படித்த தமிழ் /இண்டியன் பட்டதாரிகளுக்கு ரோசமே இல்லையா ? அரசியல் மோசடியை பார்த்து இவர்கள் வெட்டியாய் தூங்குவது ஏன்?

man_writingஆண்டு  2016  பிறக்கப்போகிறது. 2017 கடசியில் அல்லது 2018டில் இந்நாட்டின் 14வது பொதுத தேர்தல் வந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளை ஆய்வில் எடுத்துககொண்டு  இந்த கட்டுரை அடுத்த 10 ஆண்டுகள்  நம் வசம் திருப்புமா என்ற ஆசியில், ஆசையில் எழுதுகிறேன். தயவு செய்து சமுதாய நேர்ககொண்டு பார்க்கவும்.

சிலரின் பெயர்கள் அவசியமாகிறது அதுவும் பொதுப்படைதான்.

இன்றைய மலேசியத தமிழர்களின் , இண்டியர்களின் அரசியல் பிரதிநிதிகள் தங்களின் சுய அரசியல் வளர்ச்சிக்கு மட்டும் உழைக்கிறார்கள் என்பது எனது நீண்ட நாளைய  குற்றச்சாட்டு.

சம்பந்தன் முதல்  சீனிவாசன், பட்டு,கர்ப்பால், குலசேகரன் மாணிக்கவாசகம், பிறகு சாமிவேலு ,பழனிவேலு,ராமசாமி சுப்ரமணியம் என்று சமுதாய தாகம், ஏக்கம்,தாக்கம் ,ஊக்கம், உரிமை என  முக்கிய அறிவிப்புகளை செய்த தலைவர்களை
மட்டும் எடுத்துகொள்கிறேன்.

1970 களில் எனக்கு அரசியல் கருத்து தெரிந்த காலம் தொட்டு, நமது தமிழ் பத்திரிக்கைகைகள் ஊடக ஒத்தல்கள், ஊதல்கள் எல்லாம் படித்த அனுபவத்தை படையலாக  படைக்க ஆசைதான். ஆனால் காக்காவுக்கு பாட்டன், பூட்டனுக்கு எல்லாம் கருமாதி சோறு போட்ட கதையாகி விடும் என்பதால் 2009 “இண்ட்ரப்புக்கு” பிறகு அரசியல் தெளிவு கிடைத்த மலேசியத தமிழர்களை, இண்டியர்களை பதவியில் இருக்கும் இண்டியன் அரசியல் வாதிகள்
எப்படியெல்லாம் அலைகழித்து ஆட்டம் காட்டினார்கள் என்பதை கொஞ்சம் நினைத்துப்பார்த்தேன் ..எழுதி வைக்கிறேன்.

இதனால் நான் பலரின் கொச்சைக்கு ஆளாகலாம் …இந்த இயலாமை கருவாடுகளின் உறவில் மோம்பம் பிடிக்கும் பல்லாக்கு தூக்கும் பழக்கம் இல்லாத எனக்கு எந்த விதையும் முளைக்க வாய்ப்பில்லை.

சமுதாயத்தில் தமிழ் மொழி சிக்கல், பொருளாதார சிக்கல்,வணிக சிக்கல் , கலாசார சிக்கல் , பேடித்தன சிக்கல் , வறுமை ,ஏழ்மை . கோயில் கொடுமைகள் , பல்கலைகழக சிக்கல் , வெளிநாட்டு படிப்பு சிக்கல் , விவதைகள் சிக்கல், பெர்நாமாவில் தமிழ் செய்தி சிக்கல், வங்கிகளில் தமிழ் சிக்கல், THR ராக வில் தமிழ் கொலை , விவேகானந்தா அசரம சிக்கல், மைக்கா சிக்கல் , MIED சிக்கல், ம இ கா அரசியல் சிக்கல், PKR பாகாதானில் மாநகர மன்ற கிராம தலைவர் பதவி சிக்கல், DAP யில் தமிழன், தெலுங்கன் உள்ளின  உரிமை சிக்கல், 500 GLC நிறுவனங்களில் இந்தியர்களுக்கான இயக்குனர் வாரிய ஏமாற்றம், இடை நிலை பள்ளிகளில் தமிழ் இல்லாத சிக்கல் . PT3 வழி தமிழ் ஏப்பம் , SPM தமிழ் மொழிக்கும் ஆசிரியர் பயிற்சிக்கும் இழப்பு , தமிழ்பபள்ளிகளில் இரண்டு மொழி ஆதிக்க திட்டம், தமிழ் பாலர் பள்ளிகள இல்லாமை , இப்படி பல முயலாமை நாடாளுமன்ற பிரதிகள் நமது இனத்தின் வளப்பத்தை மோசடி செய்துளார்கள்.

