உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தண்ணீர் தான் சிறந்த ஒரு தீர்வாக உள்ளது. அத்தகைய தண்ணீரை ஒருசில தருணங்களில் குடித்தால், அது நமது உடலுக்கு ஆபத்தாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?
தண்ணீரை எப்போது குடிக்க கூடாது?
- ஒருவர் ஏற்கனவே அளவுக்கு அதிகமான நீரைக் குடித்தப் பின், தேவையில்லாமல் நீரைக் குடிக்கக்கூடாது. ஏனெனில் அது நமது உடலில் உள்ள இயற்கையான உப்புச்சத்தை வெளியேற்றி பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்குகிறது.
- சிறுநீர் வெளியேற்றப்படும் போது, மஞ்சளாக இல்லாமல், தெளிந்த வெள்ளை நிறத்தில் இருந்தால், அதற்கு உடலில் போதுமான அளவில் நீர்ச்சத்து உள்ளது என்று அர்த்தம். எனவே அந்த நேரங்களில் நீரை அதிகம் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
- உணவு சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் அளவுக்கு அதிகமாக நீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் உடல் ஆரோக்கியத்தில் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
- கடுமையான உடற்பயிற்சியை செய்த பின், உடலில் உள்ள எலக்ட்டோலைட்டுக்கள் வியர்வை மூலமாக வெளியேற்றப்பட்டிருக்கும். எனவே இந்த நேரத்தில் நீரை குடிக்கக் கூடாது.
- தாகத்தை தணிப்பதற்கு நீரைக் குடிப்பது தான் சிறந்தது. அதற்கு மாறாக குளிர்பானங்களைப் பருகினால், அது பசியை அதிகமாக தூண்டி உடல் பருமனை ஏற்படுத்திவிடும்.
-manithan.com