ஆம், மாற்றத்திற்கான வழி மக்களின் கைகளில்தான் உள்ளது. இன்று 92-ஆவது அகவையை எட்டும் துன் மகாதீரிடம் இல்லைதான்.
56 வயதில் இந்த மலையக நாட்டை ஆள முற்பட்ட மகாதீர், 78 வயது வரை அரசாட்சி புரிந்து ஓய்ந்த பின்னும் இவருக்கு இன்னும் அதிகார வேட்கை ஓய்ந்தபாடில்லை.
அதனால்தான் எந்த டத்தோஸ்ரீ அன்வாரை தன்னுடைய ராஜபாட்டையில் குறுக்கே வந்தார் என்பதற்காக அவரை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லடியாக ஒதுக்கினாரோ அதே அன்வாருடன், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய அதிகார வேட்கையைத் தணித்துக் கொள்வதற்காக கொஞ்சமும் மனம் கூசாமல் கரம் கோத்துள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரேக் கட்சியோ அல்லது ஒரே அணியோ தொடர்ந்து ஒரு நாட்டை ஆள்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல;
எனவே, அடுத்தப் பொதுத் தேர்தல்வழி நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், இன்றைய நிலையில் அன்வார் – மகாதீர் அணி வெல்வது நல்லது. மகாதீரின் கடந்த கால அரசியல் மூர்க்கத்தனமானது. இருந்தாலும், இன்றைய நிலையில் ‘நம்பிக்கைக் கூட்டணி’யினர் அவருடன் கரம் சேர்வதில் தவறில்லைதான்.
ஆயினும், இது மக்களின் சிந்தனையில்தான் அடங்கியுள்ளது. எது எவ்வாறாயினும் துன் மகாதீருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்புடன்
செம்பருத்தி நேயன்
‘ஞாயிறு’ நக்கீரன்
013 -244 36 24.