ஒற்றுமையுடன் அனைத்து பக்தர்களின் நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் எந்தப் பயமும் பாதகமும்இன்றி அனைவரும் தைப்பூசப் பெருவிழாவைக் கொண்டாட வாழ்த்துகள் கூறுகிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது நடத்தபடும் வியாபாரச் சந்தையில் ஓர் இனத்துக்குச் சிறப்பு சலுகை என்ற அடிப்படையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சிலர் சமூக ஊடகங்களின் தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், இது குறித்து விசாரித்ததில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதே வேளையில், பத்துமலை கோவில் வேலிக்கு வெளியில் சாலை ஓரங்களில் போடப்படும் கடைகளுக்குச் செலாயாங் நகராண்மைக் கழகம் விதித்துள்ள கட்டணம் ரிங்கிட் 2000 குறித்துப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சில அரசுசார்பற்ற அமைப்புகள், அங்குச் சேவை மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களுக்குக்கூட கட்டணம் விதிக்கப்படும் கரிசனமற்ற போக்கைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாம் எப்பொழுதும் சேவை அடிப்படையிலான அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நடத்தும் சேவை/வியாபாரத் துணை மையங்கள் விவகாரத்தில் கரிசனமுடனே நடந்து வந்துள்ளோம். கடந்த காலங்களில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் இடம் அளித்து வந்துள்ளதை இச்சேவை மையங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
பத்துமலை தைப்பூசம் ஒரு பொழுதுபோக்கு அல்லது வர்த்தக நிகழ்ச்சியல்ல என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது ஒரு சமய விழா. ஆக, அங்கு அனைத்து தரப்பினரிடமும் அதிகப்படியான அன்பு, அனுசரணை, கரிசனம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். அதில் கோவில் நிர்வாகம், போலீஸ் மற்றும் நகராண்மைக்கழகம் ஆகியவற்றின் பங்கும் அளப்பரியது.
அதே வேளையில், அங்கு ஏற்படும் போக்குவரத்து, சுற்றுப்புறத் தூய்மைக்கேடு போன்ற பிரச்சனைகளைக் களைவதிலும் அனைவருக்கும் பங்குண்டு. அங்கு அதிக அளவில் குப்பைகள் சேர்வதாகவும் அதனை அகற்ற அதிகச் செலவு பிடிப்பதாகவும், தற்காலிகக் கடை உரிமம் கட்டண உயர்வுக்கு நகராண்மைக் கழகம் கூறி வரும் காரணங்களில் ஒன்றாக உள்ளது.
தற்காலிகக் கடை உரிமம் கட்டண உயர்வுக்கு இங்கு அக்கட்டணச் சுமையைக் கோவில் வேலிக்கு வெளியில் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் சேவையில் ஈடுபடுவோர் மட்டும் சுமக்க வேண்டும் என்பதில்லை. ஆலய வேலிக்கு உள்ளே செயல்படும் கடைகளுக்கு உரிமம் கட்டணம் வசூலிக்க நகராண்மைக்கழகத்திற்கு உரிமை மறுக்கப்படுவதனால் இந்தச் சுமை முழுவதுமாக வெளியில் உள்ள வியாபாரிகள் மீது திணிக்கப்படுவதாகத் தெரிகிறது.
நாம் நகராண்மைக்கழகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பத்துமலை ஆலய நிர்வாகம் அதன் வேலிக்குள் உள்ள கடைகளுக்கு 8 முதல் 10 ஆயிரம் ரிங்கிட்டுகள் வரை கட்டணம் வசூலிப்பது நமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆக, ஆலயம் விதிக்கும் இப்படிப்பட்ட கட்டணங்கள் மறைமுகமாக வெளியில் உள்ள வியாபாரிகளைப் பாதிப்பதை அவர்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாரவர். இது குறித்துத் திங்கட்கிழமை செலயாங் நகராண்மைக் கழகத் தலைவரைத் தாம் சந்திக்க இருப்பதாகவும் சேவியர் குறிப்பிட்டார்
தாம் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது கூடியவரையில் கட்டணங்களைக் குறைவாகவே வைத்திருக்க நகராண்மைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்ததாகவும் அதற்கு அன்றைய நகராண்மைக் கழக உறுப்பினர்களும் துணையாக இருந்தனர் என்றும் சேவியர் தெரிவித்தார்.
அதே வேளையில், இப்போது பதவியில் இருக்கும் செலயாங் நகராட்சி உறுப்பினர்களும் கடந்தகால நடைமுறைகளைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார், மக்களுக்கு நீர், உணவு மற்றும் சேவைகள் வழங்கும் அரசுசார அமைப்புகளுக்கு கோவில் நிர்வாகமும் இடமளித்து ஊக்குவிக்க வேண்டும், ஊராட்சி மன்றமும் சுமையை அதிகரிக்கும் செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்று ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.
1. பத்துமலை ஒரு சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட போதே தைப்பூசமும் ஒரு ஒரு பொழுதுபோக்கும் மற்றும் வர்த்தக நிகழ்ச்சியாக ஆகிவிட்டதே…அன்று மத்திய அரசால் பத்துமலை ஒரு சுற்றுல தலமாக அறிவிக்கப்பட்ட் போது ஏன் எவனும் மறுப்பு தெரிவிக்கவில்லை?
2. இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது நடத்தபடும் வியாபாரச் சந்தையில் ஓர் இனத்துக்குச் சிறப்பு சலுகை என்ற அடிப்படையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்தால் அத்தகைய கடைகளில் பொருட்கள் வாங்காமல் புறக்கணிப்போம். சீன சமுதாயத்தால் முடியும் போது நம்மால் இந்த புறக்கணிப்பை செய்ய முடியாதா?
3. பத்துமலை வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து, சுற்றுப்புறத் தூய்மைக்கேடு போன்ற பிரச்சனைகளைக் களைவதிலும் அங்கு அதிக அளவில் குப்பைகள் சேர்வதாகவும் அதனை அகற்ற அதிகச் செலவு பிடிப்பதாகவும், தற்காலிகக் கடை உரிமம் கட்டண உயர்வுக்கு நகராண்மைக் கழகம் கூறி வரும் காரணங்களில் ஒன்றாக கூறப்படுவது கேலிக் கூத்தாக இல்லையா?.
4. பத்துமலை கோவில் வேலிக்கு வெளியில் சாலை ஓரங்களில் போடப்படும் கடைகளுக்குச் செலாயாங் நகராண்மைக் கழகம் விதித்துள்ள கட்டணம் ரிங்கிட் 2000 முறையானது தானா?
5. சில அரசுசார்பற்ற அமைப்புகள், அங்குச் சேவை மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களுக்குக்கூட கட்டணம் விதிக்கப்படும் கரிசனமற்ற போக்கும் சரியான அணுகுமுறையா?
6. பத்துமலை ஆலய நிர்வாகம் அதன் வேலிக்குள் உள்ள கடைகளுக்கு 8 முதல் 10 ஆயிரம் ரிங்கிட்டுகள் வரை கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் ஆலயம் விதிக்கும் இப்படிப்பட்ட கட்டணங்கள் மறைமுகமாக வெளியில் உள்ள வியாபாரிகளைப் பாதிக்கிறது?
7. சேவியர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது கூடியவரையில் கட்டணங்களைக் குறைவாகவே வைத்திருக்க நகராண்மைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்ததால் இப்போது உள்ள நம் ஆட்சிக்குழு உறுப்பினர் ஏன் அதுமாதிரி அழுத்தமும் எதிர்ப்பும் கொடுக்கவில்லை?
8. உண்மையில் பத்துமலை வளாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா?
9. நெடுங்காலமாகவே பத்துமலை தைப்பூசத்தின் போது கார் நிறுத்துமிட பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்நியர்கள் கட்டுப்பாடில் இந்த கார் நிறுத்துமிடங்கள் உள்ளன. இதற்கு ஏன் யாரும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை?
10. பொது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தைப்பூசத்தின் போது பத்துமலை வளாகத்தின் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் ‘சம்மன்கள்’ வழக்கப்படகூடாது. மாறாக, வெள்ளிக்கிழமைகளில் ‘அவர்கள்’ சாலை ஓரங்களில் அத்து மீறி நிறுத்திவிட்டுப் போகும் கார்களுக்கு சம்மன்கள் வழங்காமல் கண்களை மூடிக்கொள்வதைப் போல தைப்பூசத்தின் போதும் சம்மந்தப்பட்டவர்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
முருகன் வல்லமை மிகுந்த தமிழ் கடவுள் தமிழனை ஹிண்டுவை அழிக்க நினைக்க எவனையும் மக்களை துன்ப படுத்தும் அரசாங்கத்தையும் அதன் தலைவனை தண்டிக்க முருகன் தயங்க மாடடான் மக்கள் நலனுக்க்காக உம்மிடம் வேண்டுதலை சமர்ப்பிக்கிறேன் முருகா மக்களை துன்பங்களிருந்து காப்பாற்று முருகா
தைப்பூசம் என்பது பொழுது போக்கு அல்ல .சுற்றுலா தளமல்ல.தன்னுடய வீர செயல்களை வெளிப்படுத்தும் இடமும் அல்ல .நம் சமுதாயம் ஒன்றுபடும் இடமாகவும் சமுதாய நலனில் பக்தர்கள் யாவரும் ஈடுபடும் இடமாகவும் அது மாற வேண்டும் .முருகன் தங்கத்தையும் வைரத்தையும் விரும்பியதில்லை .
மிஸ்டர் ஜோக்கர் உங்கள் கருத்து அணைத்து மக்களின் ஆதங்கம்.ஆண்டுதோறும் மற்ற இனத்தவர் செய்யும் விற்பனையை நமது மக்கள் புறக்கணித்தாலே போதுமானது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்கள் இங்கு வியாபாரம் செய்மாட்டார்கள். அவர்களுடைய வழிபாடு இடங்களில் நம்மவர்கள் வியாபாரம் செய்ய வழி விடுவதில்லை.இதை அணைத்து தமிழர்களும் உணர வேண்டும்.பத்துமலை பொதுவானது.சில சுயநலவாதிகளால் திசை மாறி அரசியல் கூத்தும் நடக்கின்றது. பதுமலைக்கு சென்று முருக தரிசனம் பெறுவோம். எந்த பொருட்களும் வாங்காமல் நன்கொடையும் வழங்காமல் வருவோம். இதை அனைவரும் உணர்ந்து செய்தால் சுயநலம் புறக்கணித்து பத்துமலை பொதுநலமாகும்.