வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகள் மேம்பாட்டுக்கு துணை நிற்க அழைக்கிறோம்.
உலக அரங்கில் தமிழர்கள் இணையும் தலமாக, களமாக தமிழர்களின் உலக அங்கீகாரம் கோர்வையில் இணைய வேண்டுகிறோம்.
தமிழர் தாய், தந்தை வழித்தோன்றல் அல்லது இரண்டில் ஒருவராவது தமிழராக இருத்தல் அவசியம். மத சார்புகளற்ற அவரரவர் மதம் சமயம் பேணும்
தமிழர்கள் அல்லது நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம். மொழியால் இனத்தால் இதரவர்கள் தாங்கள் தங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்யும் எந்த இதவர்களும் தமிழர் தேசியத்தில் இணைய வேண்டாம்.
பல கலப்பு கசப்பு அனுபவங்களுக்குப்பின் இந்த 21 ம் நூற்றாண்டில் உலகத் தமிழர்கள் எடுத்துள்ள முடிவு அடுத்த தலைமுறை தமிழர் இனம், நாடு ,மண் உரிமையில் ஜனநாயகம் தழைக்க உங்கள் இனம்மான உணர்வுகள் தேவை கருதி தமிழர் தேசியப்பேரவையில் இணையும் படி அழைக்கிறோம் தமிழர் தேசியம் எனும் உலகளவு பதிவுக்கு பணியாற்ற அழைக்கிறோம்.
தகவல் தந்து தகவல் பெருவதுடன் தமிழர் தேசியம் இணைப்பில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாபுகழும் தரும்.
வள்ளுவர் கண்ட அறமும் ,கம்பன் கண்ட தமிழ் கனாவும் ..பாரதி கண்ட இனக்கனா,பிரபாகரன் கண்ட தமிழர் தேசியம் , தமிழர் நாடும் -தமிழ் ஈழமும் நம் மண்ணுரிமை என்றே எழுவோம். இணைய [email protected]என்ற மின்னஞ்சல் வழி 25/ 6/2016 குள் இணையவும்.
தமிழர்கள் வீரமும் அறமும் பாதுக்காப்புடன் வென்றாக வேண்டும். எனும் உங்கள் கனா நிஜமாகும்.
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
இவண்
உங்கள் தமிழர் சேவையில் என்றும்
தமிழர்த்திரு. பொன் ரங்கன்
செயலர், மலேசியத்தமிழர் தேசியப்பேரவை
நாளது 12/5/2016 கோலாலம்பூர்
மலேசியா 016 694422
‘நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம்’ அப்படினா என்ன ?
‘நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம்’ இதை கொஞ்சம் விளக்க முடியுமா ?
எனக்கும் கொம்சம் சொன்னால் நல்லது.
நாத்திகம் என்பது சமயமற்ற / ஆதித தமிழர்கள் பழங்கால தமிழர்கள் சேரலாம் ஆனால் திராவிட கலப்பில் உள்ள தமிழர்கள் முடியாது. என்று பொருள் தம்பிகளா > நன்றி. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்.
ஆதிதமிழர் மீதும் சந்தேகமா ? கிழிந்தது உங்கள் தத்துவம் !
சங்கத்தில் சேர ,என்ன விதிமுறை ?
தமிழர்கள் ,தமிழை ….எழுத ,படிக்க ,பேச தெரிந்து இருக்க வேண்டுமா ?அல்லது
ஆங்கிலம் ,மலாய் மட்டும் படித்த ,படிக்கிற தமிழர்கள் அங்கத்தினர் ஆக முடியுமா/அதாவது தமிழ் மொழியை எழுத ,படிக்க தெரியாத தமிழர்கள் …..
திராவிட கலப்பு என்றால் என்ன ?
(தமிழர் தாய், தந்தை வழித்தோன்றல் அல்லது இரண்டில் ஒருவராவது தமிழராக இருத்தல் அவசியம்) அப்ப தாய் தந்தையில் ஒருத்தர் சீனராகவோ வேற்று இனத்தவராகவோ இருக்கலாம் ஆனால் தெலுங்கு மலயாளியாய் இருக்க கூடாது அப்படிதானே.. தமிழ் நாட்டு அரசியலை முழுக்க முன்னிறுத்தி இங்கு காரியம் சாதிக்க முடியாது. தமிழ் பற்று உள்ள தெலுங்கு மலையாள வம்சாவளியில் வந்தவர்கள் இங்கு அதிகம். அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், மலேசியாவில் தமிழ் பற்று உள்ள அறிஞர்கள் அதிகம் ஆக அனைவரையும் கலந்தாலோசித்து மிக சரியாக முடிவெடுக்க வேண்டும்.. தன்மூப்பாக தன் மண்டையில் உதித்ததை மட்டும் முன்னிறுத்தி பொதுவில் பேச கூடாது.. சுய விளம்பரம் தேட ஆயிரம் வழிகள் உண்டு …
தமிழில் அடுக்குமொழி பேச தெரிந்த தெலுங்கர்களை வரவேற்கிறோம் செலாங்கோர் .. ஓகே வா! ?
எங்கள் தோட்டத்தில் ,தமிழர்,மலயாளி,தெலுங்கர் ,சீனர் ,மலாய் ,தமிழ்மொழியால் உறவு கொண்டோம் .இங்கு பெரும்பான்மை தமிழர் கள் .தமிழ் கல்வி கற்றோம் தாய்மொழியாக .மொழியால் உறவு கொண்டோம் .என் தாய்மொழி (மலயாளம் )மறந்தோம் /மறுக்க பட்டோம் .மலேசியா இந்தியனாய் /தமிழனாய் வாழ்ந்த வாழ்க்கை ,நம் மலேசியா இந்தியர்களுக்கு /தமிழர்க்கு இடையில் பிரிவினை வளர்க்க படுகிறதா இல்லை விதைக்க படுகிறதா?
பிரிவினையால் பிரிவோம் .(.தமிழர் எழுச்சிப்பறை)வாழ்க தமிழர்கள் ….
