ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்…..
எல்லாம் நமது தமிழ்ப்பள்ளி விவகாரம்தான்.
மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க ஒரு அறுமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
என் ஆலோசனைக்குப் பலர் முரண்படுவர். ஆனால், இதைப் பயன்படுத்தத் தவறினால் வேறு வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை.
நம்ம படையப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவுக்கு வந்திருக்கிறார் அல்லவா? தமிழ்ப் பள்ளி பிரச்சாரத்திற்காக அவரைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அந்த ஆலோசனை. ஏதாவது அவருடைய ஸ்டைலில் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பச் சொல்ல வேண்டும். உதாரணம்…
“நான் சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி….. உங்கப் பிள்ளைங்கள தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புங்க.“
இப்படி வேறு ஏதாவது பொறுத்தமான வசனத்தைப் பேச வைத்து அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்று எல்லா நட்பு ஊடகங்களிலும் பரப்ப வேண்டும்.
2015ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். 2016ம் ஆண்டுக்குள் இன்னும் இரண்டு மாதங்களில் நுழைந்து விடுவோம். அப்போது எல்லா தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் ஒரு பரிதாபமான செய்தி வரும்….. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சரிவு….. அந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் யாரும் பதியவில்லை….. பல தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாததால் மூடப்படும் அபாயம்….
இதுபோன்ற அவலங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
முன்பு எம்.ஜி.ஆர் இருந்தார். அவர் பேசிய வசனங்கள், பாடிய பாடல்கள் எல்லாவற்றையும் பலர் தெய்வ வாக்காக ஏற்று இன்றும் அந்த உபதேசங்களைப் பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். பரிதாபமான விஷயம் என்னவென்றால் அவர் பிள்ளைகளைத் தமிழ் கற்ற வேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை. அதன் விளைவாக தமிழகத்தில்கூட இன்று பல குழந்தைகள் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமல் வளர்கின்றனர். அவர் மட்டும் உயிரோடு வாழ்ந்த காலத்தில் மலேசியாவுக்கு வந்து, ‘தாய்மார்களே, என் இரத்தத்தின் இரத்தமே, உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் இன அடையாளத்தை இழந்து போகாதீர்கள். மொழியை மறந்தால் உங்கள் பிள்ளைகள் ஈனப் பிறவிகளாகிப் போவார்கள்’, என்று சொல்லி விட்டுப் போயிருந்தால், இன்று தமிழ்ப் பள்ளிகளில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பயின்றிருப்பார்கள். அவர் அப்படிச் சொல்லாமல் விட்டு விட்டதால், இன்று தமிழ்ப் பள்ளிகளில் ஒரு இலட்சம் மாணவர்கள்தான் பயில்கிறார்கள்.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். தமிழ்ப் பள்ளிகளுக்கு உயிர் கொடுப்பதற்காக ஆசிரியர்கள் தங்கள் காரில் பக்கத்தில் உள்ள மாணவர்களைச் சுமந்து வரும் அவலம் ஏற்படும்.
தன்மானம் உள்ள தமிழ் ஆர்வலர்கள் என் கருத்தை எதிர்க்கலாம். ஏன்? என் உள்ளமே இதை எதிர்க்கிறது. போயும் போயும் சினிமா நடிவர்களை வைத்தா நாம் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஆனால், சமுதாயம் நன்மை அடைய தவறான வழியைப் பயன்படுத்திதான் ஆக வேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஆலோசனை சொல்வது எனக்கு லேசான காரியம். ஆனால், மற்றவர்களைப் போலவே நானும் வாய்ச் சொல் வீரன். நீங்களாவது அவர் மலேசியாவை விட்டுப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் முயற்சி எடுங்களேன்…… ப்ளீஸ்!
–Johnson Victor
“நான் சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி….. உங்கப் பிள்ளைங்கள தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புங்க.“
“இப்படி வேறு ஏதாவது பொறுத்தமான வசனத்தைப் பேச வைத்து அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்று எல்லா நட்பு ஊடகங்களிலும் பரப்ப வேண்டும்”
நன்றி திரு. ஜோன்சன் விக்டர் அவர்களே. தமிழ் அறவாரியம் நடத்திய மாநாட்டிற்கு இந்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்லுங்கள் என்ற பகுதியில் எம்முடைய கருத்துக்களில் இதுவும் ஒன்று. சரியான விளம்பர உக்தி இருந்தால் தாய்மொழியான தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள தமிழர் மனதை மாற்றலாம். சினிமாக்காரர்களுக்கு செம்பருத்தியில் வக்காலத்து வாங்கியவர்கள் ரஜினியிடம் சொல்லி தமிழ் மொழிக்காக ஒரு விளம்பரப் படைப்பைச் செய்யுமாறு செய்யுங்களேன். தமிழ் அறவாரியமும் இவ்விளம்பர படைப்புக்கு அவரை நாடலாம். தமிழுக்காக அவர் இதைச் செய்வார் என்று நம்பலாம்.
கேக்க நல்லாருக்கு,மிக்க நன்றி Johnson Victor ! ஆனா, தமிழ் நம் மூச்சாக இருக்க வேண்டுமே தவிர,அது அவரு சொன்னாரு இவரு சொன்னாருன்னு இருக்ககூடாது!
எப்படி மூச்சு உங்களை கேக்காமல் வேலை செயுதோ அதே மாதிரி இருக்குனோம் தமிழ் பற்றும்.தமிழன் தமிழ் மூச்சேதான் விடனும் அப்பத்தான் நம்ம அடித்தளம் உறுதியா இருக்கும்….
நம்மவங்க எல்லாத்திலும் முன்னோடிகள்……நம்பலையா? பிரணாவயுவை எப்படி சரியா முழுமையா மூளைக்கு அனுப்பருதுன்னு ஒரு தமிழ் சித்தர் திருமூலர் கற்று கொடுத்து இன்னைக்கு உலகமே பின்பற்றுது…..(ரஜினியும் உற்பட) இப்படி ஒன்னு ரெண்டு இல்ல….நிறையா….நிறையா அடிக்கிகிட்டே போகலாம்….ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் மொழியை வாழ வைத்த இறைவன் இனியும் வாழ வைப்பார்! உலகம் இருக்கும் வரை தமிழ் மொழியும் செழித்திருக்கும்!!!
