இந்தியாவில் சமசீர் கல்வி இன்னும் அமுலாக்கம் செய்ய முடியவில்லை. காரணம் அரசியல். தமிழகத்தில் உள்ளது போல convent என்ற தனியார் பள்ளிகள் இந்நாட்டு சீனர்களுக்கு மட்டும் உண்டு. மலாய் ,டாடிக்காக்களை தவிர தமிழர்கள் தனியார் பள்ளிகள் இந்நாட்டில் இல்லை. சுமார் 150 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இருப்பதாக தகவல். இதில் எந்த அளவுக்கு ஆங்கிலமும் மலாய் மொழியும் போதிப்பதாக தெரியவில்லை.
ஆங்கிலத்தில் அறிவியலுக்கும் கணிதத்துக்கும் போகும் முன் ஆங்கில அறிவு இல்லாமல் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தந்து தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பாரம்பரிய தமிழ்ப்பள்ளி ஆதாரத்தை இடையில் உடைத்து அழிக்க நினைப்பது
வேற்று இன மொழி வெறியர்களின் அரசியல் ஆர்ப்பரிப்பு என்பதுதான் உண்மை.
அம்மனோ கூட்டத்தில் தன் இனம் தன் மொழி தன் சமயம் செம்பியனாக காட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகள் அகண்ட உலக அறிவார்த்த சிந்தனைக்கு வருவதில்லை.
மொழி சிக்கலால் இன்றும் மூன்றாம் தர நாடு நிலையிலையிலிருந்து விடுபட முடியாத 2020 திட்டம் தொக்கிய நிலையில் புதிய தேசிய TN 50 கு தாவி இன்னும் 30 ஆண்டுகள் அடிப்படை நிலையான கல்விக்கு போராடும் நிலையில் பாட போதனைகளால் போராடுகிறோம்.
2013 – 2025 புதிய கல்வி கொள்கையில் DLP இல்லை. இடையில் திட்டமாக கொண்டுவர யார் காரணம் ஏன் என்ற வினாவுக்கு இதுவரை பதில் இல்லை.
DLP திட்டத்தில் இணைந்திருக்கும் நாட்டின் தமிழ்ப்பாளிகளுக்கு ஒன்றுக்குக்கூட DLP திட்டத்தில் இடம்பெறவில்லை அதுபோக பெற்றோர்கள்தான் தம மாணவர்களின் கல்வி திறனுக்கு முழு பொறுப்பு என்ற பக்க வாட்ட குத்தலும் குடைச்சல் அறிவிப்பும் நம்மை மேலும் கொந்தளிக்க வைக்கிறது.
300 SK பள்ளிகளில் DLP திட்டமும் எதிர்ப்புக்கு ஆளாகி உள்ளதும் இந்த MOE , PADU அதை கவனிக்கும் pemandu எல்லாம் பொறுப்பை பெற்றோர்களிடம் விட்டுவிட்டு காக்க சுடப்போவது ஏன் ?
நம்மக்கு தெரிந்த ஆய்வுப்படி தமிழ் மொழி தெரியாத தமிழ்ப்பள்ளிக்கு போகாத பெற்றோர்கள்தான் இந்த DLP யை முழுமையாக அறியாமல்
தலைமை ஆசிரியர் சொன்னார் பெ ஆ சங்க தலைவர் சொன்னார் என்று மரியாதை நிமித்தம் தம பிள்ளைகளை முட்டாளாக்க முனைகின்றனர்.
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்ற சுய புத்திக்கு வராமல் தமிழ் கலை கலாச்சாரம் பண்பாடு மட்டும் வேண்டும் தமிழுணர்வு வாடகைக்கு போதும் என்பது பக்கத்துக்கு வீட்டு வெள்ளைக்காரனிடம் வட சுடச்சொல்லி பின்னால் வீட்டு மலாய்க்காரனை சாப்பிடச்சொல்லி மரத்தில் காக்க கா என்று நரிக்கு போட்ட நிலைதான் இந்த DLP ஆசாமிகள் போடும் பூஜை.
மாலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளி கல்வி என்ற அடையாளத்தை நிலைநிறுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.