என்னைப்பொருத்தமட்டில் யார் தன்னை உண்மையிலேயே தமிழ் பற்று உள்ளவர் என்றும் தமிழுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்றும் தமிழர்களுடன் கலந்தவர்கள் என்றும் இருந்தால் நாம் ஏற்று கொள்ள வேண்டும். ஆனால் நமக்கு குழி பறிப்போரை அடையாளம் கொள்ள வேண்டும். இது 21 நூற்றாண்டு–நாம் குறிகிய பார்வையில் இருக்கக்கூடாது. நம்மவர்கள் உலக அளவில் பரந்து இருக்கின்றனர்– ஐரோப்பாவிலும் மற்ற வெளி நாடுகளிலும் இருக்கின்றனர்– அவர்கள் ஓரம் கட்டப்பட்டால் அது சரி இல்லை- ஆதலின் நாம் பரந்த மனப்பார்வையில் இருப்பது அவசியம் -அத்துடன் நமது முதல் தேவை-நம்முடைய ஒற்றுமை.
அனைவருக்கும் வணக்கம் , பொன் ரங்கன் அவர்களே ,தமிழ் தேசியத்தில் இணைவோர் .பிறப்பால் தமிழராக இருத்தல் அவசியம் .ஆனால் தாயோ அல்லது தந்தையோ யாராவது ஒருவர் இருப்பது ஏற்புடையது அல்ல . தந்தை வழிதான் இனத்தின் தலை முறை .ஆகவே தமிழர் தேசியத்தில் இணைபவர்களின் பெற்றோர் இருவருமே தமிழராக இருப்பது அல்லது அவர்தம் தந்தை தமிழராக இருப்பதே மிக அவசியம் , ஓர் இனத்தின் தலைமுறை தாயின் வழி அல்ல . மலேசியாவில் மலையாளிகளும் ,தெலுங்கர்களும் தமிழ் தேசியத்தில் இணையலாம் என்றால் முதலில் ,அவர்களை தமது இனம் சார்ந்த சங்கத்தை கலைக்க சொல்லுங்கள் (மலேசிய மலையாளி சங்கன் மற்றும் தெலுங்கு சங்கம் ). இப்படி கண்ட திரிவடுகர் எனும் திராவிடர்களை (தெலுங்கன் ,கன்னடன் ,மலையாளி என எல்லோரையும் உள்ளே விட்டு இப்பொழுது அவர்களிடம் கையேந்தும் நிலை தமிழ் நாட்டில் உருவான காரணம் இப்படித்தான். (எம்ஜிஆர் எனும் மலையாளி ,அண்ணாதுரை , கருநாய் நிதி எனும் தெலுங்கர்கள் மற்றும் தற்போதைய ஜெயலலிதா எனும் கன்னட பிராமனச்சி தமிழ் மாட்டை ஆண்டது . தமிழா விழித்துக் கொள்.அன்பர்களே நம் மலேசிய நாட்டு இந்தியர்களில் 86% தமிழ் இனத்தவர்கள் என மறந்து விடாதீர்கள் .வரன் அவர்களே நீங்கள் அவசியம் உணர வேண்டும் .
அண்ணன் கோவிந்தசாமி உதையாவிடார் நச்சுன்னு சொல்லிட்டாரு….
மலேசியா மண் தமிழ் தெலுங்கர் மலையாளியை ஒரு சேர கலந்துவிட்ட மண். எல்லாரும் ஒன்றிணைந்து ஒரு தாய் மக்களாக ஆகி பல நூற்றாண்டுகளாக ஆகி விட்டது. ஏதோ தெலுங்கு மலையாள அமைப்பில் உறுப்பினராக உள்ள சிறுபான்மை மக்களை முன்னிறுத்தி ஒட்டு மொத்த இனத்தையும் எடைபோடுவது அறிவார்ந்த மக்களின் செயல்ஆகாது. தமிழ் தாய்தகப்பனுக்கு பிறந்து தமிழ் பள்ளியை புறக்கணித்து தமிழ் மொழியை புறக்கணித்து மேற்கத்திய மோகத்தில் திளைக்கும் தமிழர்களை நீங்கள் வலிந்து தமிழர்களாக ஏற்றுகொள்வீர்கள். ஆனால் தமிழ் பள்ளியில் படித்து தமிழ் இன மொழி பற்றோடு இருக்கும் தெலுங்கு மலையாள மக்களை தமிழர்களாக ஏற்று கொள்ள மாட்டீர்கள். ஒருவன் தமிழனா திராவிடனா என்பதை அவன் பிறப்பு முடிவு செய்ய முடியாது. அவன் எந்த இனத்தின் மீதோ மொழியின் மீதோ பற்று வைத்துள்ளானோ அதுதான் முடிவு செய்ய முடியும். அதனால் சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி ஏதோ நான் தமிழனா பொறந்துட்டேன் தமிழுக்கும் தமிழர்க்கும் சேவை செய்ய போறேன்னு கிளம்பி வந்துடாதிங்க. திரும்பவும் சொல்றேன்..தமிழ் நாட்டு அரசியலை முழுக்க முன்னிறுத்தி இங்கு காரியம் சாதிக்க முடியாது. தமிழ் பற்று உள்ள தெலுங்கு மலையாள வம்சாவளியில் வந்தவர்கள் இங்கு அதிகம்..
