நான் சொல்ல வில்லை …கவிப்பேரரசு வைரமுத்துவின் 40 சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பதாதையின்
மேல் எழுதப்பட்டிருந்த விளமபர இளம் விமர்சன வாசக வரிகள்.
நல்லதொரு புத்தக வெளியிடும் விழாதான் . மண்டபம் முழுக்க புதிய தமிழ் ஆர்வலர்கள். பார்வைக்கு எட்டிய அளவு தேடினேன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை காணோம். ஒரு வேளை தமிழ் சினிமா கூட்டமா என்றும் பார்த்தேன் அந்த வாடையும் இல்லை. தமிழ் ஆசிரியர்களா ,பல்கலைகழக மாணவர்களா ? சரி வந்தவர்கள் 500 பேரு இருப்பார்கள். போதும் போதும் என்ற ராஜேந்திரனின் குரல் கூவும் அளவிற்கு புத்தகம் விற்றது. மகிழ்ச்சியான வெற்றியான சிறப்பான ஏற்பாடுகளின் ஊடே சுகாதார அமைச்சரின் உரை ,,,விளையாட்டு துறை துணை அமைச்சர் உரை ,,ஐயா கார்த்திகேசுவின் நூல் ஆய்வு. சிறப்பான மின்னலின் புதிய அறிவிப்பாளர் கவிக்குயில் நிகழ்வாக்கம் மனதை மனமார வாழ்த்தியது.
நீண்ட நெருடலுக்குபின் தமிழக ..இந்திய கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள் எனபதை காட்டிலும் அவரின் உரை விளையாட்டை கேற்க சனி மாலை தமிழ் பனி முகங்களை பார்த்தேன்.
அதில் நான் தனியாக சென்றிருந்த காரணத்தால் இரு பக்க அமர்விலும் (புதிய) 70 வயது மதிக்க தக்க தமிழ் உணர்வாளர்கள் என்றே நான் முடிவும் கட்டினேன்.
கவிப்பேரரசு அவர்களை நான் கடைசியாக சந்தித்தது மன்னிக்கவும் பார்த்தது 27/10/2015 ல் தமிழர் நாட்டில் நடந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவில். நெருங்க முடியாதவர்கள் என்பதால் ஒரு தமிழ் ரசிகனாக இரு தினங்கள் தமிழ் பித்தனாக என் வேலைகளை விட்டு விட்டு இளகிய மனதில் இலக்கியம் காண சென்றேன்.
ஏனோ முந்தி பிடித்து மூத்தவர்களையும் அரசியல் வாதிகளையும் கைகூப்பும் பழக்கம் இலாத படியால் மேடை பக்கம் போக வில்லை.
அது ஒரு வகை இலக்கண கூச்சம். என்னுடைய உணர்வு தமிழும் தமிழனும் நடத்துவது நல்லது என்பதால் மனதார வாழ்த்தும் பக்குவம் இருந்தது. மனசாட்சி சொன்ன உண்மை.
சரி இங்கு வருகிறேன் ..அந்த பெரியவர்கள் பேசிய விடயம் என்னையும் திடுக்கிட வைத்தது …நடப்பதோ ஒரு மாபெரும் இலக்கிய வாதியின் நூல் வெளியிடும் விழா ..நடதுபவரோ நாடறிந்த நல்ல எழுத்தாளர் … “இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியத்தின் உச்சம்” என்ற பதாதையின் தலை எழுத்து பட்டறை பதிவு பற்றிய முனுமுனுப்பல்தான் அது ..இந்த கருத்தின் வினாவும்.