Johnson Victorஅருமையான கருத்து ..
இப்பொழுது உள்ள பல பெற்றோர்கள் அடிமுட்டாளாகத்தான் உள்ளார்கள் ..
சிந்திக்கும் அரிது . காரணம் சீரியல் /இணையத்தளம்
இந்த கூத்தாடி தமிழர்களுக்கு இதையாவது பிரஜோசினமாக செய்யட்டும் …
முயற்சி பண்ணிதான் பார்ப்போமே !! சோறுபோட்டு வளர்த்த தமிழுக்கு தன் சிறுபங்கையாவது ஆற்றுகிறாரா என்று ..
இல்ல மலையாள அசித்துகுமாறு சொன்னமாதிரி நான் ஏன் தமிழன் போராட்டத்துக்கு கலந்துக்கொள்ளவேண்டும் என்ற பதில்போல் இவரிடமும் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப நல்லவராம் ..நம்ப செம்பருத்தி வாசகர் தோழர் மோகன் மோகன் பலதடவை கூறி இருகிறாபில..அவர் நம்பிக்கை தோட்ககூடாது என்று நம்புகிறேன் ..
சபாஷ் சரியான போட்டி !!
என்னப்பா செய்வது. தமிழ், தமிழன், தமிழ்ப்பள்ளி எல்லாமே கிண்டலாயிடுச்சி!
வணக்கம் திரு ஜோன்சன் விக்டர் அவர்களே… உங்கள் கருத்திற்கு சற்றே மெருகூட்ட விழைகிறேன். ரஜினி , சூர்யா , கமல் , அஜித் , விஜய் இன்னும் இதுபோன்ற ஏனைய நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட வெளியீட்டு நிறுவனங்கள்,பட மேடை உரிமையாளர்கள் இவர்கள் அனைவரும் மலேசியா இந்தியர்களிடம் இருந்து உருஞ்சும் பணத்தின் அளவு கொஞ்சம் நஞ்சம் அல்ல. நம்மவர்களும் அரிதாரம் பூசியவர்களை கொண்டாடுவதில் சளைத்தவர்களும் அல்ல. ஆக இருதரப்பாளர்களின் மனதையும் புண்படுத்தாமல் ஒரு யோசனை. இந்த யோசனையை ரஜினியிடம் முன்மொழிந்து தமிழ் அரவாரியத்தார் போன்றோர் முயற்சிக்கலாம். அதாவது மலேசியாவில் திரை இடப்படும் ஒவ்வொரு தமிழ் சினிமாவின் மொத்த வசூலில் 10 விழுக்காட்டை தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கோ அல்லது SPM / STPM தேர்வில் தமிழ் மொழியில் குறைந்த பட்சம் கிரெடிட் வைத்திருந்து பட்டப் படிப்பை தொடர பொருளாதார ரீதியாக தள்ளாடும் நம் மாணவர்களுக்கு ஒரு சிறப்பு உபகார சம்பள திட்டத்தையோ உருவாக்கலாமே. ஒருமுறை ஒருவார்த்தை சொல்லி விட்டு விளம்பர படுத்துவதைவிட தொடர்ந்தாற்போல் பயனுள்ள ஒரு விழயதிற்கு மாட்டேன் என்ற சொல்லப் போகிறார் ரஜினி. மேலும் நடிகர்களில் சிலர் தமிழ் நாட்டில் இது போல் கல்வி சேவை செய்வதாக அறிகிறோம். மலேசிய மக்களிடம் இருந்தும் பணம் பெரும் இவர்கள் மலேசிய இந்திய மாணவர்களின் கல்வியில் கொஞ்சம் அக்கறை கொள்ளட்டுமே.. தயவு செய்து நடிப்பவன் தமிழனல்ல ,பார்பன ஆதிக்கம்..மன்னாங்க்கட்டி .. மசுரு மூட்டை என்று உளறுபவர்கள் அடியேன் கருத்தை விமர்சிக்காமல் விலகி கொள்ளுங்கள்.. உடனே இவனும் ஒரு பார்பனன் போலும் என்று முடிவிற்கும் வந்து விடாதீர்கள்… பாலைவனப் புரவி
வேறு வழி இல்லை.நம் தமிழ்ப் பள்ளி வளர்சிக்கும் நம் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விஷயத்திலும் நாம் அன்னிய மொழி நடிகனைதான் நம்பியிருக்க வேண்டும்.இயற்கையாக வர வேண்டிய மொழியுணர்வுதான் நமக்கு வரவில்லை.அன்னியன் சொல்லியாவது நமக்கு ‘ஏதும்’ வருகிறதா என்று பார்ப்போம்.
ஜான்சன் சொல்வது நல்ல விஷயமே. முயற்சிக்கலாமே! இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் கிடையாதே.
என் மகளையும் தமிழ் பள்ளிக்குதான் அனுபியுள்ளேன். நமது தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கு நமது பிள்ளைகள் என்றே உணர்வே இல்லை. ஆசிரியர் தொழிலையும் வேலையாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அற்பநிர்பு உணர்வு இல்லை.
நல்ல வளர்ப்பு ஆதலால் சென்ற இடமெல்லாம் ஆதரவு,டிக்கெட் மாஸ்டர், சினிமாவில் சூப்பர் ஸ்டார்,
திருக்குறளில்
இல்வாழ்க்கை,
வாழ்க்கை துணை
மக்கட்பேரு
குடும்பத்தில் அன்பு துவங்கி,சமுதாயம் வரை நீண்டு புகழ் அடைந்து மெய் வுணர்ந்து அன்புடைமை மாறி அருளுடைமை நோக்கி பயணிக்கும் மலேசிய வந்திருக்கும் திரு.ரஜினி அவர்களுக்கு வணக்கம்.
வாழ்க நாராயண நாமம்.
நண்பரே! இந்த அர்ப்பணிப்பு என்பது நம் அனைவரையும் சார்ந்தது. நம் ஒவ்வொருவரிடமும் அர்ப்பணிப்பு உணர்வு என்று ஒன்று இருந்திருந்தால் இது நமது சமூகத்திலும் பரவி இருக்கும். நாம் அப்படியில்லை. மற்றவரிடம் அர்ப்பணிப்பு இல்லை என்று சொல்லுகிறோமே தவிர நம்மிடமும் அது இல்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முதல் நாம் அதனை ஏன் நம் வசப்படுத்தக் கூடாது?