வரன் அவர்களே ,நான் தமிழ் நாட்டு அரசியலை இங்கே கொண்டு வர கருத்துக் கூறவில்லை .தமிழ் நாட்டு தமிழைனை போல் ,தன மானம் இழந்து ,ஆட்சியை இழந்து ,தமிழ் கலாச்சாரத்தையும் இழப்பது போல் நம் நாட்டிலும் வருங்கால தமிழ் சந்ததியை நிர்கதியாய் வைக்க வேண்டாம் என்பதுதான் என்னுடைய குறிக்கோள் .நண்பர் வரன் அவர்களே நம் நாட்டிலும் தமிழ் மொழியை கற்ற பிற இனத்தவரும் உண்டு என நான் அறிவேன் ,அதிலும் நிறைய தமிழர் அல்லாதோர் தமிழை கற்று தமிழ் பள்ளி ஆசிரியர்/ ஆசிரியை ஆகவும் ,சிலர் தலைமை ஆசிரியர் ஆகவும் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகவும் உள்ளனர் .இவர்கள் தமிழ் பற்றினால் தமிழை படித்தார்கள் என எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள் ? .தமிழை படித்தால் அரசாங்க பணி மற்றும் அரசியல் துறையில் உயரலாம்,தமிழனையும் ஆளலாம் என அவர்களுக்கு தெரியும் .தமிழனுக்கு மட்டும்தான் தெரியாது .இன்னொரு முக்கிய தகவல் அரசாங்க பணியில்(கல்வி,தகவல் ,அரசியல் துறை) உள்ள தமிழர் அல்லாத இந்தியர்கள் பலர் அவர்களின் தாய் மொழி (தெலுங்கு ,மலையாளம்)இயக்கத்தில் உறுப்பினர்களாகவும் முக்கிய பங்காற்றுகின்றனர்(மலேசிய மலையாள சங்கம் ,மலேசிய தெலுங்கர் சங்கம்) .இதை நீங்கள் அறிவீர்களா ?அவர்கள் தமிழ் பற்று உள்ளவர்கள் என்றால் ஏன் அவர்களது இயக்கத்தில் சேவையாற்ற வேண்டும் ? மலேசிய தமிழர்கள் நடத்திய ஈழ தமிழர் இன அழிப்புக்கு எதிரான போராட்ட நிகழ்வுக்கு எத்தனை மாலையாலிகள் சங்கம் எத்தனை தெலுங்கு சங்கம் முன்வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர் என உங்கலால் கூற ந\முடியுமா
?அவர்கள் தமிழை கற்றது தன சுய முன்னேற்றத்திற்காக மட்டுமே .வரன் அவர்களே நீங்ககள் தமிழர் அல்லாத மற்றவர்களுக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்களே ,நீங்கள் தெலுங்கு அல்லது மலையாளியோ ? அல்லது உங்கள் வாழ்க்கை துணைவியார் தமிழர் அல்லாதவரோ? .ஐயா வரன் அவர்களே தமிழ் தாய்தகப்பனுக்கு பிறந்து தமிழ் பள்ளியை புறக்கணித்து தமிழ் மொழியை புறக்கணித்து மேற்கத்திய மோகத்தில் திளைக்கும் தமிழர்களை நீங்கள் வலிந்து தமிழர்களாக ஏற்றுகொள்வீர்கள். ஆனால் தமிழ் பள்ளியில் படித்து தமிழ் இன மொழி பற்றோடு இருக்கும் தெலுங்கு மலையாள மக்களை தமிழர்களாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என கேட்டீர்கள் .பதில் இதோ ,நம் நாட்டில் தமிழை ஆர்வமாக படித்த மலாய் ,சீன நண்பர்களும் உள்ளனர் தமிழ் பற்று உள்ள காரணத்தால் அவர்களை தமிழர் அமைப்பின் உறுப்பினர் ஆகவோ தலைவராகவோ நீங்கள் ஏற்றுக் கொள்வீரா ? மலேசிய தமிழர்களே கவனம்! கவனம் !!!.இன்னொரு முக்கிய வரலாற்று தகவல்ஒன்றை இங்கே பதிவிடுகிறேன் ,மலேசிய நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த போது மலேசிய தோட்டப்புற தமிழர்களுக்காக (பிரிட்டிஷ் மலாயா ஆட்சி காலத்தில் தோட்டபுரத்தில் வாழ்ந்தவர்கள் 95% தமிழர்களே ).அக்காலகட்டத்தில் போராடி உயிர் நீத்த இரு தமிழர்களை அனைவரும் மறந்தோம் (எஸ் எ கணபதி மற்றும் வீரசேனன் அவர்கள் ).ஆனால் தற்போது தோட்டப்புற வரலாற்றை பற்றி படிக்கும் போது தோட்டப்புற தமிழர்களை விற்ற தமிழர் அல்லாத ஒரு தலைவனை தான் போற்றுகின்றனர் .தமிழர்களே “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .” ..தமிழன் அல்லாதவர்களை நண்பர்களாக ஏற்ப்போம் ,தயவு செய்து தமிழனுக்கு தலைவனாக தமிழனை மட்டும் ஏற்போம் .வேண்டுமென்றால் மஇகா ,பிபிபி மற்றும் இதர இந்திய அரசியல் அமைப்புகளுக்கு அவர்கள் தலைமை தாங்கட்டும் .
நண்பர்களே நான் மலேசிய மலையாளிகள் மற்றும் தெலுங்கர்கள் தமிழை கற்பதையோ ,அரசாங்க பணிகளில் இருப்பதையோ நான் குறை கூற வில்லை,அவர்களை ஆதரிக்கிறேன் .ஆனால் தமிழர் அமைப்புக்கு தமிழர் அல்லாதோர் உறுப்பினராகவோ அல்லது தலைமை தாங்குவதைதான் வேண்டாம் என்கிறேன்.நண்பர் வரன் தந்த ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தின் காரணமாக நிறைய எழுத வைத்துள்ளது நன்றி .
மலேசியாவில் நிறைய தமிழ் சங்கங்கள் இருக்கின்றன .பத்தாதிற்கு
சில ஊர்களில் பல தமிழ் சங்கங்கள் .முதன்முதலி ல் இந்த தமிழ் சங்கங்கள் யாவும் ஒன்றிணைந்து மலேசிய தமிழ் சங்கம் என்னும் ஒருகுடையின் கீழ் இயங்க வேண்டும் .அதன் செயல்கள் தமிழினத்தின்
ஒற்றுமையையும் உயர்வையும் நோக்கி நடைபோட வேண்டும் . தனிமனித துதிக்கு அங்கு இடமில்லை .
பொன் ரங்கன் அவர்களே உங்கள் கைபேசி எண் முழுமையாக இல்லையே !!
இயக்கத்தின் பெயர் ” மலேசியத்தமிழர் தேசியப்பேரவை” என்று தானே உள்ளது பிறகு யார் சேரலாம் என்ற கேள்வி எதற்கு ? மலேசிய இந்திய தேசியப்பேரவை என்று ஒரு இயக்கம் வரும் பொழுது அனைவரும் சேரலாமே !