இது விளம்பர சொர்ச்சுவைக்காக எழுதப்பட்டதா? அல்லது இதுதான் ஆய்வின் அடிப்படையா ? “இந்திய மொழிகள் தமிழுக்கு முந்தியதா தமிழை ஒப்பீடு செய்ய” என்று பெரியவர் கேட்டார் . நான் கூனி இருந்த என் உடலை நிமிர்த்தி அமர்ந்தேன். 18ம் நூற்றாண்டின் சமீப கால பன்முக தனித்தமிழ் மறைமலை அடிகளாரின் தமிழ் ஆராய்சி பிறகு மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் தமிழ் உலக மொழிகளின் முதல் வரிசை பிறகு 6ம் இடத்தில வந்த அரசியல் விதிகளை நிதாநித்துப்பார்த்தேன். பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியிடு விழாவில் “வைரமுத்துவின் தமிழ் இலக்கிய உச்சம்” என்று பதிவு செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்குமே என்ற ஏக்கம் பிளம்பிட்டு இருந்தது. இந்த 21 நூற்றாண்டின் ஒரு இலக்கிய வெறியனின் வேகம் இன்று தமிழ் உலகம் கண் பிதுங்கி யோசிக்கும் ஆற்றல் மிகபபெற்றுள்ள வைரமுத்து என்ற பாறை சிதறும் தமிழ்த தத்துவ துளிகள் இனி எங்கு காண்போம்?
அவரின் உரையில் இந்த தமிழையும், தமிழ் இனத்தையும் மீட்பேன் என்ற வரிகளில் வேகம் தெரிந்தது.ஆனால் உலகை ஆளும் அரசியல் விவேகம் இல்லையே ! என்று மனம் அழுதது. தமிழ் நாட்டின் தமிழர் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் இன்னொருஅரசியல் பவளம் வேண்டும் என்ற உண்மையை சொல்லி உள்ள வைரம் இன்னும் தமிழர்க்கு “தமிழர் நாடு” வேண்டும் எனும் உரிமைக்கு பதப்பட வேண்டும். தமிழ் என்ற மொழி, இனம் உளவியல் அரசியல் உரிமைக்கும் உரம் தர வேண்டும். தமிழர் உலகம் ஆட்டம் கண்டுள்ள போது மொழி மாட்டுமே அரசியல் மாற்றத்தின் வெற்றி இலையேல் கண்ணதாசனும், வாலியும், கம்பனும் பாரதியின் பாரத்தை இறக்கி இருக்கலாம் . கவிஞரின் காவியமும் கதை மட்டும் பேசும். ஏங்கி நிற்கும் எதிர்பார்ப்புகள்…. தொடரும் .
தமிழவன், ம. அ.பொன் ரங்கன்
தமிழர் குரல் மலேசியா
உலகத் தமிழர் பாதுகாப்பு நடுவண்.
பதாதையில் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் இந்திய மொழிகளின் உச்சம் என்று சொல்லவில்லை. தமிழ் மொழியின் உச்சம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அவரின் ஒரு சிறுகதை தொகுப்பை வைத்துக்கொண்டு அது தான் உச்சம் என்று சொல்லுவது தவறு. இன்னும் அவர் எழுதவதற்கு நிறையவே உண்டு. முதலில் எழுதட்டும் பிறகு உச்சமா, துச்சமா என்று எழுத்துலகம் முடிவு செய்யும்.
தமிழ் மொழியின் உச்சம் என்பதால் இனி தமிழ் இலக்கியமே வேண்டாம் என்ற பொருள் படுமா ஆப்ராம் ? இதுதான் எனது ஐயம். அவர்கள் இந்திய மொழிகளில் உச்சம் என்றுதான் எழுதி இருந்தார்கள். சொல்லினார்கள் என்று நான் எழுதவில்லை. நீங்களாவது என் விவஸ்தை உணர்ந்தீர்களே ,நன்றி.
இந்த வைரமுத்து இடத்திற்கு தகுந்த மாதிரி …ஜிங் ஜிங் அடிப்பவர் ….ஐரோப்பாவில போய் பணம் வாங்கி கொண்டு ..தமிழ் ஈழம் எல்லாம் கிடைக்கும் என்பார் …..தகர தமிழகத்தில் ..எந்த தமிழார் ஆதரவு கூட்டத்திற்கும் போக மாட்டார்…எல்லாம் தமிழன் தலை எழத்து
அனோன்! வைரமுத்து தகர தமிழகத்தில் தமிழர் ஆதரவு கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? வெறும் தகர டப்பா கூட்டங்களில் கலந்து கொள்வதால் என்ன பயன்?
