்று மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் தமிழர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் பார்க்கிறது இந்த அங்காளி பங்காளி தெழுங்கு மற்றும் மளையாள சமூகம். அதிலும் இவர்களில் சிலர் தோல் கொஞ்சம் வெள்ளையாகவும், கையில் கொஞ்சம் பசையும் இருந்துவிட்டால், நேரே ஆகாசத்திலிருந்து குதித்து வந்து விட்டதைப்போல் ஒரு பாவனை. பார்வையும், அலட்சியமும், நுனி நாக்கு ஆங்கிலமும்.
பேசுவது ஓட்டை இங்கிளீசு, காட்டுவது பெரிய பந்தா. கோவில்களில் இவர்கள் அலப்பறை தாங்க முடிவதில்லை.
ஒரு மளையாளப் பெண்மணி மலாய்பள்ளியில் ஆசிரியை இன்னொரு சக மலாய் ஆசிரியையிடம் கூறியிருக்கிறாள் தமிழர்கள் எல்லோரும் தாழ்ந்த சாதியாம். அதன் அடையாளமாகத்தான் கழுத்தில் கயிறு(தாலி) அணிகிறார்களாம் அவர்கள் தாம் ரொம்ப உசத்தியாம், அதனால் பொன்னில் தாலிச் சரடு அணிகிறார்களாம், அந்த மலாய் ஆசிரியை மற்ற தமிழ் ஆசிரியைகளிடம் இதைப்பற்றி விசாரிக்கிறார். இவர்களின் போக்கு இப்படி இருக்க, அவசியம் வந்துவிட்டால் மட்டும் அனைவரும் இந்தியர்களா ? நல்லாயிருக்குப்பா ஞாயம் ! இங்குள்ள தமிழன்பர்கள் தமிழர்கள் நலனின் அக்கரை கொன்டு குறிப்பிட்டதை கவனத்தில் கொன்டு தமிழர்கள் அனைவரும் செயல்படவேண்டும். தங்களை அரசியல் , பொருளாதார ரீதியில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
நான் ஒரு தமிழன். என் குடும்பமே தமிழர்களின் ராஜ்யங்களில் ஒன்றான ராஜா ராஜ சோழனின் பரம்பரை பெயர்களை தாங்கி நிற்கிறோம். எம் முன்னோர்கள் ராஜ ராஜ சோழனின் மேல் உள்ள விசுவாசத்தால், அந்த வம்சாவளி பெயரையே சுட்டி வருகின்றனர் என்று நான் கருதுகிறேன். என் உடன் பிறப்புக்களின், ஆறு பேரின் பிறப்பு பத்திரத்தின் நகல், செம்பருத்தி ஆசிரியருக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நான் தமிழரா அல்லது வேறு ஒரு இந்திய பிரிவை சேர்ந்தவரா என்று. உங்கள் நகைச்சுவை, சிரிக்கும் படியாக உள்ளது தேனீ அவர்களே! தமிழனை தட்டி எழுப்ப அடுத்தவனை தரம் தாழ்த்துவது எந்த வகையில் ஞாயம் ? எனக்கு தெரிந்து ஆனந்த கிருஷ்ணன் (MAXIS) ஒரு இலங்கை தமிழர் வம்சாவழி வந்தவர். அவர் அதிக பணம் வைத்துள்ளார் என்பதற்காக ஈழ தமிழர்கள் எல்லாம் கெட்டவர்கள், காரணம் நிறைய பணம் வைத்துள்ளார்கள் என்றால், சிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது தேனீ அவர்களே ? ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கர்களுடன் தான், கடந்த 70 ஆண்டு ஜப்பானியர்கள் வர்த்தகம் செய்து, இன்று உலக மூன்றாம் நிலையில் பொருளாதார வளர்ச்சியை அடைந்தார்கள். ஆகையால், சிலவற்றை மறப்போம், மனிப்போம். தொடந்து வெற்றி நடை போடா, ஒன்றாக முயல்வோம். அதைவிடுத்து, குழப்புவதையையே கொள்கையாக கொண்டிருக்கும் அன்பர் தேனீ அவர்களே, உங்களுக்காக பட்டு கோட்டையின் சில வரிகள் இங்கே தந்துள்ளேன் : ” யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னு தான். ஆகா மொத்தம் போரந்ததேல்லாம் 10 மாசம்தான்”.