மலையாள மற்றும் தெலுங்கு சங்கங்களில் சேர எந்த தமிழராவது கேட்கிறோமா அப்படியே கேட்டாலும் செர்பார்களா ?
தாய் மொழி உணர்வு என்பது அந்த மொழியிலே பிரப்பனவனுக்கே இயற்கையாக வரும் , மற்ற மொழி காரனுக்கு கண்டிப்பாக வராது ..
ஒரு மொழியை பேசுவதாலோ , எழுதுவதலோ , படிப்பதலோ அல்லது மிகவும் விரும்புவதாலோ அது அவரின் தாய் மொழியாகாது. எனக்கு எவ்வளுவுதான் மலாய் மொழியில் புலமை இருந்தாலும் , அதன் மீது மிகவும் பற்று இருந்தாலும் , அதை தவிர வேறு எந்த மொழியும் தெரியாவிட்டாலும் நான் மலைய்காரன் ஆகமுடியாது . மலாக்காவில் எப்படி மலாக்கா செட்டி மற்றும் பாபா ந்யோன்யா? அவர்கள் மலைய்காரர்களா ?
மற்றவர்கள் அருகூர்ந்து புரிந்து கொள்ளவும் .
வரனுக்கு இன்னும் மொழி இனமான உணர்வுகள் போதா ? தமிழ் படித்தால் போதாது. தமிழனோடு வாழனும். உலக மனித மரபணுவில் 90% தமிழனுடையது. அதன் தொன்மைக்கு தமிழனுக்கு தனி உரிமை வேண்டும். என் தொடர்பு என் 016 6944223 ஈமெயில். [email protected]
தமிழன் தமிழன் சரியாக சொன்னீர்கள் .இராம தண்ணீர்மலை அவர்களே ,நீங்கள் கூறியது போல் மலேசியாவில் நிறைய தமிழ் மொழி சார்ந்த இயக்கங்கள் உள்ளது ஆனால் செயல் பாட்டில் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருக்கின்றனர் .ஆதலால் உலக தமிழர்களோடு ஒன்றிணைந்து செயலாற்ற ஒரு மாபெரும் ஒரு வலைத்தளம் தேவை .அதுதான் பொன் ரன்கள் அவர்கள் முன் வைத்த தமிழ் தேசியம் .
காலத்திற்கேற்ப ,தமிழர்களுக்கு சரியான பாதையை நோக்கி செல்ல ஒரு வழி என்றால் அது தமிழர் தேசியமே .பொன் ரங்கன் அவற்களுக்கு வாழ்த்துக்கள் .
தமிழக அரசியல் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். “வெளிநாட்டுத் தமிழர் தமிழ் நாட்டை நம்பி வாழ வேண்டாம்”. நம்ம ஊரில் இருக்கும் தமிழன் தலை நிமிர்ந்து நடக்க வழிகோளினாலே நமக்கு பெரிய வெற்றி. ஒன்றுபட்டு வாழ்ந்தால் உண்டு வாழ்வு.
ஐயா தேனீ அவர்களே ,தமிழ் நாட்டின் அரசியலை மாற்ற,தமிழால்தான் முடியும் ,தமிழ் மொழியின்,சிறப்பால் ,வளத்தால் ,வீரியத்தால் .தமிழனால் முடியாது காரணம் ,தமிழ்நாட்டில் சுய தமிழன் இல்லை. .திராவிட தமிழன் வாழ்கிறான் .
குமரி கண்டத்தில் ,ஆழி பேரலையால் அழிந்து விட்டான் ,சுய தமிழன் .
ஏங்க நீங்க வேர சும்மா கடுப்பேற்றிக் கொண்டிருகிண்றீர்கள். இங்கே நமக்கு இருக்கும் மொழிப் பற்றுக் கூட அங்கே இருக்கும் தமிழருக்கு இல்லை. நடுத்தர மற்றும் வசதிப் படைத்த வர்க்கத்தினர் தன் பிள்ளை ஆங்கிலப் பள்ளியில் படித்து தமிழ் படிக்காமலேயே பட்டம் வாங்கி கை நிறைய காசு சம்பாரிக்கும் வேலை செய்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் மக்களா தமிழ் மொழியை முன்னிறுத்தி மாறப் போகின்றார்கள்? அதெல்லாம் ஒன்றும் இல்லை. இங்கே காலவோட்டத்தில் நமது மொழி காணாமல் போய் விடுமோ என்று அச்சம் கொண்டு அதனை காக்க முயற்சிக்கின்றோம். அங்கே இத்தமிழ் மொழி அழிந்தால் நமக்கென்ன என்று வாழுகின்றார்கள். அப்புறம் எதற்கு அவர்களைப் பற்றிப் பேச வேண்டும். முதலில் நமது வீட்டை சரிபடுத்தி வைத்துக் கொள்வோம். பின்னர் அடுத்தவர் வீட்டை சுத்தம் செய்யப் பார்ப்போம்.
தவறான கட்டுரை . தவறான இயக்கம்
மொழியையும் இனத்தையும் இணைத்துப் பார்க்க இயலாது. தமிழ் நாட்டில் மொழியின் பெயரால் இனம் ஆளப்படுகிறது. அந்நிலை இங்கு வரக்கூடாது என்பது கட்டுரையாளரின் நோக்கம் எனக் கருதுகிறேன்.
இங்கே நீயும் தவறானவன்தான்,உன்னை எவன் இங்கே வர சொன்னா?
மன்னரே ” மன்னன் ” இப்படி மொட்டையா உங்கள் உங்கள் ஊடக ஊனத்தை காட்ட வேண்டாம் ! தமிழர் தேசியப்பேரவை என்ற இயக்கம் சரி இல்லை என்று சொல்ல நீங்கள் என்ன இயக்கங்களின் பதிவதிகாரி வித்வானா >? அல்லது அதன் கட்டுரை உங்களுக்கு வில்லங்கமா விளங்காமல் இருந்தால் என் செலவில் மேடை போட்டு விவாதிக்கலாம், ஒரு வேளை திராவிட அறிவு ஊனர்களைப்போல தமிழர் தேசியத்தை வளர விடமாட்டோம் என்ற கொழுப்பா ? வாழ்வாதாரம் குடும்பம் குட்டி கூத்து எல்லாம் தமிழ், தமிழினம் வழி..தமிழர் தேசியம் என்றால் எங்கு வலிக்குது ? திராவிடனின் மொழிதான் என்ன?