வைரமுத்து ஒரு தமிழ் வியாபாரிங்க ! ஐயா ஆதி குமணன் ஓர் ஆண்டு நினைவு விழாவுக்கு உரை நிகழ்த rm 100.000 கேட்டு அடம் பிடித்தவன் இந்த கருப்பு வைரமுத்து ! இவனையும் அழைத்து வியாபாரம் செய்கிறான் மலேசியா தமிழ் வியாபாரி ! 2009 இலங்கை தமிழன் கொலையுண்டு செத்தபோது ஒரு வரி கவிதையும் இந்த தமிழ் வியாபாரி பன்னாடைக்கு வரவே இல்லை ! தமிழ் நட்டு பல்கலை மாணவர்கள் இலங்கை தமிழனை குறித்து பேச அழைத்தபோது , பணமும் கேட்டு ,என்னுடைய கவிதை நூல்கல் 5000 பிரதிகள் விற்று கொடுத்தால் மட்டுமே வருவேன் என்று நிபந்தனை போட்ட ஐயோக்கிய தமிழ் வியாபாரி இந்த கேன கிறுக்கன் கவிஞன் !
வைர முத்து மாத்திரம் அல்ல ..தகர தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழா வியாபாரிகளும் ஈழ தமிழர்கள் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் இவர்களுக்கு எந்த யோகிதையும் கிடையாது
மறைக்கபட்ட வரலாறு !
சிவகிரியில் அப்போது பாளையக்காரராக இருந்தவர் ஒரு வயதானவர். வயதானாலும் நல்ல ஆள்பலத்துடனும் செல்வாக்குடனும் ஆண்டு கொண்டிருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். மாப்பிள்ளை வன்னியன் எனும் ஒரு மருமகனும் இருந்தான். இவர்களைத் தவிர அவரின் பாளையத்தில் வேலை பார்த்து வந்த சங்கரலிங்கம் பிள்ளை எனும் ஒருவனும் இருந்தான்.
அக்காலங்களில் கொள்ளையடித்த நேரம்போக ‘பார்ட் டைம் ஜாப்’ எனப்படும் பகுதி நேர வேலையாக கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மற்றும் பக்கத்துப் பாளையங்களில் குழப்பம் விளைவிப்பது போன்ற சிறு சிறு வேலைகளையும் செய்து வந்தான் கட்டப்பொம்மன். வீடு காலி செய்யும் வேலைகள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவனின் கைவரிசையில் பல வீடுகள் காலியாகத்தான் இருந்தன!
பாளையக்காரரின் மருமகன் மாப்பிள்ளை வன்னியனும், சங்கரலிங்கம் பிள்ளையும் பாளையக்காரரின் மகனை அரியணையில் அமர வைக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். பாளையக்காரரின் மகனும் இவர்கள் சொல்படியே தலையாட்டிக் கொண்டிருந்தான். அவன் பாளையக்காரனாகி விட்டால் அவ்விருவரும் அரசாள்வது போலத்தான். ஆனால், சிவகிரிப் பெரியவரிடம் இவர்களின் திட்டம் பலிக்கவில்லை!
கடைசியில் ‘ப்ராஜக்ட்’ கட்டப்பொம்மனிடம் வந்து சேர்ந்தது. முதலில் பாளையக்காரர் மகனை அடிக்கடி அழைத்து விருந்தளித்து உற்சாகப் படுத்தினான் கட்டப்பொம்மன். படிப்படியாக அவனுக்கு ஆசைவார்த்தைகளை கூற ஆரம்பித்தான். நியாயப்படி பார்த்தால் இந்நேரம் நீதான் பாளையக்காரனாக இருந்திருக்க வேண்டும். ஆனால், வயதானாலும் உன் அப்பனுக்கு பதவி ஆசை போகவில்லை. எத்தனை காலம்தான் நீயும், ‘நமக்கு நாமே தபால்பதி’ கணக்காக திரியப் போகிறாயோ.. என்கிற பாணியில் அடிக்கடி அங்கலாய்த்தான். சிவகிரியார் மகனுக்கு அடிமனதில் இருந்த பதவி ஆசை இப்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. பின்பு வெறியாக மாறியது.
