முகத்தை மறைக்காத பெண்கள்: கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

isis_5womendead_001முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றன.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மொசூல் நகரில் உள்ள கிலானி முகாமில், 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக அந்த 5 பெண்களை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

-http://world.lankasri.com