இந்தியன் என்ற ஹிந்துஸ்தானிய, இந்துத்துவா வார்த்தையை தமிழன் மட்டும் அழகுத்தமிழில் இந்தியன் என்ற ஒரு இனத்தவன் பெயரில் அழைத்தான் .எல்லா மொழி பிரிவினை இனத்தையும் இந்தியன் என்று எழுதுவதை நான் மறுக்கிறேன். ஆதலால் நான் இண்டியன் என்று மாற்றி எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
நம் தமிழர்கள் மட்டும் மொழி அழகில் இந்தி (மொழி) + யன் இந்தியன் என்று எழுதுகிறறோம். இண்டியாவின் INDIA 28 மாநிலத்தவன் தன் மொழி சார்ந்த இனத்தை முதலில் அடையாளப்படுத்தி எழுதுவான். தமிழன் மட்டும் தன்னை “இந்தி” யன் என்று எழுதுவான். ஏன் ?
இந்தியன் அல்லது இண்டியன் என்ற பொருளை நான் ஆராய்யப்போவதில்லை. காரணம் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் தான் இண்டியன் என்ற வார்த்தைக்கு பல காரணங்களை காட்டி வெள்ளைக்காரன் வைத்தானாம்.
இன்று என் பயணம் தமிழன் ஏன் எப்படி இண்டியனானான் என்ற தேடலுக்கு முன், யார் அந்த திராவிடன் ? தமிழர் மறுமலர்ச்சி ஏன் தமிழனிடம் தமிழர் இனம் தவிக்குது என்று பார்க்க உள்ளோம்.
புரட்சிக்கவிஞ்சர் பாரதிதாசன் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றான்”..தமிழ் இலக்கியம் தன் அழகில் “தமிழ் எமது தேசிய மொழி!
தமிழன் எமது தேசிய இனம் !
தமிழர் நாடு எனது தமிழ்த்தேசம் !
தமிழ்ச் சமயம் என இறையாண்மை!
தமிழ்த்தேசம் என குடியரசு!
அமைப்பதுதான் எமது தமிழரின் இலக்கு, என்றால்
தமிழனுக்கு விளங்காமல் எங்கள் சித்தனை தப்பென்று
சீறுவான். ஏன் சீறுகிறீர் என்று கேட்டால் விளக்கம் தர தெரியாது.
தன்னை இண்டியன் என்று இல்லாத ஒன்றை ஏற்பான். தமிழன் மரபணுவில் பிறந்து நீ தமிழன் என்று சொல்லடா என்றால் இல்லை நான் ஓசியில் வந்த இண்டியன் என்பான். தமிழன் இண்டியன் பட்டியலிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது.இதுதான் இந்த கட்டுரையின் முகாமை நோக்கம்.
19 தாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20 தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் அல்லது திசைகள் பிரித்தாண்டது . இந்துத்துவா என்றும் திராவிடம் என்றும் இழுத்து சீரழித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் RSS என்ற இயக்கம் இரண்டையும் அணைத்து ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன ? எல்லாம் நாம்தான் என்று தமிழனை இந்து என்றும் திராவிடன் என்றும் கசக்கி பிழிந்து தமிழன் குருதியை குட்டையாக்கி கலங்கிய குட்டையில் கடந்த 100 ஆண்டுகளாக அரசியல் மீன் பிடித்தான்.
இதை தமிழன் உணராமல் தான் தமிழன் போன்ற திராவிடன் என்று இன்றும் தமிழனுக்கு எதிராக அரசியல் சடுகுடு ஆடுகிறான். ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும் என்று சொன்னான். ஆனால் யாராச்சும் நினைத்தோமா…. மாடு பால் கறக்காது. பசுதான் பால் கறக்கும் என்று எந்த தமிழனாவது கேட்டோமா ?
இங்கும் மலேசியாவிலும் கூட தமிழர்கள் பல பேருக்கு தான் இண்டியனாக இருக்க ஆசை, காரணம் கேட்டால் வளர்த்த வளர்ப்பூ! அல்லது வாய்த்த மனைப்பூ! அல்லது புருஷன்பூ என்ற பல கலப்புகள் கோளாறாக உள்ளது, அதிலிருந்து வெளிவர பயந்து இண்டியன் குகைக்குள் குடும்பம் ஓடுது .
தமிழர் நாட்டு அரசியல் இங்கு நமக்கு வேண்டாமென பல அந்நியர் கலப்பு அப்பாவிகள் சொல்லக் கேள்வி பட்டுள்ளோம். நாட்டிலுள்ள 6 பத்திரிக்கைகளும் நான்கு பக்கங்களை தமிழக அரசியலை எழுதி இன்னும் இரண்டு பக்கங்கள் சினிமா போட்டு குஷிப்படுத்தி கிழிக்கும்போது காசு கொடுத்து வாங்கும் ஊமைகள் ஏன் என்று உணருவதில்லை.
தமிழர் நாட்டவனுக்கு தனி நாடு கிடைத்தால்தான் உலகத்தமிழனுக்கு போராட ஒரு நாடு இருக்கென்று ஐநா உணரும் என்பதை இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை? இப்போது பதிவி விலகி போகவுள்ள பங்கி சொல்லுகிறார் தமிழ் ஈழ போரில் ஐநா தவறு செய்து விட்டதென்று …பார்த்தீர்களா உலக முட்டாள்த்தன தலைவர்கள் வேடிக்கையை?
இதனால்தான் சொல்கிறறோம் …..தமிழரின் விடுதலைக்கும் மறுமலர்ச்சிக்கும் தன்சார்பு தற்காப்பு சாசனம் எழுத ஒரு நாடு வேண்டும். அல்லது தனித்தமிழர் நாட்டுக்கு இன புரட்சி வேண்டும்.இன புரட்சி இல்லாத ஏந்த நாடும் அரசியலில் வென்றதாக சரித்திரமில்லை தமிழா !
