நாமே ஊடகமாக மாறி நிற்கின்றோம்!

thee2நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம். நமக்கான ஊடகம் இல்லை, நாமே ஊடகமாக மாறி நிற்கின்றோம்.

விகடன், நக்கிரன், குமுதம் ரிப்போர்டர், தினத்தந்தி, தினகரன், தினமலர் நம்மை புறகணிக்கிறது, நமது நிகழ்வு செய்திகளை போட மறுக்கின்றது என்று சொல்லி புலம்புகின்றோம்.

இந்த இதழ்கள் தொடங்கும் போது 1000 இதழ்களுடன் தான் தொடங்கியது. இதை திராவிட, சாதிய, மத கட்சிகள் வளர்த்து இன்று தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.

ஆனால் நமக்கான ஊடகம் தீ, நாம் தமிழர் வெல்வோம், வேல்வீச்சு, எங்கள் தேசம் பயன்படுத்தினோமா இல்லை. நாங்கள் நடத்தும் தீ இந்த இதழுடன் இரண்டு வருடம் முடிவடைகிறது. எங்களிடம் பணம் கிடையாது, உழைப்பு தா�ன்.

இரவும், பகலும் உழைத்து தரவுகளை திரட்டி வடிவமைத்து பணம் இல்லாமல் பிச்சையெடுத்து புத்தகம் அடித்து வெளியே எடுத்து உங்களிடம் ஓடி ஓடி எடுத்து வந்தால் ஒரு தேநீர் குடிக்கும் பணம் 10ரூபாய் கொடுத்து வாங்க மறுக்கும் போது மனம் வலிக்கின்றது.

பொருளாதார பலம் இல்லாமல் எங்கள் கடின உழைப்பை கொண்டு தீ இதழை இரண்டு வருடம் நடத்தியுள்ளோம். இதோ இந்த மாத தீ இதழ், அடுத்த பதிப்பு மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் சந்திப்போம்…

thee1

முயன்றால் 234 தொகுதிகளிலும் வெல்லலாம், ஈழத்தையும் அடையளால். வெல்வோம் நாம் தமிழர். தொடர்ந்து சிறப்பாக நடத்த உங்கள் அன்பையும், ஆதரவையும், பொருளாதார உதவியையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்….

-இரா.தேவா மாநி செயலாளர் மாணவர் பாசறை, நாம் தமிழர்.