செம்பனை எண்ணையை உபயோகிப்பவர்களா நீங்கள்? அது யாருக்கு நல்லது, யாருக்கு நல்லதில்லை என்றெல்லாம் தெரியுமா?

palm-oilசமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். விலைக் குறைந்த எண்ணெயும் இது தான். அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படுவது. ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது ட்டது என்றும் கூறுகின்றன.

இப்போது முடிவு நம் கையில் தான் இருக்கிறது. அட ஆமாங்க, முதலில் நமது எடலைப் பற்றி தெரிந்துக் கொண்டு பாமாயிலை பயன்படுத்தலாமா, இல்லை வேண்டாமா என்று முடிவு செய்யலாம். பாமாயிலில் இரண்டு வகை உண்டு. ஒன்று பனை பழத்தில் இருந்து எடுக்கப்பட்டது, மற்றொன்று பனை கொட்டையில் இருந்து எடுக்கப்பட்டது. இரண்டிலுமே போதுமான அளவு கொழுப்பு சத்தும், கலோரியும் இருக்கிறது.

குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கப்போவதில்லை. ஆனால், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம், யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொளவத நல்லது. வாருங்கள் இப்போது நாம் பாமாயிலின் நன்மைகள் தீமைகளை பார்த்து நம் உடலுக்கு ஏற்றதா இல்லையா என்பதனைப் பற்றி பார்ப்போம்…

இதய நோய் உள்ளவர்கள்

பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் அதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உங்களுக்கு இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உடல் பருமன் உள்ளவர்கள்

உடல் எடை குறைப்பதற்கு முயற்சிப்பவரா நீங்கள். பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆனால், தினமும் பாமாயிலை உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிபடியாக நீக்கும்.

வளர்சிதை மாற்ற நோய் உள்ளவர்கள்

பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும். பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும். எனவே, இது வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, வளர்சிதை நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்

பாமாயிலை சமைக்கும் அது ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆய்வு முடிவுகள் கூட, சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆனால், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள்

பரம்பரை வியாதிகளான அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை இருந்தால் பாமாயிலை தவிர்த்துவிடுங்கள். ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், பாமாயில் உடலில் கொழுப்புச் சத்தை அதிகரித்துவிடும் என்பது தான்.

பாமாயிலின் நன்மைகள் :

புற்றுநோயைத் தடுக்கும் பாமாயிலில் உள்ள டோக்கோஃபேரல்கள் இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இது உடலில் புதிதாக ஏற்படும் எந்த ஒரு அசாதாரணமான செல்களையும் அழித்துவிடும். மேலும், புற்றுநோய் செல்களை சாதாரண செல்களாக மாற்றிவிடும்.

பார்வையை சீராக்கும்

பாமாயில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு அற்புதங்களைச் செய்யலாம். கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ (ரெட்டினோல்) உருவாவதற்கு பீட்டா கரோட்டின் முன்னோடியாகும். வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

ஹார்மோன் சமநிலை

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமநிலையற்ற பாமாயிலால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவதுசிறந்தது.

வயதான தோற்றத்தைத் தடுக்கும்

பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாமாயிலை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்கிவிடும். மேலும், இது சக்தி வாய்ந்த ஆன்டிஆன்ஸிடன்டாகும்.

வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டிற்கு நல்ல மருந்து

வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு உங்களுக்கு இருந்தால் பாமாயிலை எந்த தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். தினசரி உணவில் பாமாயிலை சேர்த்துக் கொள்ளும போது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ கிடைத்துவிடும். அது பாமாயிலின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று.

-http://tamil.boldsky.com