தமிழனின் தன்னியக்க முன்னேற்றத்துக்கு மாற்றான் வருவான் என்பது முட்டாள்தனம். குறிப்பாக இண்டியா இன விடுதலை போராட்டமும் திராவிட இன சுய சுத்தல் அரசியலும் தமிழனை பிரித்து பங்கு போட்டு அனாதைகளாக்கும் திட்டம் மாறப்போவதில்லை. நாம் இணையும் வரை நாடோடிகள்தாம் இதைத்தான் கடந்த கட்டுரையில் தமிழன் உருப்பட மாட்டான் என்று
எழுதி இருந்தேன்.
இண்டிய விடுதலை இயக்கமும் திராவிட அரசியல் இயக்கமும் இரண்டு விதமான அரசியல் சமூகத்தேவைகளை முன் நிறுத்தி அரசியல் ஆடுகின்றன என்பதை தமிழன் உணர வேண்டும்.
இன்றுள்ள வெள்ளையன் ஏகாதிபத்திய ஆட்சி சட்ட அமைப்பை வெளி ஏற்றி தமிழர் நாடு உள்ளிட்ட இண்டிய துணைக்கண்டங்கள் விடுதலை பெற வேண்டியது முகாமையானது. இதுதான் தமிழ் ஈழத்தின் விடுதலையும் கூட !!!! இதுபோலவே பார்ப்பன RSS ஆதிக்கம் பார்ப்பன சமூக ஏகாபோகம் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனரல்லாத மண்ணின் உரிமை மீட்ப்பு போராட்டமும் மிகவும் முக்கியமானது.
யார் மணிக்கட்டுவது என்று கேட்கலாம் ?
நாம் தமிழர்…தமிழர் தேசியம்…தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், தமிழர் களம், தமிழர் நாட்டு தமிழன் சார்ந்த இயக்கங்கள் முன் நின்று ஒன்றிணைந்து முதலில் “தமிழர் நாட்டு தமிழர் பாதுகாப்புக்கு” முன் நகர்த்தல் முனைப்பு முடிவுகளை எடுக்க வேண்டும் .
மறுபடியும் யார் அந்த தமிழர்களின் தனித்தமிழன் ?
திராவிட, பெரியார், இந்துத்துவா , RSS பார்வைகளில்லாமல் கலப்பிலாத …தாய் வழி தமிழர், தமிழ் வழி தமிழர் என்ற தமிழர் நாட்டு உருமாற்றத்திற்கு “தமிழர் நாட்டு தனி அரசியல் காலத்திற்குள்” வந்து இயக்கங்களின் தனித்தனி அரசியல் தாக்கம் இருந்தாலும் நிறுத்திவிட்டு “தமிழர் தேசிய குடைக்குள்” நுழைந்து ஓட்டைகளை அடைத்து “தமிழர் நாடு” தமிழர்க்கு மட்டும் என்ற தனியாட்சி உரிமைக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை.
தமிழர் நாடும் – தமிழர் ஈழமும் நம் மண் உரிமை என்ற கவசம் ஏந்த உலகத்தமிழன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீபாவளி கொண்டாடி ஏமாத்துவது போதும் ..தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு போவோம், வென்றாக வேண்டும் தமிழரினம் !
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
ammpon @gmail .com
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே தீர்வு!!!
தீபாவளி வாழ்த்துக்கள் !! இந்து பெருநாளை முதலில் கொண்டாடுவோம் ! மலேசிய இந்தியனுக்கு தந்த அங்கீகாரம் பொது விடுமுறை ! பொங்கலை ஜனவரியில் பார்போம் ! மக்களை குழப்பாதீர்கள்
! மலேசிய தமிழர் தேசிய தின் வசூலை ஆரம்பித்து விட்டிர்களா !! மானியம் எதாவது ! முதலில் நாலு காசு பாருங்கள் !!
s மணியன் மோசமான பிச்சைக்கார தன ஆர்ப்பரிப்பு. தலைப்பை உணரத்தெரியா ஊனங்கள்.
ஆரமிச்சிட்டாய்ங்கயா ஆரமிச்சிட்டாய்ங்கயா…. என்றுதான் இவர்கள் இனவாதத்தை மறந்து , அறிவியலில் புதுமைகளை கண்டு பிடித்து, உலக மக்களுக்கு நன்மை செய்வார்களோ …. அன்று தான் உலகம் இவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும்…. இந்த நூற்றண்டில் கணித மேதை ராமானுஜம், ஈமெயில் கண்டு பிடித்த சிவா ஐயாதுரை, சார் சி.வி ராமன் (ஏன் கடல் நீல நிறமாக இருக்கு விளக்கியவர்), பௌதிக பேராசிரியர் சுப்பிரமணியன் சந்திரா சேகர், ரசாயனவியல் பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இவர்கள் எல்லாம் நோபல் பரிசுக்கு முன் மொழியை படடவர்கள். சிலர் பரிசும் பெற்றவர்கள். தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்று தந்தவர்கள். என் மரியாதை கூறியவர்கள். இவர்களில் எவருமே இந்தியராய் இருக்க கேவலப்படட்தில்லை. வேலை செய்யாத சோம்பேறிங்க, மானுட குலத்துக்கு அறிவியல் பூர்வமா உதவாத உதவாகரைங்கதான், தான் ஜெயிக்காததற்கு அடுத்தவன் மேல பழியை போடுங்க. அவன் அப்படி செய்யுறான் இவன் இப்படி செய்யுறான் என்று ஜெயிச்சவர்களை கண்டு பொறாமை கொண்டு, புரளி பேசியே , தன்னுடைய வெட்ரியை கோட்டை விடடவங்கள் ….
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
எங்கே ஆப்பிரிக்கா காட்டிலேயா
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
என்று எழுதும் வேங்கையன் அவர்களே , எந்த நாடு தமிழர்களின் நாடு என்று முதலில் சொல்லட்டும் …..
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!!
பொங்கல் அறுவடை திருநாள். தயவு செய்து அன்று பொங்கல் செய்து சாப்பிடுவதுடன் சூரியனுக்கும் நன்றி கூறுங்கள். அதை விடுத்து தமிழர் திருநாள் பொங்கல் மட்டுமே என்று கூறி தமிழரை ஏமாற்ற வேண்டாமே.