பொன் ரங்கன்
இடைக்கால செயலர்
மலேசியா தமிழர் தேசியப்பேரவை
மலேசிய தெலுங்கர் சங்கம், மலையாளி சங்கம், சீக்கியர் சங்கம், குஜாராத்தியர் சங்கம் என்றெல்லாம் இருக்கும் பொழுது, மலேசிய தமிழர் தேசியப்பேரவை தோன்றுவதில் தவறென்ன?
மலேசிய இந்துசங்க தலைவர் பதவிக்கு போட்டி ..
நடப்பு தலைவரான தெலுங்கரை எதிர்த்து மற்றுமொரு தெலுங்கர் போட்டி ! நாங்க அப்பவே சொல்லல ! இனிமேல் தமிழனுக்கு தலைவர் பதவி எட்டாக்கனி ..
தமிழர்களை பல வழிபாடுகள் ஊடாக துண்டுதுண்டாக உடைத்து தமிழரல்லாதார் தலைமைகளில் இயங்கும் வழிபாட்டு முறைகள் பலத்திலும் சிதரடிக்கபட்டு சைவசமயம் சிதைபட்டுகொண்டு செல்கிறது … இப்போ புதுசா எதோ ஹிந்து இலன்சர்கள் மாநாடாம் ! ஆர் எஸ் எஸ் கிளை அமைக்கபோரானுங்கபோல !.ஹிந்து சங்க இணையதலத்தில்கூட ஆரிய மற்றும் தெலுங்கர் சாமியாரு விளம்பரங்கள் ! தமிழ் சித்தர்கள் நாயன்மார்களின் பதிவுகளை மழுங்கடித்து தமிழருக்கு சம்பந்தமே இல்லாத போதனைகள் !
http://www.hindusangam.org.my/pages.php?id=556
தேனி! நீங்கள் சொல்லுகின்ற சங்கங்கள் எல்லாம் அவர்கள் சமுகத்திற்கு எதையாவது செய்யத்தானே செய்கிறார்கள். பொன் ரங்கன் ஏற்கனவே தூயத்தமிழர் சங்கம் ஆரம்பித்திருப்பதாக அவர் மூலமே நாம் தெரிந்து கொண்டோம். இப்போது இன்னொன்றா? சங்கம் அமைத்து என்னச் செய்யப்போகிறார்? தமிழக முதலைமச்சருக்குக் கடிதம் எழுதத் தெரிந்தவருக்கு இங்குள்ள பிரச்சனைகள் கண்ணுக்குத் தெரியவில்லையே! உலக ரீதியிலேயே சிந்திப்பவருக்குத் தேசியப்பேரவையின் மூலம் என்ன சாதிக்கப்போகிறார்! ஏற்கனவே ஏகப்பட்ட தமிழர் சங்கங்கள். இருப்பதை வைத்து என்ன நல்லதைச் செய்யலாம் என்று யோசியுங்கள்! தெலுங்கு சங்கத்திலோ, கேரள சமாஜத்திலோ தூய தெலுங்கர்கள் அல்லது தூய மலையாளிகள் என்று யார் உங்களுக்குச் சொன்னது? அங்கும் தமிழன் இருக்கிறான்! தமிழச்சி இருக்கிறாள்! மலாய்க்காரச்சி இருக்கிறாள்! அவர்கள் கூட்டத்திற்குப் போனாலே அதைத் தெரிந்து கொள்ளலாமே! இதிலென்ன சிதம்பர ரகசியம்! ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்! ஒரே வித்தியாசம். அவனுக்கு ஆடத்தெரியும்! நமக்குப் பார்க்கத் தெரியும்!
அடிப்படை,துணை அடிப்படை கட்டமைப்பு என்பது நிர்வாகத்தினரின் தூரநோக்கு விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது தேரை அண்ணா! இதெற்கெல்லாம் கொஞ்சம் அனுபவமும் தேவை…நீங்கள் கூறியதுபோல் இங்கு பல அமைப்புகள் இருக்கின்றன,அதில் தமிழரும் அங்கம் வகிக்கின்றனர் ஆனால் அவர்கள் ஆதிக்கத்தில் எதுவும் இல்லை! உதாரணத்திற்கு உங்கள் வீட்டை நான் உரிமை கோரினால் சும்மா விடுவீர்களா? இன்றுவரை இந்நாட்டில் தமிழருக்கென தனி தலமைத்துவம் இல்லை.இருந்திருந்தால் தேர்தல் காலங்களில் அரிசிக்கும் பருப்புக்கும் கையேந்தி நிற்பானா? நம்ம இனத்துக்கு நாம
நல்லது செய்ய முடியலைனாலும் பரவாயில்லை செய்யறவங்களுக்கு துணையா இருப்போமே….
சமீபத்தில் மலையாளிகள் சங்கம் அவர்தம் பிள்ளைகளுக்காக கல்விநிதியைப் பெருக்க பெரிய விருந்து ஒன்றை வைத்தனர். அதுபோல தமிழர் இயக்கங்களை இணைக்கும் ஒரு பேரவை நம் நாட்டில் இருந்தால் நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், நம் பொருளாதார வளர்ச்சிக்கும், சமய பண்பாட்டு வளர்ச்சிக்கும் வேண்டிய காரியங்களைச் செய்யலாமே. பேரவை என்பது பல இயக்கங்களின் கூட்டுக் குழுவாகும். இதன் அமைப்பு முறை சாதாரண சங்கம் என்பதைப் போல் அல்லாமல் இயக்கங்கள் வழி உறுப்பினர ஆகுதலாகும். அதனால் தமிழர் சார்ந்த பல இயக்கங்களையும் ஒரு குடையில் கீழ் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.
