மாரடைப்பு! உலகின் கொடிய நோய்களில் முக்கியமான ஒன்று. எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க நேரம் கிடைக்கும்.
ஆனால், இதில் மாரடைப்பு மட்டும் விதிவிலக்கு. மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போகும் அபாயம் உண்டு.
மாரடைப்பு ஒருவருக்கு வரப்போவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கணிக்க முடியும்.
உடல் சோர்வு / களைப்பு
இதயத்தில் உள்ள கரோனரி சுருக்கமானது ஆபத்தான நிலையை அடையும் போது இதயத்துக்கு வரும் ரத்த ஓட்டம் குறைகிறது. இது இதய தசையின் இயல்பை கடினமாக்குவதால் உடல் சோர்வு ஏற்படும், இது விரைவில் மாரடைப்பை ஏற்படுத்தும்.
அதிக வியர்வை
ஒரு வித மயக்க உணர்வு அடிக்கடி ஏற்பட்டாலும் அல்லது உடலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறினாலும் மாரடைப்பின் அறிகுறி தான்.
அந்த அறிகுறிகள் தென்படும் போது உடனே மருத்துவர்களை அனுகுவது நலம் பெயர்க்கும்.
ஒழுக்கமற்ற இதயதுடிப்பு
எந்தவித காரணமும் இல்லாமல் இதயதுடிப்பு திடீரென அதிகமாகவும் மற்றும் ஒழுக்கமற்ற முறையிலும் துடித்தால் அது மாரடைப்பு வருவதற்கான அறிகுறி தான்.
முச்சு விடுதலில் சிரமம்
முச்சு விடுவதில் அதிகம் சிரமம் இருந்தேலோ அல்லது அதிகளவில் முச்சு வாங்குனாலோ மாரடைப்பு வர போகிறது என அர்த்தமாகும்.
மாரடைப்பு வருவதற்கு முன்னர் 40 சதவீத பெண்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தோள்பட்டை, கழுத்து, தாடை பகுதியில் வலி
மாரடைப்பு ஏற்பட்டால் வலி நெஞ்சு பகுதியில் மட்டுமே வருவதில்லை. தோள்பட்டை, கழுத்து, தாடை பகுதிகளில் அதிக வலி தொடர்ந்தால் கூட அது மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் தான்.
அஜீரணம், குமட்டல் மற்றும் வயிற்று வலி
உடலில் உள்ள கொழுப்புகள் ஒரு இடத்தில் குவிந்தால் அது இதய ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதன் மூலம் மார்பு பகுதில் வலி ஏற்படும் அல்லது கடுமையான வயிறு வலி ஏற்படும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குமட்டல், அஜீரண கோளாறு போன்ற அறிகுறிகளும் தோன்றும்.
-news.lankasri.com