சுடுநீரில் சிறிது கிராம்பு… வியக்க வைக்கும் அதிசயம்!

கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கிராம்பு – 5
  • தண்ணீர் – 1 கப்
செய்முறை

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஐந்து கிராம்பையும் சேர்த்து மீண்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

நன்மைகள்
  • கிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதை குடிப்பதால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சிகள் கிடைக்கிறது.
  • சோம்பலை நீக்கி, சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க, காலையில் 1 கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
  • தலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • ரத்தோட்டத்தை சீராக்கி, பல்வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல்வலி உள்ளவர்கள், மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீயை குடிக்கலாம்.
  • -lankasri.com