மன்னன் அவர்களே, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாத்துபவர்களும் இருக்கதானே செய்வார்கள் …. ஏன் சுலபமாக ஏமாந்து விடுகிறார்கள் என்று யோசித்தால் நமக்கு புரியும்! அது வேற ஒன்னும் இல்ல சார் , “தமிழுக்கு ஆபத்து, தமிழர்களுக்கு ஆபத்து” என்றால் போதும். உடனே கண்முடித்தனமாக நம்பி கலைஞரை போன்ற ஒரு ஜீவனை முதல்வர் ஆகிவிடுவார்கள். மக்கள் ஆட்சியே விளங்காதவர்கள் …
தமிழனுக்கு தனி நாடு !! இந்த உலகில் எந்த மூலையில் !! ஒன்றே குலம் ஒருவனே தேவன் !! என்ற அடிப்படையில் வாழ்ந்தவன் , வாழ்கின்றவன் தமிழன் ! !! யாதும் ஊரே , யாவரும் கேளிர் !! என்ற அடிப்படை கொள்கை கொண்டவர் நாம் , உலகில் உள்ள அத்துணை தேசமும் நமது தாய் மண் என்ற அடிப்படையில் வாழ பிறந்தவன் தமிழன் ! எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ அங்கெல்லாம் தமிழ் இருக்கிறது ! தமிழ் தெய்வம் இருக்கிறது ! மலேசியா நாட்டில் நமக்கு அங்கீகாரம் கொடுத்து ! நமக்கு ஓட்டுரிமை இருக்கிறது ! நடாளுமன்றத்தில் தமிழர்கள் இல்லையா ! சட்ட மன்றத்தில் தமிழர்கள் இல்லையா ! இது நம்ம தாய் நாடு ! நாம் பிறந்த மண் , இந்த நாட்டில் எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ! தனி தமிழன் நாடு என்று பிதட்ட்றி கொண்டிராமல் ! தமிழனை , தமிழனே நாடற்றவன் என்று குழப்பிகொண்டிராமல் ! நாமனைவரும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற குடிமக்கள் ! தமிழன் இந்த நாட்டில் நிலம் வாங்க வேண்டாம் ! வீடு வாங்க வேண்டாம் ! சொத்து வாங்க வேண்டாம் ! வியாபாரம் செய்ய வேண்டாம் ! கல்வி கற்க வேண்டாம் ! பணக்காரனாக வேண்டாம் ! என்று யாரும் தமிழனை தடுக்க வில்லையே ! உன் முட்டாள் தனத்திற்கும் ! உன் முயற்ச்சி இன்மைக்கும் ! உன் இயலாமைக்கும் ! ஏன் அடுத்தவன் மேல் புலம்பல் !!
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!! நாம் பிறந்த இந்த மலேசிய நாட்டிலேயே நமக்கு உரிய உரிமைகளை பிச்சை எடுத்து ஓட்டுற வாழ்க்கைக்கே ஒரு வழியை காணோம். இந்த லட்சணத்துல வேறொரு நாட்டு நிலத்துலே தனி தமிழர் நாடா ? மலேசிய நாட்டுலே வாழும் தமிழர்கள் இன்னும் 50-60-ம் ஆண்டுகளில் எஸ்டேட்டுகளில் வாழ்ந்ததுபோல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பு. அதனால்தான் விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொன்னதைபோல் கதை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
பொங்கல் தமிழர் கொண்டாடும் திருநாட்களில் ஒன்று.
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு அமைகிறதோ இல்லையோ கேரளா,கன்னடா,ஆந்திரா, தமிழ்நாடு இணைந்து மீண்டும் “திராவிட நாடு” உருவாகுவது உறுதியாகி விட்டது.
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!! இந்த வரிகள் தமிழனுக்கு மட்டும் வந்தேறிகளுக்கு அல்ல!!! இழந்ததை மீட்டு தங்கள் உரிமைகளை நிலை நாட்டும் வரை தமிழன் முதுகில் வந்தவன் சவாரி செய்வது உறுதி! இழந்ததை மீட்பது எங்கள் உரிமை…உனக்கு எங்கேயடா வலிக்குது???
மஹாபாரத காலத்தில் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் காந்தார நாடு. அப்பொழுது, இலங்கை, பாகிஸ்தான் , பங்காளதேஸ் , மியான்மார் , கம்போடியா, இன்னும் 10 பாமினிய சுல்த்தான்களை கொண்ட கஸ்தான் நாடுகள் என்று எல்லாம் இணைத்த ஒரு பெரும் கண்டம்தான் இந்த பாரத நாடு. விஸ்வமித்திரரின் மகன் பரதன்… அவர் பெயரிலேயே இந்த கண்டம் பெயர் பெற்றது. அவரே மன்னர்களின் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டி, பரத்வாஜ பூமன்யுவை அரசர் ஆக்கினார் … எனவே ஜனநாயக மலர்ச்சிக்கு இந்தியர்களே முன்னோடிகள். சூரிய குல ஆட்சிக்கு பிறகு வந்த சந்திர குல ஆட்சியில், பாண்டுவின் மைந்தர்கள் பஞ்ச பாண்டவர்களின் சார்பில் தமிழ்நாட்டு மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், போரிட்ட்னர் என்பது இதிகாசம். எனவே, முதலில் இந்தியர்கள் இழந்த நீளமான ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். அப்படியா மட்ட்ற ஏனைய நாடுகளும்.
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!!
அதை எப்படி சாதிக்க முடியும் ஐயா வேங்கையின் அவர்களே?
சுண்டக்காய் சிங்களவன் தினசரி தமிழ் மீன் பிடிப்போர்களி கொன்றும் கொடுமை படுத்தியும் இந்த ஈன ஜென்மங்களுக்கு சூடு சொரணை மானம் ஈனம் ஒன்றும் இல்லை பிறகு எப்படி ?
