மனித உடலில் மிக முக்கிய உறுப்பாக திகழ்வது கல்லீரல், உடலுக்கு செல்லும் உணவுகளை செரிமானம் செய்ய வைப்பதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவு பழக்கங்கள், மது அருந்துவது போன்ற விடயங்களால் உலகளவில் பலர் இன்று கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில முக்கிய அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
வயிறு வீக்கம் மற்றும் வலி
வயிறு வீக்கமடைவது என்பது கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும். கல்லீரலில் பிரச்சனையிருந்தால் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கும்.
சில சமயம் கணுக்கால், கைகளில் கூட வீக்கம் ஏற்படலாம். அதே போல தொடர்ந்து வயிற்று வலி இருந்தால், அது கூட கல்லீரல் நோயின் அறிகுறி தான்.
காயங்கள்
கல்லீரலில் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் எளிதாக காயம் ஏற்படுவதோடு ரத்தமும் விரைவாக வெளிவரும். கல்லீரல் பாதிப்பால் ரத்தம் உறைய தேவையான புரதச்சத்து கிடைக்காது.
உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனம்
சாதாரணமான உடல் சோர்வு என்பது பரபரப்பான மனித வாழ்க்கையில் சகஜம் தான், அது சரியாகி விடும்.
ஆனால் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறாத காரணத்தால் உடல் சோர்வும், உடல் பலவீனமும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.
மஞ்சள் காமாலை
தோல்களின் நிறம் மாறுவது, கண்கள் மஞ்சள் நிறமாக தெரிவதும் மஞ்சள் காமாலை அறிகுறியாகும்.
கணையம் மற்றும் பித்தப்பையை பாதிக்கும் இந்நோய் பின்னர் கல்லீரலையும் பாதிக்கும்.
மஞ்சள் காமாலைக்கும் கல்லீரல் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வாந்தி
கல்லீரல் பாதிப்படைந்தால் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக எதை சாப்பிட்டாலும் குமட்டி கொண்டு வாந்தி வரும்.
சிறுநீர் மற்றும் மலக்கழிவில் மாற்றம்
மலம் கழிக்கும் போது அதன் நிறம் பழுப்பிலிருந்து நல்ல மஞ்சளாகவோ, சாம்பலாகவே மாறினால் கல்லீரலில் சேதம் இருப்பதாக அர்த்தமாகும்.
அதே போல சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்தில் வந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டாலோ கல்லீரல் செயலிழக்க தொடங்கியுள்ளது என அர்த்தமாகும்.
பசியின்மை
கல்லீரலில் அதிக பாதிப்பு இருந்தால் உணவு சாப்பிடவே பிடிக்காது. மேலும் உடல் எடை அதிகளவில் குறையத் தொடங்கினாலும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி தான்.
-lankasri.com