தமிழ் மொழி வேண்டாம். ஆனால், திருட்டுத் தேங்காய் உடைப்பதற்கு தமிழ்- இந்துக் கடவுள்கள் வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் கோமாளிக் கொள்கை என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட அரசகரும மொழிக்கொள்கை தொடர்பான அறிவுறுத்தல் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசன் கூறியுள்ளதாவது, “தேசிய மொழி பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது கையில் உள்ள குருவியாகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான கொள்கை என்பது மரத்தில் உள்ள குருவியாகும். எனது கையில் மூன்று குருவிகள் உள்ளன. ஒன்று, அரசகரும மொழி ஆணைக்குழு ஆகும். இரண்டாவது அரச கரும மொழி திணைக்களம் ஆகும். மூன்றாவது தேசிய மொழி பயிலகம் ஆகும். இந்த மூன்றும் என் கையில் உள்ள மூன்று குருவிகள் ஆகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான குருவி மரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி இன்னமும் தெளிவில்லை.
ஆகவே, முதலில் கையில் இருக்கும் குருவியை பயன்படுத்துவோம். அதை பயன்படுத்த முடியாவிட்டால் மரத்தில் இருப்பதாக சொல்லப்படும் குருவியை பற்றி பேசிப்பயனில்லை. அதாவது மொழியுரிமை கொள்கையை அமுல் செய்து தமிழ்மொழி பேசும் மகளின் இதயங்களை வெல்ல வேண்டும். 5 மாதங்களுக்கு முன் எனக்கு இந்த அமைச்சு கிடைத்தபோது இந்த அமைச்சு ஒரு செயற்படாத அமைச்சாகத்தான் கிடைத்தது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்த அமைச்சுக்கு ஒரு அமைச்சர் இருக்கவில்லை. நான் இங்கே வந்து இப்போது மெதுவாக இந்த அமைச்சை உருமாற்றிக்கொண்டு இருக்கின்றேன். இதன் பலாபலன்கள் விரைவில் தெரியவரும்.
கடந்த காலங்களில் தமிழ் பிரதேச மேடைகளில் ஏறி சில வசனங்களை தமிழ் மொழியில் பேசியவர்கள் இன்று தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தை எதிர்க்கிறார்கள். அதாவது தமிழ் மொழி பாவனையை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் இந்து கடவுள்களான விஷ்ணுவையும், காளியம்மனையும் தேடிச்சென்று தேங்காய் அடிக்கிறார்கள். அதுவும் திருட்டு தேங்காய் உடைக்கிறார்கள். அதாவது தமிழ் மொழி வேண்டாம், தமிழ் கடவுளர்கள் வேண்டும் என்பது இவர்களது கொள்கை. என்ன, கோமாளி கொள்கையோ, அந்த விஷ்ணுவுக்கும், காளியம்மனுக்கும்தான் வெளிச்சம்.
இந்த நாட்டில் இப்போது, இந்த கொழும்பு பிரதேச செயலக பிரிவு உட்பட 41 உதவி பிரதேச செயலக பிரிவுகள், இருமொழி பிரதேச செயலக பிரிவுகளாக சட்டப்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை விரைவில் 72 ஆக உயர்த்த உள்ளேன். இந்த பிரிவுகளில் பணி புரிய எதிர்காலத்தில் நியமனம் பெரும் அனைத்து அரச பணியாளர்களும் இரு மொழி தகைமை இருந்தால் மட்டுமே வேலைக்கு அமர்தப்பட வேண்டும் என்ற ஒரு அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்பிக்க உள்ளேன். அதன்பிறகு ஒரு மொழி அறிவு கொண்டவர்களை விட, இருமொழி கற்றவர்களுக்கு இந்த பிரதேச செயலக பிரிவுகளில் அரசு பணி நியமனம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
எனது அமைச்சின் கீழ் வரும் தேசிய மொழி பயிலகத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் பற்றுவிக்கும் ஒரு தேசிய மொழி கல்லூரியாக தரமுயர்த்த முடிவு செய்துள்ளேன். இந்த பிரதேச செயலக பிரிவுகளில் நியமனம் பெரும் சிங்களம் பேசுவோர் தமிழையும், தமிழ் பேசுவோர் சிங்களத்தையும் கற்று இருக்க வேண்டும். இப்போது இருப்பது போல் அரச பணிக்கு வந்த பிறகு இரண்டாம் மொழி கற்கும் விளையாட்டு வேண்டாம். அரச பணி நியமனம் கிடைத்து விட்டால் அப்புறம் மொழியை படிப்பதில் இந்த அரச பணியாளர்கள் பெரும் அக்கறை காட்டுவதில்லை. இதை நான் இப்போது தேடியறிந்துள்ளேன். ” என்றுள்ளார்.
-http://www.puthinamnews.com
இதுகூட உமக்குதேரியல நீ எல்லாம் என்னய்யா அரசியல் பண்ணுற …
அவன் சிங்கள வேசம்போட்ட தெலுங்கன் ..அவன் மட்டுமில்ல இலங்கையை அதிகார பிடிக்குள் வைத்திருக்கும் அம்புட்டுபேரும் தெலுங்கு மனவாடுக்கள் .. அதிகாரம்போருந்திய புத்த மடாலயங்கள் நாயக்கே மவவாடுகள் வசம் ..
இலங்கையில் தெலுங்கர் ஆட்சி !
யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பினில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும், யாழ்.இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க..
சரியான நேரம்பார்த்து 2009 முள்ளியவைக்காளில் இந்திய தெலுங்கர்கள் உதவியோடு சிங்களவன் போர்வைபோர்த்திய தெளுங்கர்களால் கோராமாக தமிழினத்தை அழித்து வீழ்த்தினார்கள் ..
2009 பிறகு மெதுவாக தெலுங்கு அடையாளங்கள் புதுபிக்க படுகிறது அதாரம் https://www.youtube.com/watch?v=D4WPe0j6TJY
அடுத்து ஆந்திராவில் சந்திரபாவு நாஇடுவால் 20 சித்திரவதை செய்து கொன்று உடல்களை வீசினார்கள் …
இப்போ தமிழகத்தில் இன அழிப்புக்கு அங்குள்ள வடுக தெளுங்கர்களால் களம் அமைக்கிறார்கள் .. அனைத்து இந்தியர்களையும் தமிழர்களுக்கு எதிராக எதிரியாக கட்டமைக்கிறார்கள் ..தாலி அறுப்பு /மாட்டுக்கறி விருந்து /ஆரிய எதிர்ப்பு /நாத்திகம் /அனைத்துக்கும் வடுக தலைமைகள் …
அதேபோல் இந்து மத காவலர்கள் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்களையும் வடுகர்களே அதிகம் !
60 ஆண்டுகலாக நாத்திகம் கடவுள் மறுப்பு என்றுசொல்லி தமிழர்களின் அறிவியல் பொக்கிஷம்களான ஆலயங்களை தெலுங்கு பார்பனர்களிடத்தில் கைமாற்றி விட்ட கயவர்கூட்டம் …
ஆலய வருமானங்கள் எல்லாம் தமிழகத்தில் வடுக ஆட்சி நிலைத்து நிக்க பயன்படுத்த படுகிறது மக்களே …
தமிழ் இனம் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதால் வடுக இனவெறி அடக்குமுறை தொடர்கிறது ..