தேசிய பாதுகாப்பு மன்றத்துக்கு விரிவான அதிகாரமளிக்கும் சட்டம்

nsc தேசிய பாதுகாப்பு  மன்ற(என்எஸ்சி)த்துக்கு  விரிவான  அதிகாரங்களை  வழங்கும்  புதுச் சட்டமொன்றை   பிரதமர்துறை  அமைச்சர்   ஷகிடான்  காசிம்  இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்தார்.

இச்சட்டம்,  மக்களுக்கு, பிரதேசங்களுக்கு, முக்கிய  கட்டுமானங்களுக்கு,  பொருளாதாரத்துக்குத்  தீங்கு  நேரும்  அபாயம்  உண்டு  என்று  கருதும்  எந்தவொரு  பகுதியையும்  பாதுகாப்புப்  பகுதியாக  பிரகடனம்  செய்யும்  அதிகாரத்தை  என்எஸ்சி-க்கு  வழங்குகிறது.

தேசிய  பாதுகாப்பு  மன்றச்  சட்டம்  2015  என்று  அழைக்கப்படும்  இச்சட்டம்  பாதுகாப்புப்  பகுதிகளில்  நிறுத்தி  வைக்கப்படும்  பாதுகாப்புப்  படையினருக்குத்  தனி  அதிகாரங்களையும்  கொடுக்கிறது.

இச்சட்டம் நாட்டின்  பாதுகாப்பு  விவகாரங்களில் என்எஸ்சி-யை    அரசாங்கத்தின்  மத்திய  ஆணையமாகவும்  ஆக்குகிறது.