தமிழன் அடையாளம் வேண்டாம் என்கிற இந்தியன் SK பள்ளிக்கு அனுப்புங்கள் அங்கு தமிழ்ப்பாடத்தை பள்ளி நேரத்தில் படிக்கவாவது
போராடுங்கள்.
ஒன்றுக்கும் உதவாத DLP ஆதரவு செவிட்டு இனங்கள் வீட்டின் சுயம்வரமாவது சொத்தையாகாமல் பாதுகாக்க முடியுமா என்று பாருங்கள்.காரணம் அங்கும் டாடி என்றும் மாமி என்ற பிணங்களும் உலவுவதாக அறிகிறோம்.
கடைசியாக DLP பாடங்களை குடும்ப மேம்பாட்டு அமைச்சு பெற்றோர்களுக்கு படித்துக்கொடுத்து சரி என்று விளங்கினால் தன் பிள்ளைகளை தயார்செய்து கலப்படம் பார்க்க அழையுங்கள்.
குழந்தைகளின் தாய் ம்மொழி வழி கற்றல் கற்ப்பித்தல் கவனித்தால் ஆற்றலை வளர்த்து முறைப்படுத்தி மாணவனின் இடைநிலை காலத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க விடுங்கள் ஆனால் தமிழர் இனம் தமிழ் மொழி உரிமையை காத்து நிற்பது உங்கள் கடமை என்பதை இந்த சமுதாயமே உணர வேண்டும். உணர்த்துவதுதான் எங்கள் போராட்டம்.
நன்றி / வாழக தமிழ் வளர்க தமிழர் இனம்.
நன்றி,
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா,
டிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்புக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் ஒரு பொது நல மருத்துவர். 120 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதைத் துல்லிதமாக விவரித்து எழுதினார். பிரிங்கல் மோர்கன் (Pringle Morgan) என்ற அந்த மருத்துவர், தான் பார்த்த பெர்சி என்ற ஒரு 14 வயது பையனைப் பற்றி 1896-ல் பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் (British Medical Journal) பின்வருமாறு பதிவு செய்தார்:
“இவன் புத்திசாலியான ஒரு பையன், அறிவைப் பொருத்தவரையில் யாருக்கும் குறைந்தவன் அல்ல. நன்றாகப் பேசுவான். ஆனால் அவனுக்கு வாசிக்க இயலாமல் இருக்கிறது. அவன் எழுத்தில் மிகையான எழுத்துப் பிழைகள் உள்ளன. உதாரணமாக, Percy என்ற தன் பெயரை Precy என்றும் carefully, peg என்ற சொற்களை முறையே carfuly, pag என்றும் எழுதுகிறான். அவனால் 7 என்ற எண்னை வாசிக்க முடியும், அனால் அதையே ஏழு என்று சொல் வடிவில் எழுதினால் வாசிக்க முடியவில்லை. அவனுக்கு கண் பார்வையில் கோளாறு எதுவுமில்லை” [1].
dyslexia
அன்று தொட்டு, குழந்தை உளவியலில் அதிக அளவு ஆராயப்பட்ட ஓர் ஆய்வுப் பொருளாகவும், நன்கு கற்றுணரப்பட்ட ஒரு வளர்ச்சிக் குறைபாடாகவும் டிஸ்லெக்சியா விளங்கி வருகிறது. இது வாசிப்புக் குறைபாடு (reading disability), கற்றல் குறைபாடு (learning disability), தனிப்பட்ட கற்றல் குறைபாடு (specific learning disability) என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் டிஸ்லெக்சியா என்ற பெயராலேயே இந்தியாவில் பெரும்பாலும் அறியப்படுகிறது. தமிழில் இதை வாசிப்புக் குறைபாடு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் (இது படிப்புக் குறைபாடு அல்ல என்பதைக் கவனிக்கவும்). டிஸ்லெக்சியா சிக்கலான ஒரு கோளாறு. அதை சரிவர புரிந்துகொள்வது கடினம். மருத்துவர்களும் கல்விப் புலன் சார்ந்தவர்களும் கூட தவறாக கருத்துகளை முன்வைப்பதை இணையதளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