ஆனால், சிவகிரி பெரியவரை நேருக்கு நேர் நின்று எதிர்த்து வீழ்த்துவது என்பது இயலாத காரியம். தவிர நல்ல ஆள் பலமும் அவருக்கு இருந்தது. அதனால் அவரை எதிர்க்கும் துனிவு மகனுக்கில்லை. கடைசியில் அதற்கும் ஒரு திட்டத்தைத் தயாரித்தான் கட்டப்பொம்மன். அதன்படி கட்டப்பொம்மனை விருந்தினராக அழைத்திருந்தான் சிவகிரியார் மகன். கட்டப்பொம்மனும் தன் பரிவாரங்கள் புடைசூழ சிவகிரி வந்தடைந்தான். வீடுதேடி வந்த விருந்தினனை சிவகிரியாரும் அன்போடு வரவேற்றார். அவர் அன்போடு வரவேற்றாலும் சரி, வேற்காவிட்டாலும் சரி கட்டப்பொம்மனும் அவன் ஆட்களும் இரவோடிரவாக சிவகிரிப் பெரியவரை தீர்த்துக்கட்டி விடுவதுதான் திட்டம். (தபால்பதி கவணிக்க)
இரவும் வந்தது. உருவிய வாளுடன் ‘கூலிப்படையினரும்’ அவற்றின் தலைவனும் ஒவ்வொரு அறையாக சிவகிரிப் பெரியவரை தேடிக் கொண்டிருந்தனர். ஆனால், அதே வேளை இவர்களின் திட்டத்தை கடைசி நேரத்தில் அறிந்து கொண்ட சிவகிரிப் பெரியவர் நம்பகமான சில ஆட்களுடன் தன் நன்பரான சேத்தூர் பாளையக்காரரிடம் சென்று தஞ்சமடைந்திருந்தார்.
பெரியவர் இவ்வாறு விரட்டப் பட்ட பிறகு மகன் சிவகிரிப் பாளையக்காரனாக பட்டமேற்றுக் கொண்டான். மாப்பிள்ளை வன்னியன் மந்திரியானான். சங்கரலிங்கம் பிள்ளை பிரதானியானான். பின்பு அவர்கள் மூவரும் இனைந்து முன்னமே செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி ஒரு பெருந்தொகையை கட்டப்பொம்மனுக்கு அளித்தனர்.
ஆனால், தொழிலில் ஒரு நேர்மையைக் கடைபிடித்து வந்தான் கட்டப்பொம்மன். ஓடிப்போன சிவகிரியார் திரும்பி வந்து தாக்க மாட்டார் என என்ன நிச்சயம்? அவரை ஒழிக்காமல் நீ நிம்மதியாக இருக்க முடியாது என்பதை எடுத்துரைத்தான். கடைசியில் அந்தப் ‘ப்ராஜக்டும்’ கட்டப்பொம்மனிடமே ஒப்படைக்கப் பட்டது. சிவகிரியாரால் மற்றவருக்குப் பிரச்சினையோ இல்லையோ, தன் தலைக்கு ஆபத்துத்தான் என்பதை உணர்ந்திருந்தான் கட்டப்பொம்மன்.
சேத்தூர் பாளையக்காரருக்கு ஒரு கடிதம் எழுதினான். சிவகிரியாருக்கும் அவர் மகனுக்கும் ஏற்பட்டுள்ள பகைமையைக் கண்டு தான் மனம் வருந்துவதாகவும், தான் எந்தக் கட்சியையும் சாராதவனெனவும், தான் மீன்டும் அவ்விருவரையும் ஒற்றுமைப் படுத்திப் பார்க்க ஆசையோடிருப்பதாகவும் அதில் எழுதியிருந்தான். கட்டம் சரியில்லாத சேத்தூராரும் இவனின் பசப்பு வார்த்தைகளை நம்பித் தொலைத்தார்.