எண்டா ,ரஜினியை நோண்ட வில்லைன்னா உங்களுக்கு தூக்கம் வராத ?? அன்றைக்கு பங்க்சாரில் ரஜினி படபிடிப்புக்காக தமிழ் பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்தார்களே ,அந்த தலைமை ஆசிரியர்கள் மேல் போயி நடவடிக்கை எடுங்கடா ..மலேசிய என்னும் வீட்டுக்கு நடிக்க வந்தவரை தரை குறை பேசுவதுதான் உங்கள் தமிழர்களின் வழக்கமா…….தமிழனே சிந்தித்து பார் ,நாம் பிறரை வாழ வைத்துதான் பழக்கம் ,பிறரை தாக்கி செய்திகள் போடுவது நம் வழக்கம் இல்லை………….
(தமிழீழம் / இலங்கை செய்திகள்) ,எங்கடா ……, இந்த தமிழீழம் வளாகத்தில் எதனை பேருடா பதிவு செயுறேங்க ?? ஒரு பயல் கூட இந்த வளாகத்தில் பதிவு செய்வதை நான் பார்த்ததே இல்லை .நீங்கள் எல்லாம் தமிழ் உணர்வாளர்களா ?? சொல்லுங்கடா ….. ,டேய் …… சினிமாவும் அரசியலும் வேறு இரண்டையும் சேர்த்து பார்த்தல் கொலப்படி தாண்டா .உங்க அக்காவுக்கும் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வச்சா சரி வருமா ,சிந்துயுங்க்கடா ….. தமிழனே
இப்படி மற்றவர்களை நம்பி நாம் இருப்பதை விட்டு நாம் மனதாலும் உணர்வாலும் செயலாலும் ஒன்றுபட்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் .நம் பதினாறு லட்சம் பேரின் எண்ணம் வீணாகாது
அதெல்லாம் இருக்கட்டும்
உன் பிள்ளைகள் எந்த பள்ளியில் படித்தார்கள் ?
நான் ரஜினி யின் ரசிகன்
ஆனால் என் தமிழ் மொழி காக்க நடிகன் வேண்டும் என்றல் தவறு . தமிழை தமிழன் தான் காக்க வேண்டும், அதுதான் மரியாதை. தமிழ் எப்போ வந்தது, இது நாள் எப்படி வளர்ந்தது ஆகையால் உச்சியில் நிற்கும் தமிழ் அங்கே சூரியன் போன்று என்றும் அனைவரின் சிந்தனையில் வாழும்
நன்றி திரு. ஜோன்சன் விக்டர் அவர்களே, நம்ம மக்களுக்கு சுய மரியாதை உண்டு ஆதலால் தான் மலேசியாவில் தமிழ் பள்ளிகள் 200 ஆண்டுகள் கடந்து நிற்கிறது, எதிர் காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை நமது மக்கள் தொகைக்கு ஏற்ப குறையும் என்பது உறுதி. இந்த நிலை திரு ரஜினி போன்ற திரையுலக அன்பர்களால் மாற்றி அமைக்க முடியாது. தமிழர் மற்றும் தமிழ் மொழியின் மேல் பற்றுள்ளவர்களே தமிழ் பள்ளிகளை மேலும் 200 ஆண்டுகள் வழி நடத்த முடியும். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்கும். தமிழ் வாழ முதலில் தமிழ் படிக்காத அரசியல், சமூக தலைவர்களை தேர்வு செய்யாதீர்கள். அப்படி தமிழ் படிக்காத அரசியல், சமூக தலைவர்கள் இருப்பின் முதலில் தமிழை கற்றுக்கொள்ள சொல்லுங்கள். தமிழ் படிக்காத நமது அரசியல், சமூக தலைவர்கள் நமது கருத்துகளை வாசிப்பதே இல்லை, எப்படி மாற்றம் ஏற்படும்.
தமிழைப் பற்றி சிந்திப்பதை விடுத்து தமிழன் பற்றி சிந்திப்போம், தமிழ் தானாக வளம் பெறும் என்பது என் கருத்து. நாட்டில் தமிழ் இயக்கங்கள் இயங்கும் அளவுக்குத் தமிழர் இயக்கங்கள் இல்லை. மொழியைப் பற்றிக் கொண்டு இனத்தை விலக்கிவிட்டோம்.
மிக்க உண்மை. மொழியைப் பற்றிக் கொண்ட தமிழன், இனத்தைப் பொதுவுடமையாக்கி விட்டான். மலேசியாவைப் பொறுத்தமட்டில் தமிழர் அனைத்து இந்திய வம்சாவழியினரையும் காட்டும். ஆனால், மற்ற இந்திய வம்சாவழியினர் அவர் இனத்தாரை மட்டுமே காட்டுவர்.
உண்மைதான் நண்பர்களே! என்ன செய்வது, மொழி இனத்தை காக்கும் என்பதை தாங்கள் அறியாததா? இல்லையேல் நாமும் தென் ஆப்பிரிக்கா தமிழர்கள் போல் மொழியை இழந்து வாழ்ந்து கொண்டிருப்போம்.ஆகா மொழியும்,இனமும் காக்க வேண்டியது நமது கூட்டு பொறுப்பு.
தமிழைப் பற்றிக் கொண்டவன் தமிழனாக வாழ்கின்றான். அதை கை விட்டவன் தன்னை இண்டியனாகவும் இந்துவாகவும் நினைத்துக் கொண்டு வாழ்கின்றான் காரணம் அவன் தமிழரின் வரலாற்றையும் சமையத்தையும் மறந்தவன். இதுதான் உண்மை.