நான் ஒரு தமிழன். என் குடும்பமே தமிழர்களின் ராஜ்யங்களில் ஒன்றான ராஜா ராஜ சோழனின் பரம்பரை பெயர்களை தாங்கி நிற்கிறோம். எம் முன்னோர்கள் ராஜ ராஜ சோழனின் மேல் உள்ள விசுவாசத்தால், அந்த வம்சாவளி பெயரையே சுட்டி வருகின்றனர் என்று நான் கருதுகிறேன். என் உடன் பிறப்புக்களின், ஆறு பேரின் பிறப்பு பத்திரத்தின் நகல், செம்பருத்தி ஆசிரியருக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நான் தமிழரா அல்லது வேறு ஒரு இந்திய பிரிவை சேர்ந்தவரா என்று. உங்கள் நகைச்சுவை, சிரிக்கும் படியாக உள்ளது தேனீ அவர்களே! தமிழனை தட்டி எழுப்ப அடுத்தவனை தரம் தாழ்த்துவது எந்த வகையில் ஞாயம் ? எனக்கு தெரிந்து ஆனந்த கிருஷ்ணன் (MAXIS) ஒரு இலங்கை தமிழர் வம்சாவழி வந்தவர். அவர் அதிக பணம் வைத்துள்ளார் என்பதற்காக ஈழ தமிழர்கள் எல்லாம் கெட்டவர்கள், காரணம் நிறைய பணம் வைத்துள்ளார்கள் என்றால், சிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது தேனீ அவர்களே ? ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கர்களுடன் தான், கடந்த 70 ஆண்டு ஜப்பானியர்கள் வர்த்தகம் செய்து, இன்று உலக மூன்றாம் நிலையில் பொருளாதார வளர்ச்சியை அடைந்தார்கள். ஆகையால், சிலவற்றை மறப்போம், மனிப்போம். தொடந்து வெற்றி நடை போடா, ஒன்றாக முயல்வோம். அதைவிடுத்து, குழப்புவதையையே கொள்கையாக கொண்டிருக்கும் அன்பர் தேனீ அவர்களே, உங்களுக்காக பட்டு கோட்டையின் சில வரிகள் இங்கே தந்துள்ளேன் : ” யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னு தான். ஆகா மொத்தம் போரந்ததேல்லாம் 10 மாசம்தான்”.
தமிழர்களை முன்னேற்ற, தமிழர்கள் போட்டி ஆற்றலை வளர்க்க நமக்கு தெரிந்த ஒரு பூதம் தேவை. முன்னேற்றப் பாதையில் சென்ற பிறரைப் பார்த்து முன்னேறு என்றுதானே தமிழர்களுக்கு அறிவுரை சொல்கின்றோம். முன்னேரியவனை பிடித்து கீழே தள்ளி விட்டு மேலே ஏறு என்றா சொல்கின்றோம். இப்ப தமிழர்கள் அரசாங்கம் கொடுத்த மானியத்தைப் பெற வழியைச் சொல்ல தெரியாம அவன் இரத்தமும் இவன் இரத்தமும் ஒன்று தத்துவம் பேசிக் கொண்டிருந்தால், பிறர் கனியைப் பறித்துச் செல்ல மீண்டும் தமிழன் குருமுட்டையாகதான் வாழுவான். அரசாங்க மானியத்தைப் பெற நாங்களும் விண்ணப்பம் போடுகின்றோம். அதைப் போல ஒவ்வொரு தமிழர் இயக்கங்களும் மறவாமல் தவறாமல் அவர்தம் விண்ணப்பங்களை புத்ராஜெயாவிர்க்கு 10-7-2015 – க்குள் அனுப்பி விடுங்கள். காலம் கடந்து தூற்றுவதால் பயனில்லை.