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா
கேரளா,கன்னடா,ஆந்திரா, தமிழ்நாடு இணைந்த ”திராவிட நாடு” அமைப்பது எங்கள் உரிமையடா
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்பது கர்ணனின் நிலையை குறிக்க பயன் படுத்த பட்ட உவமை. அதாவது: தன் 5 தம்பிகளுடன் இணைந்தால், 6 ஆகும். அப்பொழுது துரியோதரனுக்கு செஞ்சோற்று கடன் தீராமல் அங்கேயும் அவன் மனசாட்சி அவனை கொள்ளும். துரியோதரனுடன் சேர்ந்தால், 100 தம்பிகளை கொண்ட துரியோதனுக்காகவும் சாவு. இது தெரியாமல் எங்க எங்க பயன் படுத்துதுங்க பாருங்க …..
வாயில் வடை சுட ஆரம்பித்துவிட்டொம் !! ஈழம் ! தமிழர் தனி நாடு என்றதும் பல லச்சம்
அப்பாவி தமிழர்களின் உயிர்களை பறிகொடுத்தோம் ! தமிழ் நாடு முதலில் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கட்டும் அதன் விளைவு என்ன என்று பார்ப்போம் ! மகா பாரதம் ! ராஜா ராஜா சோழன் ! இராவணன் ! கேரளம் ! கன்னடம் ! ஆந்திரம் ! தமிழன் கேட்டதும் தாரை வார்த்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் !! இன்று உலகின் எல்லா மூளையிலும் , ஜாதி வெறி! , இன வெறி !மத வெறி ! தலை விரித்தாடுகிறது ! இன்று எல்லோருக்கும் அவர், அவர், இனமும் ,மதமும் , ஜாதியும் முக்கியம் ! யருக்காகவும் யாரும் எதையும் விட்டு கொடுக்க போவதில்லை ! நடக்க முடியாமல் !பார்வை தெரியாமல் ! வாய் பேச முடியாமல் ! பதவியை விட்டு கொடுக்காமல் ! தமிழ் தலைவன் ! என்ற மனிதர்கள் வாழும் பூமியை பட்றி பேசி கொண்டிருக்கிறோம் ! நாம் தான் அவர்களை பட்றி பேசி கொண்டிருக்கிறோம் ! ஆனால் இங்கு வாழும் தமிழர்களை பட்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது ! லச்ச கணக்கில் தமிழன் கன்னெதிரே மடிவதையும் ! அழிவதையும் !கண்டு கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈன ஜாதி தமிழினம் !!
தமிழர்களுக்கு தனி நாடா ! நிச்சயமாக அது அடைய விடமாட்டோம்.ஏன் மீண்டும் உங்களை ஆட்சியை (ராஜேந்திர சோழன் ) அமைக்க வா. வாடா இந்தியாவின் உதவியோடு அதை முறியடிப்போம்.ஆஹா ஆஹா ஆஹா !
பொன் ரங்கா – வெங்கையா, நீங்கள் இருவரும் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல் தமிழன்கிட்ட பிலிம் காட்டியே காலத்தை ஓட்ட பார்க்கிறீங்க.
“இன்று உலகின் எல்லா மூளையிலும் , ஜாதி வெறி! , இன வெறி !மத வெறி ! தலை விரித்தாடுகிறது !” இது ரொம்ப நல்ல இருக்கு மணியம் சார். “பொன் ரங்கா – வெங்கையா, நீங்கள் இருவரும் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல் தமிழன்கிட்ட பிலிம் காட்டியே காலத்தை ஓட்ட பார்க்கிறீங்க.” இது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்தியன் அவர்களே . சமரசிங்க அவர்களே, தமிழ் ஈழம் என்பது காலத்தின் கட்டாயம், காரணம் 60 ஆண்டு கால சகோதரதுவபோர். இரண்டு இனமும் ஒன்று சேர்ந்து வாழ முடியாத நிலை. எனவே பிரிப்பதுதான் நல்லது. ஆனால் வல்லரசுகள் (அமெரிக்கா , இந்தியா ) விடாது, இரண்டு பிரிவினை வாதிகளையும் வைத்து அவ்வப்போது பகைமையை தூண்டி விட்டு குளிர்காயும். எனவே சிங்களவர்களும் மேலே வரமுடியாது. ஒரு உதாரணத்திற்கு: அமெரிக்காவே புலிகள் போல் ஒரு மின்செயலியை செய்து, இலங்கையில் உள்ள அணைத்து கணினியிலும் ஓடிஏ விடடால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிங்களவர்கள் முன்னேறவே முடியாது. எனவே நியாயமாக நடந்து கொள்ள முயற்சியாவது செய்யுங்கள் …..
தனி தமிழர் நாடு என்றவுடன் ஒருத்தன் மகாபாரதம் கதை சொல்லுறான்,இன்னொருவன் வடை கதை சொல்லுறான்,இன்னொரு பேடி இனம் நடக்க விடமாட்டேன்னு சொல்லுறான்,இன்னொருத்தன் கொம்புத்தேனு கதை சொல்லுறான்!!! பார்த்தீர்களா en thaai thamizh?
வேங்கையன் அவர்கள் சொல்வதும் சரிதானே. இன்றையவரைக்கும் தனி தமிழர் நாடு அமைக்க என்னதான் செய்தீர்கள். சதா மற்றவனை (தமிழனை அல்ல) பார்த்து பொறாமையுணர்ச்சியுடன் திட்டி தீர்ப்பதும் தமிழனை தரம் தாழ்த்தி எழுதுவதுமாகத்தான் இருக்கிறீர்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை என்றுதான் உணர்ந்து கொள்ள போகிறீர்களோ
வேங்கையன் அவர்களே, தனி தமிழ் நாடு என்பதுக்கு ஐக்கிய நாட்டு சபை ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் (REFERENDUM). அதற்க்கு முதலில் மக்கள் தயாராக வேண்டும். மேலும் அப்படி ஒரு தேவை தமிழர்களுக்கு இருப்பதை ஐக்கிய நாட்டு சபை ஒத்துக்கொள்ள வேண்டும். 60 ஆண்டு சிங்களவர்கள் – ஈழ தமிழர்கள் போரையே ஒத்து கொள்ள மாட்டேன் என்கிறது அமெரிக்க. 70 ஆண்டுகால காஷ்மீரிய அமைதியின்மையை கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது இந்தியா மற்றும் அமெரிக்க. 3000 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் – பலஸ்தீன் போராடடம்… தனி நாடு என்பது என்ன வடையா ? உடனே பிட்டு கொடுப்பதிற்கு ? மேலும் மலையாளிகள், தெலுங்கர்கள் , சிங்களவர்களிடம், கர்நாடடவர்களிடம் பொய்: “நீங்கள் எல்லாம் தனி தமிழ் நாட்டிட்க்கு ஆதரவு அளித்து, உங்கள் இடங்களை காலி செய்வீர்களா ?” என்று ஒட்டு எடுத்தால், காறி மூஞ்சில் துப்புவார்கள். எனவே மக்கள் ஓட்டு போடும் ஜனநாயக SYSTEM உள்ள வரை, வடை போல் உடனே பிட்டு கொடுக்க முடியாது. ஜனநாயக SYSTEM குள்ளேயே, 49 % மக்கள் அரசாங்கத்தை எதிர்த்தாலும், 51% பெரும்பான்மை கொண்டவர்கள் நாட்டை ஆழ்வார்கள். இது புரியாம சின்ன பிள்ளைதனமா அடம் பிடிக்கிறது ….