தேனீ வணக்கம். உங்களின் கருத்துகளை வாசிப்பதில் தவறுவதில்லை.(Theni wrote on 14 November, 2015, 22:11) இந்த கருத்தில் எனது கருத்து (தமிழைப் பற்றிக் கொண்டவன் தமிழனாக வாழ்கின்றான் முற்றிலும் உண்மை திரு. கருனாநிதி, செல்வி ஜெயலாலிதா, எம்ஜிஆர, ரஜனி போன்றவர்கள். அதை கை விட்டவன் தன்னை இண்டியனாகவும் இந்துவாகவும் நினைத்துக் கொண்டு வாழ்கின்றான் இஙகுதான் இடிக்கிறது தமிழ் என்பது மொழி, தமிழர் என்பது இனம். இண்டியன் என்பது பாரத நாட்டை குறிப்பது, இந்து என்பது மதம். ஆகவே தமிழ் என்பது, தமிழர் என்பது, இண்டியன், இந்து என்பதும் பொது. ஒரு தமிழர் எந்த மதத்தையும் பின்பற்றலாம் ஆகவே இந்துவாகவும் நினைத்துக் கொண்டு வாழ்கிறான் என்று கூறுவது சரியல்ல. தமிழர் சைவ சமயம், இந்து மதம், கிருஸ்துவ மதம், இஸ்லாம் மதம், புத்த மதம் ஏன் மதம் இல்லாமலும் வாழ்கிறார்கள். இன அடிப்படையில் மதம் எதுவாக இருப்பினும். தமிழர், தமிழர் தான். அவர்களை ஒன்றுபடுத்த மொழி ஒன்றே ஆயுதம். அப்படி ஒன்றுபடுத்த முயற்சிக்கையில் மதத்தை பயன் படுத்தி பிரிதாளகூடாது. யாருக்குமே தனது மதத்தை தாக்கினால் மனவருத்தமே மிஞ்சும், ஓற்றுமை ஏற்படாது.நன்றி
தமிழர் மதம் மாறியது எப்போது, எப்படி, ஏன் என்று ஆராய்ந்து எழுதுங்கள். எம்முடைய விரிவான பதில் இன்றிரவு.
“தமிழர் மதம் மாறியது எப்போது?” என்று எழுதுவது உங்களைப் போன்றவர்களுக்கு மிக எளிதான விஷயம். காரணம் ஒரு “ரெடி-மேட்” பதிலைத் தயாராக வைத்திருக்கிறீர்கள். அது பற்றி பேசுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இப்போது ஏன் அவன் கிருஸ்துவனாக மாறுகிறான், ஏன் முஸ்லிமாக மாறுகிறான் என்பதற்கு உங்கள் விளக்கத்தைக் கொடுங்கள். சும்மா அவனது அப்பா, அம்மா சரியில்லை என்று யார் மீது பழி போடாதீர்கள். இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். இப்போது, இப்போது…ஏன் தொடர்கிறது?
தமிழ் பள்ளிக்கு அனுப்புறது முக்கியம்தான் ஆனால் எந்த பள்ளிக்கு
அனுப்புகிறோம் என்பது முக்கியம்.நான் என்ன மகளை சீ போர்ட்
கம்புங் லிண்டுங்கன் பெட்டாலிங் ஜெயா,பள்ளியில் லாஸ்ட் இயர்
சேர்த்தேன்.அப்பொழுது இருந்த தலைமை ஆசிரியர் திருமதி பங்கிநியம்மல் தலைமையில் பள்ளி படிப்பு சிறப்பாக இருந்தது,பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களின் பெயர்களும் அவரின் வாய் நுனியில் இருக்கும் ,இந்த ஆண்டு வந்த புதிய தலைமை ஆசிரியை சிவபாரதி அவர்கள் படிப்பை மேம்படுடுவதில் அக்கறை கொள்ள வில்லை என்பதை
ஒவ்வுறு தேர்வு முடிவுகளும் மெய்பிக்கிறது …..கடந்த மூன்ரு மாதமாக என் மகளின் வகுப்பு ஆசிரியர் உடல் நல குறைவால் விடுமுறையில் இருக்கிறார் ,veru
ஆசிரியர் ஒருவரை இன்னும் கூட அவர் அந்த வகுப்பில் அமர்த்தவில்லை ………….மற்ற ஒரு ஆசிரியர் கர்ப்ப கால விடுமுறை ….(கர்ப்ப களங்களில் அவர் பாடமே எடுக்க வில்லை என்பது குறிபிடதக்கது…..இங்கிலீஷ் பாட ஆசிரியர் அவரும் அடிக்கடி marutuva சிகிச்சைக்கு செல்பவர் .oiyyara kondaiyil talam poovam,உள்ளேe
erukutham ஈரும்
பேணும்…pls ulle poi paruggal unnmai nilai புரியும்..tertedutha tamil palligale enggalin terhu enru sollungal
.
தமிழர்கள் மதம் மாறியது இந்து மதத்திலிருக்கும் உயர்வு தாழ்வு தீண்டாமை அத்துடன் மனிதாபிமானம் இன்மை –இன்றைக்கும் இப்படித்தானே ? தமிழ் நாட்டு தொலைகாட்சி நிகழ்சிகளை பார்த்தல் புரியும். அத்துடன் இங்குள்ள நம்பிக்கை நாயகனே அதை பற்றி MIC – நாதாரிகளுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு உள்ளது.
நன்றி, தேனீ அவர்களே, தங்களின் விரிவான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
தமிழ் தமிழரைக் காக்கும் என்பது மாயையே. தமிழ் அறவாரியம் போன்ற தமிழ் அமைப்புகள் பல தமிழர் அல்லாதவர்களுக்கும் உதவிக் கரம் நீட்டுவது பாராட்டுக்குரியது. ஆனால், இச்சூழல் மற்ற இந்திய இன அமைப்புகளிடையே காணமுடியவில்லையே! எங்ஙனம் தமிழ் தமிழரைக் காக்கும்; காக்கிறது எனத் துணிவது?