பட்டுக் கோட்டையார் சொன்னது “தீண்டாமை”யைப் பார்த்துச் சொன்னாரப்பா. அந்த அளவில் நாம் எல்லாம் ஒன்றுதான். இதை ஏற்றுகொள்வோர் “இந்து தர்மத்தை” தூக்கிப் பிடிக்கக் கூடாது. ஒரு பக்கம் இந்து தர்மத்தை தூக்கிக் கொண்டு மறுபக்கம் “யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னு தான். ஆகா மொத்தம் போரந்ததேல்லாம் 10 மாசம்தான்” என்றால் சொல்வதொன்று செய்வதொன்றாகி விடும். இப்ப நீங்க எந்த கட்சி?.
திலிப்2 காயு என்கிற ஆரிய களவாணி.
கிறிஸ்தவ பெயரில் வந்து சைவ தமிழரையும் கிறிஸ்தவ தமிழரையும் பகைமுட்டும் உமது நரி வேலையை நிறுத்தும் ..
என்னாது நீர் சோழ பரம்பரையா ?
அதுசரி !!! இப்பெல்லாம் தமிழ் மொழியில் பாண்டித்துவம் பெறுவோர் அந்நியர்களே .. தமிழ் பெயரையும் சூட்டிகொள்கிறார்கள்..தமிழன் புரியாத அந்நிய மொழியில் பெயர் சூட்டிகிறான் ..
தமிழனை பார்த்து நீ தமிழன் என்பதற்கு என்ன ஆதாரம் என்கிறான் !
அதுமட்டுமில்ல நம்பள தமிழன் என்று தெரிந்துவிட்டால் கேவலமானபார்வை!! மலாய்காரர்களோ சீனர்களோ அல்ல ..நம்பகூடவே இருந்து நம் தமிழைபேசி வாழும் அன்னியர்கள் ..
நாம் இதுவரைகாலமும் மற்றவர்களிடம் வேற்றுமை காட்டவில்லை சகோதரர்களாக /தமிழர்களாகவே பார்த்தோம் பழகினோம் … மற்றவர்களிடம் இனவெறி தலைவிரித்தாடுது ..
நான் சொல்வது பொய் கால்புனரசியில் இனவெறியை காட்டுகிறேன் என்று சக தமிழர்கள் நினைக்கலாம் …இல்ல இல்லவே இல்லை .. முடிந்தால் தமிழர் மொழி இனப்பற்றுள்ள சிறு குழுவாக ஒரு ஆய்வை மேட்கொள்ளுங்கள்.. அப்போ உண்மை தெரியும் ..
நான் ஒருசிலரால் நம்பி எமாற்றபட்டேன் ..கொடுக்கல் வாங்கல்/வியாபார போட்டி பொறாமை /சதி /குண்டர் கும்பலை தமிலர்களுக்கேதிராக தூண்டி விட்டு வேடிக்கைபார்த்தல் .. பொய் அல்ல உண்மை.. ரொம்ப வேணாம்யா உங்களை சுற்றி உள்ள இந்தியனை அவதானித்து பார் .. கோயில் திருவிழா /தீபாவளி /பொங்கல் /வியாபாரம் செய்பவர்கள் யார் ? ஒருவிதம் கூட தமிழனை பார்க்க முடியாது .. 01% உள்ள ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவங்குட வியாபாரம் செய்கிறான் .