தமிழ் நாட்டிலே வாழ வழியில்லாதவன்தான் நாம் தமிழர் என்று கூப்பாடு போடுகிறான் என்றால் Anonymous V எழுதியிருப்பதைப்போல் மலேசிய நாட்டிலேயே உரிமைகளை பிச்சை எடுத்தும் தமக்கு கிடைக்கவில்லையே ஏக்கத்தோடு வாழ்க்கை ஓட்டி கொண்டிருப்பவன்தான் தனி தமிழர் நாடு என கூப்பாடு போடுகிறான். அதுவும் தனி தமிழர் நாடு அயல்நாடுகளில் ஏன் மலேசியாவில் தனி தமிழர் நாடு என கடாரத்தை கோரலாமே அப்படி கோரினால் அறுத்துவிடுவார்களோ என்ற வீரம்தான் வேறொன்றும் இல்லை Samarasinge
INDIAN என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவன்தான் இந்தியன்/இண்டியன் என தான் குழம்பியது மட்டுமில்லாமல் மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்கிறான்.
H I N D U [I] S M
J A I [N] I S M
B U D [D] H I S M
S I K H [I] S M
I S L [A] M
C H R I S T I A [N] I T Y
INDIAN என்ற ஒரே சொல்லில் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் உள்ளடக்கியது. அதனால் INDIAN என்று கூறுவதில் பெருமை படுகிறோம். இது புரியாத அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் ஜடங்கள் INDIAN என்ற வார்த்தையை கொச்சை படுத்தாதீர்.
s.maniam ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ! எந்த அண்டை நாடானாலும் ஈழத்தில் லச்ச கணக்கில் தமிழன் கன்னெதிரே மடிவதையும் ! அழிவதையும் ! பார்த்து கொண்டுதான் இருந்திருப்பார்கள். ஏனென்றால் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது மடத்தனம். இதைவிட மடத்தனம் போர் என்றால் என்னவென்று அறியாத அறிவிலிகள் போரை பொதுமக்கள் வசிப்பிடங்களில் இருந்து துவக்கியது. லச்ச கணக்கில் உயிர் சேதம் என்றால் பார்த்து கொண்டுதானே இருக்க முடியும். அவ்வளவு ஏன் நம் நாட்டிலே ஹிண்ட்ராப் பேரணிக்கு பதிலாக போர் தொடுத்திருந்தால் நமக்கும் இதைவிட மோசமான நிலைமைதான் ஏற்பட்டு இருக்கும். அப்போதும் நம் அண்டை நாடுகளில் வசிப்பவர்களும் வேடிக்கைதான் பார்த்து கொண்டு இருந்திருப்பார்கள்.
நிருபர் : சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!! பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
தமிழ் மக்கள் : குதிரைக்கு கொம்பு முளைத்ததுபோல் ; முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல் ; சூரியன் மேற்கே உதிப்பதுபோலதான் இதுவும்.
நிருபர் : தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!! என்று கூறுபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
தமிழ் மக்கள் : கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போப்போறானாம் கதைதான் .
மீண்டும் தலைப்பை படித்து பார்க்கிறேன்: “தமிழனுக்குள் தமிழின ஒவ்வாமை ஒழியவேண்டும்; தமிழர் நாடு இன்றய அரசியல் இலக்காக வேண்டும்” தமிழர் நாடு இன்றய அரசியல் இலக்காக வேண்டும் என்பதை பார்க்கும் பொழுது எனக்கு பல கேள்வி எழுகிறது. அன்று தமிழ் ஈழ தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் கையில் மூன்று மாகாணங்கள் இருந்த பொழுது, அவர் ஏன் உலக அரசியல் செய்யாமல், 30 ஆண்டுகள் போரிலே கழித்தார் ? அவர் மகள் மட்டும் 5 ஆண்டுகள் ஜப்பானில் கல்வி பயின்றாரே ? 20 ஆண்டுகள் மின்சாரம் இல்லாமல் அந்த அடர்ந்த காட்டுக்குள் ஈழ தமிழர்கள் கஷ்டப்பட்டிருப்பார்களே கொசு கடியில் ? ஏன் அப்பொழுது உலக அரசியல் செய்ய வில்லை ?
தமிழன் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது எப்படி தனி தமிழர் நாட்டின் தேவையை அறிந்திருக்க முடியும்?
ஐயா இந்தியன் @ தமிழன் அவர்களே– இது நடக்குமா? சாத்தியமா? சாத்தியம் ஆனால் நடக்காது– நாம் கையால் ஆகாதவர்கள்–துரோகிகள் மலிந்த இனம். வேறு என்ன சொல்ல? இன்னொரு பிரபாகரன் தமிழ் நாட்டில் முளைத்தால் தான் . உஹும் !
