அம்னோவின் வெற்றிகள் தம்மால் சாதிக்கப்பட்டவை என்று கூறிக்கொண்டிருப்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விட்டொழிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார்.
“நாட்டை மேம்படுத்துவதில் அம்னோ வெற்றி அடைந்துள்ளது என்று (நஜிப்) குறிப்பிட்டதை ஒப்புக்கொள்கிறேன்.
“ஆனால், அது அம்னோவின் வெற்றி. இந்தத் தலவருடைய வெற்றி அல்ல. அது தாம் அடைந்த வெற்றி என்று உரிமை கொண்டாடக் கூடாது”. இன்று கோலாலும்பூரில் அம்னோ பொதுப் பேரவை நடைபெறும் புத்ரா உலக வாணிக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.
“நான்கூட அப்படி உரிமை கொண்டாடியதில்லை”, என்றும் மகாதிர் சொன்னார்.
பதவி பரிபோனவறேல்லாம் பஞ்சாயத்து பன்னகூடாது,அவர்போலவே சிலர் பல் பிடுங்கியும் படம் எடுத்து ஆடுகின்றனர்
நாராயண நாராயண.
அம்னோவிற்கு ஒரு வெற்றியும் கிடையாது— எல்லாமே தில்லு முள்ளும் திருகுதாளமும் தான்–இது துங்கு காலத்தில் இருந்து நடக்கிறது- அப்போதாவது கொஞ்சம் நேர்மை இருந்தது ஆனால் இன்று நேர்மைக்கும் இந்த ஈன ஜென்மங்களுக்கும் இனி வைத்தாலும் எட்டாது– பொய்யும் பித்தலாட்டமும் சப்பிகளும் ஜால்ராக்களும் ஆளும் கட்சி.