பிரித்தானிய நாட்டிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அந்நாட்டை சேர்ந்த 4 பேரை, ஜூனியர் ஜிகாதிகான் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொலை செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரேஷ்(24) என்ற பெண்மணி கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நாட்டை விட்டு வெளியேறி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு பிறந்த Isa Dare என்ற சிறுவன் ஐஎஸ் அமைப்பில் ஜூனியர் ஜிகாதியாக உருவெடுத்துள்ளான்.
இந்நிலையில், பிரித்தானிய நாட்டிற்கு உளவு வேலை பார்த்த 4 பேரை காருக்குள் அமர வைத்து அவர்களை கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், முதலில் ஜூனியர் ஜிகாதிஜான் தோன்றி, நம்பிக்கையற்றவர்களை கொல்ல வேண்டும் எனக்கூறுகிறான், அதன் பின்னர் அவன் அருகில் நிற்கும் மற்றொரு ஜிகாதிஜான், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன், உளவு வேலை பார்ப்பதற்காக தனது நாட்டை சேர்ந்தவர்களை சிரியாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
ஆனால், நம்பிக்கையற்ற அவர்களை வெடிகுண்டு வைத்து கொலைசெய்யப்போகிறோம், எனவே உங்கள் நாட்டு ராணுவத்தை தயார்படுத்திக்கொள்ளுங்கள், நாங்களும் எங்கள் அமைப்பை தயார்படுத்திக்கொள்கிறோம். நாம் Caliphate – ல் சந்திப்போம் எனக்கூறுகிறார்.
அதன்பின்னர், அந்த ஜூனியர் ஜிகாதிஜான் தனது கையில் இருக்கும் ரிமோட்டின் பொத்தானை அமுத்தி, காரினை வெடிக்கச்செய்கிறார், பின்னர் அரேபிய மொழியில் ஒரு பாடலுடன் வீடியோ நிறைவடைகிறது.
-http://world.lankasri.com