ஒரே காமிடியா இருக்கு இவர்களின் என்னக்குவியல்கள். இனிமேலும் போர் என்ற சொல் அரசியல் அரங்கில் இனிமேல் செல்லாது ! காரணம் பலநாடுகள் இந்த வார்தையை சொல்லி சொல்லி சின்ன பின்னமாக ஆகி விட்ட்ன 20 ஆம் நூற்றாண்டில் …. எனவே அரசியல் உரு மாற்றமே சாலச் சிறந்தது. ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானியர். ஆனால் அவரோ ஹிட்லரின் அரசியல் பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறி பின் ரோஸ் வெல்லெட் என்ற அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதுகிறார். அதில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் அணு ஆயுதம் செய்வதை விளக்குகிறார் . உடனே அமெரிக்க அதிபர் ரோஸ் வெல்லெட் MANHATTAN அணுவியல் ஆராய்ச்சிக்கு உத்தரவிட்டு, 18,000 ஊழியர்களை கொண்டு ஆராய்ச்சியை முடிக்கிறார்; ஒரே வருடத்தில். அதில் இன்னும் ஒரு ஜெர்மானியர் ஜிலாட் என்பவரும் இடம் பெறுகிறார். இவர்தான் அணுக்களின் தொடர் பிளவு விதியை கண்டறிந்தார். இதை பயன் படுத்தி அமெரிக்க ஜப்பானையே வீழ்த்தி உலக இரண்டாம் போருக்கு முடிவு கொண்டு வந்து, 70 ஆண்டுகளாக பொருளாதார போர் புரிகிறது அனைத்து நாடுகளுடன். எனவே இனிமேலும் பொருளாதார முன்னேற்றங்களை செய்யாவிடில், வாயாலே வடை சுட்டு விற்பதை தவிர வேறு எதுவும் இல்லை இந்த “தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி” என்கிற தலைவர்களுக்கு …
“மலேசிய நாட்டிலேயே உரிமைகளை பிச்சை எடுத்தும் தமக்கு கிடைக்கவில்லையே ஏக்கத்தோடு வாழ்க்கை ஓட்டி கொண்டிருப்பவன்தான் தனி தமிழர் நாடு என கூப்பாடு போடுகிறான்”
ஒரு மலேசிய குடிமகன் என்ற நிலையில் மற்றவர்க்கு சடடத்தில் எந்ததெந்த அடிப்படை உரிமை கொடுக்கப் பட்டிருக்கோ அந்த உரிமைகளையெல்லாம் இந்த நாட்டில் அனுபவித்து வருகின்றனர் தமிழர். அரசாங்க கொள்கை அமல் திட்டங்களில் காட்டப்படும் ஏற்ற தாழ்வுகளில் மட்டுமே இந்த நாட்டுத் தமிழர் அவர்தம் ஆதங்கத்தைக் காட்டுகின்றனர். இதே நிலை இந்தியா முழுமையும் உண்டு.
தமிழர், இந்தியன் என்ற குருட்டுக் குடும்பத்தில் இருக்கும் பொழுது தான் ஓர் இனம் என்ற அறிவு ஏற்படுவதில்லை. இந்த அறியாமையை நாம் இந்தியன் என்ற தமிழன் கருத்தில் காண்கிறோம்.
மலேசியாவில் வாழும் தமிழருக்கு ‘இந்தியன்’ என்ற அடைமொழியால் எவ்வகை பயனுமில்லை. அதனால் நாம் அரசியல் குடியுரிமைக் காரணமாக மலேசியன் என்று நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.
மலேசியாவில் நம்மைத் தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதற்கு நாம் யாருக்கும் பயப்படுவதுமில்லை பிச்சை எடுப்பதுமில்லை. சட்டமும் அதை தடுப்பதில்லை. இவ்வகையான சுதந்திரமும் உரிமையும் கொடுக்கப் பட்டுள்ளதால் மலேசியாவில் நாம் இன்றும் தமிழராக வாழ்கிறோம்.
இந்தியனாக வாழும் தமிழன் தான் தமிழன் என்ற உணர்வும் இன்றி தமிழ் பற்றும் இன்றி, தமிழர் கண்ட கொண்ட சமய நெறியை அறியாது இந்து என்ற மத யானையைக் கையில் பிடித்துக் கொண்டு அதன்வழி தமிழர் பண்பாடும் தமிழர் சமய நெறிகளையும் இழந்து தவிக்கின்றனர். இப்படி அனைத்தையும் இழந்து விட்டு வாழ்கிறோம் என்பதையும் அறியாது வாழ்பவன் தமிழ் நாட்டுத் தமிழன் என்பது நாம் கண்டு வரும் உண்மை. இதை அயல் நாட்டில் வாழும் தமிழர் எடுத்துச் சொன்னாலும் அதை புரிந்துக் கொள்ளக் கூட முடியாத தமிழரைத் தான் தமிழ் நாட்டில் பார்க்க முடிகின்றது. ஆனால் வீராப்புப் பேச்சுக்குத் தமிழ் நாட்டுத் தமிழர் முன்னோடி என்பதற்கு இந்தியன் என்ற தமிழனே சிறந்த எடுத்துக்காட்டு.
தனி தமிழர் நாட்டின் தேவையை அறிந்திருக்கும் அதிமேதாவிகள் தாங்கள் வாழும் நாடான மலேசியாவில் தனி தமிழர் நாடு அமைய போராடுவதுதானே அதை விடுத்து அயல்நாட்டில் தனி தமிழர் நாடு அமைய முனைவது ஏனோ ?
மலேசியாவில் தனி தமிழர் நாடு – இது நடக்குமா? சாத்தியமா? சாத்தியம் ஆனால் நடக்காது– நாம் கையால் ஆகாதவர்கள்–துரோகிகள் மலிந்த இனம். இது மலேசியா தமிழர்களுக்கும் பொருந்துதுமா ?
இன்னொரு பிரபாகரன் தமிழ் நாட்டில் முளைத்தால் தான் . உஹும் ! ஒரு பிரபாகரனால் லச்ச கணக்கில் தமிழன் கன்னெதிரே மடிந்தனர் என்று தெரிந்தும் இன்னொரு பிரபாகரன் அதுவும் தமிழ் நாட்டிலா முளைக்க வேண்டும் ? ஏன் மலேசியாவில் முளைக்க கூடாதா ? இன்னொரு பிரபாகரன் மலேசியாவில் முளைத்தால் மலேசிய தமிழனால் தனி தமிழர் நாடு அமைந்தது என்று மலேசிய தமிழனுக்கு பெருமை கிடைத்துவிடும் என்ற பொறாமையா ?
