நமது நாட்டில் எத்தனையோ தமிழர் சார்ந்த .இந்தியன் சார்ந்த அலது தமிழ் மொழி சார்ந்த யாகங்கள் இயக்கங்கள் இருகின்றன. எங்கள் இயக்கத்தையும் சேர்த்துதான் …
தமிழுக்காக இடையில் தமிழ் அறவாரியம் முன்னாள் தலைவர் திரு பசுபதி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் போன்றோர் அமர்வில் ஒரு நாடாளுமன்ற வட்ட மேசை குழு ஒன்று அமைக்கப்பெற்று தமிழ் மொழி பாதுகாப்புக்கு ஓரிரு கூட்டங்களும் நடத்தினர்.
அது எதுபற்றி என்று ஓரளவுக்கு தெரியும்…
திரு அ. பாண்டியனின் கட்டுரைக்கு முன்பு கூட குல சேகரன் தமிழ்ப்பள்ளி மொழி பற்றி ஒரு சலசலப்பு (காட்டுரை) எழதி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வக்குள்ள இவர்கள் குறிப்பாக ம இ கா பழனி வேலு ,சுப்பிரமணியம் ,சரவணன், DAP சிவா சுப்ரமணியம் , குலசேகரன் ,PKR சுரேந்திரன் , DAP சார்லஸ் , கோபிந்த் கர்ப்பால், இன்னும் காராட் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை எல்லாம் தமிழனை தமிழ் மொழியை வாடகைக்கு வசப்பாடி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாடுளுமன்ற “பென்செணலில்” வாழலாம் என்று கொட்டாவி கெட்ட ஆவி கனவு காண்கிறார்கள்?
ஒன்று மட்டும் நிசப்தம். இந்த நாட்டில் இந்தியனும் தமிழனும் இந்த அளவுக்கு படு மோசமான நிலைமைக்கு தள்ளப பட்டதற்கு இந்த நாடாளுமன்ற நட(ன)மாடிகள்தான் காரணம் மென்றால் பொய்யில்லை என்பதை சரித்திரம் சொல்லும்.
வெறும் ஆபிஸ் பாய் வேலை செய்யவா இவர்களுக்கு நாடாளமன்ற வேலை ? சமுதாயத்தை நிமிர்த்தி வைக்க இன்னும் எவ்வளவோ மிச்சம் இருக்கிறது, கோவிலுக்கும் தமிழர் சமயமற்ற இந்து அறவாரியத்துக்கும் மானம் போகும் அளவுக்கு கட்டிப்பிடித்து குத்திக்கொள்ளும் இவர்கள் தமிழ் ,தெலுங்கு .,மலையாள மொழிக்கும் கலை கலாச்சாரத்துக்கும் ஆளையே காணோம்?
எதை வேடிக்கயாய் காட்ட நாடாளுமன்றதுக்கு உள்ளே வருகிறீர்கள்?
சமுதாயம் சரிந்துகிடக்கும் குளிர்வதையில் வெப்பம் ஒரு கேடா?
மொழி என்றும் இனம் என்றும் எரியும் இரணங்களில் கசிந்து வெளியேறும் குருதிகளை கிண்டி பார்த்து திருட்டுத்தனமா “கண்ணடித்து”எனக்கென்ன என்ற உன் கொலை, கோழை நடைக்கா இந்த பதவி யாத்திரைகள்?
உங்கள் காலணி மிதித்த இடங்களில் கன்றிபோய் உள்ளது இந்த இனத்தின் மானம், மரியாதை. சிமண்டிளும், சிலைகளிலும் சுவரிலும் சுண்டிக்கிடகிறது இந்த இனத்தின் மௌன கண்ணீர்கள்.இன்னும் எத்தனை வில்லங்க விழாக்கள் !!
உனக்கு ஏன் கோட்டும் ….சூட்டும் ? இருந்தது இழந்தது போதும் கழற்றி கொடுத்துவிட்டு அடுத்தவராவது உன் மிச்சத்தை செய்யட்டும். 14 வது பொதுத்தேர்தலில் தலை காட்டாமல் இருந்தால் அதுவே போதும்.இந்த சமுதாயத்துக்கு நீ கடசியா செய்த நன்றியாகட்டும்.
நாங்கள் அவர்களுக்கு ஒட்டு போட்டாவது எங்களை காப்பாதிகொள்கிறோம்..கொல்ல வேண்டாம் இந்த இனத்தை.
14 வது பொது தேர்தலுக்கான சுற்றுககான சுத்தில் நீங்கள் எல்லாம் போய் விடுங்கள். நாட்டில் இன அரசியல் .பொருளாதார அரசியல் ,தமிழன், இந்தியன், உன் மேல், என மேல் விழும் அடிகளை யாரின் அறியாமை என்று உங்களுக்கு தெரியும் .தெரிந்தும் இன்னுமா இந்த அரியணை ?
“தப்பு செய்தவன் ஜாமீனில் விடுதலை
சந்தேகத்தின் பேரில் கைதானவன்
லாக்கப்பில் படுகொலை”
புரியுமென்று நம்புகிறோம் ! தப்பு செய்யும் நாடாளுமன்ற ஆசாமிகள் சுதந்திரமா உள்ளனர்.ஒட்டு போட்டு தப்பு செய்த இனம் லக்காபில்
படுகொலை. இந்த இனமும் மொழியும் சாவுகிறது.
இது ஒரு அநாதை, இனம் அடிமை இனம் என்பதை நன்கு உணர்ந்து நன்றாக அரசியலில் கைகளை காய்களை நகர்த்த தெரிந்த ஊமை துரைகளின் கடைசி கட்டம் வந்து விட்டது. அட்டைகளின் வயுறு நிறைந்தால் விழுந்துவிடுவதுதான் இயற்கை. தானாக இழுத்து விடுவதும் இன்னொரு வழிதான் என்பதை உணருங்கள்.
மீண்டும் வருவேன்
-பொன் ரங்கன்
தமிழர் குரல் மலேசியா
பொன் ரங்கன் என்ன சொல்ல வருகிறார் ? சமுதாயத்தின் மேல் உள்ள பற்றால் தன் ஆதங்கத்தை இப்படி உளரிக் கொட்டுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
ஆளும் அரசில் உள்ள குறிப்பாக இந்தியர்களின் காவலன் என்று மார்த்தட்டிக்கொண்டிருக்கும் உதவாக்கரையர்களை வையுங்கள். தவறில்லை. அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை குறை கூறுவது ஏற்புடையதல்ல.
பல்லாண்டு காலாமாக உரிமையை அடமானம் வைத்துவிட்டு இப்போது குத்துதே குடையுதே என்றால் என்ன செய்வது?? முள்ளில் விழுந்த சேலையை இப்போதைய சூழ்நிலையில் பக்குவமாகவே எடுக்க வேண்டும். இல்லையேல் கிழிந்திடும் கிழிந்து !!! எடுத்தேன், வச்சேன் கிழித்தேன் என்பதையெல்லாம் ஆட்சியில் ஒட்டித் தொத்திக்கொண்டிருக்கும் தலைவர்களின் மீது எய்யுங்கள்!! உரிமையை மீட்க ஆட்சி மாற்றமே ஒரே வழி!!!
அய்யா பொன். இரங்கன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. நமக்கு பிரச்னை என்று வரும் போது நாடளமன்றதில் நமது ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆதரவு ஒருமித்ததாக இருக்கவேண்டும்.இல்லையென்றால் இழுப்பரியாகத்தான் இருக்கும்.
எல்லாம் வயிதுக்குதான்,நாராயண நாராயண.