ஆனால், சிவகிரிக் கிழவர் இவனை நம்பவில்லை. ஆனாலும் தன் நன்பர் சொல்லையும் தட்ட முடியவில்லை. பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். கட்டப்பொம்மன் தன் படை பரிவாரங்களுடன் சேத்தூர் வந்து சேர்ந்தான். சிவகிரியார் மகனும் அவனைச் சேர்ந்தவர்களும் வரவழைக்கப் பட்டனர். பேச்சு வார்த்தை துவங்கியது. கட்டப்பொம்மன் இயக்கத்தில் அவர்களும் திறம்பட நடித்துக் கொண்டிருந்தனர். முடிவில் சிவரிகிக்கிழவர் சேத்தூரிலேயே தங்கிவிடுவது எனவும், அவரின் பராமரிப்புச் செலவுக்காக மகன் ஒரு பெருந்தொகையை சேத்தூராருக்குத் தருவதெனவும் முடிவானது.
சமாதானப் பேச்சுக்கள் இவ்வாறு சுமூகமாக முடிந்ததை அடுத்து சேத்தூரார் கட்டுக்காவல்களைத் தளர்த்தினார். தம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் ஒரு விருந்து வைத்தார். அதில் மதுவும் பறிமாறப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்டப்பொம்மன் ஆட்கள் சேத்தூராருக்குத் தரப்பட்ட மதுவில் இரகசியமாக மயக்க மருந்தைக் கலந்து விட்டனர். சிறிது நேரத்தில் அவர் நினைவிழந்தார். அவரை அந்த நிலையிலேயே மூட்டையில் சுருட்டிக்கட்டி தங்கள் இடத்திற்குக் கொண்டுபோக கட்டப்பொம்மன் குழுவினர் தயாரானார்கள்.
சற்றுநேரத்திற்கெல்லாம் நினைவு திரும்பிய சேத்தூரார் நிலைமையை உணர்ந்தார். திகிலடைந்து கூக்குரல் எழுப்பினார். சேத்தூர் வீரர்கள் ஓடிவரத் துவங்கினர். நிலமை கைமீறி விட்டது. யோசிக்கவில்லை. உருவிய வாளை சேத்தூராரின் நெஞ்சில் பாய்ச்சினான் கட்டப்பொம்மன். அபயக்குரல் கேட்டு ஓடிவந்த அவரின் மனைவியையும் பிள்ளைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. ஒரே நீதி!
போகிற போக்கில் கையோடு கிவகிரிக் கிழவரையும் தூக்கிக்கொண்டு வந்திருந்தனர் கட்டப்பொம்மன் குழுவினர். அவர் சிவகிரிச் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் கிடந்த கிழவருக்கு வேறு வழி புலப்படவில்லை. ஆங்கிலேயரின் உதவியை நாட முடிவெடுத்தார். நடந்த அனைத்தையும் கடிதமாக எழுதி ரகசியமாக திருநெல்வேலி கலெக்டர் டோரினுக்கு அனுப்பி வைத்தார். கடிதம் கண்ட டோரின், கர்னல் மாக்ஸ்வெல்லை சேத்தூருக்கு அனுப்பி வைத்தான்.
சேத்தூர் வந்து சேர்ந்த மாக்ஸ்வெல்லுக்கு உண்மை தெரிந்து விட்டது. ஏற்கனவே எட்டையபுரத்தானுடனான எல்லைப் பிரச்சினையில் தன் சொல்லை எடுத்தெறிந்து கட்டப்பொம்மன் நடந்துகொண்ட விதம் வேறு ஆழ்மனதில் வஞ்சினமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தன்மீது என்ன நடவடிக்கை வந்தாலும் பரவாயில்லை. பொம்மனை தெறிக்க விடுவது என முடிவெடுத்தான்.
ஒரு துப்பாக்கிப்படை, சில பீரங்கிகளுடன் கர்னல் மாக்ஸ்வெல்லின் படை சிவகிரி நோக்கிப் புறப்பட்டது. ஆங்கிலேயப்படை தற்சமயம் பாளையங்களுடன் போர்நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது என நம்பியிருந்த கட்டப்பொம்மனுக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது. தன்னை நம்பியிருந்த சிவகிரியார் மகனை அம்போவென விட்டுவிட்டு தன் படைகளுடன் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி சிட்டாய்ப் பறந்து விட்டான்.