தமிழர் ஒன்றுபட்டு வாழ அனைவரும் விரும்புவது வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழர் எக்காலத்திலும் ஒன்று பட்டு வாழ்ந்ததாக உள்ள சரித்திரத்தை யாரவது நிரூபிக்க முடியுமா? தமிழர் எக்காலத்திலும் ஒன்றுபட்டு வாழ்ந்ததில்லை. நமக்குள்தான் எத்துனை வேற்றுமை? சொன்னால் எண்ணிலடங்கா. அப்புறம் இன்று “தமிழ்” எப்படி நம்மை ஒற்றுமைப் படுத்தும் என்று நப்பாசை வைக்கின்றீர்கள்? ஏன் தமிழ் மொழி என்று ஒரு சிறிய வட்டத்தை நமக்கு குறியிடுகின்ரீர்? தமிழர் பண்பாடு நம்மை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாதா? தமிழர் பண்பாடு இல்லாமல் தமிழ் மொழி எங்கிருந்து வந்தது? பண்பாடு என்பது ஓர் இனத்தில் பல்லாயிரம் வருடங்கள் பண்பட்டு வந்த செயல். அப்படிப் பார்ப்போமானால் நம் மொழி, கலை, கலாச்சாரம், சமயம், இன்னும் பல வாழ்க்கைக் கூறுகள் அடங்கியதே தமிழர் பண்பாடு. மேலும் தமிழரின் பண்பாட்டில் சமயம் முக்கிய அங்கம் வகித்ததை எவராலும் மறுக்க முடியாது. தமிழரின் இயல், இசை, நாடகம், உணவு, உடை, கட்டிடக் கலை, இன்னும் பல நம் சமயத்தைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. இன்றும் அவ்வாறே. அப்புறம் சமயத்தை ஒதுக்கி விட்டு தமிழைக் கொண்டு ஒற்றுமையாக வாழ்வோம் வாரீர் என்றால், இது மதம் மாறாத தமிழருக்கு மட்டும்தானா? மாறியவர் எவ்வாறு அவர்தம் மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்கின்றார்கள் என்பதை அறியாத தமிழருக்கு இங்கே சிலவற்றை குறிப்பிடுகின்றேன். தொடரும்.
ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு எம் பிள்ளைகளில் ஒருவருக்குத் தமிழ் பள்ளி ஆசிரியையாக இருந்தவர் அழைப்பின் பேரில் அவர்தம் மகனின் பிறந்தநாள் விழாவிற்குப் பிள்ளைகளோடு சென்றிருந்தேன். பிறந்தநாள் விழாவில் கிறிஸ்துவ மத மரபின்படி வாழ்த்தொலிகளைப் பாடி விட்டு மேலும் பாதிரியார் ஒருவர் மத சொற்பொழிவை செய்து விட்டு ஏறக்குறைய முக்கால் மணி நேரம் கழித்து அணிச்சல் வெட்டும் நிகழ்வை ஆரம்பித்தனர். அந்நிகழ்வில் கிறிஸ்துவர் அல்லாத எனக்குத் தெரிந்த தெரியாத அன்பர்களும் திரளாக வந்திருந்தனர். ஆனால் நிகழ்வின் ஏற்பாட்டாளர் எங்களைப் பற்றி ஏதும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அங்கே தமிழ் வாழ்ந்ததா? கிறிஸ்துவ மதம் வளர்க்கப் பட்டதா? அம்மதப் போதனைகளை அறியாதோருக்கு, வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல, அறிவுறுத்த மதம் மாறியோரின் யுக்தி என்று அப்பொழுது அறிந்தேன். மேலும் மலேசிய நாட்டில் முதன்மை தமிழ் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வோர், யு.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்பு தேர்ச்சியைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுக்கின்றோம் வாருங்கள் என்று அழைத்த நிகழ்வில் நிகழ்ச்சிப் படைப்பாளராக வந்த ஓர் இண்டிய முஸ்லிம் அன்பர் அவருடைய மத பிராத்தனையை முதலில் ஓதி விட்டுதான் நிகழ்வை ஆரம்பித்தார். இதை அங்கே குழுமியிருந்த, தங்களை இந்து என்று சொல்லிக் கொள்ளும், தமிழர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இது தப்பில்லை. ஆனால் செம்பருத்தியில் தமிழ் மொழி நம்மை ஒன்றுபடுத்தும் மொழி என்று பேசுவோர் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். மதம் மாறியோர் அவர்தம் மதத்திற்கு முன்னுரிமை கொடுகின்றார். மாறாதோர் அவர்தம் மதத்தை முன் வைப்பதை “எங்கோ இடிக்கிறது” என்கின்றார்! இடி விழுவது நம் தலையில்தான் என்பதை அறியாதார் சொல்வது இவ்வாறு. நாம் தமிழர் என்று அவர்களுக்கு கை கொடுக்க எண்ணுகின்றோம் ஆனால் அவர்களோ நம் கையோடு நம்மையும் அனைத்துக் கொள்ளப் பார்கின்றார்கள். “தட்டுங்கள் திறக்காது” என்ற தலைப்பில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், மலேசியாவில் 1987 முதல் 2004 – ம் ஆண்டு வரை மதமாற்றத்தில் சிக்கிய இந்துக் குடும்பங்கள் அனுபவித்த துயரங்களின் உண்மை நிகழ்ச்சிகளை விவரிக்கும் சோகக் கதைகள் என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். நாம் தமிழ் மொழியைக் கொண்டு ஒற்றுமையைப் போற்றுகின்றோமா அல்லது தமிழனை அழித்துக் கொண்டிருக்கின்றோமா என்று புரியும். தொடரும்.
மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளுக்கும் எதிர்மாதிரியான சம்பவத்தை இன்னொரு தமிழ் ஆசிரியை எம்மோடு பகிர்ந்துக் கொண்டார். தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒன்று கூடிய நிகழ்வில் திருமுறை பாடி நிகழ்வைத் தொடங்கலாமே என்று கூறியதுடன் அங்கிருந்த தமிழ் ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கினார்களாம் காரணம் அந்நிகழ்வில் சில ஆசிரியைகள் கிறிஸ்துவ மதம் தழுவியராக இருந்ததுதான். நமக்கு இருக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்!.கட்டக் கோவணம் இல்லாவிட்டாலும் பிறருக்காக வாழும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பரம்பரையில் இருந்து வந்தவர்கள் அல்லவா நாம்! இருப்பினும் சித்தாந்தம் பயின்ற அவ்வாசிரியை திருமுறை பாடித்தான் நிகழ்வைத் தொடங்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதால் அந்நிகழ்வை திருமுறை பாடி தொடங்கினராம். இங்கே தமிழும் வாழ்ந்தது. தமிழர் சமயமும் வளர்ந்தது. இருந்தும் தமிழரின் ஒற்றுமை குலையவில்லையே! அப்புறம் ஏன் தமிழர் அவர்தம் சமயத்தை முன் நிறுத்துவதை தமிழரின் ஒற்றுமைக்கு ஒரு தடைக் கல்லாக நாம் பார்க்க வேண்டும்?. இது நாமே நமக்கு போட்டுக் கொள்ளும் நாமம்! தொடரும்.