தமிழன் கோவில் கட்டி அதனை பிறர் ஆள வைப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம். இதன் காரணமென்ன? தமிழரில் 98% அவர்தம் சமய நெறி அறியார். மலேசியாவில் இண்டிய வம்சாவழியினரில் தமிழர் 90% இருக்க, இந்து சங்கத் தலைமை தமிழர் அல்லாதவர் ஆட்சி செய்ய காரணமென்ன? கீழ்மட்டத்தில் உள்ளவர் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது. தேசிய ஆட்சிக் குழுவில் உள்ளவரே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதுவும் பத்து மலை தேவஸ்தானம் போன்று ‘monopoly’ குடும்பமாகி விட்டது. அதனால்தான் தமக்கு சாதகமாவரை வைத்துக் கொண்டு வேண்டாதவரையும், கேள்விக் கேட்போரையும் கனகட்சிதமாக படிப்படியாக வெளியேறுமாறும், பொறுப்பில் இருந்த காலம் முடிய ஆட்சிக் குழுவில் மறுநியமனம் செய்யாமலும் வெளியேற்றப்பட்டனர். இப்படி அந்த கம்பெனியில் நடக்கும்பொழுது அதன் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படும் தமிழர் அறிவாளியாக இருப்பாரா? இல்லையென்றால், சித்திரை முதல் நாளை தெலுங்கு மக்களும் மலையாளிகளும் புத்தாண்டாக கொண்டாடாமல் இருக்க அதனை தமிழர் புத்தாண்டு என்று கூறுவாரா அதன் தலைவர்! ஏன் இப்படி நடக்கின்றது? தமிழர் நலம் காக்க தனி இயக்கம் இல்லை இந்நாட்டில். அந்த இடத்தை மலேசிய தமிழர் தேசியப் பேரவை நிரப்பும் என்று நம்புவோம்.
நான் தமிழனா தமிழ் பற்று உள்ளவனா தமிழ் தாய் தந்தைக்கு பிறந்தவனா தமிழ் துணைவியை திருமணம் புரிந்தவனா என்பதின் விளக்கத்திற்கு அவசரமும் இல்லை அவசியமும் இல்லை. நான் தெலுங்கு பற்றோடும் மலையாலப்பற்றோடும் இருக்கும் தெலுங்கரையோ மலயாளியய்யோ தமிழர் தேசியப் பேரவையில் சேர்க்க வேண்டும் என்று கூற வில்லை. பிறப்பால் தெலுங்கராகவோ மலையாளியாகவோ இருந்து தம் தாய்மொழி அறியாமல் தமிழையே தன் உயிர் மூச்சாக நினைத்து வாழும் அன்பர்களை நீங்கள் எப்படி தமிழர் இல்லை என்று புறக்கனிப்பீர்கள். என் நண்பர் ஒருவர் அவர் மலையாள தாய் தகப்பனுக்கு பிறந்தவர் படித்தது வளர்ந்தது எல்லாம் தமிழில்தான் அவர் பெயருடன் குட்டி என்ற பெயரும் சேர்ந்து வரும். அதீத தமிழ் பற்றால் தன மகனுக்கு தமிழ்செல்வன் எற்ற பெயர் சூட்டி உள்ளார் வேறு எந்த துணை பெயரும் அல்லாமல். இது இப்படி இருக்க தமிழ் தாய் தகப்பனுக்கு பிறந்து, தமிழ் பெயர் மறுத்து ஆரியப் பெயர் சூட்டி, தமிழ் பள்ளியை புறக்கணித்து மலாய் ஆங்கில பள்ளியில் படித்து வளரும் முண்டங்களை நீங்கள் வலிந்து தமிழர்களாக ஏற்று கொள்வீர்கள். ஆனால் உண்மையோடும் பற்றோடும் இருக்கும் அன்பர்களை நீங்கள் தமிழர்களாக ஏற்று கொள்ள மாட்டிர்கள். அடுத்த தலைமுறையில் என் நண்பனின் மகன் தமிழன். ஆனால் தமிழ் மொழி மறுத்து பெயர் மறுத்து வளரும் தமிழ் முண்டங்கள் அடுத்த தலைமுறையில் நாதி அற்றவர்கள். உங்களில் எத்துனை பேர் தொன்று தொட்டு தமிழர்கள் என்று நிரூபிக்க முடியும். நமது மூதாதையரின் வழியில் நாம் வந்து கொண்டிருக்கிறோம். நமது பயணத்தின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். இன்று தமிழை மறுப்பவன் நாளை மறக்கப்படுவான். இன்று தமிழை நேசிப்பவன் நாளை மதிக்கப்படுவான். நீ தமிழன் இங்க வா.. நீ தெலுங்கன் அங்க போன்னு.. வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்துடாதிங்க.. நாளை உங்கள் தலைமுறையே கேள்விக்குறியான ஒன்றுதான்..
இந்துமதம் நம்மை அறியாமல் தமிழினத்தை கூறுபோடுகிறது .பல்வேறு தெய்வங்களின் பக்தர்களாக நம்மவர் பிரிந்து கிடக்கின்றனர் .
அவற்றை வழிபடுவதில் தவறில்லை .ஆனால் நாம் அனைவரும் ஒரே சொற்களை இறைவனிடம் கூறுவதன் வழி ஒன்றுபட வழி உண்டு என நம்புகிறேன் .நாம் ஒன்ற்படுவதன் மூலம் மற்றவர் நம் தலையில் ஏறி நிற்பதை தவிர்க்க முடியும்.
தமிழனின் மதம் எது ? தமிழனின் கடவுள் யார் ? அவனின் வழிப்பாட்டு முறை என்ன ? தமிழன் கட்டிய கோவில்கள் எல்லாம் எதற்காக ஏன் கட்டப்பட்டது?..தமிழன் கிருத்தவனாகவோ முஸ்லிமாகவோ இருக்க கூடாதா?இந்து சங்கம் தமிழனின் சங்கமா ? அதற்கு எவன் போட்டி போட்டால் என்ன ?………………………………………………………………………………………………………………………………
“நீ தமிழன் இங்க வா.. நீ தெலுங்கன் அங்க போன்னு.. வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்துடாதிங்க.”. அறிவுரை தமிழர்களுக்கு மட்டும்தானா? நான் தெலுங்கர், நான் மலையாளி, நான் சீக்கியர் என்று கூறிக் கொண்டு போய் விட்டவருக்கு அறிவுரை இல்லையா? இப்படியெல்லாம் தமிழருக்கு அறிவுரை கூறி தமிழரை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் ஆக்கியது போதும். இனியாவது தமிழர் அவர்தம் நிலை அறிந்து முன்னேற விடுங்கள்.