டிஸ்லெக்சியா என்ற ஒரு வளர்சிக் குறைபாடு உண்டு என்பதை அறியாதவர்கள் பலர் (ஆசிரியர் உட்பட) உள்ளார்கள். அதைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் கூட அதன் தன்மையையும், அது சிறார்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறியாதவர்களகவே இருக்கிறார்கள். டிஸ்லெக்சியாவைப் பற்றி பெரும்பான்மையான தமிழ் வலைத்தளங்களிலும், புத்தகங்களிலும் காணப்படும் தகவல்கள் தெளிவற்றவையாகவும், குளறுபடியாகவும் உள்ளன. வேறு சில வளர்ச்சிக் குறைபாடுகளை டிஸ்லெக்சியா என்று தவறாக குழப்பிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கேடாக, டிஸ்லெக்சியாவுக்கான சில தனியார் சிறப்புப் பள்ளிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அண்மைக் காலமாகத்தான் வாசிப்புக் குறைபாடு பற்றிய அறிமுகம் தமிழ்நாட்டில் ஏற்படத் தொடங்கியுள்ளது. ‘தாரே ஜமீன் பர்’ (2007) என்ற இந்திப் படம் டிஸ்லெக்சியா உள்ள ஓர் எட்டு வயதுப் பையனின் நிறை குறைகளை அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தது. நன்றி கீற்று
தாய்மொழிக்கல்வியே குழந்தைகளின் சிறப்பான கல்வித்தேர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை எப்படி எடுத்துக்கூறினாலும் கல்வியமைச்சின் இந்த “மகா” அறிவாளிகளுக்குப் புரியப்போவதே இல்லை !! ஏனெனில் இவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு கூர்மை !! பாவம் பள்ளிப் பிள்ளைகள். இவர்களின் இந்தத் தவறான கல்வி அனுகுமுறை முயற்சி பெரும் வீழ்ச்சி என்பதற்கு சென்ற ஆண்டு “யுபிஎஸ்ஆர்” தேர்வு முடிவுகளின் வீழ்ச்சி மிக முக்கியச் சான்று.
என்ன செய்வது என்று தெரியாமல், சும்மா உட்கார்ந்து நாற்காலியைச் சூடேற்றுவதைத் தவிர்க்க அவ்வப்போது இப்படி வில்லங்கமான முயற்சிகளின் வழி தங்களின் இருப்பை பரபரப்பாக்குகிறார்கள் கல்வியமைச்சின் அதிகாரிகள், அதிலும் இவர்களுக்குத் துணைபோகும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களையும், ஆசிரியர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், சொந்தத் தாய்மொழியின் அழிவுக்குத் துணை நிற்பவர்கள் இவர்கள். என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செயலில் இறங்குகிறார்கள். இதில் நமது குழந்தைகளுக்கு எது முக்கியமோ அதுவே நமக்கு வேண்டும் எனும் பிரசங்கம் வேறு !! நல்லா இருக்கு உங்களின் மொழிப்பற்று !!
தமிழேன்’ண் டா என்று கத்தும் தமிழனுக்கு-
ஏன் என் தலைவன்’ண்டா என்று கதற யாருமில்லை?
_______________________________________________
என்ன தமிழா என்ன பண்ண ? இடத்துக்கு இடம் மாறிட்டையையே?தமிழில் படிக்க இடமிருந்தும் சுயமா சிந்திக்க முடியலையே ! என்ற ஒருகிராமத்துப் பாடல்…!
உலகத்தமிழர்களின் அரசியல் வேட்டையில் தமிழர்கள் அடிப்படும் நாடுகளில் முதலிடம் தமிழ் ஈழம் ,இரண்டாம் இடம் தமிழ்நாடு மாநிலம். மூன்றாவது மலேசியா. மற்ற நாடுகளில் தமிழர்கள் டமிழர்க்ளாக இருக்கிறார்கள்.
ஸ்ரீ லங்கா ராஜபக்சேஹ் கொலைக்காரன் முதல் ஐநா முட்டாள்த்தனம் வரை தமிழன் ஏமாந்தான். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஓய்ந்து பன்றி காய்ச்சல் போல தமிழ் மாநில
அரசியலுக்கு என்ன ஊசி போடுவது என்று தெரியாமல்
தமிழேண்டா என்று திராவிட அதிமுக, திமுக அரசியல் அட்டகாசம். சட்டசபையில் அடிபிடி முதல் ரிசார்ட் விபச்சாரம் வரை அரசியல் வேச, வேசிகள் சட்டசபை சபா நாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் வரை ஆளுநருக்கு ஆப்பு நிலைக்கு போய் விட்டது.