எங்கள் தாய் தகப்பன் மதம் ஏன் மாறினார்கள் என்று சொல்லாமல் இன்று தமிழர் ஏன் மதம் மாறுகின்றார்கள் என்று கேட்டால், அவர்கள் “மதம் மாறவில்லை” அன்றும் இன்றும் “மதம் மாற்றப் படுகின்றார்கள்” என்றுதான் சொல்வேன். மேற்கத்திய கிறிஸ்துவ பாதிரிமார்கள் 16-ம் நூற்றாண்டில் மலபார் பகுதியிலும், கோவாவிலும் பின்னர் இன்றைய தமிழ் நாட்டுப் பகுதியிலும் காலெடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை “மதம் மாற்றப் படுவது” நிறுத்தப் படவில்லை. அப்பாதிரிமார்கள் முதலில் உள்ளூர்வாசிகளுடன் தொடர்பு கொள்ள, உள்ளூர்வாசிகளின் மொழியைக் கற்றுக் கொண்டனர். அன்று தமிழே தென் இண்டிய பிரதான மொழி. இன்றுபோல் அன்று இல்லை. விக்கிப்பீடியாவில் பாருங்கள்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#cite_note-.E0.AE.9A.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.AE.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.BF2000-15
மேற்கூரிய இணையைப் பகுதி திறக்க முடியவில்லையானால் தமிழ் விக்கிப்பீடியாவில் “தமிழ் அச்சிடல் வரலாறு” என்று தட்டச்சு செய்து பாருங்கள். முதலில் 1554 – ல் போர்துகீசியாவில் கிறிஸ்துவ போதனைகளை தமிழில் அச்சடித்து இங்கே கொண்டு வந்து தமிழரிடையே விநியோகித்தனர். இன்று இனாமாக படியுங்கள் என்று கொடுக்கின்றனர். அன்றும் அவ்வாறே தமிழர்களுக்கு அந்நூல் இனாமாகக் கொடுக்கப் பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியில் காலெடுத்து வைத்த நாள் முதல் இதுதான் நடந்தது. ஏன் தமிழர் மதம் மாறினார் என்று கேட்டால் நான் என் செய்வேன். மதம் மாறியவர்கள் அல்லவா காரணத்தைச் சொல்ல வேண்டும். அப்புறம்தானே எனது பிரதிவாதத்தை எடுத்து முன் வைக்க முடியும். இப்படி கிறிஸ்துவ மத நூல்களை அச்சடித்து தென் இந்தியாவில் அயலார் மதம் பரப்பியோர் இன்னொன்றையும் செய்தனர். தமிழர் அவர்தம் சமய நூல்களை அச்சடிக்கத் தடை விதித்தனர் ஆங்கிலேயர். 1823 இருந்து 1835 வரை தமிழ் மொழியில் நூல்கள் அச்சடிக்க மெட்ராஸ் மாகாணத்தில் தடை விதித்திருந்தனர். இதில் சமய நூல்களும் அடங்கும். தமிழரின் சமய நூல்களுக்கு தடையும், கிறிஸ்துவ மத நூல்களுக்கு மடையும் திறந்து விட்டால் ஏன் தமிழர் மதம் மாற மாட்டார்? தொடரும்
மற்ற இந்துக்கள் போன்று தமிழர் மதம் மாறுவதற்குப் பிரதானமான காரணமாக முன் வைக்கைப் படுவது “சாதியம், மனிதரில் ஏற்றத் தாழ்வு, அதன் அடிப்படையில் வரும் வருணாசிரம கோட்பாடுகள் என்று ஒரு பெரிய பட்டியலையே போடுவார். என்னுடைய கேள்வி ஒன்றுதான். “நீர் மதம் மாறுவதற்கு முன் தமிழரின் சமய நெறியை அறிந்தீரா?”. மதம் மாறியவுடன் அயலார் மத நெறிகளை மேற்கோளுடன் காட்டுவோர், ஏன் மதம் மாறும் முன் தமிழர் சமய நெறி அறிந்து அதன் மேன்மையை உணர முடியவில்லை? குறை உங்களின் அறியாமையிலா அல்லது உங்களை ஏமாற்றியோரிடமா? ஆரிய நெறிகளை தமிழரின் நெறி என்று நம்ப வைத்து அதில் உள்ள குறைகளை நம் கண் முன் காட்டி மாற்றியவர் அறிவாளியா? அல்லது மாறியவர் அறிவாளியா. உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இவ்வாறு கேள்வி கேட்டு வைப்பது மாறியவரைப் புண்படுத்த இல்லை. மாறியோர் செய்தது தவறு என்று உணர்ந்து மீண்டும் அவர் தமிழர் சமய நெறிக்குள் வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொல்வது. எதனை பாதிரிமார்கள் செய்தார்களோ அதனையே நானும் செய்கின்றேன். இதில் தவறு அல்லது தப்பேதும் உள்ளதா?. மதம் மாறியோர் எல்லாம் திருந்தி மீண்டும் தமிழரின் உண்மையான சமய நெறிகளை அறிந்து ஒரு நெறியில் நின்றால் நம்மிடையே ஒற்றுமை தானாக வளரும். செய்வீரா இதை?
மேற்கூறிய காரணங்களையும் இன்னும் பிறவற்றையும் ஆராய்ந்த பிறகுதான், தமிழர் அவர்தம் சமய நெறிகளை அறிந்து அதன் மேன்மையை உணர்ந்து நின்றால் மட்டுமே தமிழரைக் காப்பாற்ற முடியும் என்று அறிந்து மலேசிய சைவ சமய பேரவை தமிழரின் தூய நெறியாகிய சித்தாந்த சைவத்தை சித்தாந்த வகுப்புகள் மூலம் பரவச் செய்வது. இதில் சைவக் கிரியைகளைக் குறைத்து அன்பால் இறைவனைக் காணும் முத்தி நெறியை தமிழர்களுக்கு உணத்துவதை கடமையாகக் கொண்டுள்ளது. அதனால் தமிழ் சமயம் என்றும் தமிழரைப் பிரிக்காது என்று திடமாக அறிந்து செயல்படுவோம் வாரீர்.