பொன் ரங்கரே, ஏன் இந்த பதற்றம்!! நீங்கள் தமிழுக்காக ஆற்றும் பங்கை யாம் கேலி செய்யவில்லை. அது உண்மையிலேயே வரவேற்க கூடியதே. ஆனால் நாம், தமிழர் என்பதற்காக மற்ற தமிழ் பேசும் நமது சக மனிதரை இப்படி கேவலமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ளத்தக்க இல்லை. ஒன்றை நீர் கவனித்திரா!! உமது பெயரிலேயே வடுகன் என்று சொல்வீர்களே அவரின் பெயரை தானே கொண்டு உள்ளீர். மேடை விவாதம் தேவை இல்லை நண்பரே. யாம் கூறுவதை நாராக புரிந்து கொண்டாலே போதுமே. நன்றி.
“தமிழனின் மதம் எது ? தமிழனின் கடவுள் யார் ? அவனின் வழிப்பாட்டு முறை என்ன”
வக்கணையாக தமிழரைப் பற்றி எழுத தெரிந்த மாப்பிள்ளைக்கு இதற்கு விளக்கம் தெரியாமல் போனது ஏன்?
இன்று மலேசியாவில் இருக்கும் 90% மேற்பட்ட கோயில்கள் சிவ ஆகமத்தில் விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட கோவில்களாகும். ஒரு கருவறை, அர்த்த மண்டபம், அதனையடுத்து ஆன்மாகிய வாகனம், பாசமாகிய (உலகியல் பற்று) பலிபீடம் அதற்குப் பின் கொடிக்கம்பம், மகாமண்டபம் என்னும் படிமுறையில் ஆலயம் அமைத்தாலே அது சைவக் கோவில் என்பது பொருள். சிவ ஆகமம் காட்டும் இறை நெறிக்குப் பெயர் சைவம் சமயம். அக்கோவில்களில் நடத்தப் படும், தினசரி பூசை, சிறப்புப் பூசை, திருவிழாக்கள் அனைத்துமே சிவ ஆகமத்தில் விதித்த விதிகளுக்கு ஏற்ப நடப்பன. அப்படியானால் தமிழர் தொன்று தொட்டு சைவ மரபில் வந்து வந்தவர் உண்மை என்று மாப்பிள்ளைக்கு அறிய முடியாமல் போனது ஏன்?. தமிழரின் சமயம் யாது, அதன் மூலம் எது என்று இதுவரையில் அறியாமையில் வாழ்ந்து விட்டோம் தமிழர். இனியாவது, சிவ ஆகமே நமது வேதம் (மெய்ஞான நூல்) என்பதை அறிந்து வாழ்வோமாக.
புலி கேசி நீர் சரியான புளித்த கேசரி . பொருள் விளங்காமல் கோபப்படுவதை தவிர்க்கவும். இல்லையேல் வடிவேலு 23ம் புளிகேசியாகி விடுவீர்.
“தமிழனின் கடவுள் யார் ? அவனின் வழிப்பாட்டு முறை என்ன?”
பெரும்பான்மையாக சைவ மரபில் வந்த தமிழருக்குப் பரம்பொருள் சிவபெருமான். அவன் குணத்தையே/பண்பையே சித்தாந்தம் திருவருளாக கொள்ளும். திருமேனி வழிபாட்டில், சிவனையும் அவனது திருவருளையும், சிவனாகவும் சக்தியாகவும் பார்ப்பது சைவ நெறி. இதை உணர்த்துவது சிவ ஆகமம். இப்பவாவது புரிந்ததா தமிழரின் பரம்பொருள் சிவனும் சக்தியும் என்பது. தமிழர் அறியாமையில் வாழ்ந்து விட்டோம். இனியாவது நமது சமய நெறிகளை அறிந்து வாழ்வோம்.
“தமிழன் கட்டிய கோவில்கள் எல்லாம் எதற்காக ஏன் கட்டப்பட்டது?.”
இப்படிபட்ட ஒரு மடத்தனமான கேள்வி தமிழனின் உணர்விலிருந்து வந்ததாக இருக்க முடியாது! இதைக்கூட அறிய இயலாமல் பொதுவில் கேள்வி கேட்பது அறிவிலித்தனமாகும்.
ஐயா வரன் அவர்களே,நீங்க சொல்றது எல்லாம் சரிதான்…..உங்க வீட்டு பத்திரத்திலும் நண்பர் குட்டியின் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள் யார் வேண்டாம்னு சொன்னா? உங்க ஒற்றுமையை நான் மதிக்கிறேன்,உங்க காலத்துக்கு பிறகு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!…தொடரும்
இந்து சங்கம் தமிழனின் சங்கமா ? அதற்கு எவன் போட்டி போட்டால் என்ன?
இந்து சங்கம் தமிழன் சங்கம் இல்லையென்றால் அக்கம்பெனி ஏன் தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாள் என்று பிரகனப்படுத்த வேண்டும்? இந்த கேள்வியை இந்து சங்கத்திடம் கேட்கத் தெரிந்திருக்க வேண்டும் மாப்பிள்ளைக்கு. அதை விடுத்து இங்கே கேட்பதில் அறிவுடமை இருக்கா? அந்த கம்பெனியில் தமிழரே அதிகமானோர் உறுப்பியத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாமையோரை சிறுபான்மையோர் ஆள இதுதான் சிறந்த வழியென்றால் அந்த கம்பெனியில் தமிழர் எதற்கு? சிறுபான்மையோரையே வைத்துக் குடுத்தனம் நடத்திக் கொள்ளலாமே! தமிழர் பெயரைக் கொண்டு அரசாங்க மானியம் பெற்று அதனால் பலனடைவோர் யார்? ‘Lembu punya susu sapi dapat nama.’