திடீர் முதலமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி தொகுதிக்குக்கூட போகமுடியாத ஜட எரிப்பு தீபம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இங்கோ கோயில் உடைப்பு, DLP வழி தமிழ்ப்பாளிக்கு ஆணி.தங்கரத, வெள்ளிரத வசூல் போராட்டம், பத்துமலை வசூல் மோசடி புகார்கள் என்று சமூக அரசியல் குழப்பங்கள் நாட்டின் பொருளாதர பண வீழ்ச்சிகள் யாவிலும் மிக மோசமாக அடிபடுவது மலேசியாவின் தமிழர் சமூகம்தான் என்றால் மதிகெட்ட இண்டியன் போராளிகள் இல்லை என்பார்கள்.
இந்தியர்களுக்கு பொருளாதர சிறப்பு நீல காகிதம் இதுவேளை வந்திருக்க வேண்டும் ஆனால் ம இ கா தலைவர் 9 மாநிலங்களில் சிறப்பு பொருளாதார சேவை நிலையங்கள் அமுலுக்கு வருகிறதென்று வானொலி fm செய்திகளில் ஒரே ஆர்ப்பாட்டம்.
ம இகாவின் துணை தலைவர் மாண்புமிகு தேவமணி அவர்கள் அதாவது செனட்டராகி பிரதமர் துறையில் துணை அமைச்சராக அமர்ந்து பிரதமர் துறையில் EPU சிறப்பு பகுதியில் இரண்டாவது பொறுப்பில் இருப்பதாக தகவல்.
பல காலங்களாக மலேசிய பொருளாதாரம் குறிப்பாக இந்தியர்களுக்கான பொருளாதாரத்தை பிரதமர் அவர்கள்தான் விநியோக வாத்தியாராக இருக்கிறார். இதில் SEDIK மற்றும் SEED இரண்டும் எதோ சாதிப்பதாக பத்திரிக்கைகளில் பார்க்கிறறோம்.
இன்று மலேசியாவின் ரிங்கிட் 4 .60 காசாக அமெரிக்க 1 வெள்ளிக்கு கப்பல் ஏறியுள்ளது. ஆக பொருளாதார அழுத்தம் சமூக அரசியலை சந்தை சரக்காக ஆக்கியுள்ளதால் தமிழனுக்கு பொருளாதார அரசியல் பேச தனித்தலைவனை காணோம்,
மலேசியாவில் அரசியல் கலந்த பொருளாதார நிபுணர்களை காணோம். இந்தியன் பொருளாதார வெற்றியாளர்களை சமூகத்தில் காணோம்.
இன்று தொழிலாளர் சேமிப்பு நிதி வாரியம் 5 . 7 % வட்டி வழங்கியுள்ளது 10 ஆயிரத்துக்கு 570 ரிங்கிட்டுக்கு இதன் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏறக்குறைய 150 டாலராகும். இப்படி கோடிக்கணாக்கான நமது சேமிப்பு நிதிகளின் மதிப்பு நிதானிக்கப்படலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு 570 ரிங்கிட்டின் வாங்கும் சக்திக்கும் Iஇன்று அதன் சக்தி உங்களுக்கு புரியும்.
சீனர்களும், மலாய் இனத்தவர்களும் இன்னும் 10 ஆண்டுகளை சமாளித்து விடுவார்கள். தவிக்கப்போவது குறிப்பாக மலேசியா தமிழர்கள் என்றால் மிகையாகாது.