கட்டப்பொம்மன் கம்பிநீட்டிய விபரம் தெரிந்தவுடன் சிவகிரியார் மகனுக்கு கால்களுக்கிடையே மழை பெய்யத் துவங்கியது. ஐயகோ.. ஓடிவிட்டானா? பொம்மன் இருந்த தைரியத்தில்தானே இவ்வளவு துனிகரச் செயலில் இறங்கினேன். அது சரி, எங்கே அந்த மாப்பிள்ளை வன்னியனும், சங்கரலிங்கம் பிள்ளையும்? அவர்கள் இருவரும் கட்டப்பொம்மனுக்கு முன்னமே பறந்திருந்தார்கள். எல்லாத் திசையிலும் கைவிடப்பட்ட சிவகிரியார் மகனும் பின்னங்கால் பிடரியிலடிக்க ஓட்டமெடுத்தான்.
இப்படி எல்லாரும் ஓட்டமெடுக்க எந்தவித எதிர்ப்பும் இன்றி சிவகிரியைக் கைப்பற்றினான் மாக்ஸ்வெல். சிறையில் கிடந்த கிழவரை விடுவித்து பாளையக்கார் ஆக்கினான். அவரும் ஆங்கிலேயருடன் ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்.
சிவகிரி பாளையத்தை ஆங்கிலேயருக்கு நட்பாக்கி விட்டதுதான் இந்த விடயத்தில் கட்டப்பொம்மன் செய்த மாபெரும் சாதனை. சும்மா கிடந்த மணியை ஆட்டிக் கெடுத்த கதை! ஆனால், வடுகர்களிடம் கட்டப்பொம்மனைப் பற்றிக் கேட்டால் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனாக ஒன்பது முழத்திற்கு நீட்டி முழக்கி கதையளப்பார்கள். சுதந்திரத்திற்காக எதிர்த்து நின்று போரிட்டான் என வரலாற்றில் எங்காவது காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். அத்தனையும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடந்த போராட்டம்!
சிவகிரி விடயத்திற்குப் பிறகு நடந்தது இன்னும் சுவாரசியமானவை. மாப்பிள்ளை வன்னியனுக்கும், சங்கரலிங்கம் பிள்ளைக்கும் எந்தப் பாளையமும் புகலிடம் அளிக்கக் கூடாதென கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தான். கட்டப்பொம்மன் பெத்த பாளையக்காரன் என்பதால் கலெக்டரும், மேலிடமும் நடவடிக்கை எடுக்கக் கோரி அறிக்கை அனுப்பினான்.
கட்டப்பொம்மனுக்கு ஆட்டம் கண்டது. நேராக திருநெல்வேலிக்கு ஓடினான். கலெக்டரிடம் வேலைபார்த்த தன் கம்பளத்து நாயக்கனைச் சந்தித்து கதறினான். “எப்படியாவது இந்த விடயத்தில் காப்பாற்றி விடு. சேத்தூர், சிவகிரி விடயங்களில் என்பெயரை இழுக்காமல் இருந்தால் கலெக்டருக்கே பெருந்தொகை தர தயாராக இருக்கிறேன்.”!
இதற்கிடையில் ஊற்றுமலையில் ஒளிந்திருந்த சங்கரலிங்கம் பிள்ளையை மாக்ஸ்வெல்லின் ஆட்கள் கட்டித் தூக்கி வந்து விட்டிருந்தனர். ஏமி ஜக்கம்மா.. இது என்ன சோதனை? சங்கரலிங்கம் பிள்ளை எல்லாவற்றையும் வாக்குமூலம் அளித்து விட்டால் என்னாவது? மறுபடியும் கலெக்டரிடம் வேலைபார்த்த அந்த கம்பளத்து நாயக்கனை தேடி ஓடினான். கலெக்டரிடம் ‘டீலிங்’ பேச தூது அனுப்பினான்.