வரன் …(நான் தமிழனா தமிழ் பற்று உள்ளவனா தமிழ் தாய் தந்தைக்கு பிறந்தவனா தமிழ் துணைவியை திருமணம் புரிந்தவனா என்பதின் விளக்கத்திற்கு அவசரமும் இல்லை அவசியமும் இல்லை) இது ஒன்றே போதும் நீங்க தமிழன் இல்லைன்னு .. தமிழன் இல்லாதவன் எதுக்கு மலேசியத்தமிழர் தேசியப்பேரவை பற்றி பேசணும்? தமிழனை எப்படி சேர்க்கணும்னு பேரவை பார்த்துகொள்ளும். கண்ட இனத்துவனும் அறிவுரை சொல்லவேண்டாம். நீங்க எழுதியதை பார்த்தா அது உங்க நண்பன் இல்லை. நீங்கதான், உங்க குரோதம் தெரியுது..தூண்டி போட்டு பார்க்குறீங்க. மலயாளிக்கு பிறந்தவன் எப்படி அடுத்த தலைமுறையில் தமிழன் ஆவான்? யாரை ஏமாற்ற இந்த வேலை? இப்படிதான் தமிழன் ஏமாந்து போனான், நண்பன்னு சொல்லி தோளில் கை போட்டா எங்க தலையிலே கை வைக்குறிங்க.தமிழ் பற்றுன்னு இன்னும் எத்தனை நாளைக்கு தமிழன் முதுகில் சவாரி பண்ணுவீங்க? தெலுங்கனோ மலயாளியோ இங்கு அவன் மொழியில் பள்ளி இல்லை ,வேற வழியில்லாம தமிழ் படித்தான். அது மொழி பற்று இல்லை. தமிழில் படித்தால் தமிழனை சுலபமா ஏமாத்துலாம் இல்லையா உங்களை போல.. உங்களுக்கு தான் நிறைய சங்கம் இருக்கே ! அங்கே போகாலாமே! எதுக்கு இங்க வந்து குழப்பம் பண்றீங்க? தமிழனை ஒற்றுமையா இருக்க விடமாட்டீங்களே!அடுத்த உங்க கேள்வி, உங்களில் எத்தனை பேர் தொன்று தொட்டு தமிழர்கள் என்று நிரூபிக்க முடியும்? நான் தமிழன்னு எதுக்கு உங்களுக்கு நிருபிக்கணும்? அதுக்கு அவசரமும் இல்லை . அவசியமும் இல்லை அதுவும் மற்ற இனத்திருக்கு..
வரன் அவர்களே ! அருமையான கேள்வி !
தமிழன் கிருத்தவனாகவோ முஸ்லிமாகவோ இருக்க கூடாதா?
1975-ல் தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஒரே இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் (இந்து) குடும்பங்கள் மற்ற மதத்தை (கிருத்தவனாகவும்/முஸ்லிமாகவும்) தழுவினர். இதுதான் இந்தியாவை உலுக்கிய மாபெரும் மதமாற்றமாகும். அப்போதைய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி எதிர்க்கட்சியான ஜன சங் (தற்பொழுது பாரதிய ஜனதா) பிரதிநிதி வாஜ்பாயை இப்பிரச்சனைக்கு தீர்வு காணும்படி அனுப்பி வைத்தார். வாஜ்பாயும் 3 நாட்கள் மீனாட்சிபுரத்தில் தங்கி மதம் மாறிய அனைத்து குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதற்கிடையே அன்றைய தமிழன்/தமிழ் பற்று என்று பறைசாற்றி கொள்ளும் கூட்டம் (தற்போது உள்ள தமிழன்/தமிழ் பற்று கூட்டம்போல) பணத்திற்க்காகவும் பொருளுக்காகவும்தான் அந்த குடும்பங்கள் மதம் மாறினார்கள் என்று கூறினர். ஆனால் இந்த குடும்பங்களை சந்தித்தபின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வாஜ்பாய கூறியதாவது :
“மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத இந்த இனத்தில் இருந்து கொண்டு தமிழன்/இந்து என்று வாழ்வதைவிட மற்ற மதத்தை தழுவி தமிழனாக வாழ்வதே மேல்” என்று இந்த குடும்பங்கள் கூறுவதால், பணத்திற்க்காகவோ அல்லது மற்ற மதத்தினரின் மூளை சலவையினாலோ ஏற்பட்டதல்ல இந்த மத மாற்றம். இச்சம்பவத்திற்கு பிறகு வாஜ்பாய் ஹிந்துத்துவா கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
ஆகவே தமிழன் (இந்து) மதம் மாறினாலும் தான் ஒரு தமிழன் என்று கூறி கொள்ளும் உரிமை உள்ளது.
திருட்டு திராவிட மன்னா தமிழ் பேரவை பற்றி பேசுவதற்கு உனக்கு தகுதி இருக்கா? உன் இனத்தை பற்றி பேசுவதற்கு தெலுங்குச்சி இருக்கா,அங்கே பேசாலாம். உனக்கு அம்மா பாசம் ரொம்ப அதிகம். அதான் துடிக்கிற. நீ எந்த மேடைக்கும் வர மாட்ட.. ஏன் தெரியுமா? நீதான் தெலுங்கன் ஆச்சே..தவறான இயக்கம்னு சொல்ல நீ யாரு? எதுக்கு எங்க தமிழ் இயக்கத்துல தலையிடுற? உன்னை யாரு மாலை போட்டு அழைச்சா? தமிழன் இயக்கம் தொடங்க போறோம்னு சொன்னுதுதான் போதும் . இந்த தெலுங்கனும் மலையாளியும் எப்படி குதிக்குறானுங்?
ஸ்ரீகர முதல்வன்…. நீங்க சொன்னதில் பாதி உண்மை. கிருத்தவனாகவோ முஸ்லிமாகவோ மதம் மாறிவர்களில் ,பாதி பேர் திரும்பவும் இந்து மதத்திருக்கு மாறி விட்டார்கள். இன்னொன்று , முஸ்லிமாகவோ மதம் மாறியவர் தமிழனாக இருக்க மாட்டார். அவனுக்கு எப்போதும் தான் அராப்னு நினைப்பு. மலேசிவில் மலாய்காரனாக இருக்க நப்பாசை..