ஆய்வறிஞர் வெங்கலூர் குணா அவர்களின் “தமிழரின் தொன்மம்” நூல் இப்போது மலேசியாவில் கிடைக்கும்.

guna

உலகத்தமிழினத்தை ஏன் இத உலகத்தலைவர்கள் மதிப்பதில்லை?ஒரு இனமாக இல்லாவிட்டாலும் மனிதனாக,,, அதுவும் உலகின் முதல் மாந்தன், தமிழ்மொழி மூத்த முதல் மொழி என்பதை மறுக்காத இந்த தலைவர்கள் இனம் என்ன முட்டாகள் இனமா ?

சமீபத்தில் வெங்கலூர் தமிழின அறிஞர் ஐயா குணா அவர்களின் தமிழரின் தொன்மம் என்ற நூலை தமிழர் களம் அரிமாவளவன் மலேசியாவிற்கு கொண்டு வந்து மூன்று முக்கிய நகரங்களில் அறிமுக நிகழ்வுகளை நடத்தினார்.

100 மலேசியா ரிங்கிட்தான். 500 பக்கங்கள் . நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் தவறாமல் வாங்கியது கண்டு மகிழ்வாக இருந்தது. இனி தமிழர்களின் பிறந்த நாள் பரிசாக இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூலாக நான் கருதுகிறேன்.

இனித்தமிழன் எந்த நூலையும் வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற உயிரோட்டமான உண்மைகள் வெளியாகி உள்ளது. நூல் முழுக்க தமிழினம் எப்படியெல்லாம் ஏமாந்து “தறுதலை இனமாக உருமாற்றம், இனமாற்றம், மொழி மாற்றம், சமய மாற்றம், கலை கலாச்சார மாற்றங்கள்” எல்லாம் திணிக்க மாறியது என்ற உண்மை வெளிப்பாடாக உள்ளது.

மொழி ஆய்வறிஞர் மொழி ஞாயிறு பாவாணர் என்றால் இன ஆய்வறிஞர் ஐயா குணா எனலாம். இந்த 20 நூற்றாண்டில் தமிழர் இனத்தின் முழுமையான வரலாற்று உண்மைகளை பதிவு செய்து உலகத்த தமிழினத்துக்கு பெருமை சேர்த்த ஐயா குணா அவர்களை இன்று  தமிழினத்தலைவனாக பெருமை கொள்வதில் உலகத்தமிழன் உவமைக்கொள்ளல் வேண்டும்.

மண்ணையும், கொடியையும்,கொற்றத்தையும் நமது தமிழ் பேரினம் திராவிடன் என்னும் பொய்மையில் பிளந்துககிடந்த அநியாயத்தை அரசியல் எனும் ஆர்ப்பரிப்பில் இழந்து, நமக்குள் பேதைமை போராட்டத்தில் மூளை சுய வளர்ச்சியின்றி  செத்துக்கிடக்கிறோம்.

திராவிடனின் இறையாண்மை இல்லாமையாலும், சாதித்துவ வேற்றுமையிலும் சிதறிக்கிடக்க ஆளப்படுகிறோம்.மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும், திருடப்பட்டும், சிறுமைப்பட்டும் தமிழினத்தின் வரலாற்றை மீட்டு “தமிழா நீ தமிழன்” உனக்கு திராவிடன் இந்துத்துவா என்றெல்லாம் பேர் இல்லை என உறுதியாக கூறும் வளரும் பங்கு நம் மனங்களில் புதிய பூரிப்பு பு த்துயராய் கிளர்ச்சி பெறுகிறது.

இந்த புத்தகம் ஒரு தொடக்கம்மாகும். இன்னும் புதிய வரலாறுகள் இதை தொட்டு வளரும். ஆக தொய்வின்றி இன மீட்சிக்காக உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தியாக தீயாக மிளிர வேண்டும் என்ற காலமும்  களமும்  வந்துவிட்டது.

ஐயா அரிமாவளவனின் தமிழக  ”சிறு மலர்” ஆரம்ப மற்றும் இடைநிலை தமிழ்ப்பள்ளிக்காக நிதி சேர்க்கும் நூலாகவும் இது
தன் -நம் தமிழ் கடமையை செய்யும் என்பது மேலும் நமக்கு தமிழ் தொண்டாற்ற கிடைத்த பேராகும்.

