மருத்துவ காரணங்களை விடுத்து சிலருக்கு காரணமே இல்லாமல் தூக்கம் வரவில்லையென்றால் அதை உடனடியாக கண்காணித்து பிரச்சனையை தீர்ப்பது மிக அவசியம்.
- நீண்ட பயணம், புது இடம், பழகாத சூழல் போன்றவற்றால் தூக்கம் வராது. இவ்வகையான பிரச்சனை சில நாட்களில் சரியாகிவிடும்.
- அலுவலக பிரச்சனைகள்,நண்பர்கள் மற்றும் உறவுகளிடத்தில் ஏற்படும் சங்கடங்கள் போன்றவற்றால் தூக்கம் ஏற்படாது. அதே போன்று இதற்கான பிரச்சனைகள் தீர்ந்தவுடன் அல்லது தீர்வை அறிந்தவுடன் அது சரியாகிவிடும்.
- சிலருக்கு பகலில் நன்றாக தூக்கம் வரும். ஆனால் இரவு படுக்கைக்கு சென்றவுடன் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொள்வர். இரவில் தூக்கம் வரவில்லை என்று மொபைல் போன் எடுத்து பார்ப்பது, டிவி பார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. அவற்றிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தால் தொடர்ந்து நமக்கு தூக்கம் வராது.
- தூங்குவதற்கு முன்னால் இரவு உணவாக மெலடோனின் வேதிப்பொருள் சுரக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். செர்ரி,வாழைப்பழம் போன்றவற்றில் அதிக மெலடோனின் உள்ளது.
- நல்ல உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். ஆனால் மிக அதே உடற்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதுவே தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். உடற்பயிற்சிகளை மாலைக்குள் முடித்துவிடுவது நன்று.
- உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து இல்லையென்றாலும் தூக்கம் வராது என்பதால் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
-lankasri.com