சுண்டைக்காய் பத்திய சாப்பாடு தெரியுமா? யாரெல்லாம் சாப்பிடலாம்?

sundakkaiசெடி வகையை சேர்ந்த சுண்டைக்காயின் மலர்களும், காய்களும் கொத்துக் கொத்தாக வளரக் கூடியது. அத்தகைய சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.

சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள்
  • சுண்டைக்காயில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலின் ரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்தச்சோகை நோய் வராமல் தடுக்கிறது.
  • தினசரி உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வதால், அது ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளைக் கரைத்து, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
  • வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்திகரித்து, உடல் ஏற்படும் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு மற்றும் மூச்சுக்கோளாறு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
  • சுண்டைக்காய் குழந்தைகளின் உடல், எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடல்வலி, மலச்சிக்கல் வயிற்றுப் புண்கள் ஆகிய பிரச்சனைகளை குணமாக்கி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
  • சுண்டைக்காய் வற்றல் அல்லது குழம்பாக வைத்து உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றில் உள்ள அசுத்தங்கள் நீக்கி, செரிமானப் பிரச்சனை மற்றும் வாயுக்கோளாறுகளை குணமாக்கும்.
சுண்டைக்காய் பத்திய உணவின் நன்மைகள்?

குழந்தை பெற்ற தாய்மார்கள், பத்திய உணவில் சுண்டைக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும். அதனால் தாய்ப்பால் சுரக்கும் திறன் அதிகரித்து, செரிமானக் கோளாறுகள் நீங்கி, உடல் நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.

-lankasri.com