சமஷ்ட்டியே தீர்வு – சம்பந்தன்

sampanthan-1சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய அதிகாரங்களைக் கொண்ட தீர்வினை அடைய வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலக்கு.

உலகின் பல்வேறு நாடுகளில் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு முன்வைக்கப்பட்டு இன மற்றும் பிரதேச ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறிலங்காவிலும் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது வலியுறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: