பொங்கல் தமிழர்களுக்கு ஒரு கலச்சார விழா. தைப்பூசம் அது ஒருவித கலப்பு சமய விழா. தீபாவளி வடநாட்டவர் விழா. இப்போது வடநாட்டவர்கள் தீபாவளியிலிருந்து விலகி நிற்கின்றனர். ஹிந்துத்துவா ஹிந்துக்கள் எண்ணில் அடங்கா பெயர் சொல்ல முடியாத அளவுக்கு நாள் காட்டியில் மூன்நூற்று அறுபத்து ஐந்து நாட்களும் ஏதாவது ஒரு வைபவம் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த அளவுக்கு சமய வித்வான்கள் சோதிடத்தை கிரக மண்டல ஆய்வுகளை நிமிர்த்தி நிலை நாட்டிய ஒரே மதம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியல் வாதிகளின் விழாவாக தமிழர் மற்றும் ஹிந்துத்துவா விழாக்கள் பத்திரிக்கைகளை வண்ண வண்ண அலங்கரிப்பில் கோலமிடுகிறது. ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் விழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் கொடி தூக்கும் அரசியல் வாதிகளை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது.
இவர்களுக்கு இந்தியர்களின் விழாவும், பண்டிகையும் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் ஒரு ஜாடியாகும்.. இதற்கு அல்லது இவர்களுக்கு ஒட்டி, ஓடி, கொடி பிடித்து பதாதை ஏந்தும் வட்டார அரசியல் குட்டி பீமர்கள் ஏதோ ஒருவகை வருவாயில் சமாளிக்கிறார்கள்.
நமது கலாச்சாரத்தோடு ஒட்டி உறவாடும் இவர்களை பெருமையாக பார்ப்பதா அல்லது அரசியல் சந்தர்ப்ப சகுனிகளாக பார்ப்பதா ? நம் மலேசியாவில் விழாக்கள் ஓர் அழகு என்றாலும் நம் அரசியல் விதியை நினைத்தால் கதி கலங்குகிறது. ஒரு மாண்புமிகுவிடம் ஒரு இரண்டாயிரம் வெள்ளி வாங்கி விட்டு அரசியல் சீடர்கள் படும் பாட்டை வேதனையோடு பார்க்கிறோம்.
அவருக்கு ஒரு மேடை ,மாலை. அவருடன் வரும் இன்னும் அரசியல் புத்துயிர் தோழர்களுக்கு மாலைகள். ஒளி/ ஒலி பெருக்கிகள் வீட்டிலுள்ள பாமர பெண்களுக்கு தெருவில் பொங்கு சோறு பொங்கல் போட்டி. “இங்கே பாமர மக்கள் என்பதை கவனிக்கவும்” அரசியல் வாதிகள் முதலீடு என்பது இதற்கு நான் கூறும் தத்துவம். அடிமட்ட மக்களின் உரிமைக்கும் உணர்வுகளுக்கும் உதவாத அரசியல் பேடிகள் அன்று மட்டும் வாடகை வசப்பு வாக்கியங்களை பரிசாக உதிர்ந்து விட்டு அத்தோடு கதவை பூட்டி ” வைபி தடா” என்ற கதவு பட்டை பல்லிலிக்கும் சோகத்தை பார்க்க கொடுத்து வைதுருப்போம்.
அரசு மானியம தருகிறது. விழாவுக்கு பாதி. மிஞ்சியது மோப்பம் என்ற வேட்டைக்காக விழாக்கள் கோலமிட கலை இரவுகள் ஓலமிட
அரைமணி நேரத்தில் வைபீ பறந்து விடுவார். நம்ம ஊர் தலைவர் ஓடி ஆடி அலங்கோலமா விநியோக வாடிக்கைகாரகளுக்கு கடன் சொல்லிக்கொண்டு வியர்த்து மிரலுவார்.
இந்த சமுதாயத்தை தூக்கி நிறுத்த வந்த சமூகத தலைவர்கள் அடுத்த பொங்கலுக்குள் பொங்குஸ். அந்த வைபீ வேறொரு புதிய ஆசாமியிடம் அடுத்த தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவார். ஏழைகளுக்கு சாதாரண சமுக நல நிதிகளை கூட பெற முடியாத இவர்கள் சட்ட சபையையும் நாடாளுமன்றத்தையும் மாற்ற முயல்வது ஆமை மேல் ஏறி முயல் சவாரி செய்யும் யுக்தியாக உள்ளது. இதையும் வேடிக்கை பார்க்கும் கூட்டமாக இந்தியர்களும், இந்துத்துவாகக்களும், தமிழர்களும் அரோகரா போடுவது எதற்கு?
இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு பிரதமரும் வரவில்லை ! சிலாங்கூர் மாநில முதல்வரும் வரவில்லை ! காரணம் பாதுகாப்பு
காரணம் என்ற பதில் வந்தது. நாட்டின் பாதுக்காப்பு மீது யாருக்கு முதலில் நம்பிக்கை வர வேண்டும் என்று என் தாத்தாவிடம் கேட்டேன் .அவர் சிரித்துகொன்டே நீயும் போவாதடா என்றார். நான் அதையும் மீறி தமிழேண்டா என்று சொல்ல நினைத்தேன்.
ஆனால் தைப்பூசம் நிறைவாக நடந்து முடிந்தலில் நமக்கு மகிழ்ச்சிதான். என்றாலும் சிலாங்கூர் மாநில விழா, தைப்பூசம் ஒரு தேசிய விழா சிலாங்கூர் மாநிலம் பத்துமலை திடலில் கலை நிகழ்ச்சியை நடத்தாமல் வீதி ஓரம். மேல் வீதிக்கு கீழே நடத்துவது
என்ன நியாயம் ?
சிலாங்கூர் மாநில அல்லது தேசிய சுற்றுலாத்துறை ஒரு தேசிய சமய விழாவின் கலை நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற வரைமுறை இல்லையா ? சிலாங்கூர் மாநில ஏழை பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் சமய விழாவுக்கு தலைமை தாங்கும் பச்சத்தில் மாநில சுற்றுலா ஆட்சிக்குழு எலிசபெத் ஓங்கை உறுப்பினரை உசுப்பிப பார்த்தேன். இவர் சீனர் பெருனாளுக்கும், புத்தர் விழாவுக்கும் பொறுப்பாம். ..நாம் கேற்கும் ஒரு தேசிய இன்னும் சொன்னால் உலக விழாவுக்கு 2மில்லியன் மக்கள் கூடும் சமய விழாவுக்கு என்ன அந்தஸ்தை சிலாங்கூர் மாநிலம் அல்லது சுற்றுலா துறை தந்துள்ளது என்ற சின்ன வினாவோடு…. அரசியல் வாதிகள் மக்கள் உரிமை அறிந்து விழாவுக்கு பெருமை சேர்க்க வரணும். இங்கே அரசியல் தெருவிளையாடல் வேண்டாம். மரியாதையாக அடுத்த ஆண்டு தைப்பூச கலை இரவை பத்துமலை உள்ளே உள்ள திடல் மைதானத்தில் மாநில சுற்றுலா துறை நடத்த வேண்டும் . இல்லையேல் ஆட்சிக்குழுவில் இருந்து விலகவும். இதே கோரிக்கையை நடுவண் சுற்றுலா அமைச்சுக்கும் பணிக்கிறோம். இரண்டு அரசுகள் அரசியல் விளையாட்டில் நம் சமயத்தை உரசி பார்க்க வேண்டாம். நாங்கள் வேடிக்கையும் பார்ப்பபோம் வேட்டும் வைப்போம்.
பொன் ரங்கன்
தமிழர் குரல் சிலாங்கூர்
என்னா கலைநிகழ்சி ! ஒரே காவாலி நிகழ்சிதான் ஓடுது !
digi/மக்சிஸ் எவனுக்கோ சம்பாதித்து கொடுக்க காட்டு கத்து கத்துகிறானுவ.
இந்த காட்டு கூச்சலும் கத்தலுக்கும் முருகன் காதே செவிடாகிடும்டோய் ..
அன்பாய் உள்ளமுருகி பாடினால் நிச்சயம் முருகன் துணைவருவான் ..
கலியுக வாழ்க்கையில் முருகனை மனதார உள்ளமுருகி அன்புகொள்பவர்களை கைவிடமாட்டார் முருகன்
கடந்த தைபூசம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, நன்பர் ஒருவர் இனைய புலனத்தில் ஒரு செய்தி அனுப்பினார். “பசிக்குப் பாலகன் ஏங்க கற்சிலைக்குப் பால் ஊற்றும்” மூடாந்திர மனிதர்கள் குழாமில் நானிருக்க வேண்டுமா? என்று கேட்டு ஒரு வசனம் எழுதி இருந்தார். எமக்குக் கன்னத்தில் பளார் என்று அறைந்தது போல் இருந்தது. எளிமையான வழிபாடு முறைகளை நால்வர் பெருமக்கள் காட்டி இருந்தும், வறுமை பாராது செலவழித்து விழா கொண்டாடும் இம்மாக்களை திருத்துவது எங்ஙனம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் தருவாயில் இக்கட்டுரை வந்திருக்கின்றது. 21-ம் நூற்றாண்டிர்க்கு வந்து விட்டோம். இன்னும் இந்த கலை நிகழ்ச்சிக் கலாச்சாரம் நம்மை விட்டுப் போகவில்லை. ஒரிரு பக்திப் பாடல்களைப் பாடி விட்டு அப்புறம் குத்தாட்டும் போடும் கலை நிகழ்ச்சி நமக்குத் தேவையா? இதற்கு சிலாங்கூர் அரசாங்கம் பணம் செலவழிக்க வேண்டுமா? எப்படி முருகனுக்கு திருவிழா பணி செய்ய வேண்டும் என்று கணபதி ராவ் பகதூருக்கு தெரியாதா? முருகனுக்குப் பக்தி மழை பொழிவதிலும் கோவிலுக்கும் மாநில அரசாங்கத்திற்கு இடையில் அரசியலா? முருகனுக்கு அரோகரா!
தை மாதத்தில் முருகனுக்கு ஒரு பூசம் . அவன் பேரை பயன்படுத்தி பலபல வேசங்கள் . பணம் அல்லும் நுணுக்கங்கள் . மோசடிகள் . பக்திக்கும் பங்கம் விளைவிக்கும் அதிகார ஜாம்பவான்கள் .
பத்துமலை ……
தமிழன் குமரன் மலை !!
இங்கே …..
வைணவத்தை ….!!!
கோலோசிய…
கூ…… த்…….தரசன் ..
வாழ்க பல்லாண்டு !!!!
…
இந்தியர்களின் விழாவும், பண்டிகையும் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் ஒரு ஜாடியாகும் என்று நண்பர் திரு பொன் ரங்கன் எழுதியுள்ளார். இப்பொழுது ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் சேர்ந்து அல்லவா தைப்பூசத் திருவிழாவை அரசியல் விழாவாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். பினாங்கில், இது இந்து அறவாரியம் மூலமாக முன்னெடுக்கப் பட்டுள்ளது. சிலாங்கூரில் இன்னும் அறவாரியம் அமைக்கப் படவில்லை. அப்படி ஒரு அறவாரியம் படைத்து இந்து சங்கத்திடம் ஒப்படைத்தால் நல்ல வேடிக்கையாக இருக்கும். பினாங்கில் நடக்கும் கூத்து இங்கும் நடக்க ஆரம்பித்து விடும். ராவ் பகதூர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மடராஜாவை நோண்டி நுங்கு எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை மடராஜா!