இதில் பொருளாதார சிந்தனை  இல்லாமல்  ”வந்தோம், பார்த்தோம், போவோம் பிஞ்சின் போதும்…” என்று இனத்தை அடமானம் வைத்து வாழ வேண்டிய சின்ன புத்திகாரகளால் நமக்கு எப்படியெல்லாம் நட்டங்கள், துரோகங்கள் ,,இனி என்ன நடக்கபபோகிறது ?

நாட்டின்புதிய  பொருளாதார கொள்கை 60 ஆண்டுகளை பிடிக்க போகிறது. 2020 என்ற தூர நோக்கம் முடிய இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது.இன்னும் ஒரு வரையறை சித்தனையும் இல்லாத, மேய்க்கவும் ஆளில்லாமல் இவர்கள் என்னதான் நினைத்து பதவியில் இருக்கிறார்கள்? DAP ஒரு வழியாக சீனர்களை காப்பாத்தி விடும் . BN மலாய் இனர்களை மீட்டு விட்டது. தமிழ்களை, இண்டியர்களை காப்பாற்ற  யார் அந்த ஆசாமிகள்? இது  இன உரிமை வினா, இன தூவேசமல்ல !

ஒரு முறை ஒரு பத்திரிக்கையின் துணை ஆசிரியர் என்னிடம் சொன்னார் “ராமசாமி பற்றி நீங்கள் எழுதாதீர்கள்” என்று. என் எழுத்தை… அது கழுதை கதையானாலும் எழுத வேண்டாம் என்று சொல்ல இவர் யார் ?

இப்படித்தான் இவர்கள் ஊடகத்தில் அடிக்கும் சமுதாய அரட்டைக்கெல்லாம் இந்த பத்திரிகை காரர்கள் வாயிக்கரிசியும் வக்கலத்தும் பேசியும் இந்த வீணர்களின் வேடிக்கையில் சுகம் கண்டு சமுதாயத்தை பின்னால் குத்தி குழப்பி விடுவது இவர்களின் இரவல் வேலை.

பொருளாதார ரீதியில் PNB யில் 2,5 பில்லியனை சமுதாயம் முதலீடு செய்துள்ளதாக தகவல், இதன் வருவாய்  யாதென்று தேவமணி சொல்லவதில்லை. இன்று வரை தேவமனிக்கு எழுதிய பத்திரிக்கைகள் என்ன ஆட்சி என்று எழுதவில்லை.
MAIKA வின் 10 கோடி  விற்ற பத்திரிக்கை.. மீதி அரவாரியத்தில் போட்டு பங்கு தாரர்களுக்கு உதவும் ஊதாபூ கதை மஞ்சள் காய்ச்சலாக உள்ளது. இதையெல்லாம் கேற்க நாடாளுமன்றத்தில் ஆளில்லை?

2013 – 2025 புதிய கல்வி திட்டத்தில் தமிழ் பள்ளிகளுக்கும், சீன பள்ளிகளுக்கும் மொழி ஆபத்து என்று குரல் கொடுத்தும் ஒரு தமிழ் அறிவாளிக்கும் விளங்க வில்லை. செம்பருத்தியை தவிர நாள் நீட்டி பத்திரிக்கைகளின் பங்கு பெ! பெ !!