கோள்,கிரகம் தோன்றுவதற்கு முன்பு ஆகாயத்தில் இருள் சூழ்ந்த அணுக்கள் மட்டும் இருந்தது கால கட்டத்தில் .அவன் அசைவு அணுக்களை அசைத்து காற்று,நெருப்பு,நீர் இறுதியில் நிலம் என்றும் மிகுந்த அசைவு ஒளியும்,ஒலியும் சேர்த்து உருவாக்கியது.விஞ்ஞானம் அவன் (பரம்பொருளை) நேரடியாக ஏற்காவிட்டாலும் அவன் அசைவால் ஏற்பட்ட மற்ற ஐந்து பஞ்சபூதங்களை ஏற்றுகொண்டனர்.அதன் அடிப்படையில் ஆதி மனிதன் முதலில் கண்டது இயற்கை மற்றும் மிருகங்களின் ஒலி.மனிதனின் பரிணாம வளர்ச்சி நாளடைவில் அந்த ஒலி சொல்லாகவும் வாக்கியங்களாகவும் மாற்றம் கண்டது. ஆகையால் பண்பாடு,நாகரிகம் தோன்றுவதற்கு முன்பு மொழி நடைமுறையில் இருந்தது.பண்பாடு எழுதபடாத நடைமுறை,மொழியோ எழுதப்பட்டவை.இது ஒரு நீண்ட ஆய்வு இருப்பினும் இந்த தலைப்புக்கு எனது சுருக்கமான கருத்து.
50 ஆயிரம் ஆண்டுகள் தமிழர் ஒலி வழி தொடர்பு கொண்டதும் பின் அது சொற்களா மற்றம் கண்டு 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழிக்கு முழு இலக்கணம் எழுத்த பட்டு சங்க காலங்கள் நடந்தேறியதை நாம் அறிவோம்.ஆதியில் மிருகங்களோடு வாழ்ந்த மனிதன் மொழி வளர்ச்சியால் மனித நேயமும் வளர்ந்து அன்பு மிக்க முழு மனிதனின் ஆற்றல்களை உணர்ந்தான்.மற்ற உயிர்களின் அன்பை உணர்ந்த மனிதன் உயிர் கொல்லாமை ,தாவர,தானியங்கள் உணவு பழக்க வழக்கத்தை ஆதரித்து நாளடைவில் சைவ நெறிகளில் ஈர்க்கபட்டாது அவன் கட்டளை.மொழி அனைத்திற்கும் அடிப்படை,மொழி வளர்ச்சி இன வளர்ச்சியை செம்மை படுத்தியதை உணர்வீர்.
ஹ ஹ ஹ ஹா நல்ல காமெடி போங்கே எதற்கு குறுக்கு வழி..முதலில் தமிழ் பள்ளிகளில் இருக்கும் வறுமை நிலைமையை மாற்றுவோம் ..அரசாங்கம் பல பில்லியன் தமிழ் பள்ளிகளுக்கு இது வரையிலும் செலவு செய்து உள்ளதாம் …முறையான கட்டிட வசதி உள்ள பள்ளி இருகிறதா?? முறையான விளையாட்டு ஆசிரியார்கள் இருகிறார்கலா?? முறையான விளையாட்டு தளவாடங்கள் இருகிறதா ??பள்ளியில் திடல் இருகிறதா ?? ஸ்விமிங் கிளாஸ் ETACUM தமிழ் பள்ளிகள் இருக்கா?? தமிழ் பள்ளிகள் (7A) மட்டும் தான் குறிக்கோள் …வேற ஒண்ணும் பெருசா இல்லை…முதலில் தமிழ் பள்ளியை முறையாக பராமரிப்போம் ..பிறகு அவர்களே சேருவார்கள் ….எதற்கு சூப்பர் ஸ்டார் ????????அவர் வேலையை அவர் பார்கட்டும் ….
பகலவன் தங்கள் கருத்து உண்மைதான் ..
தெலுங்கர்கள் நடத்தும் கல்விகூடங்களாகட்டும் வணிக தளங்களாகட்டும் 100% அவர்கள் இனத்தவருக்கே …
மற்றவர்கள் நுழையமுடியாது !
தெலுங்கர்கள் தலைமையில் இருக்கும் ஆலயங்களில் மணியாட்டுகிறவன் சாதாரண வேலைக்காரன் அனைத்தும் தெலுங்கர்களாக இருக்கும் .. ஆலய அருகில் பூ வியாபாரிகூட தெலுங்கர்களாக இருப்பார்கள் ..
தெலுங்கு சங்கத்தில் அதி தீவிர செயல்பாட்டாளர் விசுவாசியான ஒரு தெலுங்கர் தமிழர் மொழிசார்ந்த அமைப்பிலும் பதவி வகிக்கிறார் இது என்னமாதிரியான டிசைன் !?
யாரெல்லாம் தெலுங்கர் என்பது ஒவ்வொரு தெலுங்கருக்கும் நன்கு தெரியும் ..தமிழர்களுக்கு குஜராத்திகாரன் தமிழ் பேசினானும் அவனும் தமிழன்தான் ! தமிழ்மொழி சார்ந்த பதவிக்கு அவரை தலைவராக்கி விடுவர் தமிழர் மனநிலை இவாறுத்தான் உள்ளது ..இன்று நேற்றல்ல பலநூறாண்டுகளாக ..தமிழர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் ..இல்லாவிட்டால் மற்றவர்கள் அழித்துவிடுவார்கள் ..
ஆமாம் நண்பரே, எனவேதான் தமிழர்கள் முதலில் தங்கள் இனத்தைப் பேண முனைய வேண்டும் என்கிறேன். தமிழ் தாமாக பசுமை அடையும். இனம் வேர் எனின் மொழி இலை ஆகும்.
நன்று. இதனைத்தான் மொழியைப் பற்றிக் கொண்ட தமிழர்கள் தங்கள் இனத்தை விலக்கி விட்டனர் என முன்னர் கூறினேன்.
தமிழ் மொழிச் சார்ந்த அமைப்புகள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழனைப் பொதுவுடமையாக்கினீர் என வரலாறு உங்களைத் தூற்றும்
இனம் வேர் எனின் மொழி மரமாகும் என்று திருத்திக் கொள்ளுங்கள். இலை முளைத்து உதிரும். வேரும் மரமும் ஒருங்கே பட்டுப் போகும். இனம் அழிந்தால் மொழியும் அழியும்.