தைபூசத்திற்கு பொது விடுமுறையளிப்பது போல் தமிழ்ப்புத்தாண்டுக்கும் விடுமுறை வழங்க தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ஆரம்பிசிங்க்டிங்க்களா உங்கள் இந்துவாவாத எதிர்ப்பு பேரணியை? அப்படினா இனிமேல் உதயசங்கர் s .a போன்றவர்கள், மலாய்கார நாட்டில் எதற்க்கடா தமிழ் பள்ளி என்று கேட்டாலும், ஆச்சிரிய படுவதற்க்கில்லை. காரணம் இந்தியர்கள் வெறும் 7% மட்டும் இருக்கும் ஒரு நாட்டில், எதற்கு தமிழன், தெலுங்கன், மலையாளி, அவன் இவன் என்ற பேதம் ? இனிமேல் தமிழர்கள் இந்து மதத்தை தொடர்வதில் இருந்து விலகி மற்ற மதத்திற்கு சென்றாலும், கேள்வி கேட்ட முடுயாது. அவ்வளவு உட்கட்சி பூசல். அதில் பெட்ரோல் ஊத்த ஒரு பிரிவினர், டீசியல் ஊத்த ஒரு பிரிவினர், கிருஷ்ணா மண்ணெண்ணெய் ஒரு பிரிவினர்….. திருந்தவே மாட்டானுங்க…..
இங்கே கருத்துக்கள் பகிர்வது நல்லெண்ணத்தில். நம்மிடம் இருக்கும் குறைகளைக் களைவதுதான் நோக்கம். அதைவிடுத்து குறைகளை மூடி மறைத்து தொடர்ந்து அறியாமையில் வாழ்வதற்கு அல்ல. 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்.
குறைகளைக் களைவது நோக்கமா தெரில,, இப்படிதான் முன்னாளில் கன்னட நாயி அறியாமைன்னு . சொல்லி நம்மளை பிரிச்சி தமிழனை தெருவுக்கு கொண்டு வந்தான் . என்னோமோ இவங்களுக்கு மாட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி……அவன் தொண்டர்கள் தமிழனை ஒரு வழிபண்ணாமா விடமாட்டாங்கள்… சிவ சிவ
அப்படி போடுங்க தேனீ என்று யோசிக்கும் இந்த சமுதாயம் வங்காள காரன் வரப்போகிறான் ,நாம் திருவிழா குத்து கசேரி பழைய நிலையில் தான் பவனி வந்துக்கொண்டிருக்கின்றோம் கொஞ்சம் சிந்திங்கள் மக்களே மாற்றங்களை நாம் கொண்டு வரவில்லை என்றால் மாற்றங்கள் நம்மை ஓரங்கட்டி விடும் அப்புறம் நாம் பெ பெ …..தான்
பொன் ரங்கன் அவர்களே எந்த அரசியலும் நம்மை ஏமாற்ற வில்லை ,நாமே தான் ஏமாந்து போயி கொண்டு இருக்கோம்
முருகன் தமிழ் கடவுள் என்று வாய் கிழிய கூறும் மானமுள்ள தமிழர்களே …..முதலில் முருகனுக்கு தமிழில் மட்டும் அர்ச்சனை செய்ய முடியுமா ? கேவலமாக இல்லையா ? தமிழ் கடவுளுக்கு ஏன் தமிழில் அர்ச்சனை இல்லை ? முருகனுக்கு தமிழ் புரியாதோ ? மழுப்பல் எல்லாம் வேண்டாம் . தமிழில் மட்டும் அர்ச்சனை செய்ய முடியுமா ? அதோடு பார்பனனை எதிர்க்க தையிரியம் இல்லாதவன் சாதி பற்றி பேச அருகதை அற்றவன் …….
மேலே கூறிய கருத்துகள் அனைத்தும் வரவேர்ககூடியவையே நம் மலேசியாவில் மூல முடக்கலாம் மன்றங்களும் சங்கங்களும் இருந்து என்ன பயன்! அரசாங்கதிடம்மிருந்து மானியங்கள் பெறுவதிலே மும்முரமாக இருக்கிறார்களே ஒழிய வேறு என்ன செய்ய முடியும் வாழ்க வளர்க உங்களுடைய சங்கங்களும் மன்றங்களும்