யார் அந்த “காட்டுப்பெருமாள்”? காலனித்துவ காலத்தில் தோட்டத்தில் பந்து விளையாடும் ஒரு தொழிலாளியின் அழகிய மகன் எப்படி ஆங்கிலேயர்களுக்கு மிரட்டலாக உருவாக்கப்பட்டான்? அடிபணிந்து வாழ்ந்த தொழிலாளர்களின் மத்தியில் இவன் எதனால் காட்டில் தலைமறைவானான்? யாருக்காக போராடினான்?
தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சியையும் முதலாளித்துவ அராஜகத்தையும் எதிர்த்து, துணிந்து நின்று போராடியவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து தோழர் தேவ் அந்தோனி ஆங்கிலத்தில் எழுதிய நூலை, கடந்தாண்டு மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) புத்தகமாக வெளியிட்டிருந்தது. அந்நூலை மேஜர் காளிதாஸ் தமிழாக்கம் செய்துள்ளார்.
காட்டுப் பெருமாள் – நூல் வெளியீடும் உழைக்கும் மக்களே அரசியல் மாற்றத்திற்கான சக்தி என்ற தலைப்பில் ஒரு கருத்துக்களமும் ஸ்கூடாயில் நடைபெறவுள்ளது.
மலேசியாவில் முதல் முறையாக ‘காட்டுப் பெருமாள்’ தமிழ்ப் புத்தக வெளியீடு ஸ்கூடாயில் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது:-
நாள் :- 09.07.2016 (சனிக்கிழமை)
நேரம் :- மாலை மணி 7.30
இடம் :- எண் 8ஏ, ஜாலான் ரொங்கேங் 11, தாமான் ஸ்கூடாய் பாரு, ஸ்கூடாய்,
ஜொகூர்பாரு (No.8A, Jln Ronggeng 11, Tmn Skudai Baru, Skudai , JB)
நூலாய்வு : தோழர் நாகேந்திரன் , பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினர்.
பி.எஸ்.எம். நூசாஜெயா கிளை ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்ச்சியி ல், ‘உழைக்கும் மக்களே அரசியல் மாற்றத்திற்கான சக்தி’ எனும் கருப்பொருளில் கருத்துக் களமும் நடைபெறவுள்ளது. அக்கருத்தரங்கின் விவரம் பின்வருமாறு :-
பேச்சாளர்கள் :
தோழர் நித்தியா, பி.எஸ்.எம். சிரம்பான் கிளைத் தலைவர்
தலைப்பு :- ‘சுதந்திரப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் பங்கு’
தோழர் தீபா , பி.எஸ்.எம். இளையோர் அணி தலைவர்
தலைப்பு :- ‘இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் அரசியல் போராட்டம்’
தோழர் சுரேஸ் , பி.எஸ்.எம். மத்திய செயற்குழு உறுப்பினர்
தலைப்பு :- ‘சமகால அரசியலில் உழைக்கும் வர்க்கத்தின் நிலைப்பாடு’
நடுவர்:- சாந்தலட்சுமி பெருமாள்
ஒருங்கிணைப்பாளர்: ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்
சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இந்த இலவச நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து பயன்பெற ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.
தொடர்புக்கு :- 017 754 0597 / 013 758 6881 முகநூல்:- PSM Cawangan Nusajaya
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். வெள்ளையனோடு போராடி, மலாயா நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களில் இந்த காட்டுப் பெருமாளும் ஒருவர். இதுவே வரலாறு. இந்நாட்டு சரித்திரங்கள், பித்தலாட்டங்கள் ஆகிவிட்டன. இயன்றவரை நமது தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறுகளை விளக்கிவரும் PSM கட்சியினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஐயா சிங்கம் அவர்களே– என்னதான் நாம் செய்தாலும் சகித்து நமக்கு வேன்படுமானால் ஆதரவாக இருக்கும் பெருமையாகவும் இருக்கும் ஆனால் இந்த அம்னோ அறிவிலிகளுக்கு தெரியுமா? தெரிந்தாலும் அதைப்பற்றி அக்கறை இருக்குமா. சுதந்திர முழு பூசணிக்காயையே மறைத்து இளம் தலைமுறையினரை மூளை சலவை செய்து நம்மை எதிரிகளாகவும் நாட்டுக்கு ஒன்றுமே செய்யாதவர்களாகவும் மட்டம் தட்டி ஒரு பொருட்டே இல்லை என்கிற அளவுக்கு நிலைமையை உருவாக்கி விட்டான்கள்– நம்மவரக்ளில் எவ்வளவு பேர் இந்த நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டிருக்கின்றனர் என்று மலாய்க்காரனுக்கு தெறியுமா? எத்தனை சுல்தான்களுக்கும் அவன் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்திருக்கின்றனர்? அவர்களின் மருத்துவத்தை பேணி இருக்கின்றனர்? ஆனால் இப்போது என்னமோ அரை வேக்காடு மலாய்க்கார வைத்தியன்கள் தான் முதலில்இருந்தே இதையெல்லாம் செய்ததது போல் ஒரு தோரணை ஏற்படுத்தி இருக்கிறான்கள்- இதை மாற்றுவது என்பது குதிரை கொம்பு-
உண்மைதான் சரித்திர சுவடுகளை மாத்தி அவர்களுக்கு ஏற்றது போல் எழுதி வருகிறார்கள். பள்ளி பாடப் புத்தகங்களிலும் வரலாற்று உண்மைகளை மறைத்தும் வருகிறார்கள். இதை போன்ற புத்தகங்கள் மலாய் , ஆங்கிலம் மொழிகளிலும் வரவேண்டும். வாழ்த்துக்கள்.
வரலாற்றை மாற்ற நடைமுறை படுத்தியதே இந்த கூறு கேட்ட காகாதிமிர்தான். இவன்தான் இந்த நாட்டின் இன்றைய நிலைக்கு அடிப்படை காரணம்.
இருந்தாலும் இயன்றவரை நம் தமிழ் இளைய தலை முறையினருக்கு இது போன்ற நூல் வெளியீட்டின் மூலம் எடுத்துரைப்பது நமது கடமை .
வாழ்த்துக்கள். வாழ்க காட்டுப் பெருமாள்!
திருத்தம் 50 ஆயிரம் ஆண்டுகள்