என்ன ஒரு நயவஞ்சகம் !
மலேசியாவில் வாழும் தமிழருக்கு ‘இந்தியன்’ என்ற அடைமொழியால் எவ்வகை பயனுமில்லை. அதனால் நாம் அரசியல் குடியுரிமைக் காரணமாக மலேசியன் என்று நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம்.
ஆனால் இந்நாட்டில் அனைத்து அரசாங்க விண்ணப்பங்களிலும் BANGSA என்ற கேள்விக்கு மட்டும் INDIA அல்லது INDIAN அடைமொழியை அடையாளமாக பயன்படுத்தி பயனடைய வேண்டிய கேவலமான நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டும் மறந்து விட்டீர்கள்.
தமிழ் நாட்டில் வாழ்வோருக்கு சுய காலில் நிற்க அறிவு வேண்டும்! இல்லாததால்தான் அன்னிய நாட்டுத் தமிழருக்கும் மரியாதை இல்லை. தமிழன் தோன்றிய இடத்தில் கானி நிலம் கேட்க வக்கில்லாது போனாலும் வாழ வந்த இடத்தில் இடம் கேட்கச் சொல்வது இந்தியன் @ தமிழனால்தான் முடியும். இதற்கு முன் சொன்ன பழமொழி இவரைப் போன்றவருக்கேத் தகும். “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போப்போறானாம்”
தனிநாடு கோரும் அதிமேதாவிகளே…….. உலக 3 கண்டங்களில் உள்ள நாடுகளை பாருங்கள்! அமெரிக்கா மற்றும் ரஷ்யா துணை இல்லாமல், இனி இந்த உலகத்தில் எந்த ஒரு நாடும் மட்றொரு நாட்டை விட்டு பிரிய முடியாது. அது மட்டும் அல்ல, நாடுகள் பிரிய வேண்டும் என்றால், அதற்க்கான தேவைகள் இருக்க வேண்டும். இந்த தேவைகளை உலக நாடுகள் ஒத்து கொள்ள வேண்டும்; அதற்கு வேறு ஒரு நாடு முன்மொழிய வேண்டும். பல பிரிவுகள் உள்ளது ஐநாவில் …….. பிரிந்த பிறகு, பொருளாதார கொள்கை வேண்டும், மற்ற வளர்ந்து விடட நாடுகளுடன் போட்டி போட மனித மூலதனம் வேண்டும். போர் என்றால் முதலில் படித்தவன் வளர்ந்த நாட்டிக்கு பறந்து சென்று விடுவான். மேலும் தனிநாடு செய்ய பொருள் உதவி வேண்டும். இப்படி பல பிரச்சனைகள் உள்ளது. 1947 இந்தியாவிடம் இருந்து பிரிந்த பாகிஸ்தானை பாருங்கள். எந்த ஒரு இயற்கை வளம் இல்லாமல், மதத்தின் பேரால், அமெரிக்கர்களின் செல்வாக்கினால் (பண பட்டுவாடாவினால் ), அந்த நாடு இன்று வரை உதவாக்கரையாகத்தான் இருக்கிறது …..தீவிரவாதிகளை உருவாக்க மட்டுமே அமெரிக்கா செய்து வைத்த நாடுதான் பாகிஸ்தான் …. UKRAINE நில் இருந்து பிரிந்த CRIMEA என்ற மாநிலம், தனி நாடாக முடிய வில்லை. மாறாக ரஷ்யாவின் நாடாகியது. இதனால் அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதித்தது. இன்று ரஷ்யா பெண்கள், குளிர்காலத்தில் பயன் படுத்தும் ஆடைகளுக்காக விபச்சாரம் செய்கிறார்கள். பாகிஸ்தானிடன் இருந்து பிரிந்த பங்காளதேஷ், உலக ஏழை நாடுகளில், 2 ஆவது. இந்தோனேசியாவில் இருந்து பிரிந்த ஈஸ்ட் தீமூர் என்ற நாடு, நாணயம் இல்லாமல் அமெரிக்கா டாலர்களை பயன்படுத்துகிறது. எனவே பிரிந்தால் முன்னேறிவிடலாம் என்பது படிக்காதவனின் விளக்கம். அமெரிக்கா நயவஞ்சகமாக, ஆசியாவில் அதன் நாணயத்தை கொண்டு வந்து விட்ட்து; அதுதான் EAST TIMUR . மலேசியாவில் சாமீ வேலு என்ற ஒருவன் செய்த இன துரோகத்தினால், இன்று எதிர்காலமே இல்லாமல் இருக்கும் இந்திய இனம், அவர்கள் குள்ளேயே அடித்து கொள்ள கொண்டு வந்ததுதான் இந்த தமிழன் – தெலுங்கன் – மலையாளீ – அவன் – இவன் – மற்றவன் விளையாட்டு. இது விளங்காமல் ‘தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி’ என்று ஒருவன் சொன்னால், முதலில் பொருளாதார கொள்கையை விளக்க சொல்லுங்கள். பிறகு நான் விளக்குகிறேன் எது முடியும் எது முடியாது என்று. சும்மா வாயிலே வடை சுட்டு விற்கக்கூடாது ….
மலேசிய தமிழனுக்குள் இவ்வளவு ஒவ்வாமையா ?
அடடா அரிய கருத்துக்கள் பழமொழிகள் என்று தூள் கிளப்பிட்டீங்க… !
தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை காப்பாற்ற முடியும்.
வாழ நினைத்தால் வாழலாம் வழிய இல்லை பூமியில்?…ஆழ கடலும் சோலை ஆகும்…ஆசை இருந்தால் நீந்தி வா..
பார்க்க தெரிந்தால் பாதை தெரியும்…பார்த்து நடந்தால் பயணம் தொடரும்…பயணம் தொடர்ந்தாள் கதவு திறக்கும்… கதவு திறந்தாள் காட்சி கிடைக்கும்…காட்சி கிடைத்தால் கவலை தீரும்…கவலை தீர்ந்தால் வாழலாம்…
(ஆட தெரியாதவனுக்கு எப்போதுமே மேடை கோணல்தான்!)
