ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிக அளவில் மின்சக்தி உள்ளெடுக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போதுள்ள கைப்பேசிகள் நீண்ட நேரம் பாவிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இதனால் அதிக வினைத்திறன் கொண்டதும், நீடித்து உழைக்கக்கூடியதுமான மின்கலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே கைப்பேசி பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
ஆனால் எதிர்காலத்தில் மின்கலம் இன்றியே செயற்படக்கூடிய கைப்பேசிகள் அறிமுகமாகவுள்ளன.
இக் கைப்பேசிகள் சூழலில் காணப்படும் வானொலி அலைகளில் (Radio Signals) இருந்து கிடைக்கும் சக்தியை பயன்படுத்தி இயங்கவல்லன.
இதனால் எவ்வித பிரச்சினையும் இன்றி தொடர்ச்சியாக இயங்க முடியும்.
இதற்கான தொழில்நுட்பத்தினை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலரே கண்டுபிடித்துள்ளனர்.
-lankasri.com