இந்த விவகாரம் மாக்ஸ்வெல்லுக்கு அவனது உளவாட்கள் மூலம் எட்டி விட்டது. நடந்த அனைத்தையும் சென்னையில் இருந்த ஆங்கிலேய மேலிடத்துக்கு அப்படியே போட்டுக் கொடுத்து விட்டான். மேலும், இந்த விடயத்தில் அந்த கம்பளத்து நாயக்கன் ஆலோசனைப் படியே டோரின் செயல்படுவதாகவும் ரகசிய அறிக்கையையும் அனுப்பி இருந்தான். கட்டப்பொம்மனின் நன்பனும் கலெக்டரிடம் வேலை பார்த்தவனுமாகிய அந்த கம்பளத்து நாயக்கன் கைது செய்யப் பட்டான்.
கலெக்டர் டோரினுக்கு இது பெருத்த அவமானமாகப் போய் விட்டது. ராஜினாமா செய்ய முடிவெடுத்தான். அவ்வாறு செய்யும் முன்பு மாக்ஸ்வெல் மீது இருந்த ஆத்திரத்தில் கட்டப்பொம்மன் சம்மந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் அழித்து விட்டான்.
அதனால் அப்போதைக்கு அந்த விவகாரத்திலிருந்து தப்பித்தான்!
தங்கசாமி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, நல்லதொரு பதிவு தொடருங்கள் தங்கள் சேவையை.விக்கிபிடியாவில் உதுபொன்று உண்மை நிலவரங்கள் பதிவேற்றம் காண வேண்டும்.உண்மை ஒரு நாள் வெல்லும்…..
படக்கதை இயக்குனரோ …நல்ல படமாக வர வாழ்த்துக்கள் ..ஆனால் தமிழ் கதாநாயகி தமிழ் கதாநாயகன் முழுக்க தமிழ் நடிகர்கள் என்றால் ஒகே போடலாம் 10 கோடி போதுமா ?
கட்டப் பொம்மன் மட்டப் பொம்மன் ஆகி விட்டானோ? வரலாறு திரிக்கப் பட்ட கதையே கட்ட பொம்மனின் கதை. இப்படி எவ்வளவோ தமிழ் நாட்டில்
ஆக மொத்தத்தில் கட்டபொம்முலு ஒரு பொட்டபொம்முலு! ம்ம்ம்…. ஜக்கம்மா பொக்கம்மா என்று வந்தேறிகள் இனியும் எமது தலையில் மிளகாய் அரைக்க முடியாது! நன்றி தங்கசாமி அவர்களே!
‘தமிழே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனே தமிழுக்கு தூகுக் கயிறாம்’
அருமையான கருத்து .. இன்றைய இளம்தலைமுறைக்கு புதிய ஒருதகலவை பகிர்ந்தமைக்கு நன்றி தங்கசாமி ..
மென்மேலும் தாங்கள் இப்பகுதியில் தமிழர் வரலாற்று செய்திகளை பகிருங்கள் ..தன் வரலாறு அறியாத இனம் வாழ்ந்ததாக சரித்திரமில்லை .. தமிழர் வரலாற்றோடு சேர்த்து வடுக வரலாற்றையும் நாம் அறியவேண்டும் ..அடுத்தவர் வரலாறு எமக்கு தேவை இல்லாதது என்று கருதுவோமானால் வெற்றியின் இறுதி கணத்தில் வீழ்த்தபடுவோம்.. நம் முன்னோர்கள் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை நாம் அறியவேண்டும்
Singam! உண்மை சுடுதா? எங்க வரலாற்றை சுட்ட வந்தேறிகளுக்கு இனி தினமும் சூடுதான்……. ‘தமிழே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனுக்கும் தமிழே உயிர்கயிறாம்’ (lifeline).
டப்பாங்குத்து! உங்கள் கருத்துக்கள் எப்படியோ, பெயரையும் அப்படியே வைத்துக் கொண்டீரே, Brilliant டப்பாங்குத்து!