300,000 சிகப்பு அடையாள அட்டை என்று PKR சுரேந்திரன் டுபுக்கு விட்ட கதை இன்னும் கந்தல் கசியவில்லை.

ம இ காவில் இரண்டு தலைகள். ஒருவர் முழு அமைச்சர் பதவியை இழந்தார், இன்னும் ஒரு கப்பலுக்கு இரண்டு கூஜாக்கள் கொப்பளித்து துப்புகிறார்கள். சமுதாயத்தில் ஆயிரக்கணக்கில் சூடு மண்டையில் இருக்க மயிருக்கு சாயம் பூசும் தலைமைத்துவ போராட்டத்தில் கேமரன் மலை நாடாளுமன்றம் மலை கீழே அமைச்சர் பதவியை விட்டுபுட்டு கோட்டாவை கேக்கிறது.

சரி முளைகாய் மூலிகையாவது உருப்படும் என்றால் அதுக்கும்
மொட்டையில் தடவல். 20 மில்லியன் சமுதாய கணக்கு “சாம்பலில்
சில்லி சாயம்” பூசியாகிவிட்டதாம். நம்பியிருந்த தெகுன்,சீட்க்கு சிக்கல்.

இப்படி நாடாளுமன்றத்துக்கு நம்பி போனவர்கள்  எல்லாம் நாயாய் ,பேயாயாய், பெருசாளியாய் திரிந்தால் அரசியலில், அரசில் நமக்கு என்ன மரியாதை?   என்னதான் செய்வது ! மீண்டும் 14 பொதுத்தேர்தல் மீண்டும் சீட். மீண்டும் விபரீதம்தானா  ?

இன்று 10,000 மேல் இருக்கும்  படித்த தமிழ் /இண்டியன் பட்டதாரிகளுக்கு ரோசமே இல்லையா ? இவர்களை அரசியல் மோசடியை பார்த்து வெட்டியாய் தூங்குவது ஏன்? இனத்துக்கு போராட தெரியாத அரசு அரசியல் தெரியாத படித்த முட்டாள்களா ? அடுப்புக்கும், ஆத்ம உணர்ச்சிக்கும் சோரம்போகும் சோம்பேறிகளா?

தமிழ் நாட்டில் 2017  தமிழர் அரசியலுக்கு மாணவர் புரட்சி தயாராகி விட்டது. இங்கு நமது மாணவர்கள், படித்த பாட்டடாரிகள்  அரசியல் ஈக்கு கொசு வலை பின்னுகிறார்கள் போலும்.

ஒரு இனத்தின் இளஞர் இனம் தூங்கினால் என்ன ஆகும் என்பதை இந்த இனம்  இந்த நாட்டில் கண்கூடாக அனுபவித்து வருகிறது. உனக்கு உணர முடியவில்லையா ? அசிங்கமான அரசியல் வாதியை
கண்டு அஞ்சுவது ஏன் ? 6ம்  வகுப்பு படித்த சாமிவேலு இந்த சமுதாயத்தை ஆட்சி செய்து அடக்கி அமுக்கியது கண்டு பயந்துவிட்டாயா ? உனக்குத்தான் வாழ்கையின் வடிவம் சொல்லி கொடுக்கப்பட்டதே சமுதாயம் அதில் முக்கியமல்லவா?

உலகம் கால் பந்தாய்  உருமாறுகிறது. உதைப்பட அல்ல கோல அடிக்க  தமிழா. அலையலையாய் படித்தவர்கள் கூட்டம் இந்த சமுதாயத்தை காத்து நிற்கவேண்டும். உன்னால் மட்டுமே என் இனத்துக்கு இந்த நாட்டில் வரலாறு உண்டு.

மீண்டும் வருவேன்

-பொன் ரங்கன்
தமிழர் குரல்.