தமிழ் ஈழமே ஒரு சான்று. 30 வருடம் அற வழியில் போராடிய தந்தை செல்வநாயாகம் இறந்து விட்ட தருணம் அது. ஆக்கிரமிப்பும் அநியாயங்களை சிங்கள அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விட்ட நேரம் அது. ஈழ தமிழ் இளைஞர்கள் எதிர்த்து தாக்க முனைந்த தருணம் அது. ஆனால் கருத்து வேறுபாடுகளினால் ஈழ தமிழ் இளைஞர்கள் ஒன்றாக தமிழ் தேசியத்தை முன்னெடுக்க வில்லை. மாறாக EPRLF (பத்மநாதன்) , TT (குட்டிமணி, திலீபன், பிரபாகரன் ), PLOT (கருணாகரன்) என்று பல பிரிவுகளில்தான் இயங்கினார்கள். காரணம் கருத்து வேறுபாடுகல். பிறகு ஒன்றாக இணைந்து LTTE உருவாக்கினார்கள். இருப்பினும் கருத்து வேறுபாடுகள்னாலேயே அவர்களுக்குள்ளேயே காட்டி குடுத்து (பத்மநாதன்), சுயலாபம் தேடி ( பிரபாகரன்), பிரிவினையை உண்டு பண்ணி (கருணாகரன்), உலக அரசியல் செய்ய முடியாமல் தோல்வி கண்டு (அண்டன் பாலசிங்கம், கலைச்செல்வன் ), ஒட்டு மொத்த ஈழ தமிழர்களையும் அடிமைகளாக்கி விட்டு சென்று விட்ட்னர். எனவே தெளிவில்லாத அரசியல் கொள்கை என்பது, விளையாட தெரியாதவன் பகடை உருட்டுவது போல. இது எதனால் என்றால்: தொடர்ச்சியான சிந்தனையின்மை, பரிணாம வளர்ச்சி விளங்காததனம், உலக அரசியலை கற்று கொள்ளாதாமடமை. சுருக்கமாக சொன்னால்: ‘வாயாலே வடை சுட்டு விக்கிறது’. இந்த அனைத்து குணாதிசயங்களும் மலேசியாயாவில் இருக்கும் ‘தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி’ என்று கூவி கூவி சந்தை நடத்தும் மா இ கா விடம் உள்ளது. அவ்வப்போது இங்கே (செம்பருத்தியில்) சிலரிடம் …..
“வாழ நினைத்தால் வாழலாம் வழிய இல்லை பூமியில்?” என்று தமிழ் தேசியம் பேசியவர்கள் அதால பாதாளத்திற்கு இறங்குவார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை … இதையே மா இ கா கொள்கை பாடலாக மாட்ரிவிடும் வாழும் காலத்தில் ….. இன்னும்னுதெளிவாக சொன்னால் : PAS கட்சி தன் மாநிலத்தில் தன்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கெஞ்சுவதற்கு சமம் ……
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்?…
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் !…
என்று பாடி கொண்டிருந்தால் தனி தமிழ் நாடு அமையும் என்று பகல் கனவில் காலத்தை ஊட்டுவது இல்லையென்றால் வாழ வழிகண்டு பிடித்து வாழ்ந்து கொண்டிருப்பவனை திராவிடன், தெலுங்கன், மலையாளி என வசை பாடுவது. என்ன பொழைப்புடா இது .
32 வருடம் அற வழியில் போராடியவர் மலேஷியா ipoh வில் பிறந்தவர் தந்தை செல்வநாயாகம் . அவர் இறப்பதற்கு முன்னாலேயே ஆயுதம் தூக்கி விடடார்கள் அங்குள்ள ஈழ தமிழ் இளைஞர்கள். அதற்க்கு முதல் முழு காரணம் தலைவர் பிரபாகரன், என்னால் இத்தனை வருடம் அற வழியில் போராடி அர்த்தம் இல்லை ,உங்க வழிதான் சரி என்று ஆசி வழங்கியவர் தந்தை செல்வநாயாகம்..
சுயலாபம் தேடி ( பிரபாகரன்) அவர் சுய நலம் பார்த்து இருந்தால் கோடிக்கான டொலர் கொடுக்கிறேன் ஈழத்தை விட்டு கொடு என்று பேரம் பேசினானே உன் அமெரிக்கா அப்பொழுதே குடும்போத்துடும் டொலரோடும் அமெரிக்க போய் இருப்பார். தமிழனை தமிழிச்சியும் குறை சொல்வதும் திருப்பி கேட்டால் இல்லைனு பல்டி அடிப்பதும் நீ தெலுங்கன் என்பதை பல தடவை உறுதி படுத்திருக்க .
அன்று தமிழ் நாட்டில் வாழ வழி தெரியாமலும், சுய காலில் நிற்க அறிவு இல்லாதவர்ககளும் , கானி நிலத்துக்கு வக்கற்றவர்களும்தான் வாழ இடம் தேடி வெளிநாட்டிற்கு ஓடினார்கள் இன்று இது வாழ வந்த இடத்தில் மரியாதை இல்லை காரணம் இன்றைய தமிழ்நாடு என்று கூறுவது என்ன நியாயம் ? எல்லாம் தெரிந்தவர்கள் தமிழ் நாட்டிலல்லவா வாழ்ந்திருக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுக்காரனும் கூறலாமே.
வாழ இடம் தேடி வெளி நாட்டிற்கு வந்த அறிவாளித் தமிழன் இன்று சுயமாக தான் காலில் நின்று நிம்மதியாக வளமுடன் வாழுகின்றான். அதற்காக அவர்தம் முன்னோருக்குத் மலேசியத் தமிழர் நன்றி நவில்வதே நியாயம். இந்தியன் என்ற தமிழன் மலேசியாவிற்குள் உட்கார்ந்து கொண்டு தமிழ் நாட்டுத் தமிழருடன் சிண்டு முடித்து விடுவதை நிறுத்தும்.