அப்படி ஒரு சில தமிழன் வியாபாரம் செய்யலாம்னு வந்தான்னு வை குண்டர் கும்பல் வருவான் பாதுகாப்பு பணம்கேட்டு .. இல்ல யக்கம்மா கைங்க பில்லி ஏவல் சூனியம் வைப்பானுங்க … தமிழர் முன்னேற்ற இயக்கங்கள் உலக தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் ஏழை தமிழர்களை வியாபாரம் செய்யவதற்கு உதவ முன்வரவேண்டும் .. ஆலோசனை பயிற்ச்சி /முதலிட்டுக்கான ஆலோசனை உதவிகள் வழிகாட்டுதல் தொடர்ச்சியான கண்காணிப்பு இப்படி செய்தால் இனம் வாழும் தமிழ் வாழும் .. இல்லாவிட்டால் தமிழன் திராவிடன் சாராய கடை முன்னாடி தண்ணியடிச்சுபோட்டு கடைவீதியில் போதைல கிடப்பான் ..அவனோட மனைவி பாகிஸ்தாநியோட சென்று முஸ்லிமா மாறிடுவா .. பிள்ளைகள் தெலுங்கர் நடாத்தும் ஆசிரமத்தில் தெலுங்கு மொழியைகற்று தெலுங்கராக மாறும் ..(இது உண்மை சம்பவம்) எத்தனையோ இயக்கங்கள் தமிழர் பெயரில் இருந்தும் இனத்துக்கு சேவைசெய்ய எவனுமில்லை என்பதே உண்மை .. எல்லாம் தன் சுயவிளம்பரம் அல்லது அரசியல் ..எதுவும் இல்லாமல் இனத்துக்கு வேலைசெய்ய யாரும் வரமாட்டார்களா உதவ பலர் உள்ளார்கள் ..வழிநடத்த தகுதியான தமிழன் வேண்டும்
பச்சை மிளகாய் நடுகின்றேன் என்று இண்டியன்களுக்கு ஒதுக்கிய பணத்தில் இருந்து பல மில்லியன் வாங்கி விட்டாரம் ம.இ.க. அரசியல்வாதி ஒருவர். இவர் Dynasty ஓட்டலில் அலுவலகம் வைத்து பச்சை மிளகாய் நட்டுக் கொண்டிருக்கின்றார். பக்கத்தில் இருக்கும் PWTC கட்டிடத்தில் கூட்டம் போட்டு பச்சை மிளகாய் எப்படி நடுவது என்று பாட்டாளிகளுக்கு பயிற்சி நடத்துகின்றது இவர் கீழ் இருக்கும் கூட்டம்!. அதை மூலதனமாக வைத்து ஓய்வு பெற்ற ம.இ.க. தலைவர்கள் கூட்டத்தை தற்சமயம் ம.இ.க. வில் நடக்கும் உட்பூசலுக்கு தனக்குப் பக்க பலமாக வைத்திருக்கின்றாராம்!. இப்ப தெரியுதா தமிழன் ஏன் இன்னும் ஏழையாக வாழுகின்றான் என்று. இதை நேரிடையாக வெளியே சொல்ல முடியாத டத்தோ இராஜேந்திரன், அரசாங்க மானியத்தை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் எல்லாம் நாங்கள் பங்கீடு செய்கின்றோம் என்கிறார்!. ஆக மொத்தம் பெரிய தொகை எல்லாம் மற்றவர் பங்கிட்டுக் கொள்ள நமக்கு நெத்திலி மீன்தான் கிடைக்கும். இதற்கு ஒரு பெரிய ‘Road show’ நடத்தி எல்லோரும் இப்பொழுது மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூட்டம் போடுகின்றார். நல்ல நாடகம்!. நல்ல மிளகாய் விளைச்சல்!. இப்ப புரியுதா காளான் நட பயிற்சி கொடுக்கின்றோம் என்று மானியம் கேளுங்கள் என்றது ஏன் என்று.