நூல் வேண்டுவோர் தமிழர் களம் அல்லது தமிழர் தேசியம் அஸோஸியேட்ஸ் (Tamilar Thesiam Associates ) PUBLIC BANK 3167190306 என்ற வங்கி கணக்கில் தபால் செலவு சேர்த்து 110.00 ரிங்கிட் அனுப்பி வங்கி சீட்டை 016 -6944223 எண்ணுக்கு sms முகவரியுடன் அனுப்ப வேண்டுகிறோம்,கோலா லம்பூர் தமிழர்கள் நேரில் பெறலாம்.  வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்.

நன்றி
பொன் ரங்கன் தமிழர் தேசியம் அசோசியேட்ஸ்.
மின்னஞ்சல் : [email protected]

தமிழர் களம் அரிமாவளவன் தமிழரின்  தொன்மம் நன்றியிதழ்.

கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்களிலும் மலேசியா நாட்டின் ஜோகூர், கோலாலம்பூர், கூலிம் மற்றும் ஈப்போ நகர்களில் குணா ஐயா அவர்கள் எழுதிய தமிழரின் தொன்மை நூலினை அறிமுகம் செய்தோம்! அதிகாலை வானூர்தி நிலையத்தில் இறங்கி நேரே நெடுந்தூரப் பயணம் செய்து ஜோகூர் அடைந்தேன்!

மொத்தத்தில் ஏறத்தாழ 2000 கி.மீ. சாலைப் பயணம்! 350 புத்தகங்கள் மலையக மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டது! மலேசியத் தமிழர் களத்திற்கும் உடனுழைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!

திரு. நம்மவர், திரு. மாசீலன், திரு. தாமசு, திரு. கலையரசு.தமிழர் தேசியம் பொன் ரங்கன்  ஆகியோர் மேற்கூறிய நான்கு நகரங்களிலும் நூல் அறிமுக நிகழ்வுகளுக்கு சிறப்பான ஏற்பாட்டைத் தலைமையேற்று நடத்தினர்! அவர்களோடு ஒரு தமிழர் படையே பம்பரம்போல் சுற்றிச் சுழன்று பணியாற்றியதைக் காண முடிந்தது! என்னை மிகுந்த அன்போடும் பாதுகாப்போடும் நடத்திய ஒவ்வொருத் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நன்றி!

எந்த ஒரு சோர்வையும் பொருட்படுத்தாமல் என்னோடு இரவு பகலாக உழைத்த மாசீலனுக்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள்!

நான் திரும்பி வந்த வேளையில் மாசீலனிடம் பலர் தொலைப்பேசி வழியாக நூல்களைக் கேட்டனர்! அவரிடம் இரண்டு நூல்கள் மட்டுமே எஞ்சி இருந்தன! விரைவில் அதிக புத்தகங்கள் அங்கு வந்து சேரும்! இன்னும் பல ஊர்களில் தமிழரின் தொன்மை நூலை அறிமுகம் செய்யுங்கள்! அதற்கான ஏற்பாடுகளை மற்றவர்களும் கவனியுங்கள்! ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஓர் ஆழமான அற்புதமான நூல் இது!

எல்லாவற்றிற்கும் மேலாக களமாடுங்கள்! காடு மேடு நாடு நகரம் சுற்றித் திரிந்து ஒவ்வொரு தமிழரையும் சென்றடையுங்கள்! தமிழர் தேசியமே வெல்லும் என்று அடித்துச் சொல்லுங்கள்!

எதிரிகளின் ஊளைகளை நான் கேட்காமலில்லை! அவர்களின் உதறல்களையும் நான் காணாமலில்லை! சினத்தைச் சிதறவிடாதே! சேர்த்து வை! சண்டையில் அதை வீணாக்காதே! போருக்கு அது தேவை!

களத்தில் நான் எப்போதும் உங்களோடு  இருப்பேன்!

அரிமாவளவன்
பொதுச் செயலாளர்
தமிழர்களம்