சிறுவர்கள் துப்பாக்கியுடன் பயிற்சி எடுக்கும் பயங்கர வீடியோ! வெளியிட்டது ஐ.எஸ் இயக்கம்

isis_childrenபெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த பல சிறுவர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பயிற்சி கொடுக்கும் வீடியோவை ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தற்போது வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோவில், பாழடைந்த கட்டிடங்களும், மரங்களும் சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் கையில் துப்பாக்கியை ஏந்தியுள்ளனர்.

அங்குமிங்கும் ஒடும் அவர்கள் ஒழிந்திருந்து எப்படி சுடுவது என பயிற்சி எடுக்கின்றனர் . மேலும் வெடிகுண்டு திரியை கொளுத்தி தூக்கி போட்டு வெடிக்க பயிற்சி எடுக்கின்றனர்.

பின்னர் அங்கு வரும் 30 வயதுமிக்க வாலிபருடன் சிறுவர்கள் சேர்ந்து செல்வது போல அந்த வீடியோ காட்சியில் உள்ளது.

இந்த வீடியோவானது ஐ.எஸ் தீவிராவதிகள் அதிகம் நடமாடும் சிரியா நாட்டில் ஒரு இடத்தில் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சிறுவர்களை இப்படி மூளை சலவை செய்து தீய செயலுக்கு தயார்ப்படுத்துவது கண்டனத்துக்குரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.

blob:http://players.brightcove.net/18495e15-eb40-44f0-9ddf-9f963f79feea

-http://news.lankasri.com