வடகொரியா வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ!

north_video_001வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் தங்கள் நாட்டின் அணு ஆயுத தாக்குதல் இலக்கின்கீழ் வாஷிங்டன் இருப்பதாக கூறி ‘கடைசி வாய்ப்பு’ என்ற பிரச்சார வீடியோ ஒன்றை வட கொரியா வெளியிட்டு உள்ளது.

4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அமெரிக்க- கொரியா உறவுகளின் வரலாறு காண்பிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நம்மை நோக்கி ஒரு அங்குலம் நகர்ந்தாலும் உடனடியாக அவர்களை அணு ஆயுதம்மூலம் தாக்குவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com

https://youtu.be/DbOYRLlhIP4