தேனீ சொல்வதை ஒத்து கொண்டால் அவர் தமிழர் இல்லையென்றால் இந்தியன். பிறகு தமிழர்களின் பொருளாதார நிலைமை மட்டும்தான் இவர்கள் கண்ணனுக்கு தெரியும். தமிழர்கள் தோற்றால், அதற்க்கு வேறு ஒருவன் தான் காரணம். ஐயா நிறைய தமிழர்கள் வென்றிருக்கிறார்கள், அவர்கள் வெளியில் தெரிவதில்லை. போராடாத ஒரு தமிழன், எல்லவற்றையும் மற்றவரிடமெ எதிர்பாக்கும் தமிழன், தமிழர்கள் பெயர்களை சொல்லி கொள்ளைஅடிக்கும் கட்சி, மேலும் யானையே தன தலையில மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் போதை, இதுவெள்ளம் உங்கள் கண்ணனுக்கு தெரிய வில்லை. மாறாக ஒரு மலையாள வர்கதினரோ, அல்லது தெலுங்கர்களோ, அல்லது சிங்கு வர்கதினரோ, உங்கள் தோல்விக்கு காரணம் என்று குழப்புவீர்கள், அதை மற்றவர்கல் நம்பவேண்டும் இல்லையா ? ஒட்டு மொத்த மலேசியா தமிழர்களையும் எமாற்றிய ஒரே ஒரு தமிழன், மா இ கா வின் தானை தலைவர். இது என் கருத்து.
போராட முடியாதவர் யார்?. ஏழைகள். அந்த ஏழைகள் தான் எழுந்து நிற்க பிறரை எதிர்பார்ப்பதும் குற்றமாகுமா?. எம்முடைய கருத்தும் அரசாங்க மானியம் முதலில் ஏழைகளுக்குச் சென்று சேர வேண்டும். அது சிங்காக இருக்கட்டும் அல்லது பிறராக இருக்கட்டும். காரியமில்லை. ஆனால் ஏழைகளுக்கு உதவி என்று கூறிக் கொண்டு அரசியவாதிகளை நடு தரகர்களாக வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பதில் எமக்கும் உடன்பாடு இல்லை. இதை அறிந்துதான் இண்டியன்கள் எல்லோரும் விண்ணப்பிக்கலாம் என்றார் டத்தோ இராஜேந்திரன். ‘Tony Fernandez said every body can fly. Now I say that everybody can apply” என்ற கூற்றை முன் வைத்தார் டத்தோ இராஜேந்திரன். இதை அறிந்துதான் தமிழர்களை முந்திக் கொள்ளச் சொல்கின்றேன். விழித்துக் கொள்ளுங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றேன். இதற்குப் போய் ஓர் எதிர்ப்பா?.
அன்பான தமிழர் இயக்கங்களே, SEDIC மானியம் கேட்டு போடப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும், வங்கிக் கடனுக்கு செய்யும் விண்ணப்பத்தைப் போன்று ஆராய்ந்து புறம் தள்ளுகின்ரார்களாம். அதனால் அவ்விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டிய தஷ்தாவேதுக்களுடன் செய்ய இன்றே அவர்களை தொடர்பு கொண்டு செய்யுங்கள். விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய இறுதி நாள் எதிர்வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாம். நம்பிக்கை நாயகன் வெளியேருவதற்குள் வந்த பணத்தை நல்வழிக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனி இண்டியன்களுக்கு ஒதுக்கப் படும் மானியம் ம.இ.க. – வை சென்று அடையாமல் இருந்தால் நமக்கு நலம். இல்லையேல் அவர்கள் வாயில் வாக்கரிசி போட்டுக் கொள்வார்கள்.
இப்பவே சுப்பிரமானவரு போற இடத்தில் எல்லாம் “பணம் எவன் கைக்கோ போயிடுச்சு எங்க கைக்கு வரவில்லை என்று கையை பிசைந்துக் கொண்டு அங்கலாய்த்துக் கொள்கின்ராராம்!.