நாட்டில் பாகிஸ்தானியர்கள் , பங்காளதேசிகன், பர்மா காரர்கள் , மியான்மார்காரகள், தமிழ் மாநில தமிழர்கள் , நீகிரோக்கள் , அரப் காரர்கள், இன்னும் உலக நாட்டு 100 க்கும் மேற்பட்ட இதர நாட்டுக்காரர்கள் குடிபுகும் கோட்டையாக மலேசியா விளங்க காரணம் ரிங்கிட்டின் பண வீக்கம் அவர்கள் பந்துக்கு சுபயோக சுப தினமாக வந்தேறிகள் சுற்றுப்பயணிகள் வேஷத்தில் நமது பொருட்களுக்கு புத்துயிர் தருகின்றனர். ஆனால் நாம் தயாரிப்பு தவிப்பில் நட்டத்தை நாடி நிற்கும் நிலை பரிதாபம்தான்.
தீபாவளி , தைப்பூசம் ,தமிழ்புத்தாண்டுகள் , சித்திரை , பங்குனி மாதம் உச்சி கதிரவன், முழு நிலா , பவுர்ணமி என்று பிரபஞ்ச கோல்களை எல்லாம் கொண்டாடுகிறோம் ஆனால் அரசியல் பொருளாதர வழி நடத்த ஒரு தலைவன் இல்லா அனாதை இனமாக உள்ளோம்.
தமிழர் மாநிலத்தில் தமிழர்களான ஒரு சசிகலாவையும் அல்லது இன்னொரு தமிழனாக ஒபிஸ்
பன்னீர்செல்வத்தையும் முதல் அமைச்சர்களாக பார்க்க முடியாமல் இந்த வந்தேறிகள் படுத்தும் அரசியல் துரோகம்தான் மலேசியா தமிழனருக்கும் நடக்கிறது.
70 சகிதம் ஏழைத் தமிழர்கள்தாம் இந்நாட்டில் இருக்கோம். ஏழை என்றால் பரதேசி ஏழைகள் எனலாம். சராசரி 1500 ரிங்கிட் சம்பளம் ஏழைகளின் நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பரதேசி எழைகள்தாம்.
எத்தனைமுறை வெட்கப்படுவது எத்தனை காலம் காத்துக்கிடப்பது தமிழா ?
இதற்குத்தான் “தமிழேன்’ண் டா என்று கத்தும் தமிழனுக்கு ஏன் என் தலைவன்’ண்டா என்று கதற யாருமில்லை ! என்ற கேள்வி எழுந்தது.
இன்று உலகத் தாய்மொழி நாளாம். தமிழ் மொழிக்கு 20 ஆயிரம் ஆண்டுகள் கால அடையாள ஆய்வுகள் உண்டு. மலேசியாவில் 200 ஆண்டுகளை ஒட்டிவிட்டோம். ஒரு நல்ல பொருளாத சமூக தமிழ் தலைவனை காண முடியவில்லை. சுருட்டியவன் சுண்ணாம்பு அடித்துவிட்டு பாரில் புத்திசொல்லிக்கொண்டு இருக்கான்.
அரசியலில் தமிழனின் ஓட்டை வாங்கியவன் ஓட்டை போட்டுவிட்டான், சுய மாற்றான் இன அரசியல் , ஜாதி அரசியல் சொந்தக்காரன் அரசியல் குத்தைகள் அரசியல் நடத்தும் நாதாரிகள் இந்த தமிழ் இனத்தை பித்து பிடித்த தமிழனாக்கிவிட்டது.
பாரதியும் ,,பாரதிதாசனும் ,,கம்பனும் , கண்ணதாசனும் ,,வாலியும் சொன்னது யாவும் உண்மைகள்தாம். இவர்களின் செத்த இதயங்கள் இன்னும் வேகாமல்தான் இருக்கும்.
எங்கே தப்பு நடந்தது…சுப்பிரமணி பாரதியார் இப்படி ஏன் சொன்னார் ?
“சாதி மதங்களை பாரோம்
உயர் ஜென்மத்தை
இத்தேசத்தில் எய்திராயின்
வேதியராயின் ஒன்றே …அன்றி
வேறு குலத்தில் ராயினும் ஒன்றே…”
என்றது எவ்வளவு தப்பு என யோசிக்கிறேன் !
விழித்தெழு தமிழா … “வேதனையான தமிழர் தெருநாள் ”
பெருமைப்பட ஒன்றுமில்லை. தமிழ் மொழியாவது வாழட்டும்.
பொன் ரங்கன்
மலேசிய தமிழர் தேசியம்.
21 / 2 / 2017