தமிழ்ப்பள்ளிகளின் வாரிய நிதிக்கு PWTC அரங்கில் 22/1/2016 பிரமாண்ட கலை இரவு

announcementமலேசியத்தமிழ்ப்பளிகளின் கல்வி வாரிய அமைப்புக்கும்  ( பதிவு எண் : PM 026-1006012014 ) மற்றும் தமிழர் குரல் இயக்க தமிழ் மொழி மேம்பாட்டுக்கும்  தமிழர் தேசியம் அசொசியாட்ஸ் பிரமாண்ட கலை நிகழ்ச்சியை படைக்க உள்ளது.

வரும் 22/1/2016 மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை கோலாலம்பூர் PWTC மெர்டேக்க அரங்கில் நீங்கள் திரை தாரகை  நடிகை சிரேயாவின் நடனம் மற்றும் விஜே TV சுப்பர் சிங்கர்ஸ் ,சென்னை இசைக்கலைஞர்கள் இன்னிசையில்  மகிழும் நாள் வந்துவிட்டது.

நல்ல நோக்கமான  ”தமிழ் மொழியே நமது தேர்வு” என்ற அடிப்படை உரிமையில் இந்த நிகழ்வு வழி தேசிய ஆரம்ப பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களை தமிழ் மொழி படிக்க தத்து எடுத்து சிறப்பு வகுப்புகளில் தமிழ்பபாடங்கள் நடத்த வாரியமும் தமிழர் குரலும் இணைந்து பணியாற்றும்.

கடந்த ஆண்டு முதல் தமிழர் குரலின் இந்த முயற்சிக்கு தேசிய பள்ளிகளின் மாணவர்கள் பெற்றோர்கள் ஆதரவு  தர இத்தொடரை மேலும் வளப்படுத்த அதற்கு நிதி திரட்ட உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். அதோடு விளம்பரப்களுக்கு அதிக செலவு செய்யும் சக்தி இல்லாதலால் www .myticket .com எனும் வலைப்பதிவு வழி டிக்கட்டுகள் விற்கபடுகிறது. தமிழுக்கும் தமிழர் இனத்துக்கும் உதவ விரும்பும் பொறுப்புள்ள செம்பருத்தி எழுத்தாளர்கள் ,வாசக பெரும் நண்பர்கள் தங்களின் முக நூல்களில்  www .myticket .com இந்த வலைத்தளத்தை விளம்பர படித்தினால் உங்கள் தமிழ் உரிமையும் பரிவும் தமிழுக்கு பதிவாகும்.

சிலர் ஏன் சிரேயா கலை நிகழ்ச்சி என்று கேற்பது தெரிகிறது. தமிழ் ,தமிழர் சார்ந்த நிகழ்சிகளை ஏற்பாடு செய்து தோற்று ப போனதால் பல நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.  அஸ்ட்ரோவுக்கும் சினிமாவுக்கும் செலவு செய்யும் நம்மவர்கள் அதே உணர்வில் தமிழுக்கு சேவை வழங்க முன் வருவார்கள் என்றே நம்புகிறோம்.

முதல் முறையாக விஜே டிவி யின் 8 பேர் கொண்ட இளம் பாடகர்கள் பழைய புதிய பாடகளை வழங்கி அசத்துவார்கள்.  இந்த நிகழ்வில் சிரேயாவின் நடன நடிப்பு சிறப்புக்கு அவருக்கு மலேசிய ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பு பட்டமும் வழங்க  தயாராகிவுள்ளோம்.

இந்த நிகழ்வு பெரும் பொருட்செலவில் நடந்தாலும் நிதிக்கு ஆதரவாளர்களின் கணிசமான உதவி செய்துளார்கள் அவர்களையும் இன்னும் ஆதரவு  தர நல்ல உள்ளங்களையும் நாடுகிறோம்.

e ticket வழி டிக்கெட்டுகளை வாங்க வசதி இல்லாதவர்கள்  பிரிக்பீல் M JOY ஓட்டலில்  டிக்கெட்டுகளை பெறலாம்.  PWTC அரங்கில் முன் வருபவர்கள் zone பிரகாரம் முதல் வரிசைகால் அமரும் வாய்ப்பு உள்ளது. நிகழ்வு சரியாக மாலை மணி  6.15கு தொடங்கிவிடும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்ளுகிறோம் .  மேலும் தகவல் பெற 016 6944223 என்ற தொடர்பில் அழைக்கலாம்.

உங்கள் ஆதரவில் பொன் ரங்கன்
இயக்குநர் 
தமிழர் குரல் சிலாங்கூர். 
தமிழர் தேசியம்