அப்படி என்றால் 100 மில்லியனின் திட்டங்கள் 14/7/குள் ஒரு வரையறைக்குள் முடிந்து விடும் …செடிக் எதெற்கெல்லாம் இந்த 100 மிலியனை கொடுத்தார்கள் என்ற விபரம் தெரிந்தால் நாமும் சமுதாயமும் இதில் பங்கு பெறலாம். இதில் இண்டியன் பட்டியலில் தமிழர்கள் 93% இருப்பதால் 93 மில்லியன் தமிழர்களுக்கு கிடைக்குமா? நாங்கள் இன்டியர்கள் அல்ல சிங்குகள், தெலுங்கர்கள் என்று சொன்னவர்கள் செப்பியவர்கள் இன்று மீண்டும் இண்டியனாக மருவி உள்ளதை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தனக்கு ஆதாயம் என்றால் தமிழனுக்கு தமிழனாக, தெலுங்கர்க்கு தெலுங்கனாக, மலையாளிகளுக்கு மலையாளிகளாக, சிங்குகளுக்கு சிங்காக, இண்டியன்களுக்கு இண்டியானாக மாறுபவர்கள் பச்சோந்திகளாகத்தான் இருக்க முடியும். இதில் என்ன சந்தேகம்? RM100 மில்லியன் திட்டம் 14/7/15 -க்குள் முழுமையாக முடிந்து விடாது. அந்த RM100 மில்லியனில் இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்ர்க்கு 14/7/2015 – க்குள் விண்ணப்பம் செய்யம் வேண்டும். விண்ணபத்தை பரிசீலனை செய்து மீண்டும் ஒரு முறை நேர்முக பேட்டி என்று நமது பிராணனை வாங்குகின்றார்கள். எல்லாவற்றுக்கும் புத்ராஜெயாவை நோக்கிப் போக வேண்டும். இவ்வளவும் செய்து மானியம் கிடைக்கப் பெறவில்லை என்றால் அடுத்த வருடம் பார்க்கலாம் என்று ஆறுதல் சொல்வார்களாம். சிவ சிவ.
ஏம்பா! வியாபாரம் செய்யும் ஒரு தமிழனைக் கூட விட்டு வைக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே! உங்கள் அரசியலை எல்லாம் இங்கும் நுழைக்கிறீர்களே! தெலுங்கனால் முடியும், மலையாளியால் முடியும், சிங்கால் முடியும் ஆனால் தமிழனால் மட்டும் முடியாது என்று வழக்கம் போல் முடியாது! முடியாது! என்று முனகிக் கொண்டு இருக்கிறீர்களே! ஒரு வியாபாரியை ஏழை! ஏழை! என்று சொல்லி அவனை ஏன் மட்டம் தட்டுகிறீர்கள்? வியாபாரி என்றால் அவன் கம்பீரமானவன். மற்றவர்களுக்கு வேலைக் கொடுப்பவன். சொந்தக் காலில் நிற்பவன். மானியம் கிடைக்காவிட்டால் அதனை எப்படிப் பெறுவது என்று அவனுக்குத் தெரியும். இந்த வருஷம் இல்லை என்றால் அடுத்த வருஷம் கிடைக்கும். அவ்வளவு தான்! கிடைத்தால் நல்லது! கிடைக்காவிட்டால் அதைவிட நல்லது! என்ற மனப்போக்கு உள்ளவன் வியாபாரி! இதற்கேல்லாம்எந்த வியாபாரியும் கலங்கப் போவதில்லை!
இன்று 16/7 செடிக்கு இதுவரை மொத்தம் எத்தனை விண்ணப்பங்கள் வந்தன ..யார் அவர்கள் என்ற பட்டியல் வெளியிட்டால் கண்ணக்கு அமுக்கு வேலை செய்ய கஷ்டம் … இதுவும் ஒரு வகை வெளிப்டை
ஓடிட் உசார்தான் …கிடைத்த அல்லது கிடைக்காத இயக்க பெயர்களையும் அம்பலம் செய்தால் வீண் பழிகள் புகார்கள் எச்சங்கள் மிச்சங்களை தவிர்த்து சமுதாயம் சுத்தமாகும்…..மறவாமல் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கும் தயாராகுங்கள். காரணம்
பழனிக்கு அமைச்சர் ஆப்பு என்றால் அவர் நாடாளுமன்ற பதவியை
காலி செய்வராம் …தமிழ் பத்ரிக்கைகள் பாத்தால் செய்தி.நாமும் கொஞ்சம் மனதை கசக்கி கண்ணை பிதுக்குவோம்,,,எல்லாம் துட்டுதான் தம்பிகளா ! செலமாட் ஹரி ஹரி ராயா !!!