கலப்பு திருமணம் தற்போது அதிகரித்து வருவதால் அவர்தம் குழந்தைகள் அம்மி,டம்மி,டும்மி…என்று சிறப்பாக கும்மி அடிக்கும் காட்சிகளை பார்க்கும் பொது நிச்சையமாக இனம் காக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை…..வாழ்க தமிழ் இனம்!
இப்படி சினிமாகாரர்களுக்கு பதிலாக, தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமைசேர்த்த திருவள்ளுவர் (வாழ்வியல்), டாக்டர் மு.வா (இலக்கியம்), கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி (அரசியல்), கம்பர் (கலை மற்றும் இலக்கியம்), 473 சங்க புலவர்கள் (மொழி மற்றும் இலக்கணம்), தமிழவேள் கோ. சாரங்கபாணி (மண்ணின் மைந்தர், தமிழ் ஆர்வாளர்), எவ்வளோவோ பெரியவர்கள் இருக்க, ரஜினி தான் கிடைத்தார உங்களுக்கு ? நாளைக்கு அவர் புகை பிடிக்கிறார், நானும் பிடிப்பேன் என்பான் நம் குழந்தை. நக்மா அவரை துரத்தி துரத்தி காதலித்தால், அதனால் நானும் அப்படிசெய்யலாமே என்று யோசிப்பாள் நம் குழந்தை. ரஜினி ஒன்றும் தமிழுக்காகவோ அல்லது மக்களுக்காகவோ வாழ்ந்தவர் அல்ல. அவர் நல்லவராகவே இருக்கட்டும், ஆனால் தமிழ் மொழிக்கும், தமிழ் பள்ளிக்கும் அவர் விளம்பர மாடலாக வருவது நல்லதல்ல. தேவையில்ல சர்ச்சையை கிளப்பும். ஒருத்தன் அவர் கன்னடகன் என்பான், இன்னொருவன் தெலுகு என்பான். நான் சினிமாகாரன் என்பேன். தேவையா இதுவெல்லாம் ? எல்லாரும் ஆலோசனை சொல்லலாம் என்று இருபதனால் வரும் குழப்பங்கள் இது.
முயற்சி செய்வதில் தவறு இல்லை ….அவர் தமிழரை நேசிப்பவர் எனவே அவர் கண்ண்டிப்பாக இதற்கு ஒத்து உலைபர் ..
தமிழ் கல்வி துறைக்குகென்று, மலாயா பல்கலை கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என்று நிறைய நல்லுள்ளங்கள் உள்ளார்கள். தேவை பட்டால் அண்ணா பல்கலைகழகதுடம் பேசி, ஒரு விளம்பர மாடல் செய்யலாம். தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நாம் தான் கல்விமான்களை கண்டு கொள்வதிலையே! அப்புறம் என்ன ? கண்ணில் பட்டவர் எல்லாம் இப்படிதான் அறிவுரை சொல்வார்கள்! யாரிடம் எதனை ஒப்படைத்தால் சரியாக செய்வார்களோ, அதனை அவர்களிடம் விட்டு விடுங்கள் என்று சொல்கிறார், திருவள்ளுவர். அவரை வழிமொழிந்து, தமிழ் கல்வியின் வளர்ச்சியை, அதற்கு தேவை படும் விளம்பரங்களையும் அல்லது மற்ற அனைத்தையும் தமிழ் ஆசான்களிடம் விட்டுவிடுங்கள் என்று உரையை முடிக்கிறேன். நன்றி.
நான் சென்ற வாரம் ஒரு கல்யாணத்துக்கு கிருத்துவ கோயிலுக்கு போனேன் . நல்ல தமிழில் வழிபாடு நடக்குது. எந்த கூலியும் அந்த கல்யாணத்துக்கு கட்ட வேண்டாம். எந்த மதமாக இருந்தாலும் தமிழன்தானே. எங்க அம்மாவுக்கு 3 பிள்ளைகள். வேறு வேறு மதம் ஆனா அம்மாவை பொருத்தமட்டில் பிள்ளைகள் ஒரு வயிற்றில் பிறந்தவர்கள்தானே. ஓமான் என்ற இஸ்லாம் நாட்டில் ஒரு தேவாலயத்தில் ஹிந்த்யில் எளுதபட்டிருந்தது . அந்த நுழைவாயில் அறிவுப்பு பலகையில் நல்ல தமிழில் இருந்தது. உலகத்தின் எந்த பகுதியுலும் தமிழ் கிருத்துவர்களுக்கு தமிழில் வழிபாடு உண்டு. அனால் தமிழ் சைவமக்களுக்கு சமச்குருத வழிபாடு.
திருமுறை ஓத தெரிந்த சைவர்கள் தாராளமாக சிவாலயத்திர்க்குச் சென்று தமிழில் வழிபட எவ்வொரு தடங்கலும் இல்லையே. நாங்கள் செல்லும் சிவாலயத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமையும் மாலையில் ஒரு மணி நேரம் தேவாரத் திருமுறைகளைப் பாடி எம்பெருமானை வணங்கி வருகின்றோம். பிரச்சனை தமிழர் என்பாரிடம் உள்ளது. பிற மதத்தவர் அவர்தம் சமய நெறிகளையும் பிராத்தனைகளையும் கற்றறிந்து வாழ்கின்றார். தமிழர் என்பாரில் அவர்தம் சமய நெறி அறிந்து திருமுறை ஓதி வழிபட தெரிந்தவர் எத்துனை பேர்? குறை சிவாலயத்திலா அல்லது அங்கே வழிபட போவோரிடத்திலா? அவரவருக்கு தத்தம் வழிபாட்டை தமிழில் செய்யத் தெரியவில்லையானால் பிறரைக் குறை சொல்வது மிகவும் சுலபம். மாற்றத்தை நாமே கொண்டு வருவோம். பிறரை நம்பி வாழ வேண்டாமே.
மேலே ஜச்சொன் விக்டர் சொன்னதுக்கும், கடைசியாக தேனீ அவர்கள் எழுதியதிற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? இப்ப இதுதான் மாடர்ன். பதில் தெரியவில்லை என்றல் சிவத்தை இழுத்து விட வேண்டியது தான் ! குருடன் குருடனுக்கு வழிகாட்டியது போல…
எம்முடைய இறுதி பதில் தென்றலின் கருத்துக்கானது.
அப்படியா ?